========================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
W.T. ரிங்கள்தொபே (1770-1816)
======================
ரிங்கள்தொபே அவர்கள் ஜெர்மனி தேசத்தில் 1770 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ம் நாள் பிறந்தார். இளம் வயதிலேயே மிகவும் பக்தியும் ஒழுக்கமும் கண்டிப்புடன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். தன்னுடைய 18 ம் வயதில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மொரோவிய மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலம் நடத்தப்பட்ட மிஷனெரி அறைகூவலில் இயேசுவின் அழைப்பை உணர்ந்தவாறு, தன்னை வெளிநாட்டு மிஷனெரி ஊழியத்திற்கு அற்பணித்தார்.
இதற்காக ஜெர்மனி தேசத்தில் உள்ள புகழ்பெற்ற Hally Univetsity ல் இறையியல் கல்லூரியில் நன்றாய் படித்து 1796 ம் ஆண்டு அங்கு ஜெர்மனி தேசத்தில் ஒரு திருச்சபைக்கு குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் கிறிஸ்துவை குறித்து கேள்விப்படாத மக்களுக்கு நற்செய்திபணி செய்யவிரும்பிய ரிங்கள்தொபே 1797 ம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். ஆனால் அங்கிருந்த சீதோஷன நிலை அவருக்கு ஒத்துக்கொள்ளாததால், பின்னர் இங்கிலாந்து சென்றுவிட்டார்.
பின்னர் 1804 ம் லண்டன் மிஷனெரி சங்கம் மூலம் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வழியில் பல இன்னல்கள் பட்டு, டிசம்பர் மாதம் 4 ம் நாள் தமிழ்நாட்டில் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார்.
இதற்கிடையே மகாராஜன் வேதமாணிக்கம் என்பவர் தரங்கம்பாடி பணித்தளத்திற்கு பொறுப்பாய் இருந்த குருவானவர் J.C. கோலஃப் அவர்களிடம் சென்று தம்முடைய ஊரில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றார்கள் என்றும் ஆகவே திருவாங்கூர் பகுதிக்கு நற்செய்திபணி அறிவிக்க ஒரு ஐரோப்பிய மிஷனெரியை அனுப்பி வைக்க மிகவும் வருந்தி கேட்டுக்கொண்டார்.
ஆகவே ரிங்கள்தொபே 1806 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ம் நாள் திருவாங்கூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கேரள மாநிலத்தின் பெரும்பகுதியும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களாக இருந்த கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகள் அடங்கி இருந்த
ரிங்கள்தொபே முதலில் நற்செய்திபணியை கேட்பதில் ஆர்வம் காட்டிய அந்த காலகட்டத்தில் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பனையேறி சாணார் குல மக்கள், மத்தியில் நற்செய்திபணியை ஆரம்பித்தார். இவருடைய கனிவான அனுகுமுறையால் சாணார் குல சமுதாய மக்கள் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அவர்களுக்கு என்று மயிலாடியில் (கன்னியாகுமரி) ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினார்.
ஆகவே ரிங்கள்தொபே அவர்கள் மயிலாடியில் பத்து அடி நீளமும் ஆறு அடி அகலம் கொண்ட ஒரு குடிசையில் தங்கி ஊழியம் செய்துவந்தார். அதில் மரத்தால் செய்த ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு கட்டில் இவைகளுக்கு மட்டுமே சொந்தக்காரராய் இருந்து எளிய வாழ்க்கை வாழ்ந்து, ஏழைகளின் உணவை உட்கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து தென் திருவாங்கூர் முழுவதும் நடந்து சென்று நற்செய்திபணி அறிவித்தார்.
இவருடைய ஊழியத்தினால் இயேசுவை ஏற்றுக்கொண்ட மகாராசன் வேதமாணிக்கம் மற்றும் வேதமுத்து ஆகியோர் தங்கள் நிலங்களை ஆலயம் கட்ட கொடுத்தார்கள்.
