வால்டென்செஸ் | ஸேச்சுர்னியஸ் | ஜாண் விக்ளிஃப் | தாமஸ் சேஸ் | Thomas Chase | வில்லியம் டிண்டேல் | WILLIAM TYNDALE
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 31
வால்டென்செஸ்
====================
கிபி 1173..
பிரான்ஸ் நாட்டு லியோன் நகரைச் சேர்ந்த "பீட்டர் வால்டோ" என்ற செல்வந்தரான வியாபாரி கர்த்தரிடத்தில் மனந்திரும்பி தன் சொத்து சுகங்களை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு..வேதத்தை வாசிக்கவும் வேதத்தை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துத் தன் நாட்டு ஜனங்களுக்குப் போதிக்கவும் ஆரம்பிக்கிறார்..
அநேகர் இயேசுவை ஏற்றுக்கொள்கின்றனர்..இவருக்குப் பின்சென்றவர்கள்
"வால்டென்செஸ்"என்று அழைக்கப்பட்டனர்..
முதலில் தன் முயற்சிகளுக்கு போப்பாண்டவர் மற்றும் ரோமத் திருச்சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த வால்டோ..
அவரது தீவிர போதனை காரணமாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு சபையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்..
போப்பாண்டவரின் தண்டனையைப் வால்டோ பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாவிட்டாலும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாய்த் தாக்கப்பட்டதால் அவர்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிலையானது..
வெளியேறிவர்கள் பொகேமியா..லொம்பார்டி போன்ற பிரான்ஸின் பல பகுதிகளில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது..
சிதறப்பட்ட அவர்கள் தேவனுடைய வார்த்தையில் எவ்வளவு தேறியிருந்தார்கள் என்றால்..அவர்களில் படிப்பறிவு இல்லாத கிராமவாசிகள் கூட யோபுவின் புத்தகம் முழுவதையும் மனப்பாடமாய்ச் சொல்வார்களாம்..
மற்றவர்கள் முழு புதிய ஏற்பாட்டையும் பாராமல் சொல்லும் அளவுக்கு தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு இனிமையாய் இருந்தது..
கிபி 1211..
"வால்டென்செஸ்" சபையின் 80 பேர் பிடிக்கப்பட்டு போப்பாண்டவரின் நீதிமன்றத்தில் மரணதண்டனை பெற்று ஸ்ட்ராஸ்போர்க் என்ற இடத்தில் எரித்துக் கொல்லப்படுகிறார்கள்..
அவர்களை மிக மோசமாக சித்ரவதைப்படுத்திய காவலன் ஒருவன் அவர்களைப் பற்றி சாட்சி கொடுக்கிறான்..
"நிச்சயமாகவே பரிசுத்தத்திலும் நீதியிலும் உண்மையிலும் இந்த "வால்டென்சஸ்" போன்றவர்கள் யாருமில்லை.."
பீட்டர் வால்டோ கடைசிவரை கிறிஸ்துவுக்கு உண்மையாய் ஊழியம் செய்து 1218ல் மரிக்கிறார்..
அவரைப்பின்பற்றியவர்கள் அடுத்த 400 ஆண்டுகள் போப்பாண்டவர்களால் பட்ட உபத்திரவங்களுக்கு அளவே இல்லை..
முக்கியமாக 1545ல் நடந்த பயங்கர உபத்திரவம் சொற்களுக்கு அப்பாற்பட்டது..
கடைசியாக..1559ல் ட்யூக் சவாய் காலத்தில் பெரிய விடுதலையை தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார் -
ஆனால் அதுவரை அவர்கள் பொறுமையாய் சகித்து வந்தது..
தலைமுறை
தலைமுறையாகக் கட்டுகளும் சித்ரவதைகளும் கொடுமைகளுமே..
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 32
ஸேச்சுர்னியஸ்
======================
ஸேச்சுர்னியஸ் -பரி.பேதுருவுடன் ரோம் நகருக்குச் சென்றவர்..
அந்த நாட்களில் பேதுரு அநேகரை சுவிசேஷகர்களாக மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்புகிறார்..
