செபாஸ்டியின் அந்த 40 பேர் | அந்தியோக்கியா இக்னேஷியஸ் | ஜஸ்டின் தத்துவ ஞானி | கலேரியஸ் | வில்லியம் லித்கோ
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 26
செபாஸ்டியின் அந்த 40 பேர்
=================================
கிபி 320..
மத்திய கிழக்கு துருக்கியின்
செபாஸ்டி நகரம்..
ரோம இராணுவத்தின் 12வது பட்டாளம்..
சின்ன அர்மீனியா என்ற இந்த இடத்தில் கிட்டத்தட்ட நூறு வருடங்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது..
இந்த ஏரியாவில் இருந்த பார்த்திய அரசு ரோம சாம்ராஜ்யத்துக்கு எப்போதும் குடைச்சலாகவே இருந்து வந்த ஒரே காரணத்தினால் நிரந்தரமாகவே ரோமப் படைகள் அங்கு நிறுத்தப்பட வேண்டியதாயிற்று..
அந்த நாட்களில் அர்மீனியாவில் இருந்த அநேகர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டபடியினால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனது..
அதில் ரோம ராணுவத்தின் 12வது பட்டாளத்தைச் சேர்ந்த பல வீரர்களும் இருந்தனர்..
இந்த சமயத்தில் தான் ரோமச் சக்கரவர்த்தி லிசினியஸ் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தனது அடக்குமுறையை
அவிழ்த்துவிட்டான்..
செய்தி அர்மீனியாவை வந்தடைகிறது..அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கொன்று குவிக்க 12வது பட்டாளத்துக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது..
ஆனால் அதிலிருந்த 40 வீரர்கள் தங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மேல் தங்கள் கைகளை நீட்ட உறுதியாய் மறுத்து விடுகின்றனர்..
இராணுவத் தளபதி லீசியஸ் மற்றும் அர்மீனிய கவர்னர் அக்ரிகோலா இருவரும் இராணுவ முகாமுக்கு வருகின்றனர்..
தேச கௌரவம், குடும்பம்,
வீரர்களின் எதிர்காலம்..இன்னும் என்னென்னவோ சொல்லி "அந்த 40"
வீரர்களின் மனதைக் கரையப் பண்ண தலைகீழ் பிரயத்தனம் செய்து பார்க்கின்றனர்..
ஒன்றும் பலிக்கவில்லை..
கிறிஸ்துவின் அன்பை விட்டு எதுவும் அவர்களைப் பிரிக்க முடியவில்லை..
பொறுமை இழந்த லீசியசும் அக்ரிகோலாவும்
"அந்த 40"பேரையும் சவுக்கால் அடிக்கப்படவும் சித்ரவதை செய்யப்படவும் கட்டளையிடுகின்றனர்..
சித்ரவதை சாதாரண வதை அல்ல..கூரிய முள் கொக்கிகளை உடல் முழுவதும் மாட்டி இழுத்து இழுத்து வதைக்கும் கொடும் வதை..
அதற்கும் பணியாமல் போகவே..40 பேரும் சிறையில் அடைக்கப் படுகின்றனர்..
சில நாட்களுக்குப் பின் லிசியஸ் வருகிறான்..
கொஞ்சமாவது மனம் மாறியிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்..ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது..
அவர்களது விசுவாசத்தை எதுவும் அசைக்க முடியவில்லை..
கடைசியாக உக்கிரத்தின் உச்சிக்குச் சென்றனர் லீசியசும் அக்ரிகோலாவும்..
இதற்குள் அர்மீனியாவை மூடுகிறது கொல்லும் உறைபனிக்காலம்..
40 வீரர்கள் இருந்த ஜெயிலின் அருகில் இருந்த குளத்தின் தண்ணீர் பனிக்கட்டியாகி உறைந்துவிட..தளபதியும் கவர்னரும் இட்ட கட்டளையின் பேரில்..
40 பேரும் முழுவதும் ஆடைகள் உரியப்பட்டு வெறும் உடலோடு குளத்தின் நடுவில் இரவின் கொல்லும் பனியில் நிறுத்தப்படுகின்றனர்..
"முடிவை மாற்று அல்லது விறைத்து செத்துப் போ!"