ஆகவே திருவாங்கூர் சமஸ்தானத்தில் கிறிஸ்தவர்களுக்கு என்று முதல்முதலாக மயிலாடியில் 1809 ம் ஆண்டு மே மாதம் அஸ்திபாரம் போடப்பட்டு பல பாடுகளின் மத்தியில் செப்டம்பர் மாதம் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய தினம் 40 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் மகாராசன் வேதமாணிக்கம் சபை ஊழியராக நியமிக்கப்பட்டார். அதில் சுவிசேஷ ஊழியத்திற்கு என்று துடிப்பான இரண்டு வாலிபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஊழிய பயிற்சி கொடுக்க தரங்கம்பாடிக்கு அனுப்பி வைத்தார்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளின் பிள்ளைகளுக்கு கல்வியை கொடுக்கும்படி ஒரு பாடசாலையையும் 1811 ம் ஆண்டு ரிங்கள்தொபே ஆரம்பித்தார். இதனால் 400 க்கும் அதிகமான சாணார் இன மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதோடு கல்வியையும் கற்க ஆரம்பித்தார்கள்.
ரிங்கள்தொபே அவர்கள் ஆத்திக்காடு, தாமரைக்குளம், பிச்சைக்குடியிறுப்பு(ஜேம்ஸ் டவுன்), புத்தளம், கோவில்விளை, ஈத்தாமொழி ஆகிய ஏழு இடங்களில ஆலயங்களை கட்டி, கல்விக்கூடங்களையும் ஏற்படுத்தினார்.
ரிங்கள்தொபே அவர்களின் நற்செய்தி பணியையும், கல்வி பணியையும், சமுதாய சீர்திருத்த பணியையும் ஏற்றுக்கொண்ட அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்தை கண்ட இந்துமத பூசாரிகள், பலத்த எதிர்ப்பூகள் தெரிவித்தார்கள். அவர்களால் மூன்று ஆலயங்கள் எரிக்கப்பட்டன. பல கிறிஸ்தவர்களின் உடமைகள் சூறையாடப்பட்டன. ஆனாலும் மனம் தளராமல் ரிங்கள்தொபே ஆலயத்தை புதுப்பித்துகட்டினார். மனமுடைந்துபோயிருந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தி கிறிஸ்துவினிமித்தம் ஏற்படுகின்ற நிந்தைகள், அவமானங்களை ஏற்றுக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் உற்சாகப்படுத்தினார்.
ரிங்கள்தொபே அவர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சாணார் குல மக்களுக்கும், நாயர், ஈழவர், புலையர் மற்றும் 18 தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளையும், சமுதாய கொடுமைகளை கண்டு மனம் பதறினார். உயர் சாதி இந்துமத பூசாரிகள் வாழும் இடங்களில் கீழ்சாதியினரை விலக்கி வைத்தல், பொது குளங்கள், கிணறுகள், சந்தைகள், சாலைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்க்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கிறிஸ்தர்கள் இந்து கோவில்களுக்கு வரி கொடுக்கும்படி இந்துமத பூசாரிகள் க கேட்டுக்கொண்டதன்படி, திருவாங்கூர் சமஸ்தான அரசாங்கமும் கிறிஸ்தவர்கள் வரி கொடுக்க சட்டத்தை இயற்றினார்கள். ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய சாணார் குல மக்களுக்கு அரசாங்கத்தின் கடுமையான வரி விதிப்புக்கு எதிராக ரிங்கள்தொபே போராடினார்.
இந்நிலையில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சாணார் குல பெண்களும், நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தை சேர்ந்த தாழ்தப்பட்ட சமூதாய பெண்களும் மேலாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் பெண்கள் மார்பகங்ளை திறந்து போடுவதுதான் உயர்சாதியினருக்கு தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமஸ்தானம் கட்டுபாடு விதித்திருந்தது. கிறிஸ்தவ பெண்கள் மேலாடை அணிய வேண்டுமானால் அவர்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்பட்டது.