ஸேச்சுர்னியஸ் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியான தௌலோஸ் என்ற இடத்துக்கு தன் உதவியாளர்கள் இருவருடன் அனுப்பப் படுகின்றார்..
விக்கிரகங்கள் நிறைந்த அந்தப் பட்டணத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தபோது அங்கிருந்த ஊமையான விக்கிரகங்கள் செயலிழந்து போகின்றன..
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அநேக அற்புதங்கள் நடக்கின்றன..
அவற்றுள் மிக முக்கியமாக..குஷ்டரோகம் முற்றிப் போன ஒரு வயதான பெண் முற்றிலும் குணமாக்கப்படுகிறாள்..
அநேகர் விடுதலையாக்கப் படுகின்றனர்..சிலர் தாமாக முன்வந்து ஞானஸ்நானம் பெறுகின்றனர்..
பட்டணம் கிறிஸ்துவின் பக்கம் திரும்புவதைக் கண்ட ஒரு கூட்டம் இவர்களுக்கு விரோதமாய் எழும்ப..
ஒரு திருவிழா நாளில் நகரின் நடுவே மலையின் மேல்..
விக்கிரகக் கோயில் வளாகத்தில் மக்கள் கூடுகின்றர்..
கோயில் நடுவே பெரிய பலிபீடம்..ஒரு காளை பலியிடப்பட காத்திருக்கிறது..
இதற்குள் யாரோ ஸேச்சுர்னியஸைக் கண்டுபிடித்துவிட..
மலைக்கு மேலே இழுத்து வரப்படுகிறார் ஸேச்சுர்னியஸ்..
பலியிடக் கட்டப்பட்டிருந்த அதே காளையின் வாலில் அவரது இரு கால்களும் கட்டப்பட்டு..மலை உச்சியிலிருந்து காளை அடித்து விரட்டப்படுகிறது..
மலை உச்சியிலிருந்து கோயில் படிக்கட்டுகள் வழியே காட்டுத்தனமாய் ஓடிய காளையின் வாலோடு கட்டப்பட்டிருந்த ஸேச்சுர்னியஸின் உடல் கீழே வருவதற்குள் சின்னாபின்னமாகிறது..
சரித்திரம் சொல்கிறது..
அவரது தலை பிளந்து மூளை சிதறியது என்று..
இறுதியாக..
இறந்த அவரது உடலை எடுத்துச் செல்ல யாருக்கும் துணிவில்லாமல் போன நிலையில்..
இரண்டு விசுவாசி பெண்கள் தைரியமாய் முன்வந்து அவரது சரீரத்தின் எஞ்சிய பாகங்களை ஒரு குழியில் புதைக்கின்றனர்..
ஸேச்சுர்னியஸ்-தௌலோஸ் நகரின் பிஷப்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 33
ஜாண் விக்ளிஃப்
=========================
கிபி 1371..
மூன்றாம் எட்வர்ட் மன்னரின் காலத்தில் இங்கிலாந்தின் யார்க்க்ஷையரில் பிறந்த ஜாண் விக்ளிஃப்..
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இறையியல் வல்லுநர்..
படித்தவர்கள் மிகக்குறைந்தவர்கள் இருந்த தன் காலத்தில் தத்துவத்திலும் மதம் சார்ந்த துறையிலும் மிகவும் கற்றுத் தேர்ந்த
ஜாண் விக்ளிஃப்..
அந்த நாட்களின் கிறிஸ்தவ நிலை பரிதாபம்..
கிறிஸ்துவின் பெயரை அறிந்திருந்தனர் கிறிஸ்தவர்கள்..
ஆனால் அவரது உபதேசத்தை அறிந்தவர்கள் மிகச்சிலரே..
விசுவாசம்..
வாக்குத்தத்தம்..
தேவ கற்பனைகள்..
கிறிஸ்து தரும் இரட்சிப்பு..
மனிதனின் பலவீனம்..
பரிசுத்த ஆவி..
விசுவாசத்தால் வரும் நீதி..கிறிஸ்துவுக்குள் வாழும் கிறிஸ்தவன் அனுபவிக்கும் விடுதலை..
இவைகளில் ஒன்றாகிலும்
சபைகளில் சொல்லித்தரப்படவில்லை..