நிறுத்தப்பட்ட 40 பேரும் தாங்கள் கிறிஸ்துவோடு சீக்கிரம் வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு ஒருவரை ஒருவர் திடப்படுத்திக் கொண்டு மனதளவில் தயாராகிக் கொள்கின்றனர்
இதற்குள் தளபதி ஒரு வேலை செய்கிறான்..
அவர்களை சோதிக்கவும் அவர்கள் உறுதியைக் குலைக்கவும் அவர்கள் கண்ணெதிரே ஒரு நீச்சல் தொட்டி நிறைய வெந்நீர் நிரப்பி சிறிது தூரத்தில் அவர்கள் பார்வையில் படும்படி வைக்கிறான்..
குளிர் தாங்க முடியாமல் தங்கள் முடிவை மாற்றட்டும் என்று..
இரவின் கொல்லும் குளிர்..நிர்வாணமாய் 40 பேர்..குளத்தின் நடுவில்..கர்த்தரைப் பாடித் துதித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அர்மீனியக் குளிரில் உறைய ஆரம்பிக்கின்றனர்.
நேரம் மெதுவாய்க் கடக்கிறது..சிலர் சத்தமாய் ஜெபிக்கின்றனர்..
"தேவனே எங்களை பெலப்படுத்தும்.."
சரித்திரம் சொல்கிறது..
அவர்களில் ஒருவன் இப்படி ஜெபிக்கிறான்..
"தகப்பனே! நாங்கள் 40 பேர் இந்தப் போராட்டத்தில் நிற்கிறோம்..வேதத்தின் மிக இன்றியமையாததான எண்ணாகிய இந்த 40 எண் கொண்ட எங்களில் ஒருவராகிலும் குறைந்து விடாதபடி எங்களைக் காத்து எங்களில் ஒவ்வொருவரும் கிரீடத்தைப் பெற்றுக் கொள்ள கிருபை தாரும் !"
நேரம் நகர்கிறது..
கரி நெருப்பு மூட்டப்பட்ட தூரத்திலிருந்து ஒரு கூட்டம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது..
40 பேரின் உடல்களின் அங்கங்கள் விறைக்கத் தொடங்க..அவர்களில் ஒருவன் தூர இருக்கும் நெருப்பையும் வெந்நீரையும் பார்க்கிறான்..அவன் மனம் பேதலிக்கிறது..
மற்ற 39 பேரின் வேண்டுதலையும் பாராமல் ஓடிவந்து வெந்நீர்த் தொட்டியில் விழுகிறான்..விழுந்தவன்..அதிர்ச்சியோ தேவ கரமோ தெரியாது..செத்துப் போகிறான்..
கர்த்தரே அறிவார்..
வெந்நீர்த் தொட்டிக்கு அருகே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு இராணுவ வீரன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
அவர்களை அவன் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருக்கும் போதே..இது வரை கிறிஸ்தவனாய் இல்லாத அவன்.. ஒரு தரிசனத்தைப் பார்க்கிறான்..
தேவ தூதர்கள் வெண் ஆடையில் இறங்கி வந்து அவர்களைத் தைரியப்படுத்துவதையும்..பரலோகம் திறந்து இயேசு அவர்களுக்காக ஆவலோடு காத்திருப்பதையும் காண்கிறான்..
அவனால் தன்னை அடக்க முடியவில்லை..இயேசுவின் அன்பு அவனுக்குள் அனலாய் எரிய..தன் இராணுவ உடைகளையும் ஆயுதங்களையும் களைந்து விட்டு வெறும் உடலோடு குளத்தின் மையத்தை நோக்கி நடக்கிறான்..
"இதோ நீங்கள் 39 அல்ல..40வது நான் வந்திருக்கிறேன்..
இந்த எண் பூரணமாகட்டும்..
என்னைக் கிறிஸ்துக்கு சமூலமாய் அர்ப்பணிக்கிறேன்.."
மற்றவர்கள் அவனை மகிழ்ச்சியோடு வரவேற்க.."அந்த 40"பூரணமாகிறது..
அன்று இரவின் இருளில்..அமைதியாய்..அதே நேரம் கொடுமையாய் அந்த அர்மீனியக் குளிர் தன் வேலையை சுத்தமாய் செய்து முடித்து விட்டிருந்தது..