இந்துமத பூசாரிகள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டதன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன. மேலும் சாதீய பாகுபாடுகள் ஏற்படுத்தி காணாமை, நடவாமை, தொடாமை முறைகளை ஏற்படுத்தினார்கள். மேலும் இவர்கள் இடுப்புக்கு மேலும் முட்டுக்கு கீழும் ஆடை அணியகூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சாணார், நாயர், ஈழவா மற்றும் 18 வகை தாழ்ந்த ஜாதி பெண்களின் வீட்டுக்கு அரசாங்க அதிகாரிகள் சென்று அவர்களின் மார்பக அளவின்படி வரி விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் தெருக்களில் நடமாட வேண்டும் என்றும் இந்த உடை கட்டுப்பாடு மீறினால் கடுமையான அபராதங்களும் பல நேரங்களில் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் இந்து மத பூசாரி பெண்கள் மேலாடை அணிய எந்த தடையும் இல்லாதிருந்தது.
ரிங்கள்தொபே அவர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சாணார் குல மக்களுக்கும் தாழ்ப்பட்ட சமூக மக்களும் எவ்வாரெல்லாம் இந்துமத பூசாரிகள் மூலம் திருவாங்கூர் சமஸ்தானத்தால் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருப்பதை எல்லாம் பட்டியலிட்டு அதை கொச்சியில் இருந்த ஆங்கிலேய அதிகார் கர்னல் மெக்காலேவிடம் விவரித்து கான்பித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட கேட்டுக்கொண்டார்.
ரிங்கள்தொபே கிறிஸ்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் கிறிஸ்தவ பெண்கள் மேல் ஆடையை பயன்படுத்தி தங்கள் மார்பகங்களை மறைத்தார்கள். இதைக் பார்த்த இந்து மத பூசாரிகள் கடும் கோபம் கொண்டு பெரிய கலவரத்தில் ஈடு பட்டனர். கல்குளம், இரணியல், ஆத்தூர், திற்பரப்பு, கண்ணணூர், அருமனை, உடையார்விளை மற்றும் புலிப்புனம் பகுதியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டனர். அநேக கிறிஸ்தவர்களின் வீடுகள் தீக்கிறையாயின. அநேகர் கொல்லப்பட்டார்கள். பலருடைய சொத்துக்கள் கடுமையாக சேதபடுத்தப்பட்டன.
இதனால் ஆங்கிலேய அதிகாரி கர்னல் நேவால் நீதி விசாரனை செய்ய நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டு அதின் படி கிறிஸ்தவ பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள் மேல் ஆடை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ரிங்கல்தொபே அவர்களின் மிகப் பெரிய முயற்ச்சியினால் கிறிஸ்தவ சாணார் குல மக்களுக்கு எல்லா வரிக்கொடுமைகளும், அபராதங்களும், கட்டாய நன்கொடைகளும், தலைவரியும் நீக்கப்பட்டது. மேலும் கிறிஸ்தவர்கள் இந்து கோவில்களுக்கும், உயர் ஜாதிநிலக்கிழார்களுக்கும் ஊதியமின்றி பணி செய்தல் எல்லாம் தடை செய்யப்பட்டன. இதனால் அநேக மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார்கள் ரிங்கள்தொபேயின் கடும் முயற்ச்சியினால் சாணார் குல பெண்களும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்களும் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர்.