ஆனால் அவைகளுக்கு மாறாக..நடந்ததெல்லாம் வெளிப்பிரகாரமான பக்தி ஆராதனையும் மனிதப் பாரம்பரியங்களுமே..
தன் பாவ மன்னிப்பு..
உண்மையான மனசமாதானம் சந்தோஷம்
இரட்சிப்பு..இவைகளை அடைய ஒரு சாதாரண கிறிஸ்தவன் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல..
சத்தியம் இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரே காரணத்தால் பாரம்பரியத்தின் இருளுக்குள் மூழ்கிப் போனது கிறிஸ்தவம்..
பாமர ஜனம் வேதத்தை அறியாமல் ரோமன் கத்தோலிக்க குருக்கள் சொல்லிக் கொடுத்த வெற்று வார்த்தைகளை மந்திரமாய் சொல்லிக் கொண்டிருந்தது..
இப்படிப்பட்ட காலத்தில் எழும்பினார் ஜாண் விக்ளிஃப்..
போப்பாண்டவரால் நியமிக்கப்பட்ட பிஷப்புகளாலும் குருக்களாலும் கறைபட்டுப் போன கிறிஸ்துவின் சுவிசேஷ நற்செய்தியை..
கலப்பின்றி சத்தியமாகவும் துப்புரவாகவும் துணிந்து அறிவித்து ஜனங்களைக் கிறிஸ்துவிடம் திருப்ப எதை வேண்டுமானாலும் செய்யத் தயாரானார் விக்ளிஃப்..
விக்கிரக ஆராதனையிலும் நற்கருணை ஆராதனையிலும் கண்சொருகிப் போயிருந்த சபையை வெளிப்படையாய் சாடினார் விக்ளிஃப்..
ஆதி அப்போஸ்தலரும் ஆதிசபையும் உலகத்து ஜனங்களால் உபத்திரவப்படுத்தப்பட்டனர்.
ஆனால் இப்போது கிறிஸ்துவின் பெயரைக் கொண்ட கிறிஸ்தவனே கிறிஸ்தவனை உபத்திரவப்படுத்தும் வேதனையான நிலை உருவானது..
அவருக்கு விரோதமாய் குருக்கள் பிஷப்புகள் ஆர்ச்பிஷப்புகள் மூப்பர்கள் என்ற பெரிய கூட்டம்..
கடைசியாக போப்பாண்டவரிடமிருந்து ஆர்டர் வந்தது..
ஜாண் விக்ளிஃப், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியிலிருந்து மட்டுமல்ல கத்தோலிக்க சபையிலிருந்தும் வெளியேற்றப் படுகிறார்..
ஆனாலும் அவர் தன் செய்திகளில் தன் மனதைப் பிரதிபலிப்பதில் பின்வாங்கவில்லை...
தேவகிருபை விக்ளிஃப் மேல் அபரிமிதமாக இருந்தது..
இங்கிலாந்தின் ராஜ குடும்பம் அவருக்கு ஆதரவாக இருந்ததால் சிறிது காலம் சபையால் அவர் மேல் கைபோட முடியவில்லை..
அன்றைய கிறிஸ்துவத்தின் நிலை
ஆவியோடும் உண்மையோடும் செய்யப்பட வேண்டிய ஆவிக்குரிய காரியங்கள்..
மாயமான தாழ்மையிலும்
வெளிப்படையான சடங்காச்சாரங்களிலும் விக்கிரக ஆராதனையிலும் மூழ்கிப் போய்விட்டதை..
அன்றைய கிறிஸ்தவ வரலாறை வாசிக்கும் ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவனும் நிச்சயம் அறிந்து கொள்வான்..
அவர்கள்..
மனிதர்களைப் புனிதர்களாக்கினர்..
மரியாளை வணங்கினர்..
புண்ணிய தலங்கள் என்று சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கே தீர்த்தயாத்திரை செய்தனர்..
முடியைக் காணிக்கையாக்கினர்..
புனிதர்கள் எனப்பட்டவர்களின் எலும்புகளும் உடல் பாகங்களும் ஆராதிக்கப்பட்டன..
பெரிய பெரிய கதீட்ரல் ஆலயங்களையும் குருமடங்களையும் கட்டினர்..