காலையில் ஒருவர் விடாமல் அந்த 40 பேரும் சடலமாகி இருந்தார்கள்..அவர்கள் உடல்களை வண்டியில் ஏற்றி எரித்து சாம்பலாக்கச் சொல்கின்றான் தளபதி..
சடலங்கள் வண்டியில் ஏற்றப்படுகின்றன..
ஒரு வீரனின் தாய் தன் இளம் மகனைக் கடைசியாய் ஒரு முறை பார்த்துவிட ஓடி வருகிறாள்..
அந்த மகனின் உடலில் லேசாக உயிர் இருக்க..அவன் கடைசியாய்த் தன் தாயைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்கிறான்..
"என் ஜீவன் இயேசுவுக்கே" என்பதாக இருக்கிறது அந்தப் புன்முறுவல்..
சரித்திர ஆசிரியர் சொல்கிறார்..
"அவர்கள் எரிக்கப்பட்டு மேல் எழும்பி கீழிறங்கிய புகை..
அந்த 40 பேரும் மீண்டும் அந்த மண்ணில் விதையாக விதைக்கப்பட்டது போல் இருந்தது" என்று..
எவ்வளவு வேகமாய்க் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்களோ அவ்வளவு வேகமாய் மீண்டும் கிறிஸ்தவம் அங்கு பரவியது என்கிறது வரலாறு..
செபாஸ்டியின்
அந்த 40 பேர்
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 27
அந்தியோக்கியா இக்னேஷியஸ்
====================================
பவுலின் மரணத்தோடு..
அப்போஸ்தலர்களின் தலைமுறை முடிவு பெற..
நீரோ தனக்கு விரோதமாய் எழும்பின ஒரு கலகக் கூட்டம் கண்டு பயந்து..தற்கொலை செய்து கொண்டான்..
இப்போது கிபி 107..
த்ராஜன் என்னும் ராயனின் ஆட்சி..
த்ராஜனின் சாம்ராஜ்யத்தின் வெவ்வேறு நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன..
ஏறக்குறைய கிபி 107 ம் ஆண்டு..
அந்தியோக்கியா பட்டணத்தில் கடுமையான தேடுதல் வேட்டை..கிறிஸ்தவர்களைக் குறிவைத்து..
சிறைப்
பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர்..அந்தியோக்கியாவின் பிஷப்..இக்னேஷியஸ்..
அப்போஸ்தல முற்பிதாக்களில் மிக முக்கியமானவர்..
அந்தியோக்கியா சபையின் பாதுகாவலராக இருந்தவர்..
வயதான தேவ மனிதர் ..அந்த நகரின் கவர்னருக்கு முன்பாக நிறுத்தப் படுகிறார்..
இயேசுவை மறுதலிக்க வற்புறுத்தப்பட்டபோது மறுத்தவரை..
ரோம் நகருக்கு..சிங்கங்களுக்கு இரையாகிப் போக அனுப்பப்பட ஆணை பிறப்பிக்கப் படுகிறது..
10 காவலர்கள் சூழ..
அந்தியோக்கியாவிலிருந்து ரோமுக்கு இழுத்துச் செல்லப் படுகிறார் இக்னேஷியஸ்..
நீண்ட நெடும் பயணம்..ஏஷியா மைனர் வழியாக பல பட்டணங்களைக் கடந்த பயணம்..
இடையில் தங்கும் இடமெல்லாம் ஆங்காங்கே உள்ள சபைகளின் விசுவாசிகள் அவரை சந்திக்க வருகிறார்கள்..
எவ்வித வேதனையோ கலக்கமோ பயமோ இன்றி, வந்தவர்கள் யாவரையும் கிறிஸ்துவுக்குள் உற்சாகப்படுத்தி..
விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறார்..
அவரைக் கண்ட யாவரும் ஆவியில் உந்தப்படுகிறார்கள்..
வழியில் கிடைத்த நேரத்தில் ஏழு மிக முக்கியமான கடிதங்களை எழுதுகிறார்..
இன்று வரை இக்கடிதங்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பக்தியுடன் வாசிக்கப்படுகின்றன..
சிமிர்னாவில் தங்கியிருந்த நாட்களில் கடைசியாக ரோம் சபைக்கு எழுதுகிறார்..
"நான் தீயால் சுட்டெரிக்கப்பட்டாலும் என்ன? சிலுவையில்
அறையப்பட்டாலும் என்ன? சிங்கங்களுக்கு இரையானாலும் என்ன?