ரிங்கள்தொபே அவர்கள், கிறிஸ்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அநேக தொழிற்கூடங்களை ஏற்படுத்தினார். ஆண்களுக்கு என்று அச்சக தொழில், தோல் பதனிடும் தொழில், ஓடு தயாரித்தல், கயிறு தயாரித்தல், மற்றும் ஆங்கிலேயர்களுக்கு நூல் காலுறைகள் தயாரித்தல் (Socks) போன்ற தொழிலை கற்றுக்கொடுத்து கிறிஸ்தவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
ரிங்கள்தோபே அவர்கள் பெண்களுக்கு என்று சுய தொழில் குழுக்களை உறுவாக்கி தையல், கூடை பின்னுதல், பாய் மற்றும் நார் பெட்டிகள் தயாரித்தல் போன்ற கைத் தொழிலை ஏற்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
ரிங்கள்தொபே ஆண், பெண் பிள்ளைகளுக்கு என்று ஆங்கில கல்விக்கூடங்களை ஏற்படுத்தி மூடநம்பிக்கைக்கு எதிராக மேற்கத்திய விஞ்ஞான பாடங்களை கற்றுக்கொடுத்து அவர்கள் அறிவு கண்களை திறந்தார். மேலும் நாகர்கோவிலில் சபை ஊழியர்களை உறுவாக்க வேதகலாசாலை யையும் ஏற்படுத்தினார்.
ரிகள்தொபே அவர்களின் நற்செய்திபணி மற்றும் சமுதாய பணியினால் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிர்கள். இதனால் 1815 ம் ஆண்டுக்குள் 1,100 க்கும் அதிகமானோர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
இந்நிலையில் ரிங்கள்தொபே திருமணம் செய்யாமல் திருவாங்கூர் சமஸ்தான மக்களின் வாழ்க்கை தரம் உயருவதற்காக 12 ஆண்டுகள் இரவு பகல் என்று பாராமல் நற்செய்திபணியை மழையிலும், வெயிலிலும், பனியிலும், குளிரிலும் செய்ததினால் அவருடைய கல்லீரல் மிகவும் பெலவீனப்பட்டது. இதனால் மரண தருவாய்க்கு சென்றார். ஆகவே கிறிஸ்தவர்கள் ரிங்கள்தொபேயின் சரீரத்தை மனதில் கொண்டு அவரை கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்டு தாய்நாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று, குணமடைந்து பின்னர் நற்செய்திபணியை ஆசையாய் தொடர பாசமாய் கேட்டுக்கொண்டார்கள்.
ஆகவே ரிங்கள்தொபே அவர்கள் 1815 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்களோடு குதுகலமாக கொண்டாடிவிட்டு 1916 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் எல்லா கிறிஸ்தவர்களையும் மயிலாடி ஆலயத்திற்கு அழைத்து, அடுத்த மிஷனெரி அங்கு வரும்வரை மகாராசன் வேதமாணிக்கம் பொறுப்பாய் இருப்பார்கள் என்று அறிவித்து அவரை குருவானவராக அருட்பொழிவு செய்து தன்னுடைய எல்லா அதிகாரங்களையும், குருவானவருக்குரிய ஆடைகளையும் கொடுத்து தன்னுடைய பொறுப்பை மனநிறைவோடு நிறைவு செய்தார்.
பின்னர் எல்லா கிறிஸ்தவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு 1816 ம் ஆண்டு ஜனவரி 23 ம் நாள் சென்னைக்கு பிரயானம் செய்வதற்காக மயிலாடியை விட்டு வெளியேறினார்.
பின்னர் ரிங்கள்தொபே அவர்கள் கொல்லத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கப்பல் ஏறினார். கப்பல் சிறிது தூரம் சென்ற உடன் கப்பல் கேப்டன் மூலமாக சிறிதுநேரம் மணக்குடியில் நிறுத்திவிட்டு திரும்பவும் மயிலாடி நடந்து வந்தார். அங்கு அவருடைய வீட்டு சுவரில் தன்னிடம் கடன் வாங்கியவர்களின் பெயரிலிருந்து ஒருவருடைய பெயரை அழித்தார். ஏனெனில் கடனை திரும்ப கொடுத்த அந்த நபரிடம் மீண்டும் யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக திரும்ப வந்ததாக கூறி மீண்டும் கப்பல் பயணத்திற்கு
புறப்பட்டு சென்றார். மயிலாடி மக்கள் அதைக்கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
ரிங்கள்தோபே அவர்களின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கின்றது. ஏனெனில் சென்னையிலிருந்து இலங்கை சென்று அங்கு சிலகாலம் தங்கி இருந்து பின்னர் தென் ஆப்ரிக்கா செல்ல பயணம் மேற்கொண்டார். ஆனால் ரிங்கள்தொபே மலேசியா சென்றதாக கடிதங்கள் கானப்படுகின்றது.