கிறிஸ்து நமக்குள் வாழ்கிறார் என்ற சத்தியம் மறக்கப்பட்டு.. மனிதனால் பரிசுத்தமாக்கப்பட்ட அப்பத்தின் உருவத்தில் கிறிஸ்து வணங்கப்பட்டார்..
ஜனங்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி வளர்த்துச் செல்லும் மிக முக்கியமான பணியை விட்டுவிட்டு..
குருக்களும் பிஷப்புகளும் தங்களை மட்டுமே நன்கு பராமரித்துக் கொள்ளும் பரிதாப நிலை..
தேவனுடைய கட்டளைகளுக்குப் பதிலாக மனிதருடைய வார்த்தைகளே பின்பற்றப்பட்டது..
கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு அல்ல..
போப்பாண்டவரின் வத்திக்கான் சங்க வழிமுறைகளே எங்கும் எதிரொலித்தன..
கர்த்தருடைய வேதம் வாசிக்கப்படுவது அரிதானதால்..
கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷம் மறக்கப்பட்டு..
மனிதன் கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் காணாமல் போனது..
"கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்து நம்மை சாபங்களுக்கு விடுதலையாக்கினார்.."என்ற மூல உபதேச அஸ்திபார சத்தியமே அறியாமல் போன அறியாமையால்..
சபைக்குள் தவறுகளும்..
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வேதத்துக்குப் புறம்பான முறைமைகளும் புகுந்தன..
சத்தியத்தை விட்டு நீண்ட காலம் தூரமாய்ப் போய்விட்ட சபையை மீண்டும் அதின் அஸ்திபார உபதேசத்தில் நிலைநிறுத்த தேவன் இறங்கினார்..
அதற்கு அவர் உபயோகப்படுத்திய முக்கிய உபகரணம்..
"விஞ்ஞானம்.."
இதற்குள் "பிரிண்ட்டிங்"
நடைமுறைக்கு வர..
வேதம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படத் துவங்கப்பட்டது..
ஜனங்கள்..இருளையும் வெளிச்சத்தையும்..
சத்தியத்தையும்
கள்ளப் போதகங்களையும்..
உண்மைக் கிறிஸ்தவத்தையும் பாரம்பரியச் சடங்குகளையும்..
வேறுபிரித்துப் பார்க்க ஆரம்பித்தனர்..
ரோம சபையில் அதிவேகத்தில் ஒரு புரட்சி அல்ல..
பூகம்பமே வெடிக்கக் காத்திருந்து..
ஆனால் அதற்கு முன்..
முக்கியமான மூவர் அதற்காகத் தங்களையே விலையாகக் கொடுத்திருந்தனர்..
- ஜாண் விக்ளிஃப்
- ஜாண் ஹஸ்
- ஜெரோம் சவனரோலா
இந்த மூவருக்கும் திருச்சபை இன்றைய நாள் வரை தீராக் கடன் பட்டிருக்கிறது..
விக்ளிஃபின் மரணம்
1377..
ஜாண் விக்ளிஃப் பிஷப் சங்கத்தின் முன் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்படுகிறது..
பிப்ரவரி 19..1377..
லாங்ஸ்டர் மேயர்..லார்ட் ஹென்றி பெர்சி மற்றும் இங்கிலாந்தின் லார்ட் மார்ஷல் ஆகியோரோடு ஆஜராகிறார் விக்ளிஃப்..
பரி.பவுல் வளாகத்தில் பெரிய கூட்டம் கூடியது..
மரியாளின் தேவாலயத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கு விாரணையின் நடுவே புயலாய் நுழைகிறான் ஒரு மனிதன்..
பெயர்-லெவிஸ்..
அவன் யாரென்று தெரியாவிட்டாலும் அவனது மிரட்டல்..
பிஷப்புகளை அதிர்ச்சியடையச் செய்கிறது..
வழக்கு விசாரணையின்றி முடிந்து இம்முறை தப்பித்து விடுகிறார் விக்ளிஃப்..
ஆக்ஸ்போர்டு மற்றும் கத்தோலிக்க சபையின் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத விக்ளிஃப்..
தன் கருத்துக்களைப் பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கிறார்..