என் எலும்புகள் நொறுக்கப்பட்டாலும் என்ன ? என் அவயவங்கள் நார் நாராய்க் கிழிக்கப்பட்டாலும் என்ன?
என் முழு சரீரமும் சக்கையாய்ப் பிழிந்து போடப்பட்டாலும் என்ன?
இயேசுவை சொந்தமாக்கிக் கொள்ளும்படி எதற்கானாலும் என்னை சமூலமாய் ஒப்புக்கொடுக்கிறேன்..
என்னை இதிலிருந்து விடுவிக்கும்படி சபை முயற்சிக்க வேண்டாம்..நான் ஆவலாய் ஏங்கும் இரத்தசாட்சி மரணத்துக்கு
என்னை விட்டு விடுங்கள்.."
டிசம்பர் 20..ரோம்..
ராயனின் கட்டளை நகல் தண்டனை நிறைவேற்றும் அதிகாரியிடம் கையளிக்கப்பட..
கொலோசியம் என்ற கொலைக் களத்துக்குக் கூட்டத்துக்கு முன்பாக வேடிக்கைப்பொருளாகக் கொண்டு வரப் படுகிறார் தேவமனிதர் இக்னேஷியஸ்.
பின்னால் உறுமும் சிங்கங்களின் கர்ஜனை..ஸ்டேடியத்தில் ஜனங்களின் ஆரவாரம்..
எதைப்பற்றியும் கவலைப்படாத இக்னேஷியஸ் சொன்னார்..
"நான் கிறிஸ்துவின் கோதுமை மணி..
சிங்கங்களின் பற்களுக்கு இரையாகி பரிசுத்த அப்பமாய்க் காணப்பட என்னையே ஒப்புக் கொடுக்கிறேன்.."
நடந்தது அதுவே..
பல நாட்கள் பட்டினி போடப்பட்டிருந்த இரண்டு சிங்கங்கள் சீறிப் பாய..தன் ஜீவனைக் கொடுத்தார் இக்னேஷியஸ்-
கோதுமை மணியாக..
------------------------------
தகப்பனே..
கிறிஸ்துவின் அன்பை விட்டு எங்களைப் பிரிப்பவன் யார்?
உபத்திரவமோ..
நாசமோசமோ..
பட்டயமோ?
மரணமானாலும் ஜீவனானாலும் ..
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு எங்களைப் பிரிக்காது"
தகப்பனே..இந்த வார்த்தைக்கு நாங்கள் உண்மையாய் நிற்க எங்களுக்குக் கிருபை தருவீராக..
ஆமென்.
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 28
ஜஸ்டின் தத்துவ ஞானி
==================
நாளுக்கு நாள் ரோம ராஜ்யத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்..
இந்த முறை ஒரு ரோமப்பெண் - வரலாறில் பெயர் இல்லை..
பாவத்திலும் குடியிலும் இருந்து சமீபத்தில் தான் கிறிஸ்துவிடம் மனம் திரும்பியிருந்தாள்..
தன்னைப் போலவே பாவத்தில் ஊறிக்கிடந்த தன் கணவனையும் கிறிஸ்துவிடம் நடத்த முயற்சிக்கிறாள்..
அவளது அன்பும் சாட்சியின் வாழ்வும்..எதுவும் அவனை அசைப்பதாக இல்லை..நாளுக்கு நாள் பாவத்தைத் தண்ணீராகக் குடிக்கிறான்..
கடைசியாக வேறு வழியின்றி அவனிடத்திலிருந்து விவாகரத்து கேட்கிறாள்..
அவளது கிறிஸ்தவ சகோதரர்கள் அதை ஆதரிக்க மறுத்து அவளை சமாதானப் படுத்த முயற்சிக்கிறார்கள்..
"அவன் திருந்தி விடுவான்"
என்று..
இதற்குள் சிறிது காலம் வெளிநாடு சென்று திரும்பினவன் இன்னும் மோசமாகிறான்..
வேறு வழியின்றி விவாகரத்து கோருகிறாள்..
கேஸ் கோர்ட்டுக்கு வர..
அவன் சொல்கிறான்..
"இவள் ஒரு கிறிஸ்தவள்..
கொல்லுங்கள் இவளை.."
