=======
QUOTES
========
பாவமும்
கொரோனா போன்றதுதான்
பரவுவதில் அத்தனை வேகம்
ஜெபிக்கும்போது
விடுதலை கிடைக்கும்
ஆனால்
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
பேரழிவு நிச்சயம்.
அணுகுண்டு போல பரவும் பாவத்தின் விளைவினால்
நாம் மட்டுமல்லாமல்
நம்முடைய தலைமுறையும்
பாதிக்கப்படுகிறது.
பத்சேபாள் விஷயத்தில்
தாவீது
மன்னிக்கப்பட்டார்
ஆனால்
அவரது பாவத்தின் விளைவு
அவரது முழு குடும்பத்தையும் பாதித்தது
வாழ்க்கையே ரணகளமானது.
ஆகையால்
எச்சரிக்கையாயிருப்போம்
சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து
உயிர்பிழைத்து விட்டாலும் கூட
விஷம் குடித்தவனின்
எஞ்சிய வாழ்க்கை
துயரம் நிறைந்ததுதான்.
வருமுன் காப்பதே
வாழ்க்கைக்கு நல்லது.
சிந்தையிலேயே தடுப்பதே
பரிசுத்தத்துக்கு நல்லது.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
According to the Bible,
இயேசு இரண்டு தடவை கோபப்பட்டார். (மத்தேயு 21:12 மற்றும் மாற்கு 3:5).
முதல் தடவை அவர் கோபப்பட்டது எதற்காக தெரியுமா?
ஆலயத்தில் வியாபாரம் செய்ததற்காக.
சும்மா இல்ல. சவுக்கை எடுத்து பின்னிவிட்டார்.
சபைக்குள் வியாபாரம் என்பது
தேவ கோபத்தை வரவழைக்கும்
மகா பாவம்.
காற்றுக்கு
அவர் காசு வாங்குவதில்லை
தண்ணீருக்கு
அவர் காசு வாங்குவதில்லை
ஆனால்
நாம் மட்டும்....? !
இலவசமாய் பெற்றீர்கள்
இலவசமாய் கொடுங்கள்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
கிறிஸ்து மாம்சத்தில் வாழ்ந்த காலத்தில் ஜீவித்த பரிசேயர்கள், சதுசேயர்கள், வேதபாரகர்கள், ஆசாரியர்கள், பிரதான ஆசாரியர்கள், etc. போன்ற மத அல்லது மார்க்கத்தலைவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்து வந்த தவறுகளை கிறிஸ்து நேரடியாகவே கண்டித்தார். அவைகளை கொஞ்சம் கவனித்தால் இன்றும் அதே தவறுகளை சபையின் பொறுப்பில் உள்ளோர் செய்வதை உணர முடியும். பாடமும் கற்றுக்கொள்ள முடியும்.
1. மோசேயின் ஆசனத்தை மட்டும் அவர்கள் விரும்பினார்கள்.
2. தாங்கள் கைக்கொள்ளாததை ஜனங்களுக்கு போதித்தார்கள்.
3. மனுஷர் பார்ப்பதற்காகவே கிரியை செய்தார்கள்.
4. மத சம்பந்தமான அலங்காரமான ஆடைகளை விரும்பி அணிந்தார்கள்.
5. விருந்துகளில் முதல் இடங்களில் (இருக்கைகளில்) அமர விரும்பினார்கள்.
6. சந்தைவெளிகளில் மக்களிடமிருந்து மரியாதையையும் வணக்கத்தையும் எதிர்பார்த்தார்கள்.
7. கௌரவமான அடைமொழிகளை (பதவி, பட்டங்கள்) விரும்பினார்கள்.
8. தங்களை தாங்களே உயர்த்திக்கொண்டனர்.
9. மனுஷர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாமல் தடை செய்தார்கள்.
10. பார்வைக்காக நீண்ட ஜெபங்களை செய்தார்கள்.
11. விதவைகளின் வீடுகளை பட்சித்தார்கள்.
12. ஒருவனை தங்கள் வழியில் இழுக்க முயன்றும், புதிதாக இறைவனிடம் வருபவர்களை கெடுக்கவும் செய்தார்கள்.