தனக்குக் கிடைத்த குறுகிய காலத்தில் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வேதத்தின் வெளிச்சத்துக்கு ஜனங்களை திருப்புகிறார்..
சில காலம் மறைவாய் இருந்தவர் மீண்டும் லுத்தர்வொர்த் என்ற இடத்திலுள்ள தன் சபைக்கு வருகிறார்..
1384ல்..
இதற்குள் அவருக்கு வயது ஐம்பத்திஆறு..
அது டிசம்பர் 31..1384 ம் ஆண்டு..தன் அயர்ந்த நித்திரையிலேயே கர்த்தரோடு அயராமல் இருக்கச் சென்று விடுகிறார் விக்ளிஃப்..
"விக்ளிஃப் தன் வாலிபத்தில் கர்த்தருக்காக எவ்வளவு வைராக்கியம் காண்பித்தாரோ அதே வைராக்கியத்துடன் தன் வயதான காலத்திலும் பற்றி எரிந்தார் "என்கிறது அவரைக் குறித்த செய்திக் குறிப்பு..
விக்ளிஃப் மரித்து 31 ஆண்டுகள் பின்..
கான்ஸ்டன்ஸ் கவுன்சில் கூடுகிறது..
அங்கு அவரது உபதேசங்களுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்பட்டதோடு..
அவரைப்பற்றிய ஞாபகத்தையே துடைத்துப் போடும் நோக்கத்தோடு..
அவரது கல்லறை தோண்டப்பட்டு..
எஞ்சியிருந்த எலும்புத் துண்டுகளும் எரிக்கப்பட்டு
ரைன் நதியில் சாம்பல் வீசப்படுகிறது..
இயேசுவைக் கொன்ற பரிசேயர்..அவர் கல்லறையில் வைக்கப்பட்டதோடு அவரது சகாப்தம் முடிந்தது என்று நினைத்தது போல..
விக்ளிஃப் கதை சாம்பலாய்க் கரைந்தது என்று நினைத்தனர் கத்தோலிக்கர்..
ஆனால் நடந்து வேறு..
தேவனுடைய வார்த்தை
வெட்ட வெட்ட எழுந்து நிற்கும் ஜீவனுள்ள வித்து அல்லவா?
விக்ளிஃப் என்ற விதையிலிருந்து முளைத்து எழும்பியது ஜாண் ஹஸ் என்ற பலத்த விருட்சம்..
விக்ளிஃப்பின் முக்கிய உபதேசங்கள்
1. பரிசுத்த நற்கருணை எனப்படும் அப்பம்..
மனிதனால் பரிசுத்தப்படுத்தப்பட்ட ஒரு பொருளே அன்றி..அது கிறிஸ்துவின் சரீரம் அல்ல..
2. எல்லா சபைகளின் தலைமை ரோமாபுரியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை அல்ல..
சபை முக்கியப்படுத்தும் பேதுருவோ பவுலோ அல்லது மற்ற அப்போஸ்தலரோ அல்ல..கிறிஸ்துவே எல்லாவற்றிலும் எல்லாவற்றுக்கும் தலையும் தலைமையுமானவர்..
3. திருச்சபையின் முழு அதிகாரமும் திறவுகோலும் போப்பாண்டவரிடத்திலோ குருக்களிடத்திலோ தரப்படவில்லை..
4. உலகத்திலுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனையும் வழிநடத்தவும் தன் கட்டுப்பாட்டில் கட்டுக்கோப்பாய் வைத்திருக்கவும் கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒன்றே போதுமானது..
வேறு எந்த மனிதக் கட்டளைகளும் பின்பற்றப்பட வேண்டிய அவசியமில்லை..
5. கிறிஸ்தவர்களைக் கண்காணிக்கவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மனிதனால் உண்டாக்கப்பட்டு உருவாக்கப்பட்ட எந்த சட்டதிட்டமும் சுவருக்கு வெள்ளையடிக்கப்படுவது போன்ற ஒன்றே தவிர.. அதினால் இயேசு கிறிஸ்துவின்
சுவிசேஷத்துக்கு எந்த விதத்திலும் அழகூட்டப்படுவதோ மெருகூட்டப்படுவதோ இல்லை..
