மரியா உட்வொர்த்-எட்டர்
Maria Woodworth-Etter
1844-1924
ஆரம்பகால வாழ்க்கை: அமெரிக்காவின் லிஸ்பன் நகரில் மரியா பியூலா, ஜூலை 22, 1844 இல் சாமூவேல் லூயிஸ் மற்றும் மெட்டில்டா தம்பதியினரின் 8 குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். மரியாவின் பெற்றோர் கிறிஸ்தவர்கள் அல்ல, ஆகவே பின்நாட்களில் Disciples Church மூலமாக இவர்கள் 1854 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களானார்கள்.
மரியாவின் தகப்பனார் குடிகாரராக, பொறுப்பற்றவராக இருந்து, அடிக்கடி குடும்பத்தை விட்டு வெளியே சென்றுவிடுவார். இதனால் மெட்டில்டாவும் அவருடைய 8 பிள்ளைகளும் பல நேரங்களில் சாப்பிடுவதற்கு உணவும் மற்றும் அணிந்துகொள்ள ஆடைகளும் வாங்க முடியாமல் வறுமையில் வாழ்ந்து வந்தார்கள். இதனை எண்ணி எண்ணி மனம்நொந்து மெட்டில்டாவும் நோய்வாய்பட்டு பலவீனமானார். இப்படியாக மரியாவின் இளமை காலம் போராட்டம் நிறைந்ததாக இருந்தது.
குடும்ப நெருக்கடி: 1857 இல் மரியா 11 வயதாக இருந்தபோது, அவரது தந்தை வயலுக்கு சென்ற இடத்தில் கடுமையான சூரிய வெப்பத்தின் காரணமாக (Solar Stroke) சுருண்டு விழுந்து மரித்துப்போனார். இந்நிலையில் விதவைத் தாயான மெட்டில்டா, நோயுற்ற நிலையில் தன்னுடைய 8 குழந்தைகளை பராமரிக்க வழியில்லாத நிலையில் மரியாவையும் மற்றவர்களையும் வேலைக்கு அனுப்பினார். ஆனால் மரியாவோ கல்வி கற்க விரும்பியும், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை செய்யவேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார்.
கடவுளின் அழைப்பு: மரியாவுக்கு பதின்மூன்று வயதாக இருந்தபோது, Disciples Church மூலம் நடைபெற்ற கூடுகையில் பங்குபெற்று இயேசுவின் சிலுவை பாடுகளை குறிந்து அறிந்து கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக்கொண்டு கிறிஸ்துவுவின் நற்செய்தி பணிக்கு என்று தன்னை அற்பணித்தாள்.
மரியா ஒவ்வொருநாளும் கிறிஸ்துவைப்பற்றிய இரட்சிப்பின் அனுபவத்தில் வளர்ந்துகொண்டு இருக்கும்போது இயேசுவானவர் தன்னோடு பேசுவதை உணர்ந்துகொள்ள ஆரம்பித்தாள். இந்நிலையில் மகளே.. உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்வாய்? என்று இயேசு கிறிஸ்து அழைக்கும் சத்தத்தை அடிக்கடி உணர ஆரம்பித்தாள். வீதிகளிலும் தெருக்களிலும் சாலைகளிலும் அழிந்துகொண்டு இருக்கும் ஆத்துமாக்களுக்கு நற்செய்திபணி அறிவிக்க கடவுள் தன்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தாள்.
மரியா வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் திருச்சபையில் போதகபணி மற்றும் நற்செய்திபணி செய்ய ஆணாதிக்கம் நிறைந்த திருச்சபை தலைவர்கள் அனுமதிக்கவில்லை. இது மரியாவுக்கு கடும் சவாலாகவும் குழப்பமாக இருந்தது. எப்படியெனில் இதுவரை எந்த ஒரு பெண்ணுமே போதக ஊழியம் செய்ததை நேரடியாக பார்க்கவும் இல்லை; கேள்விப்படவும் இல்லை. இந்நிலையில் கணவர் போதக ஊழியம் செய்பவராக இருந்தால் அவரோடு மனைவியும் சேர்ந்து ஊழியத்தை செய்ய முடியும் என்று உணர்ந்து, அப்படிப்பட்ட மனிதரை திருமணம் செய்துகொள்ள விரும்பினாள்.
ஊழிய அழைப்பு: 1863 ஆம் ஆண்டில் பீலோ ஹோர்ஸ் உட்வொர்த் (Philo Horace Woodworth) என்பவரைப்பற்றி முழுமையும் அறிந்துகொள்ளாமல் 16 வயதான மரியா திருமணம் செய்துகொண்டார். பீலோ உட்ஸ்வொர்த்தும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த மரியாவும் தங்களுடைய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் இதில் போதிய வருமானம் கிட்டவில்லை. இந்நிலையில் காலங்கள் செல்லச்செல்ல அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தார்கள்.
இந்நிலையில் தனக்கு கணவராக வரக்கூடியவர் கர்த்தரின் பணியை செய்பவராக இருக்க வேண்டும் என்று முழுவதுமாக கனவு கொண்டிருந்த மரியாவுக்கு, பீலோ உட்வொர்த் எந்த ஒரு ஊழியமும் செய்ய முன்வராததை எண்ணி மனம் நொந்துபோனார். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை பெற்றுக்கொண்டிருந்த மரியாளின் சரீரம் மிகவும் பெலவீனமடைந்து கொண்டு மரிக்கும் தருவாய் வரை பலமுறை சென்றார்.
இந்நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் ஆறு குழந்தைகளில் ஒவ்வொருவராக மரித்துபோனதில் ஐந்து குழந்தைகளை இழக்கக்கொடுத்தார். கடைசியாக அவர்களுடைய மூத்த மகள் மட்டும் பிழைத்துக்கொண்டார். இது மரியாவை மிகுந்த சோகத்திலும், கண்ணீரிலும் அதிகமாய் ஆழ்த்தியது.
இந்த பெலவீனமான சூழ்நிலையில் மரியா அடிக்கடி தரிசனங்களையும், செப்பனங்களையும் வெளிப்பாடுகளையும் காண ஆரம்பித்தார். இதில் பரலோகத்தில் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருப்பதை போலவும் ஆனால் நரகத்தில் பல மக்கள் அக்கினியில் அலறிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருப்பதையும் அடிக்கடி கண்டார். இதினிமித்தமாக கிறிஸ்துவைப்பற்றி அறியாத ஆத்துமாக்கள் அழிந்துகொண்டிருக்கும் காரியங்கள் எண்ணி மரியாவுக்குள் பயம் உண்டாயிற்று.
இந்நிலையில் தன்னுடைய குழந்தைகள் இறந்து போனதற்கும் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும் தான் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படியாமல் ஊழியம் செய்யாததினால் என்று சிந்தித்தவாறு இயேசுவானவர் தனக்கு பரிபூரண சுகத்தை கொடுத்தால், எல்லா சவால்களையும் மேற்கொண்டு நற்செய்திபணி செய்வேன் என்று தன்னை முழுவதுமாக தனது எதிர்கால திட்டங்களை கடவுளிடம் ஒப்படைத்தார். இப்போது மரியாள் வேகமாக குணமடைய ஆரம்பித்ததை உணர்ந்தார்.