13. தேவாலயம், காணிக்கை, பலிபீடம், வானம், பூமி, etc. என எல்லாவற்றின் மேலேயும் சத்தியம் செய்தார்கள்.
14. இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டார்கள்.
15. கொள்ளையும் அநீதியும் புரிந்தார்கள்.
16. வெளியே சுத்தமாயும் உள்ளே அசுத்தமாகவும் கல்லறையை போல் இருந்தார்கள்.
17. தீர்க்கதரிசிகளை துன்பப்படுத்தி கொலை செய்தார்கள்.
18. நரகாக்கினையின் பிள்ளைகளாய் இருந்தார்கள்.
19. வேதத்தில் இல்லாத பாரம்பரியங்களையும், சுமக்க முடியாத கட்டளைகளையும் மக்கள் மீது சுமத்தினார்கள்.
20. ஒரு தேவ கட்டளைக்கும் கீழ்ப்படிய மனமில்லாதவர்களாக இருந்தார்கள்.
(ஆதாரம்: மத்தேயு 23-ம் அதிகாரம் முழுவதும்).
மேற்கண்ட குறைகள் ஏதேனும் தங்களிடம் இருப்பதை உணர்ந்தால், அதை திருத்திக்கொள்பவர்கள் பாக்கியவான்கள்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
நோவா
சிறந்த உவமை நமக்கு
எப்படி?
நோவாவும்
பேழை செய்தார்
நாமும்
பேழை செய்கிறோம்
நோவாவும்
கிண்டல் கேலி செய்யப்பட்டார்
நாமும்
கிண்டல் கேலி செய்யப்படுகிறோம்
நோவாவும்
அலட்சியப்படுத்தப்பட்டார்
நாமும் அலட்சியப்படுத்தப்படுகிறோம்
மழை என்றால்
என்னவென்றே தெரியாத
அம்மக்கள்
பெருமழை பெய்யப்போகிறது என்ற அறிவிப்பை
துளியேனும் நம்பவில்லை
அக்கினி மழை பெய்யப்போகிறது என்ற
இப்போதைய நம் அறிவிப்பையும்
துளியேனும் நம்பவில்லை
இக்கால மக்கள்
அன்று
எதிர்பாராத ஓர் நாளில்
ஜலப்பிரளயம் வந்தது
அத்தனை சிருஷ்டிகளும்
மாண்டு மடிந்தன
நாளையும்
எதிர்பாராத ஓர் நாளில்
கிறிஸ்துவின் வருகையும் சம்பவிக்கும்
இந்த உலகம் அக்கினியினால் அழியும்
யார் நம்பினால் என்ன
யார் நம்பாவிட்டால் என்ன
நாம்
ஊதுற சங்கை
ஊதிக்கொண்டே இருப்போம்
பேழையை
இடைவிடாமல் காட்டிக்கொண்டே இருப்போம்
சொன்னது கர்த்தர் என்பதால்
சொன்ன வார்த்தை நிறைவேறியே தீரும்.