6. ரோம சபையின் விதிகளை மீறும் யாரும் தண்டிக்கப்பட போப்பாண்டவருக்கோ ரோம சபைக்கோ தனி நீதிமன்றமோ சிறைச்சாலையோ வைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை..
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 34
தாமஸ் சேஸ்
======================
கிறிஸ்துவின் வார்த்தைகளுக்காகவும் சுவிசேஷத்துக்காகவும் பாடு அனுபவித்தவர்களில் ஒருவர்..அமர்ஷாமைச் சேர்ந்த தாமஸ் சேஸ்..
செய்த குற்றம்:
விக்கிரக ஆராதனைக்கும் பாரம்பரியத்துக்கும் விரோதமாய்ப் பேசியது..
ஓபோர்ன் என்ற இடத்தின் பிஷப்பின் முன் நிறுத்தப் படுகிறார் தாமஸ்..
தன் விசுவாசத்தை மறுதலிக்க மறுத்த தாமஸ்..ஓபோர்ன் பிஷப் ஹவுசின் இரகசிய அறைகளில் அடைக்கப்படுகிறார்..
வெறுமனே அடைக்கப்பட்ட நிலையில் அல்ல..அங்கு அவர் பட்ட வேதனைகளை விவரிக்க வார்த்தை இல்லை..
அனைத்தையும் பொறுமையாய் சகித்த தாமஸ் சேஸைக் கண்டு பொறுமை இழந்த ரோம சபையினர்..
வெளியே தெரியாமல் அவரைத் தூக்கில் தொங்க விட்டனர்..
வெளியே தெரிந்தால் பிரச்சனை வெடிக்கும் என்று அறிந்து.."தாமஸ் சேஸ் தற்கொலை"
என்று வதந்தி பரப்பப்பட்டது.
ஆனால் அந்த ஜெயிலில் அவரைக் கண்ட ஒரு பெண் சொல்கிறாள்..
"அந்த மனிதன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை..அவர் வைக்கப்பட்டிருந்த இடம் அவரால் உட்காரவோ நிற்கவோ கூட முடியாத அளவு சிறியது.."
யாரும் தாமஸ் சேஸின் உடலை பரிசோதிக்க இடம் கொடாமல் எரித்து விடுகிறது பிஷப் ஹவுஸ்..
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 35
வில்லியம் டிண்டேல்
============================
போப்பாண்டவர் அரசாங்கத்தின் அஸ்திபாரத்தையே அசைத்து வேரோடு பிடுங்கியெறிய தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதர் டிண்டேல்..
அவர் தன் கரங்களில் எடுத்துக்கொண்ட வேலையைக் கண்ட இவ்வுலகத்தின் அந்தகார லோகாதிபதி அவரைக் கொல்ல செய்த சதிகளும் திட்டங்களும் கணக்கில்லாதவை..
1494ல் வேல்ஸில் பிறந்த டிண்டேல் படித்தது ஆக்ஸ்போர்டிலும் கேம்பிரிட்ஜிலும்..
படித்து முடித்ததும் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார் டிண்டேல்..
மீண்டும் தன் மேல் படிப்பை கேம்பிரிட்ஜில் முடித்தவர்..லார்ட் வெல்ச் என்ற மதிப்புக்குரிய மனிதரின் பிள்ளைகளுக்கு ஆசிரியரானார்..
லார்ட் வெல்ச் வீட்டில் அந்த நகரத்தின் படித்த பெரிய மனிதர்கள் கூடி மார்ட்டின் லூத்தர், எரஸ்முஸ் மற்றும் வேதத்தின் நடபடிகளை விவாதிப்பதும் ஆராய்வதும் உண்டு..
அவ்வப்போது அந்த உரையாடல்களில் கலந்து கொள்ளும் வில்லியம் டிண்டேல் தேவனுடைய வார்த்தையை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக வைத்து விவாதிப்பார்..
வெகு சீக்கிரத்தில் டிண்டேலின் பெயர் கத்தோலிக்க குருமடத்தில் அடிக்கடி அடிபட.. அவர் பிஷப்பின் சான்ஸலர் முன் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்..