மரியாவிற்கு கிடைத்த வெளிப்பாடுகள்: கர்த்தரின் ஊழியத்தை செய்வதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த மரியா, பல வெளிப்பாடுகளையும் தரிசனங்களையும் சொப்பனங்களையும் அடிக்கடி காண ஆரம்பித்தார். இதில் தினமும் இரவு நேரத்தில் தேவதூதர்கள் மரியாவின் படுக்கை அறைக்கு வந்து, அவளை வெளியே அழைத்துச் சென்று காடுகள், புல்வெளிகள், தாணியம் விளைந்த வயல்வெளிகள், ஆறுகள், ஏரிகள், மற்றும் குழங்கள், வழியாக அழைத்துக் கொண்டு செல்வதை உணர்ந்தார். இதை மரியாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பிரசங்க ஊழியம் செய்ய அழைப்பு: மரியாள் திருச்சபையில் பிரசங்க ஊழியம் செய்வதற்கு தயங்கினார். ஏனெனில் குறைவான கல்வி அறிவு கொண்ட ஒரு பெண் பிரசங்கிப்பது கடவுளின் நாமத்திற்கு மக்கள் மத்தியில் அவமானத்தை கொண்டுவரும் என்று கவலைப்பட்டார். மேலும் இவர் ஊழியம் செய்ய இவரது கணவரும் மற்றும் உயிரோடிருந்த மூத்த மகளும் அதற்கு எதிராக இருந்தார்.
இந்நிலையில் பெண்கள் பிரசங்க ஊழியம் செய்வதைப்பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது என்பதை அறிந்துகொள்ள மரியா தீவிரமாக சிந்தித்து வேதத்தை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தார்.
அப்போது யோவேல் 2:28 ம் வசனத்தின் மூலமாக *கடைசி நாட்களில் மாம்சமானவர் யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்றும் அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் கான்பார்கள்* என்ற யோவேல் தீர்க்கதரிசியின் வார்த்தையானது மரியாவின் மனதை ஆக்கிரமித்துக்கொண்டது. அப்படியே அப்போஸ்தல நடபடிகளில் பிலிப்புவின் நான்கு குமாரத்திகள் தீர்க்கதரிசனம் உரைத்ததையும் மனதில் உள்வாங்கிக் கொண்டாள். பரிசுத்த ஆவியானவர் ஆதி அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த வரங்களை கர்த்தரிடம் அதிகமாக வாஞ்சிக்க ஆரம்பித்தாள்.
இந்நிலையில் மரியா Disciples Church மூலமாக பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நான அனுபவத்தையும் பெற்றுக்கொண்டதை உணர்ந்தார். தன்னை திருச்சபையில் போதக ஊழியம் செய்வதற்கு Disciples Church அனுமதிக்காது என்பதை அறிந்து கொண்ட மரியா சுவிசேஷ ஊழியம் செய்ய விரும்பினார்.
மரியாவின் சுவிசேஷ ஊழியம்: திருச்சபையில் பெண்கள் ஊழியம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் தன்னுடைய 35 ஆம் வயதில் 1876 ஆம் ஆண்டில் United Brethren in Christ என்ற திருச்சபையில் பிரசங்கிப்பதற்கு கர்த்தர் சூழ்நிலைகளை சாதகமாக்கியதால் மரியாவுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது இயேசு கிறிஸ்து தனக்கு வெளிப்டுத்திய வெளிப்பாடுகளைப் பற்றி விவரித்து, மாற்கு 9:44 ஐ சுட்டிகான்பித்து மனம் திரும்பாத, மறுபடியும் பிறக்காத அனுபவத்தை உடைய அநேக மக்களுக்கு நேரிட இருக்கும் ஆபத்தை உணராமல் நரகத்தில் விழுந்துகொண்டு இருப்பதையும் அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கிறது என்று தீர்க்கமாய் உரைத்தார். ஆகவே அங்கு இருந்த மக்கள் கடவுளைப் பின்பற்றவும், இரட்சிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், இல்லையெனில் ஏற்பட இருக்கும் விளைவுகளை கூறி மனம் திரும்புவதற்கான அறைகூவலை கொடுத்தார்.
மரியாவின் பிரசங்கத்தை கேட்ட மக்கள் உள்ளத்தில் குத்தப்பட்டவர்களாய் கண்ணீர் விட்டு அழுது, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டார்கள். ஆராதனை முடிந்து சென்றவர்கள் தாங்கள் பெற்ற இரட்சிப்பின் அனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொண்டார். இப்போது எல்லா இடங்களிலும் மரியாவின் ஊழியத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது.
இந்நிலையில் மரியாவுக்கு பல திருச்சபைகளில் இருந்து பிரசங்கங்கள் செய்வதற்கும் எழுப்புதல் கூடுகைகள் நடத்துவதற்கும் வாய்ப்புகள் தேடிவர ஆரம்பித்தன. 1884 ஆம் ஆண்டில், ஜான் வைன்பிரென்னர் (John Winebrenner) நிறுவிய Churches of God திருச்சபையில் சுவிசேஷ ஊழியம் செய்ய உரிமம் (Licence) கொடுத்தார்.
மரியாவின் ஊழியத்தில் அடையாளங்களும் அற்புதங்களும்: ஆரம்ப காலங்களில் மரியா உட்வொர்த், தன்னை சுற்றியிருந்த பல கிராமங்களுக்கும், சிறிய நகரங்களுக்கும், பெரிய பட்டணங்களுக்கும் சென்று சுவிசேஷபணியை செய்தார். இவரது பிரசங்கள் அமெரிக்கா தேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக அசைக்க ஆரம்பித்தது. கடவுள் பல இடங்களில் மரியைவை வல்லமையாக பயன்படுத்த ஆரம்பித்து பல திருச்சபைகளுக்கு அழைத்துச்சென்றார். மரியாவின் பிரசங்கத்தை கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பினார்கள். இதனால் திருச்சபையில் மக்கள் அதிக அளவு கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
1885 ம் ஆண்டு முதல் மரியா நடத்தும் கூட்டங்களில் எல்லாம் கடவுளின் வல்லமை வெளிப்பட ஆரம்பித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் அநேக அற்புதங்களும் அதிசயங்களும் நடைபெற்றன. இது திருச்சபையில் பெரிய எழுப்புதலை உண்டாக்கியது.
மரியா நடத்தும் கூட்டங்களில் கடவுளின் வல்லமை வெளிப்படும்போது, ஆயிரக்கணக்கில் பாவிகள் மனந்திரும்பினார்கள், பலர் மயங்கி விழுந்து மரித்தவர்களை போல தரையில் விழ்ந்தார்கள். இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்தவர்கள் பரலோகம் மற்றும் நரகம் பற்றிய தரிசனங்களை பெற்றுக்கொண்டார்கள். பலர் அந்நிய பாஷைகளை பேசினார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் நோய்கள் மற்றும் பெலவீனங்களில் இருந்து குணமடைந்தார்கள். ஆயிரக்கணக்கான விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதாக சாட்சிகளை கூறினார்கள். கடவுளின் வல்லமை எல்லா கூடுகையிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் வெளிப்பட்டது.