1816 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் நாள் தாய்நாடு செல்ல ரிங்கள்தோபே கப்பல் ஏறினார். ஆனால் அவர் தாய்நாடு போய் சேரவில்லை. இதன் பின்னர் இவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இவருடைய மரணமும் மரித்த நாளும் யாருக்கும் தெரியவில்லை. கடல் பயணத்தின் மூலம் தென் ஆப்ரிக்கா செல்லும் வழியில் இவர் மரித்ததால், அந்த கப்பல் மாலூமி இவருடைய சரீரத்தை கடலில் எறிந்துவிட்டதாக ஒரு செய்தி கூறுகின்றது. ஆனால் இடையன்குடி பேராயர் கால்டுவெல் கூறும்போது ரிங்கல்தோபே இந்தோனேசியாவில் நற்செய்திபணி செய்யும்போது அங்கு மததீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றார். இவை எதுவும் உறுதி படுத்த முடியவில்லை.
எது எப்படியோ, ரிங்கள்தொபே அவர்கள்தான் சீர்திருத்த திருச்சபையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் மிஷனெரிஆவார். தனக்கென்று வாழாமல், நற்செய்தி பணியினாலும், கல்வி பணியினாலும் சமுதாய சேவையாலும் பலரது வாழ்க்கையை ஒளியேற்றினார். இன்றுவரை இவருடைய நற்செய்திபணியின் நினைவுகளும் தாக்கங்களும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தெற்கு கேரளா திருமண்டலத்திலும் காணமுடிகிறது.
ரிங்கள்தொபே அவர்களின் புகழ்பெற்ற வாசகம் என்னுடைய இரட்சகரைப்பற்றி பேசுவதற்கு, எனக்கு ஒரு நாவுக்குமேல் இல்லையே என்பதாகும்.
ரிங்கள்தோபே அவர்கள் தென் திருவாங்கூர் அப்போஸ்தலன் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.
ரிங்கள்தொபே அளர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கோதுமை மணி, அவர் மரிக்கவில்லை; ஆனால் விதைக்கப்பட்டார். இவர் விதைத்த விதை முழைத்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 48% மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள். ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
===============
The Gospel Pioneers:
W. T. Ringletaube (1770-1816)
================
Ringletaube was born on 8th of August, 1770 in Germany, the son of a Lutheran Priest. When he was 18, he came under Moravian Missionary Moment influence which led him deciding to become a missionary. Then he went for theological studies in the world known Halle University of Germany(1789-91), and ordained as a Lutheran Priest in 1796. He wished to join the Danish-Halle Mission in India.
In 1803, the LMS appointed him to South India. At Tranquebar(TN), where he landed in December 1804 and stayed a year to spent time in mastery of Tamil language. Ringletaube’s attention was drawn to Travancore by a native Tamil convert, Maharasan Vedamanikam who told him that many in his village, Mayiladi wished to become Christians, but the high caste Hindus opposed it tooth and nail.
Vedarnonickarm and some new converts went to Tanjore to meet the in-charge of Tranqubar Missionge Rev. J. C. Kohihoff. So, he decided to send Rigletaube to South Travancore to establish the LMS Mission. Ringletaube reached Travancore on 25th April, 1806 started his work first among the Parayas, Kuravas, Vedars, Pulayas, Ezhavas and it soon spread among the Shanar(Nadar) community.