By Bro Durai Dainel
To Get Daily Story Contact +917904957814
=======
QUOTES
========
தவறான கொள்கையை
சரியான கொள்கைதான் என்று
பிடிவாதம் பிடிப்போர் பலர்
குருட்டு இலட்சியத்தை
முரட்டு லட்சியமாய்
கடைபிடிப்போர் பலர்
எல்லாம்
இயேசுவை சந்திக்கும் வரைதான்
கிறிஸ்துவை சந்தித்துவிட்டால்
நம் குருட்டு கொள்கைகளும்
வறட்டு பிடிவாதங்களும்
தன்னால் மாறிவிடும்
தர்ஷீசின் சவுல்
சபையை துன்பப்படுத்தினான்
தன் கொள்கையே சரி என்றும்
தன் பாதையே உகந்தது என்றும்
கருதி சீறி பாய்ந்தான்
தமஸ்குவுக்கு போகும் வழியில்
கிறிஸ்துவை அவன் சந்தித்த பிறகு
பவுலாய் மாறினான்
அவன் வாழ்க்கையே மாறியது
அவன் கொள்கையும் மாறியது
சரியான பாதைக்கு
சடுதியில் திரும்பினான்
கிறிஸ்துவின் சந்திப்புதான்
கள்ளஉபதேசத்துக்கு சாவுமணி
நேசரின் சிநேகம்தான்
தவறான பாதைக்கு
மூடு விழா.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
===========
Quotes
============
மரத்தின் வேர்தான்
அதை தாங்குகிறது
ஆனால் அது
கண்ணுக்கு தெரிவதில்லை
மரத்தின் மேல்பகுதி
இலைகளும் பூக்களுமாய்
கிளைகளும் கனிகளுமாய்
அழகாக காட்சியளிக்கிறது
கண்களுக்கு தெரிகிறது
பிரபலங்கள்
கண்ணுக்கு தெரிகிறார்கள்
ஆனால்
அவர்களுக்காக ஜெபிக்கும் விசுவாசிகள்
வெளியே தெரிவதில்லை
வேர்களின் விலாசம்
மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம்
தேவனுக்கு நன்கு தெரியும்
ஜெபத்தின் மகிமை
நியாயத்தீர்ப்பின் நாளில் தெரியும்
ஜெபிப்பவர் அருமை
பரலோகத்துக்கு புரியும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
======
Quotes
=======
சத்தியத்தை
அறிந்துகொள்ள வேண்டும்
அதிலும்
சரியான சத்தியத்தை
அறிந்துகொள்ள வேண்டும்
போலி உபதேசங்கள்
ஏராளம் தாராளம்
அதில் முழ்கிப் போய்
மாய்ந்துவிடக் கூடாது
சரியான பயணச்சீட்டை வைத்துக்கொண்டு
தவறான இரயிலில்
ஏறிவிடக் கூடாது
போகும்போது
ஜாலியாகத்தான் இருக்கும்
போய் சேர்ந்த பிறகுதான் தெரியும்
வந்த இடம் தவறென்றும்
வந்த வண்டி மோசமென்றும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
=======
பிரசங்கம் பண்ண எவ்வளவு திறமையும், கடின உழைப்பும் வேண்டுமோ அவ்வளவு திறமையும், கடின உழைப்பும் பிரசங்கம் கேட்கவும் வேண்டும். அதாவது மிகுந்த ஜெபமும், ஆழ்ந்த வேத வாசிப்பும், தேவனோடு தீவிர ஐக்கியமும் இல்லாமல் பிரசங்கம் கேட்க போனால் எத்தனை சிறந்த பிரசங்கமாய் அது இருந்தாலும் இருதயத்துக்குள் செல்லாது. இருதயத்துக்குள் செல்லாமல் செவிகளை மட்டுமே தொடும் பிரசங்கத்தால் ஆத்துமாவுக்கு எவ்வித பயனும் இல்லை.
பிரசங்கிக்க மட்டுமல்ல
பிரசங்கம் கேட்கவும்
பெரிய கிருபை வேண்டும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
=======
பாவங்களை ஜெயிக்க
குறுக்கு வழி என்று எதுவுமில்லை
பாவத்தோடும் சாத்தானோடும் உள்ள தீயஉறவை
முற்றிலும் துண்டித்துப் போடு
பரிசுத்தத்தோடும் தேவனோடும் உள்ள
நல்லுறவை தொடர்ந்து பேணு
வேதக் கடலில்
மூழ்கி முத்தெடு
ஜெப வானில்
பறந்து திரியும் பறவையாகு
அப்போது
பரிசுத்தம்
உனது வித்தாகும்
பரலோகம்
உனது சொத்தாகும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
Quotes
========
பாவங்களை ஜெயிக்க
குறுக்கு வழி என்று எதுவுமில்லை
பாவத்தோடும் சாத்தானோடும் உள்ள தீயஉறவை
முற்றிலும் துண்டித்துப் போடு
பரிசுத்தத்தோடும் தேவனோடும் உள்ள
நல்லுறவை தொடர்ந்து பேணு
வேதக் கடலில்
மூழ்கி முத்தெடு
ஜெப வானில்
பறந்து திரியும் பறவையாகு
அப்போது
பரிசுத்தம்
உனது வித்தாகும்
பரலோகம்
உனது சொத்தாகும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814