மரியாவின் சுகமளிக்கும் ஊழியம்: அமெரிக்கா முழுவதும் வல்லமையாக சுவிசேஷ ஊழியம் செய்து வந்த மரியாவை கர்த்தர் சுகமளிக்கும் வரங்களை கொடுத்து நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஜெபிக்க அழைத்தார். இந்நிலையில் இவ்வகையான ஊழியமானது சுவிசேஷ பணியின் அழைப்பிலிருந்து திசைதிருப்பிவிடுமே என்று மரியா தயக்கமடைந்தார். ஆனால் நோயுற்றவர்களுக்காக மரியா ஜெபிக்கும்போது அதிகமான மக்கள் குணம்பெற்று இரட்சிக்கப்படுவார்கள் என்று இயேசுவானவர் உணர்த்தினார்.
ஆகவே இயேசு கிறிஸ்துவின் மீது முழுமையான விசுவாசம் கொண்டு, நம்பிக்கையோடு அவரை தேடுகின்றவர்கள் குணமடைவார்கள் என்று மரியா பிரசங்கித்து அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் சரீரபிரகாரமாகவும் ஆன்மீக பிரகாரமாகவும் அற்புத விடுதலையையும் சரீர வேதனைகள் நீங்கி குணமடைந்தார்கள். அற்புதங்களும் அதிசயங்களும் பிரத்தியட்சமாக எல்லோரும் கானும்படி வெளிப்பட்டது. குருடர்கள் பார்வையடைந்தார்கள். செவிடர்கள் காதுகள் திறந்தது. முடவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். மரணத்தருவாயில் இருந்தவர்கள் உயிர்பிழைத்தார்கள். அங்கவீன குறைபாடுகள் கொண்டவர்கள் அற்புத சுகம் பெற்றார்கள். பாவத்தின் பிடியிலும் போராட்டத்தின் பிடியிலும் கட்டுண்டவர்கள் எல்லோரும் கட்டவிழ்க்கப்பட்டார்கள். விசுவாசிகள் எல்லோரும் அந்நியபாஷைகளை பேச ஆரம்பித்தார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து சாட்சிகளை பகிர்ந்து கொள்ள மரியா உற்சாகப்படுத்தினார். இப்படியாக ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.
இது அப்போஸ்தலர்கள் காலத்தில் வெளிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் என்றும் யோவேல் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட பின்மாரி பனி என்றும் மரியா எல்லா இடங்களிலும் பிரசங்கித்தார். இவர் நடத்தும் கூட்டங்களில் எல்லாம் பத்திரிக்கை செய்தியாளர்கள் கலந்து கொண்டு, அவர்கள் கண்ட காட்சிகள் மற்றும் கேட்ட செய்திகளை பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதினார்கள். இதனால் அமெரிக்க மக்கள் எல்லோராலும் மரியாவின் செல்வாக்கும் புகழும் ஓங்கியது.
மரியாவுக்கு அழைப்புகள்: சுவிசேஷ பணியையும் சுகமளிக்கும் கூடுகையையும் நடத்தி முடித்து, அந்த நகரத்தை விட்டு வெளியேறும்போது, மரியா அங்கு புதிய திருச்சபைகளை ஸ்தாபித்து, அதில் ஞாயிறு பள்ளியை ஆரம்பித்து, திருச்சபை தலைவர்கள் மற்றும் போதகர்களை நியமித்து கடந்து செல்வார். இப்படியாக அமெரிக்கா தேசத்தின் ஒவ்வொரு கடற்கரை நகரங்களிலும், இருந்த அரங்கங்களிலும் நற்செய்தி கூடாரங்களிலும் மற்றும் பொது கட்டிடங்களிலும் சுவிசேஷ கூடுகையை நடத்தினார்.
இந்நிலையில் United Brethren திருச்சபையானது அங்கிருக்கும் பெண்கள் மிஷனரி சங்கத்தின் பொறுப்பை மரியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொண்டார்கள். அப்படியே Bible Christians திருச்சபையானது அவர்களுடைய பெரிய திருச்சபைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொண்டார்கள். அப்படியே Methodist திருச்சபையாது தங்கள் இயக்கத்தில் இருக்கும் Holiness Movement க்கு பொறுப்பை ஏற்க விரும்பி அழைத்தார்கள். ஆனால் மரியா, சுவிசேஷ ஊழியத்தை மட்டுமே விரும்பினார். இந்நிலையில் 1890 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் Indiana மாகானத்தில் இருக்கும் Church of God திருச்சபையானது மரியாவை திருநிலைப்படுத்தி (Ordination) தங்கள் ஸ்தாபணத்தில் நியமனம் செய்து கொண்டார்கள்.
மரியாவின் ஊழியதினால் எழுப்புதல்: 1890-1900 ஆண்டுகளில் மரியாவின் சுவிசேஷபணி அமெரிக்கா தேசத்திலே பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. அமெரிக்கா முழுவதும் மக்கள் மனமாற்றம் அடைந்து அல்லது கடவுளோடு இருந்த உறவை பலப்படுத்திக்கொண்டு, அவர்கள் வாழ்வியல் முறைகளில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்தது. இதனால் சமூக குற்றங்கள் வெகுவாக குறைய ஆரம்பித்தது. இதைக்குறித்து காவல்துறையும் அரசாங்கத்திற்கு புள்ளிவிவரங்களை அனுப்பியது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது அமெரிக்கா எங்கும் பேசு பொருளாய் மாறினது.
இந்நிலையில் 1887 ஆம் ஆண்டு செய்தித்தாள் ஒன்று அமெரிக்காவின் Illinois மாகாணத்தில் நடைபெற்ற காரியங்களை தலையங்கமாய்(Head Lines) எழுதியது. இதன்படி ஆதி திருச்சபையில் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வரங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் அவைகள் இன்றும் திருச்சபையில் வெளிப்படுகின்றன. ஏனெனில் மரியா மூலமாக, ஆதி திருச்சபையில் அப்போஸ்தல காலத்தில் வெளிப்பட்ட அற்புதங்களும் அடையாளங்களும் திரும்பவும் நடைபெற்றுக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி விசுவாசிகளின் சாட்சியை பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.
கடவுள் மரியாவை வல்லமையாக பயன்படுத்தியதினால் மரியாவின் புகழ் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் மரியா பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு சுவிசேஷபணியை கடவுள் கொடுத்த பலத்தின் மூலமாக இடைவிடாமல் உற்சாகமாக செய்து வந்ததினால் இதுவரை இரட்சிப்பின் அனுபவத்தை பெறாத மக்கள் மத்தியில் *இன்று மரித்தால் நித்தியத்தை நீ எங்கே கழிப்பாய்?* என்று அறைகூவல் விடுத்தபோது ஆயிரக்கணக்கானோர் மனம்திரும்பி, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாச வாழ்வில் அனுதினமும் பெலப்பட்டார்கள். இதனால் ஆவிக்குறிய வாழ்வில் மரித்துப்போய் இருந்த ஐரோப்பிய திருச்சபைகள் எல்லாம் உயிர்பெற ஆரம்பித்தன.