கோர்ட் ஜனங்களால் நிரம்பியிருக்கிறது..
"இதோ! இந்த ப்டோலியுமிஸ்..இவன் தான் இவளைக் கிறிஸ்தவளாய் மாற்றினான்..பிடியுங்கள் இவனை..கத்துகிறான்
இதற்குள் ப்டோலியுமிஸின் நண்பன் லூசியுஸ் அவனுக்கு ஆதரவாகக் கோர்ட்டில் வாதாட..அவனும் கைது செய்யப் படுகிறான்..
இப்போது உள்ளே நுழைகிறார்..
ஜஸ்டின் என்ற தத்துவ ஞானி..ரோம் நகரில் எல்லோராலும் அறியப்பட்டவர்..
கோர்ட்டுக்கு சவால் விடுகிறார்..
நான் படித்த எல்லா மதங்களுக்கும் நான் அறிந்த எல்லாத் தத்துவ ஞானங்களுக்கும் மேலான ஒன்று உண்டென்றால்..
அது கிறிஸ்தவம்..அதைப் போதித்த இயேசு கிறிஸ்து..
என்னோடு வாதிட உங்களுக்கு நியாயமிருந்தால் முன் வையுங்கள் உங்கள் நியாயத்தை..வாதத்தை..
மனிதனின் முகத்துக்குக் கலங்காத ஜஸ்டினை எதிர்க்கத் தைரியமில்லாத ஜட்ஜ்..ஜஸ்டினையும் கைது செய்கிறான்..
"நீங்கள் எங்கள் தலைகளை வெட்டலாம்..நித்திய நியாயத்தீர்ப்பில் எங்கே நிற்பீர்கள்?
இராஜாதி ராஜாவான அந்த நியாயாதிபதிக்கு முன்பாக உங்கள் நியாயம் நிலை நிற்குமோ..?"
உயிரைப் பொருட்படுத்தாமல் தைரியமாய் முழங்கின நால்வருடைய தலைகளும் சீவப்படுகிறது..
------------------------------
தகப்பனே..
அன்று அப்போஸ்தலர்கள் தைரியத்திற்காக ஜெபித்தார்களே!
"அவர்கள் முகத்துக்கு முன்பாக அஞ்சாதிரு..இதோ! தேசமனைத்துக்கும்
ராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும்..அதின் ஆசாரியர்களுக்கும் தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம்..இருப்புத்தூணும் வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.."என்றீரே!
எங்கள் சகோதரருக்குள்ளே விசேஷித்தவர்களான அறிவும் புத்தியும் ஞானமும் விவேகமும் உள்ளவர்கள் தைரியமாய் எழும்புவார்களாக!
நித்திய நியாயத்தீர்ப்புக்கு மாத்திரம் நடுங்கக் கிருபை தாரும்! ஆமென்..
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 29
கலேரியஸ்
====================
டயோக்ளீஷியனின் நாட்களில் நடந்து கொண்டிருந்த வன்முறை ஒருபக்கம் இருக்க..
அவனது வளர்ப்பு மகனும் பட்டத்து இளவரசனுமான கலேரியஸ்..தன் தாயின் தூண்டுதலின் பேரில் கிறிஸ்தவர்களைத் தேசத்திலிருந்து துடைத்துப் போட தன் தகப்பனிடம் உத்தரவு பெற்றுக்கொண்டான்..
நாள் குறிக்கப்பட்டது-
கிபி 303 பிப்ரவரி 23..
டயக்ளீஷியனின் கிழக்கு ராஜ்யத்தின் தலைநகர் நிக்கோமீதியா..
அதிகாலை நேரம்..
போலீஸ் IGயும் அவனுக்குக் கீழிருந்த போலீஸ் படையும் நுழைந்தது..அங்கிருந்த பெரிய கிறிஸ்தவ ஆலயத்துக்குள்..
கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கி..
வேத புத்தகங்களையும் அங்கிருந்த லைப்ரரியையும்
தீ வைத்தனர்..
கிறிஸ்தவத்தின் முடிவை ஆரம்பித்து வைக்கும் அந்த முதல் நாள் சம்பவங்களை தாங்களே நேரில் பார்வையிடச் செல்கின்றனர்..
டயக்ளீஷியனும் கலேரியசும்..