In early days Ringletaube spent his life in the huts at Mailadi and launched his missionary efforts in the teeth of severe opposition from caste Hindus. He wanted to build the church for the converted Christians but the high caste Hindus opposed the erection of a Church at Mailadi. The abused him and threatened to kill him. But he did not feel discouraged. In Mailadi, people like Vedamonickam and Gnanamuthu are gifted their own lands for the construction of the Church.
In 1809, with the help of British permission, Ringletaube founded the first protestant Church at Mayiladi in Tiravancore and Vedamanikkam was also appointed as a catechist and gave baptism for 40 people. In 1811 alone over 400 persons were baptized by Ringeltaube. He also started the first English School in Travancore area. In 1812 another 400 people added to the church. So, he also founded schools in all the churches. Ringeltaube strongly opposed the caste system and tried his best to rid Christians of caste or class hatred. His aim was to create “an independent, self-supporting, self-governing and self-propagating native church. His missionary zeal made him build churches in Athikkadu, Thamarakkulam Puthalam, Kovilvila, Ethampuli and James Town.
Ringeltaube becomes the pioneers of social change through their remarkable services in the field of education, industry and other welfare measures. He came into contact with the Shanars, who were very numerous there as well as in South Travancore. He was shocked to see their sufferings 'and poor economic condition. He saw that the Poll-taxes were collected from the lower people quite inhumanly. They had to pay the tax not only for the young and old, but also for the dead. He fights for the rights of poor people.
As a result, all the unjust taxes imposed on the poor classes were abolished and this brought immense relief to all the unprivileged, and they were exempted from doing compulsory duties connected with the temples which induced many to join Christianity. In Trivancore area the Shanar caste women were not permitted to wear upper cloth. With the help of British permission, the LMS women missionaries empowered and supported the native Christian women to wear upper cloth. The industrial work like printing press, lace-industry and tiles industry done by the missionaries was a great boon to the suppressed caste’s women. It created self-awareness and dignity among the suppressed women and helped them to eradicate poverty from their houses.
Ringeltaube gave baptism more than 1,100 people during his life time. Since 1815, his health began to fall in sick due to overwork and decided to go back home for rest. In the end of January 1816 he assembled all the converts at the Mailadi church and informed them formally of the appointment of Vedamanikkam as his deputy till the arrival of another missionary. He also issued to him a certificate of ordination and a license to preach and administer sacraments also empowered to administer the estates of the churches.
After offering Holy Communion, He took his own overcoat and the dress used during the time of church service, put it on Vedamonickam as all the others were watching and blessed him. Rigletaube bid farewell to everybody and left Trvancore on 23rd January, 1816. Then he went to Quilon to catch a ship. After arranging everything he boarded a ship on 5th February 1816 to Chennai.
When the ship reached Manakkudi, with the captain's permission, Ringeltauhe got down on the shore and walked back to his house in Mylaudi. He erased from one of the walls the names of the persons who had taken loans from him. He thought that his successor might demand the money from them if the names were left on the wall. He again went to the ship and continued his journey to Chennai then the ship carried him to Ceylon (Sri Lanka).
His last days were shrouded in mystery. He was supposed to go to South Africa but after a stay at Sri Lanka, he sailed to Malaysia. He was last heard from on 27th September, 1816. The cause and date of his death are uncertain, but it is widely believed that he died of liver failure whilst on a voyage to South Africa, and the crew had disposed of his body by dumping it in the sea. But as per the Bishop Caldwell report, he might have been killed by the natives whilst on a mission to Indonesia. His fate remains unknown.
Ringeltaube was the first Protestant missionary in the fat south India(Kaniakumari). He founded the Travancore Mission of LMS. He labored assiduously for the conversion of Hindus and the moral edification of Christian converts. His charity and exemplary character made a deep impression on his folk. Although Ringeltaube was a lonely, impulsive, and eccentric man, his courage’s and dedicated efforts opened Travancore to the Christian gospel. But his memory is treasured continues to live in the hundreds of churches, educational institutions and in the hearts of thousands of people who form themselves into the C.S.I. Dioceses of South Kerala and Kanyakumari.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.