மரியாவின் எழுத்து பணிகள்: கிறிஸ்தவ வாழ்வில் விசுவாசிகள் பலப்படும்படியாய் மரியா அநேக புத்தகங்களை எழுதினார். அவற்றில் பிரபலமானது The Life, work and Experiences of Mariya Beulah Woodworth என்பதாகும். அப்படியே உலகபிரசித்தி பெற்ற இங்கிலாந்தின் 7 மிஷனெரிகளின் தலைவரான ஸ்டேன்லி ஸ்மித் (Stanly Smith) என்பவர் மரியா எழுதிய Maria's Acts of the Holy Spirit என்ற புத்தகமானது வேதாகமத்திற்கு அடுத்ததாக நான் அதிகமாக மதிக்கும் புத்தகம் என்று எல்லா இடங்களிலும் பகிர்ந்து கொண்டு, மரியாவின் சுவிசேஷ ஊழியமானது திருச்சபை வரலாற்றில் ஈடு இணையற்றது என்றும் தெரிவித்தார். இது மரியாவின் புகழை ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவ செய்தது.
மரியா தன்னுடைய புத்தகங்களில் முழுக்கு ஞானஸ்நானம், இரட்சிப்பு, பரிசுத்தம், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம், அந்நியபாஷை, அபிஷேகம், வெளிப்பாடுகள், தீர்க்கதரிசனங்கள், குணப்படுத்துதல், மற்றும் கிறிஸ்துவின் உடனடி வருகை (Immence coming of Jesus) ஆகியவற்றை உள்ளடக்கிய இறையியலை அதிகமாக எழுதினார்கள்.
மரியாவின் ஊழியத்திற்கு எதிர்ப்பு: மரியாவின் சுவிசேஷ ஊழியத்திற்கு கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் சமூகத்தில் இருந்து பலத்த எதிர்ப்புகள் இருந்தது. குறிப்பாக மரியா வேதாகமத்தை தவறாக போதிப்பதாக இறையியல் பண்டிதர்கள் குற்றஞ்சாட்டினார்கள். பல இடங்களில் மரியா பிரசங்கிக்க செல்லும் இடங்களில் எல்லாம் சமூக விரோதிகள் வந்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்ததில் அநேக கூடுகைகள் இடையே நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் 1888 மற்றும் 1889 ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மிசோரி மாகானத்தில் செயின்ட் லூயிஸ் பகுதியில் மரியா நற்செய்தியணி செய்துகொண்டு இருக்கும்போது அங்கு 15 மனோதத்துவ மருத்துவர்கள் மற்றும் 2 மருத்துவர்கள் மரியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காவல்துறையிடம் முன்வைத்தார்கள்.
எப்படியெனில் மரியா மக்களைக் குணப்படுத்துவதாகக் கூறி அவர்களை ஹிப்னாட்டிசம் (Hypnotism) செய்வதாக குற்றம் சாட்டினார்கள். நோயுற்ற மக்கள் மருத்துவ மனைகளுக்கு செல்லாமல் ஜெபத்தின் மூலம் சுகமாகிவிடும் என்று எண்ணி மருந்துகள் எடுக்காமல் இருந்ததால் அநியாயமாக பலர் மரித்துப்போயுள்ளார்கள் என்று புகார்செய்யவே Framingham மற்றும் Massachusetts நகர காவல்துறை மரியாவை கைதுசெய்தது. ஆனால் விசுவாசத்தின் மூலமாக குணப்பட்ட பலர் மரியாவுக்கு ஆதறவாக காவல்துறையினரிடம் தங்கள் சாட்சியை பகிர்ந்துகொள்ளவே மரியா விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே 1890 ஆம் ஆண்டில் மரியா உட்வொர்த்தின் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் எரிக்சன் என்பவர், பிப்ரவரி 3 ம் நாள் மரியாவின் சுவிசேஷ கூடுகை நடந்துகொண்டு இருக்கும்போது ஏப்ரல் 14 ஆம் தேதி அமெரிக்காவில் மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பு உண்டாகி *சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லாண்ட்* நகரங்கள் அழியப்போவதாக பரிசுத்த ஆவியானவர் கூறினார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். இது அந்நாட்களில் அமெரிக்கா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் மத்தியில் ஒருவித பயமும் நடுக்கமும் உண்டானதால் அநேகர், அந்த நகரங்களை விட்டு வெளியேறினார்கள். இந்த செய்திகள் எல்லாம் அமெரிக்காவின் பத்திரிக்கைகளில் தலைப்பு செய்திகளாக பல நாட்கள் இருந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி என்ன நடக்கப்போகிறதோ என்று எல்லோரும் கலங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் எதுவும் நடைபெறவில்லை. அதைத்தொடர்ந்து சிலவாரங்களாக எவ்வித அழிவும் சேதமும் எங்கேயும் உண்டாகவில்லை.
இதனால் தவறாக செய்தியை வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக காவல்துறையான மரியா குழுவினர் மீது வழக்கு பதிவு செய்து எரிக்சனை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. மரியாவின் குழுவினரும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க கிறிஸ்தவ இறையியல் பண்டிதர்கள், வேதத்தை தவறாக போதிப்பதாக மரியாவை மீண்டும் குற்றஞ்சாட்டினார்கள்.
மரியாவின் கூட்டங்களில் என்ன நடக்கிறது? என்று அவருக்கு நற்செய்திபணி அறிவிக்க உரிமை கொடுத்திருந்த Church of God திருச்சபையும் கடும் நெருக்கடியை கொடுத்தது. இந்நிலையில் 1900 ஆம் ஆண்டில் இறுதியில் அந்த திருச்சபையின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய உரிமமும் (License) ரத்து செய்யப்பட்டது.
மரியாவின் திருமண முறிவு: மரியா சுவிசேஷ பணிக்காக அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது ஆரம்ப நாட்களில் தன்னுடைய கணவர் பிலோ ஹோரேஸ் வுட்வொர்த் (Philo Horace Woodworth) ஐயும் உடன் அழைத்துச் செல்வார். இவரது கணவர் ஒரு நிலையற்ற மற்றும் விசுவாசமற்றவராக அடிக்கடி மனநிலை மாறுபவராக (Mood Swing) இருந்தார்.
மரியாவின் கூடுகைக்கு வரும் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பீலோ ஜெப எண்ணை, மரியாவின் கைபட்ட கைக்குட்டைகள் போன்றவற்றை வியாபாரம் செய்து அதிக பணம் சம்பாதிப்பதிலேயே கருத்தாக இருந்தார்.
பலநேரங்களில் மதுஅருந்திவிட்டு மரியாவின் சுவிசேஷபணி ஊழியங்களுக்கு மரியா செல்லாதவாறு தடைவிதித்தும் பல கூடுகையை தடுத்து நிறுத்தவும் செய்தார். பீலோ, மரியாவின் கூட்டங்களுக்கு வந்த பல பெண்களுக்கு பாலியல் துன்பம் கொடுத்தும் பலரோடு படுக்கையறையை பகிர்ந்துகொண்டதில் மரியா மனம் உடைந்துபோனார்.
மரியா, தன்னுடைய கணவரை எவ்வளவோ கண்டித்தும் பீலோ திருந்தவில்லை. அவருடைய செயல் மரியாவின் நற்செய்திபணி ஊழியத்தில் எதிர்மறையான காரியங்களையும் அவமானத்தையும் நிந்தனைகளையும் கொண்டுவந்தது. இந்நிலையில் தன்னுடைய கணவர் செய்துகொண்டிருந்த துரோகத்திற்கு முடிவுகட்ட 1891 ஆம் ஆண்டில் கனத்த இதயத்துடன் மரியா தன்னுடைய 28 ஆண்டுகால திருமண உறவை முறித்து பீலோவை விவாகரத்து செய்தார். மரியாவை பழிவாங்க அதீகமான ஜீவநாம்ச தொகையை கொடுக்காவிட்டால், மரியாவின் அந்தரங்க காரியங்களை பொதுவெளியில் புத்தகமாக வெளியிடப்போவதாக பீலோ மிரட்டினார்.