வெறும் புத்தகங்களைக் கொளுத்துவதைக் கண்டு வெறுப்பேறிய டயக்ளீஷியன்..
"நாட்டிலுள்ள ஆலயங்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கி கிறிஸ்தவன் ஒருவன் விடாமல் கைது செய்" என்று கட்டளையிடுகிறான்.
அவனது கட்டளையின் நகல் பொது இடத்தில் ஒட்டப்படுகிறது..இதைக் கண்ட துணிச்சலான ஒரு கிறிஸ்தவர்..அதைக் கிழித்தெறிய..அவர் கைது செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்படுகிறார்..
நிக்கோதேமியாவில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்..
கலேரியஸ் தானே அரண்மனையைத் தீக்கொளுத்தப் பண்ணி..பழியைக் கிறிஸ்தவர்கள் மேல் போட்டு..கலவரத் தீயை இன்னும் ஊதிவிட..
அந்த நகரில் ஆரம்பித்த கலவரம்..தேசம் முழுவதும் பற்றி எரிய..அடுத்த பத்து வருடங்கள் அந்த உபத்திரவத் தீயை அணைக்கவே முடியவில்லை..
ஆணென்றும் பெண்ணென்றும் வயதொன்றும் பாராமல்..
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அந்தப் பத்து ஆண்டுகளில் கொன்று குவிக்கப்பட்டனர்..
"கிறிஸ்தவன்" என்ற பெயரே ரோமப் பேரரசில் வெறுப்பைக் கக்கும் பேராயிற்று..அவர்களுக்கு இரங்க ஆளில்லை..
புயலோ பூகம்பமோ கொள்ளை நோயோ..எது நடந்தாலும் பலிகடா கிறிஸ்தவன் தான்..
அவர்கள் பட்ட வதையும் வேதனையும் கற்பனை கடந்தது..
வீடுகளோடு முழுக்குடும்பங்கள் சாம்பலாக்கப்பட்டன..
நான்கைந்து பேராய் சேர்த்து சேர்த்துக் கட்டப்பட்டு அவர்கள் உடலில் பாராங்கல் கட்டப்பட்டு மர்மரா கடலில் மூழ்கடிக்கப் பட்டனர்..
தொழுமரம்..முள்சாட்டைகள்..தீவைத்தல்..
பட்டயம்..குறுவாள்..சிலுவைகள்..விஷம்..பட்டினி போடுதல்-இவை எல்லாம் கிறிஸ்தவர்களைத் தனித்தனியாகவும் மொத்த மொத்தமாகவும் கொல்ல உபயோகப்படுத்தப்பட்ட உபகரணங்கள்..
பிரிகியா என்ற கிறிஸ்தவர்கள் நிறைந்த பட்டணம் முழுவதும் தீக்கொளுத்தப்பட்டது..
அங்கு கொல்லப்படாத கிறிஸ்தவர்களே இல்லை..
"இதற்கு முடிவே இல்லையா?"
என்று அந்தந்த மாநில கவர்னர்கள் ராயனுக்கு எழுத..
ரோம சாம்ராஜ்யத்தின் உபத்திரவக் காலம் முடிவு பெறும் காலம் நெருங்கியது..
ஆனாலும் மீந்தவர்கள் நிலை உயிரோடு செத்த நிலை..
சிலர் காது வெட்டப்பட்டு..சிலர் மூக்கு அறுபட்டு..சிலர் கண் பிடுங்கப்பட்டு.. பலர் எலும்பு முறிக்கப்பட்டு..
கிறிஸ்தவன் என்று அடையாளம் காணப்படும்படி உடலின் தீக்காயங்களோடு..
சொல்லப்பட்ட இவை அனைத்தும்..நடந்து முடிந்த கோர தாண்டவத்தின் ஒரு சிறு பகுதி தான்..
ஆனால் வெளிவராத..
எழுதப்படாத..
சொல்லப்படாத இரத்தக் கதைகளுக்கும் அவல மரணங்களுக்கும் அளவே இல்லை..
அவைகள் பரலோகத்தின் நாளாகமப் புத்தகத்தில் அல்லவோ இருக்கிறது!
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 30
வில்லியம் லித்கோ
====================
1580 ல் பிறந்த வில்லியம் லித்கோ ஒரு ஆங்கிலேயா்..