ஆனாலும் தன் வேலையை நிறுத்தாத டிண்டேல் 1526ல் தன் புதிய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு பழைய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பையும் ஆரம்பித்தார்..
சிறிது நாட்களுக்குப்பின் ஜெர்மனிக்குச் சென்று மார்ட்டின் லூத்தரைச் சந்தித்தவர் நெதர்லாந்தின் அன்ட்வர்ப் என்ற இடத்தில் தங்கி தன் வேலையைத் தொடர்ந்தார்..
சீக்கிரத்தில் பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பின் ஆரம்ப வேலைகளை முடித்தவர்..
மறைமுகமாய் வேதாகமங்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வந்தார்..
இதுவரை வேதம் அறியா இருளில் இருந்த இங்கிலாந்தில் சுவிசேஷத்தின் வெளிச்சம் கொண்டுவந்த மாற்றம் விவரிக்க முடியாத ஒன்று..
டிண்டேலின் புத்தகங்கள்..குறிப்பாக ஆங்கில புதிய ஏற்பாடு இங்கிலாந்து முழுவதும் பெரிய புரட்சியையே கொண்டுவந்தது..
அதே நேரம் கத்தோலிக்க மடம் கலங்கியது..
டிண்டேலின் புத்தகங்களையும் புதிய ஏற்பாட்டையும் தடை செய்ய என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் செய்தனர்..
டான்ஸ்டல் என்ற லண்டனின் பிஷப் தானே அவ்வளவு புதிய ஏற்பாட்டு பிரதிகளையும் விலை கொடுத்து வாங்கி மக்களின் கைகளில் கிடைக்க விடாமல் எரித்து விட்டதாக வரலாறு சொல்கிறது..
இங்கிலாந்து கொந்தளித்தது..
இதற்குள் உபாகமம் வரை மொழிபெயர்த்து முடித்திருந்த டிண்டேல்.. அதை ஜெர்மனியின் ஹம்பர்க் என்ற இடத்தில் பிரிண்ட் செய்ய எடுத்துச் செல்லும் வழியில் கடலில் புயல் வந்து கப்பல் உடைந்து அவர் எழுதிய அனைத்தும் மூழ்கிப் போக..
அவரது நேரம்,பட்ட பிரயாசங்கள்,பணம்,
எழுத்து நகல்கள் அனைத்தும் விரயமாய்ப் போனது..
திரும்பவும் மொழிபெயர்ப்பைத் தொடங்கிய டிண்டேல் எட்டு மாதங்களுக்குள் ஆதியாகமம் முதல் உபாகமம் வரையிலான புத்தகங்களை முடித்தார்..
இங்கிலாந்தில் அவரது புத்தகங்களும் வேதாகமமும் தடை செய்யப்பட்டிருக்க..
நெதர்லாந்தின் அன்ட்வர்ப் என்ற இடத்தில் மிகத் தந்திரமான முறையில் அந்த நாட்டின் மன்னனால் கைது செய்யப்பட்டார் டிண்டேல்..
அவரது கையெழுத்துப் பிரதிகள் புத்தகங்கள் யாவும் கைப்பற்றப்பட்டு ஆக்ஸ்பர்க் என்ற இடத்தில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்..
அக்டோபர் 6, 1536..
நெதர்லாந்தின் வில்வோர்டி நகரம்..
புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரே காரணத்துக்காக தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட வில்லியம் டிண்டேல் என்ற அந்த மனிதர் கொலைக்களத்துக்கு இழுத்து வரப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்படுகிறார்..
அவரது கடைசி ஜெபம்..
"தேவனே! இங்கிலாந்து மன்னரின் கண்களைத் திறப்பீராக!"
சரித்திரம் சொல்கிறது..
அவரது சாட்சியும் வாழ்க்கையும் எவ்வளவு தூரம் மற்றவரைத் தொட்டது என்றால்..
அவர் சிறையிலிருந்த ஒன்றரை வருடங்களில் அங்கிருந்த ஜெயிலரும் அவரது மகளும் அவரது வீட்டாரில் அநேகரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர்..
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
================
Early Church Martyrs
Chapter 34
Thomas Chase
================
One of those persecuted for the gospel and Word of Christ was THOMAS CHASE of Amersham..a good man who often spoke against idolatry and superstition..