மரியாவின் விவாகரத்துதான் அன்றைய செய்திதாள்களில் அமெரிக்கா முழுவதும் பரவலாக பேசப்பட்டு கொண்டு இருந்தது. ஆயினும் மரியைவை தனிப்பட்ட முறையில் அறிந்த பலர், மரியாவுக்கு ஆதறவாக இருந்தார்கள்.
இந்நிலையில் மரியாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிலோ ஹோரேஸ் வுட்வொர்த் விரைவில் 16 வயது சிறுமியை மறுமணம் செய்து கொண்டார்; ஆனால் ஒரு ஆண்டிற்குள்ளாக டைபாய்டு காய்ச்சல் வந்து இறந்துபோனார்.
தன் கணவரை விவாகரத்து செய்த மரியா, மனம் உடைந்து நற்செய்திபணி ஊழியத்தை விட்டுவிட தீர்மானித்தார். ஆனால் இயேசு கிறிஸ்து மரியைவை தேற்றி, ஆறுதல்படுத்தி, தைரியபடுத்தி, பலப்படுத்தி, மீண்டும் நற்செய்திபணி செய்வதற்கு உற்சாகப்படுத்தினார்.
மரியாவின் மறுமணம்: இயேசுகிறிஸ்து கொடுத்த பலத்தினாலும் மரியாவின் நண்பர்கள் கான்பித்த ஆதறவினாலும் மீண்டும் மரியா சுவிசேஷபணிகளில் ஆர்வம் கான்பித்து பலகூடுகைகள் நடத்தினார். அநேக மக்கள் மனந்திரும்பி இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்தார்கள்.
இந்நிலையில் ஊழியத்தின்பாதையில் சாமுவேல் எட்டர் (Samuel Etter) என்பவரை 1902 ஆம் ஆண்டில் மரியா சந்தித்தார். இவர் கடவுள் மீது மிகுந்த பற்றுருதி கொண்டவர். நன்றாக பாடுவார், அப்படியே இசைகருவிகள் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவராய் இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக மனைவியை இழந்திருந்த சாமுவேலின் சம்மதத்தின் தனது 58 வயதில் மரியா, அவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் கணவனும் மனைவியுமாக இணைந்து சுவிசேஷ கூடுகையை நடத்தினார்கள். சாமுவேல் எட்டர், மரியைவை நன்கு கவனித்துக்கொண்டு, சுவிசேஷ கூட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்.
காலங்கள் செல்லச்செல்ல மரியாவின் சுவிசேஷ ஊழியத்தை எல்லோரும் அங்கிகரிக்க ஆரம்பித்தார்கள். பல திருச்சபை தலைவர்கள், தங்கள் திருச்சபைகளில் வந்து சுவிசேஷ கூடுகைகள் மற்றும் எழுப்புதல் கூட்டங்களை நடத்தும்படி அழைப்பு விடுத்தார்கள்.
பெந்தேகோஸ்தே இயக்கத்தின் முன்னோடி: அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல் நகரில் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ம் நாள் அசூசா தெருவில் (Azusa Street) இருந்த திருச்சபையில் ஆப்பிரிக்க-அமெரிக்க போதகரான வில்லியம் செய்மூர் (William Seymour), தன்னுடைய 7 உடன் ஊழியர்களோடு கடவுளின் அருள்மாரியை வாஞ்சித்து கொண்டு இருக்கும்போது திடிரென மின்னல் போல பிரகாசமான ஒளி அந்த அறையில் தோன்றி அவர்களை இருக்கையில் இருந்து கீழேவிழத்தள்ளியது.
அப்போது அந்த 7 ஊழியர்களும் அப்போஸ்தலர் 2 ம் அதிகாரத்தில் கூறப்பட்ட பிரகாரமாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களாக அந்நியபாஷைகளை பேசி, வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டவர்களாக, கைகளை சத்தமாகவும் வேகமாகவும் தட்டி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் கடவுளை துதித்தார்கள்.
இப்படியாக மூன்று நாட்கள் இடைவிடாமல் நடைபெற்ற ஜெபகூடுகையில் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்று இனப்பாகுபாடு இன்றி பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும், வரங்களையும், பெற்றுக்கொண்டதாக சாட்சிகளை பகிர்ந்துகொண்டார்கள். இந்த சம்பவம்தான் கிறிஸ்தவ திருச்சபை சரித்திரத்தில் பெந்தேகோஸ்தே இயக்கத்தின் ஆரம்ப நாளாகும்.
*மரியா உட்வொர்த்-எட்டர்* தான் 'பெந்தகோஸ்தே இயக்கத்தின் தாய் (Mother of Pentecostal Movement) என்று இன்றும் அழைக்கப்படுகிறார். எப்படியெனில் மரியாவின் ஊழியத்தில் வெளிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் எல்லாம் பெந்தேகோஸ்தே இயக்கங்கள் 1906 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே வல்லமையாய் வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1906 ஆம் ஆண்டில் வெளிப்பட்ட பெந்தேகோஸ்தே இயக்கத்தை பற்றி அறிந்திருந்த மரியாவும் இதில் வெளிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள், தன்னுடைய ஊழியத்தில் நடைபெற்ற அற்புதங்களையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்தின என்று ததன்னுடைய கூடுகையில் பிரசங்கித்தார்.
1912 ஆம் ஆண்டில், தன்னுடைய எழுபது வயதை நெருங்கும் போது, மரியாவும் சாமுவேலும் அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகரில் ஐந்து மாதமாக எழுப்புதல் கூடுகைகளை நடத்திக்கொண்டு இருந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். இக்கூடுகைகளில் ஒவ்வொரு வாரமும் சுமார் 25,000 த்திற்கும் அதிகமானோர் பங்குபெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூடுகையின் மூலமாக அநேக ஊழியர்களுக்கு சிறப்பு வகுப்புகளை மரியா நடத்தி, அமெரிக்கா தேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெந்தேகோஸ்தே இயக்கத்தை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார். அப்படியே 1914 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள் மத்தில் பெந்தேகோஸ்தே இயக்கமானது பரவும்படி அசம்பிளி ஆப் காட் (Assembly of God) என்ற இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டதில் மரியாவின் பங்கு மிகமுக்கியமாக இருந்தது.
1902-1914 ஆண்டுகளில் மரியா பெந்தேகோஸ்தே இயக்கத்தை உலகம் முழுவதும் முன்னெடுத்து செல்வதற்காக பல சுவிசேஷ கூடுகைகளை பெந்தேகோஸ்தே இயக்கத்தினருடன் இணைந்து நடத்தினார். இதில் இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் பெயர் கிறிதவர்களாக இருந்தவர்களும் மனம்திரும்பி இரட்சிப்பின் அனுபவத்தோடு கிறிஸ்துவின் சீஷர்களாக திருச்சபைக்கு வந்தார்கள். திருச்சபையில் எழுப்புதல் உண்டாகி நற்செய்தி பணிக்காக பலர் தங்களை அற்பணித்து உலகம் முழுவதும் கடந்து சென்றார்கள்.