பயணம் செய்வதில் அதிக நாட்டம் கொண்டிருந்த லித்கோ..எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவுக்குச் செல்லும் வழியில் 9 பேர் வழிமறித்து அவர் மேல் ஒரு கறுப்பு அங்கியை வீசி அவரை ஸ்பெயினில் உள்ள மலகாவுக்கு இழுத்துச் செல்கின்றனர்..
"நீ ஒரு ஆங்கிலேய உளவாளி" என்பது அவர் மேல் சாட்டப்பட்ட குற்றம்..
அந்நாட்களில் ஸ்பெயின் ஒரு ரோமன் கத்தோலிக்க நாடாக இருந்தது..
"நான் ஒரு டூரிஸ்ட் தான்" என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும்..தான் ஒரு உளவாளி தான் என்பதை ஒப்புக் கொள்ள வைக்க கடுமையான டார்ச்சருக்கு உள்ளாக்கப்பட்டார் வில்லியம் லித்கோ..
கடைசியாக..
"போப்பாண்டவரின் ஆளுகையை நீ ஏற்றுக் கொள்கிறாயா?" என்று கேட்கப்பட்ட போது..லித்கோ சொன்னார்..
"நான் செய்யாத குற்றத்துக்காக என்னை உளவாளி என்று சொல்லும் நீங்கள்..என்னை என் வேதத்தையும் மறுதலிக்க வைப்பீர்களோ? நான் செத்தாலும் சாகிறேன்"
என்று ஒப்புக்கொடுத்தார்..
"நாங்கள் உன்னை உளவாளி என்று தான் நினைத்தோம்..ஆனால் உன் புத்தகங்களும் உன் வேதமும் உன்னை போப்பாண்டவரின் விரோதி என்றே காட்டுகிறது..
நீ உளவாளியைக் காட்டிலும் மிக மோசமான தேச துரோகி" என்று சொன்ன கோர்ட்..
"இன்னும் எட்டு நாட்கள் தவணை தருகிறோம்..உன் முடிவை மாற்றிக் கொண்டு ரோம சபையின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படி அல்லது உன் முடிவை நீயே நிர்ணயிப்பாய்" என்று சொல்லியது..
8 நாட்கள் முடிந்தன..
கடைசியாக ஒரு தவணை கொடுக்கப்படுகிறது..
"உன் முடிவை மாற்றிக் கொள் லித்கோ..நீ ஏன் சாக வேண்டும்?"
லித்கோ சொன்னார்..
"சாவோ நெருப்போ..
எதற்கும் எனக்குப் பயமில்லை..நான் எதற்கும் தயார்.."
அன்று இரவு 11 வகையான வித்தியாச வித்தியாசமான டார்ச்சர்களுக்கு உட்படுத்தப்படவும்.. அதையும் மீறி உயிரோடிருந்தால்..
வரும் ஈஸ்டருக்குப்பின் கிரனடா என்ற இடத்தில் எரித்துக் கொல்லப்படவும் தீர்ப்பாகியது..
அன்றிரவு இரத்தத்தை உறைய வைக்கும் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் லித்கோ..
லித்கோ ஸ்பெயின் நாட்டினராய் இல்லாமல் ஒரு ஆங்கிலேயராய் இருந்தபடியால்..அவருக்கு நடந்தவை யாவும் மிக ரகசியமாகவே நடத்தப்பட்டன..
ஆனால் அந்த நகர மேயரின் வீட்டில் இரவு விருந்தில் லித்கோவைப் பற்றிப் பேசிக்கொள்ளப்பட்ட காரியங்கள்..ஒரு வேலைக்காரப் பையன் மூலம் வெளியே கசிந்து..
விஷயம் ஆங்கிலத் தூதரகம் வரை சென்று பெரிதாக..சர்.வால்ட்டர் ஆஸ்ட்டன் என்ற ஆங்கிலத் தூதரக உயரதிகாரி..
ஸ்பெயின் மன்னனிடம் பேசி..லித்கோ விடுதலை செய்யப்பட்டார்..
இரண்டு மாதங்களுக்குப்பின் லித்கோ பாதுகாப்பாக இங்கிலாந்தில் உள்ள டெட்போர்டு துறைமுகம் வந்து சேர்ந்தாலும்..
அவரது இடதுகை அவர் வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாததாகவே ஆகிப்போனது..
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981