CHASE was brought before the blind bishop at Woburn and examined.. and although we have no record of his examination..
He must have professed Christ's true gospel against idolatry..for he was locked in the bishop's house in Woburn..
There he remained in chains..manacles..and irons..all of which he took quietly and faithfully until they lost patience with him and secretly strangled him one day..
There would have been a public uproar if the truth came out about how THOMAS CHASE had died..
So the church let out a rumour that the good man had hung himself..
This would have been impossible..since CHASE was chained in such a small area that he could neither sit nor stand..as a woman who saw him dead testified..
To be sure no one would be able to examine the body..the authorities buried CHASE secretly somewhere near the road between Woburn and Little Marlow..
================
Early Church Martyrs
Chapter 35
WILLIAM TYNDALE
==================
Now WILLIAM TYNDALE, God's martyr, who was surely chosen by God to dig up the roots and foundation of the pope's government..
Consequently,the great prince of darkness..
having malice against Tyndale..left no stones unturned in his efforts to trap Tyndale..betray him and take his life..
TYNDALE was born near the border of Wales in 1494..He was educated at Oxford and Cambridge..
And soon after began his life work of translating the Bible into English..
After further studies at Cambridge..he became the tutor of the children of Lord Welch,a noble man of Gloucestershire..
Abbots,deans,archdeacons and other well-educated men often visited Lord Welch to discuss the works of Luther and Erasmus..as well as questions of Scripture..
Whenever he disagreed with their positions-which was often-Tyndale never hesitated to defend his opinion with Scripture..
Soon the area priests began to complain about Tyndale in the pubs and other places..saying his works were heresy and adding to what he said to make their accusation appear true..
Tyndale was called before the bishop's chancellor..threatened..and charged with many things..but he was allowed to leave unharmed..
In 1526..he published his English Translation of the New Testament and began on the Old Testament..adding prologues to each book..
After travelling to Germany and Saxony..where he met with Luther and other learned men..he finally settled in Antwerp..the Netherlands..
Soon after Tyndale translated the Old Testament..and wrote introductions to each chapter that were well worth being read over and again by all who saw them..
These books were taken into England by various means..and it cannot be told what a door of light they opened to the eyes of the whole English nation which before had been shut up in darkness..
Tyndale's books especially the New Testament translation were of great spiritual benefit to the godly lay people..but of great harm to the ungodly clergy..
..who were afraid that by the shining beams of truth..their deeds of darkness would be clearly seen..So they began to rouse themselves and plan how they might stop Tyndale.
When Tyndale had translated the Book of Deuteronomy..he wanted to print it in Hamburg..Germany..and so started by ship in that direction..
But his ship was wrecked on the coast of Holland..and he lost all his books..writings and copies..money and time..and had to start over again..
He continued to Hamburg on another ship..retranslated all five books of Moses..
Genesis to Deuteronomy-from Easter until December of 1529..
When his books-especially the New Testament-began ro be widely read in England..
the bishops and prelates of the Church did everything in their power to condemn them and point out their "errors"..
They convinced the king to ban all Tyndale's works in England..
Meanwhile..
Cuthbert Tonstel..the bishop of London..worked with Sir.Thomas Moore to find a way to keep the translations out of the public's hands..
Tonstal bublicly burned all the copies he had bought..an act that offended the people so much that they turned against the clergy..
Tyndale was eventually captured by the emperor in Antwerp..in a very cunning way..
..his books were all seized and he was imprisoned for a year and a half before being condemned under the emperor's decree of Augsburgh..
On October 6..1536,in the town of Vilvorde in the Netherlands..WILLIAM TYNDALE..God's FIRST TRANSLATOR of the NEW TESTAMENT into English..
Was brought to a place of execution..tied to a stake..strangled by the hangman to the point of death..and then burned in fire for doing God's work..
As he met the Lord..Tyndale cried with a loud voice..
"Lord ! Open the eyes of the king of England !"
So powerful was Tyndale's doctrine and the godliness of his life..that during the year and a half of his imprisonment..
It is said that he converted the jailer and his daughter and several others of his household..
Hidden Fire
Pr. S. Romilton
9810646981