இதே காலக்கட்டத்தில் பெந்தேகோஸ்தே இயக்கத்தினரால் மிகவும் விமர்சிக்கப்பட்ட பெண்ணாகவும் மரியா இருந்தார். மரியாவின் ஊழியத்தை சாதாரண மக்கள் அதிகமாக ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் அவரது எதிரிகளாக Main-Line திருச்சபை தலைவர்களும், மற்றும் பெந்தேகோஸ்தே திருச்சபை தலைவர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரியாவின் சொந்த திருச்சபை: ஆணாதிக்கம் நிறைந்த பெந்தேகோஸ்தே இயக்க தலைவர்கள் மரியா நற்செய்தி கூட்டங்கள் நடத்தமுடியாதவாறு முட்டுக்கட்டையாக இருந்தார்கள்.
ஏனெனில் பெந்தேகோஸ்தே இயக்க ஆண் தலைவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் மரியா நடத்தும் கூடுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். இது அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சியை கொண்டு வந்தது.
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக சொந்த இடம் வாங்கி அதில் நற்செய்தி கூட்டங்களை நடத்த முடிவு செய்த மரியா 1914 ம் ஆண்டில் அமெரிக்காவின் இன்டியானா மாகானத்தில் இன்டியானாபோலீஷ் (Indianspolis) பகுதியில் சுமார் 8000 பேர் அமர்ந்து இருக்க வசதியாக ஒரு திருச்சபையை கட்டினார்கள். இங்கிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெந்தேகோஸ்தே இயக்கத்தை முன்னெடுப்பதற்கு ஊழிய பயிற்சியை கொடுத்துக்கொண்டு இருந்தார். சீர்திருத்த திருச்சபைகளில் இருந்த பல போதகர்கள், அங்கிருந்து வெளியேறி மரியாவிடம் சேர்ந்துகொண்டார்கள். இந்த திருச்சபையில் மரியா எல்லோருக்கும் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். மரியாவிடம் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவின் பலபகுதிகளில் இருந்து மக்கள் மரியாவை தேடிவந்தார்கள். இப்படி பல திருமுழுக்கு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களும் உண்டு.
பலவீத்தின் மத்தியிலும் மரியா தொடர்ந்து சுவிசேஷ கூடுகைககளில் பிரசங்கித்து ஆயிரக்கணக்கில் ஆத்தும ஆதாயம் செய்தார்கள். இவர்களுடைய திருச்சபையில் 8000 மக்கள் இருக்கமுடியாத அளவிற்கு நாளுக்கு நாள் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
மரியாவின் மரணம்: வயது முதிர்வின் காரணமாக மரியா ஒரு நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டு, தொடர்ந்து பயணமும் செய்து சுவிசேஷ ஊழியம் செய்தார். ஆனால் சாமுவேல் எட்டர் நோய்வாய்ப்பட்டு ஆகஸ்ட் 1914 இல் மரித்துப்போனார்.
தன்னுடைய வயது முதிர்வின் காரணமாகவும் கணவரின் இழப்பு காரணமாகவும், நோயோடும் போராடிக்கொண்டு இருந்த மரியா தொடர்ந்து 10 ஆண்டுகளாக சுவிசேஷ கூடுகைகள் நடத்தி வந்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 80 ஆம் வயதில் செப்டம்பர் 16, 1924 இல் கர்த்தருடைய இளைப்பாறுதலுக்குள் நித்தியமாக பிரவேசித்தார். மரியாவின் பிரசங்கத்தினால் மனம்திரும்பிய எல்லோரும் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்து இறுதிமரியாதையை செலுத்தினார்கள்.
மரியா உட்வொர்த்-எட்டர் அம்மையாரின் சரீரமானது அவருடைய மகள், மருமகன் மற்றும் கணவர் அடக்கம்பண்ணப்பட்டிருந்த இண்டியானாபோலிஸ் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மரியாவின் கல்லரையில் *ஆயிரக்கணக்காணோருக்கு தன்னுடைய அன்பை வாரி வழங்கியவர்* (Thou showest unto thousands loving kindness) என்ற கல்வெட்டு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மரியாவின் பேத்தி பியூலா மற்றும் கணவர் ஏர்ல் கிளார்க் (Earl Clark) ஆகியோர் பெந்தேகோஸ்தே போதகர்களாக இருந்து மரியா விட்டுச்சென்ற ஊழியத்தை தொடர்ந்து செய்து வந்தார்கள்.
*சரித்திரத்தில் மரியா உட்வொர்த் எட்டர்*: கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் எந்த ஒரு ஆண் ஊழியரும் பெறாத புகழின் உச்சத்தை தொட்ட சிறந்த தலைவராக மரியா உட்வொர்த்-எட்டர் அம்மையார் இருந்தார். மெத்தடிஸ்ட் திருச்சபையில் இருந்து ஆரம்பமான Holiness Movement ல் முதல் பெண் ஊழியராக அறியப்பட்ட மரியா Trance Evangelist என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக பெந்தேகோஸ்தே இயக்கத்தின் தாய் (Mother of Pentecostal Movement) என்று அழைக்கப்படுகின்றார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய திருச்சபை வரலாற்றில் இலட்சக்கணக்கான மக்களை மனம்திரும்ப செய்ததிலும் பரிசுத்தவாழ்க்கை வாழசெய்ததிலும், கிறிஸ்துவின் இராஜியம் கட்டப்பட சுவிசேஷபணியை எல்லோரும் அறிவிக்க அறைகூவல் விடுத்து ஊழியர்களை உறுவாக்கியதிலும் மரியா உட்வொர்த்-எட்டர் அம்மையாருக்கு நிகர் எவரும் இல்லை என்று அறுதியிட்டு கூறலாம்.
பெண்கள் திருச்சபையில் போதகர்களுக்கும், குடும்பத்தில் கணவருக்கும், சமூகத்தில் ஆண்களுக்கும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று கருதப்பட்ட காலத்தில் மரியா அம்மையார் எல்லாவற்றையும் உடைத்க்கொண்டு வைரம்போல கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஜொலித்தார்.
இன்றைய காலத்தில் பல பெண்ணிய இறையியலாளர்கள் (Feminist Theologians) மற்றும் பெண்களின் முன்னேற்த்திற்காக உழைக்கும் வரலாற்று ஆசிரியர்களின் பங்களிப்பு இருந்தபோதிலும், கிறிஸ்தவ உலகில் பெண்கள் போதக ஊழியத்தை செய்ய முன்வரும்போது, ஆணாதிக்க திருச்சபை தலைவர்களின் எதிர்ப்புகள், விரோதங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அவமானத்திற்கு ஆளாக நேரிடுகின்றார்கள்.
இருபத்தியோராம் நூற்றாண்டில், வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இன்னும் திருச்சபையில் வேதாகமத்திற்கு எதிராக ஆனால் மரபாக பின்பற்றப்பட்டு கொண்டிருக்கும் பாலின வேறுபாட்டை (Gender Inequality)) நாம் அகற்ற வேண்டும். மேலும் பிரசங்க மேடையில் நின்று எரிந்து பிரகாசிக்கும் தீவட்டிகளாக கடவுளால் அழைக்கப்படும் பெண்களின் ஊழியத்திற்கு நாம் எப்போதும் ஆதறவாய் இருக்க வேண்டும்.
கடவுளின் இராஜியம் கட்டப்படுவதற்காக பெண்கள் செய்யும் ஊழியத்தின் மதிப்பை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. பெண் ஊழியர்களின் தாலந்துகளையும் திறமைகளையும் நாம் ஒருபோதும் அசட்டை செய்யக்கூடாது.
மரியாவின் ஊழியத்தின் மூலமாக வெளிப்பட்ட பரிசுத்த ஆவியியானவரின் வல்லமைகளும் வரங்களும், சுவிசேஷபணியில் முன்னெடுத்த பணிகளும் இன்றைய பெந்தேகோஸ்தே இயக்கங்களுக்கும் மற்றும் கரிஸ்மட்டிக் (Charismatics) இயக்கங்களுக்கும் முன்னோடியாய் இருந்தது என்பது கிறிஸ்தவ சரித்திரத்தில் மறுக்கமுடியாத உண்மை ஆகும். நம்முடைய தலைமுறையிலும் மரியாவை போன்று பல பெண்கள் எழும்ப திருச்சபையானது பெண்களை போதக ஊழியத்தில் சுவிசேஷ ஊழியத்தில் உற்சாகப்படுத்த வேண்டும்.
🛐. இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.
🔯. பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.
🕎. 21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.
✝️. ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.
🔯. இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
The Daughters of the Church
Maria Woodworth-Etter (1844-1924)
*Early Life:* Maria Beulah was born on July 22, 1844 in Lisbon Ohio in USA, one of eight children and the youngest of four daughters born to Samuel Lewis and Matilda Underwood.
Her parents weren't Christians and therefore she had no Christian education until they joined the Disciples church in 1854. Her father was an alcoholic who frequently abandoned his family, leaving them with no money for food or warm clothing. Being raised with seven siblings, an alcoholic father and a sick broken hearted mother - her youth was very hard.
*Uncertainty of Future*: When Maria was 11 years old in 1857, her father went out to the field to work but was carried back to the house with a severe case of sunstroke. Her widowed mother, Matilda, had no way of providing for her children, so the eldest daughters (including Maria) were sent out to work. Maria longed for education, and cried herself to sleep at night while living and working away from home.
*God’s Call:* When Maria was thirteen years old, she heard the story of the cross at a Disciples meeting and committed her life to Jesus. Soon after she was converted she heard the voice of God tell her to "go to the highways and hedges and gather the lost sheep". The entire time she felt that God was calling her to preach to the lost.
This was confusing to her as the Disciples Church did not allow women workers. Maria never heard of any woman preaching. She rationalized that with an education and a husband they might be accepted for missions work.
*Commitment to Ministry*: At the age of 16 Maria married Philo Horace Woodworth in 1863. They attempted to farm but it was a failure, and they had six children. Her dream of having a husband who would be a partner in the ministry did not come to fruition.
Maria herself struggled with poor health and many times thought that she herself would die. Five of the six children had died leaving them in great grief and sorrow. During her sickness she had frequent trances, visions to delirium, visions of children in heaven and the lost suffering in hell or as a reaction to the loss of her children.
Maria surrendered her future to God. She promised God that if he would restore her health, prepare her, and show her the work to be done, she would try to do it. Maria began to recover immediately.
*The Visions of Maria*: Before she began her ministry, Maria Woodworth had the vision that the angels regularly came into her bedroom at night and carried her over prairies, lakes, forests, and rivers, where she would see long fields of waving grain that would fall into sheaves as she began to preach.
Tormented with being uneducated, she said she couldn’t preach what she didn’t know. She told the Lord she needed preparation and then she would go.
*A Call to Preach*: Maria was worried that being a woman preacher with a little formal education and would bring disgrace to God. Her husband disallowed it and her oldest daughter was also against it.
Maria searched the Scriptures to see what they had to say about women preaching. She took to heart the prophecy of Joel which predicted that in the latter days “Your sons and your daughters shall prophesy (Joel 2:28).” Her position that this was meant for the church was reinforced by testimony from the Acts of the Apostles that Philip’s four daughters had prophesied.
She asked God for same apostolic power He gave the disciples and was gloriously baptized in the Holy Spirit. Prohibited from public preaching among the Disciples, Maria chose to enter evangelistic ministry.
*Evangelistic Ministry:* Despite her personal struggles with ‘women in ministry’ and the prevalent hostile attitudes to female preachers, at the age of 35, she felt compelled by God to accept the invitation to preach in the United Brethren in Christ (Friends) in 1876.
When she got up to speak she was given a vision of the pit of hell and people not knowing their danger. She cried out for people to follow God and choose to be saved. The hearers were all in tears. A notable evangelist was born and hungry souls were waiting-multitudes in the valley of decision.
Several church groups recognized her preaching abilities. In 1884 she was licensed as an evangelist by the Churches of God Southern Assembly, founded by John Winebrenner.
*Signs and Wonders in Ministry:* Maria preached wherever God called and moved through the Midwest where she gained a great reputation for the power of God coming into her meetings. Though simply evangelistic in the early days it was in 1885 that supernatural signs began to accompany Maria’s ministry.
The power of God would fall and sinners would run to the front in repentance People fell into trances, experienced visions of heaven and hell, collapsed on the floor as if they’d been shot or had died. Thousands were healed of a wide variety of sicknesses and diseases and many believers, even ministers, received mighty baptisms of the Holy Spirit.
*Healing Ministry:* Not long into her ministry she felt God calling Maria to pray for the sick. She was resistant to doing so because she feared that it would distract from the evangelistic call. Jesus assured her that if she prayed for the sick more people would be saved. She did so, believing that those with sufficient faith would be healed.
As news spread of this preacher woman, her powerful meetings, and unusual manifestations, reporters flocked to her meetings from as far away as New York. Many of her followers claimed miraculous healings and the gift of tongues.
Believers saw every kind of disease healed in every meeting. Blind and deaf mutes were set free, sick and crippled healed and those near death were raised up. Immediate miracles as well as ongoing healings were a constant. She regularly called for testimonies from the newly saved and healed. She brought thousands into the Kingdom of God.
*Invitation from other Churches:* When the evangelist Maria Woodworth left town, it was her goal to leave a newly planted church complete with a Sunday school, leaders and pastor in place. She was an itinerant evangelist who travelled coast–to-coast across the United States holding meetings in church halls, Gospel tents and public buildings. Her meetings were characterized by great power, healings, visions, and trances.
The United Brethren Church wanted her to take charge of the Women’s Missionary Society, the Bible Christians Church wanted her to unite with them and take charge of thee large churches, and the Methodist Church wanted her to take charge of Holiness Movement but she felt that her mission was that of an evangelist. In 1890 The Church of God in Indiana licensed and ordained her.
*Revival Ministry of Maria*: In the years 1890-1900 were tough for Maria. Reporting hundreds of conversions, her campaigns attracted reporters from across the country. An 1887 newspaper quoted Maria in an Illinois (USA) meeting, giving her a powerful voice before the beginning of the Pentecostal movement.
The power which was given to the apostles in their day had never been taken from the church. She prayed for the return of the old days and more faith in Christ among the people. Her ministry resurrected dead churches, brought salvation to thousands of unconverted and encouraged believers to seek a deeper walk with God.
*Literary Work of Maria:* Maria wrote highly inspirational books. Among them were The Life, Work, and Experiences of Maria Beulah Woodworth. Included in the Cambridge Seven missionary group, was Stanley Smith who greatly valued Maria's Acts of the Holy Spirit, "It is a book I value next to the Bible," He believed that Maria’s ministry was unparalleled in church history. She had developed a theology that included salvation, holiness, the baptism in the Holy Spirit, healing, and the imminent return of Christ.
*Opposition in the Ministry*: Maria had resistance from both the Christian theologians and secular community. As Maria began to receive more invitations to preach, many times it was hard because thugs kept on breaking her services.
In St Louis, Missouri (USA) she had some of her most dramatic meetings in 1898 and 1899, but local psychiatrists brought charges against Maria who was then arrested in Framingham, Massachusetts for claiming to heal people and charged with hypnotizing people.
In one of Maria Woodworth’s meetings in 1890 an man named Ericson prophesied that San Francisco and Oakland would be devastated by an earthquake and tidal wave on April 14th. This created quite a stir and the group was given extensive (negative) media coverage. April 14th came and went without the promised destruction.
Ericson was institutionalized in a psychiatric ward for his prophesy and Maria was aggressively questioned by “educated” male clergy. Even her own denomination struggled with what was happening in her meetings and she came under considerable pressure to stop. In 1900 she finally gave up her Evangelist's license in the Southern Eldership of the Church of God.
*Family Crisis*: Maria travelled throughout the United States, initially taking her husband Philo Horace Woodworth with her. He proved to be an unstable and unfaithful husband with frequent mood swings. He impeded her efforts by exploiting the crowds to sell refreshments. He was drinking, sleeping with other women who came to the meetings, and sometimes actively tried to stop her meetings.
Finally after years of a most difficult marriage, she divorced her husband for infidelity in 1891. He was bitter and threatened to write a critical book about her ministry if she did not pay alimony. The newspapers had a heyday but many stood up to tell the truth on her behalf.
Philo Horace Woodworth quickly remarried a 16 year old girl but died within a year of the divorce of typhoid. Maria thought of quitting the ministry but Jesus comforted her and gave strength the overcome the marital crisis.
*Overcoming Ministerial Crisis:* Maria traveled extensively and met Samuel Etter in 1902 in Arkansas of USA. At the age of 58 Maria married Samuel and worked together in the ministry. Samuel was a strong believer and served wholeheartedly with her. He took the best care of her, in and out of the meetings.
Over time, she gained courage and her efforts were crowned with enough success that nearby churches requested her as their pastor. She refused, for she felt her work must be as an itinerant evangelists.
*Forerunner of Pentecostal Movement*: Maria Woodworth-Etter has been called the ‘Mother of Pentecost’ because her dynamic Holy Spirit ministry pre-dating the Pentecostal outpouring by twenty years. The Pentecostals considered that many of the unusual things she'd experienced made Maria a forerunner in the works of the Holy Spirit.
In 1912 when she was approaching seventy years of age, Maria and Samuel ministered at a five month long meeting in Dallas, Texas in USA. And there she held her largest revivals, where as many as 25,000 were estimated to have attended. This meeting was widely reported in Pentecostal newsletters and her ministry blossomed from that point on. In 1912 she joined the young Pentecostal movement and preached widely in Pentecostal circles until her death, helping found the Assemblies of God among the white people in USA in 1914.
Paradoxically, although Maria attracted incredible numbers of unbelievers to the church during these twenty years, she was perhaps the most criticized woman evangelist during the same period, with the cruelest criticisms often coming from her own denomination. Maria’s friends were the common people, and her enemy was the patriarchy of the Protestant evangelical and Pentecostal churches.
*Own Ministry*: Maria was an outstanding preacher of the Gospel who saw amazing signs and wonders attending her ministry. She went from coast to coast at least three times and some of her meetings had over 25,000 attendees. She traveled with a tent and set it up where God gave her opportunity. Maria finally built a tabernacle in central Indianapolis, Indiana(USA) so that instead of her taking her message to the people, they could come to hear her preach.
Her ministry extended beyond the un-churched. Many of her converts were from the ranks of the clergy. She organized churches and conducted baptisms. In fact, people traveled from long distances just to be baptized by her. Believers were greatly refreshed and vibrant.
*Death of Maria Woodworth Etter*: In the last period of her life, Maria was carried to her church in a chair. She continued to travel and minister, but Samuel became ill and eventually died in August of 1914. The strain of her husband's illness and then loss, coupled with a grueling three meeting a day ministry schedule caused Maria to become ill and her health declined, and she died on September 16, 1924, honored as a woman of God.
She is buried in a grave in Indianapolis next to her daughter and son-in-law. Her inscription reads "Thou showest unto thousands lovingkindness." She was survived by her granddaughter Beulah and husband Earl Clark, who were also Pentecostal ministers.
*Legacy of Maria*: Maria Woodworth should have been hailed as a great leader and example in church history, and no doubt would have been, had she been a male preacher. As the first woman to emerge as a Holiness preacher Maria Woodworth Etter was then known as the Trance Evangelist, but now known as the Mother of the Pentecostal movement.
She lived and preached in an era when women were required to be silent in church and to submit to their husbands’ authority, both at home and in the broader social spectrum.
Despite the dedicated work of many contemporary feminist theologians and historians, any Christian woman who steps toward a pulpit finds herself at risk of hostility, harassment, and humiliation. In the twenty-first century, we still need to remove sexism from the church, and we still need to assist women who are called to stand in a pulpit. The worth of such women and the value of their work for God should never be underestimated. Their energy and their vulnerability should never be exploited.
With her emphases on the role of the Holy Spirit, on women’s roles in evangelism, and on healing, she is regarded as a precursor of Pentecostal and Charismatic groups today.
🛐. Dear beloved readers, as you know that when Jesus was hanging on the Cross, all the male disciples left Him alone and only the women were under the Cross. Because of this the resurrected Jesus Christ, revealed Himself first to the woman and through her the mesaage of resurrected Christ passed on to men and others. Jesus first revealed Himself as Messiah to the woman. In the early church for a first 500 years of the history of Christianity, many women served as theologians, evangelists, apostles, prophetess, deaconess, presbyters and Bishops. The women made the local Christianity into an international level. So the role of women is highly regarded in the early church.
🔯. When Christianity become the official religion of the Roman empire in the 5th century, the male dominated Roman culture influenced Christianity. Through the misinterpretations of 1 Cor 14:34-36, 1 Tim 2:11-15, 1 Cor 11:3, Eph 5:22-24, the male dominated Church leaders silenced the voices of women in the Church for the past 1500 years.
🕎. We are living in the 21st Century and the things are rapidly changing, but the church leaders stereotyped women and hesitated to ordain them as Deacons, Presbyters and Bishops. God created men and women in His own Image and the Church leaders fail to accept this reality and it is totally against God's plan in salvation History.
✝️. As we are living in India, we have 1,12,345 churches out of 6,75,982 villeges. Until and unless you rise as Deborah, as a mother of India, the villagers will be ceased. Jesus gave His life for the empowerment of women. So take this as a challege and do some thing for the extension of His Kingdom wherever you are. The Church may not recognize you but remember that the building is not the church but it is the fellowship of believers. So let your home be a place for your church, you can share about Jesus among your friends in schools, colleges and universities. You can share about Jesus in your work places among your friends. It is my prayer that you can be a channel of blessings to many others for His Glory. Amen.