=================
சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள் என்னென்ன?
==================
இவன் தேவ தூதனின் அறிவிப்புபடி பிறந்தவன் (நியாயாதிபதிகள் 13:3) கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் (நியாயாதிபதிகள் 13:24). கரத்தர் ஆவி அவன் மேல் பலமாக இறங்கியது (நியாயாதிபதிகள் 14::6). ஆனால் முடிவு சரியில்லை. சிம்சோன் முடிவு தற்கொலை.
----------------------------------------------------------------
1) கண்களில் ஜெய ஜீவியம் இல்லை
நியாயாதிபதிகள் 14:2
2)
3)
----------------------------------------------------------------
சகோதரி. ஷிலா (சென்னை)
சகோதரர். ஜெயக்குமார் (ஈரோடு)
சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள்:
1. கண்களில் இச்சை
நியாயாதிபதிகள் 14:2
2. பெலிஸ்தரிடத்தில் பெண் கொண்டது
நியாயாதிபதிகள் 14:3
3. தீட்டுள்ளதை புசித்ததால்
நியாயாதிபதிகள் 14:8,9
4. வேசி என்ற ஆழமான படுகுழிக்கு போனதால்
நியாயாதிபதிகள் 16:1
5. பெண்ணிடம் ரகசியத்தை சொன்னதால் நசரய விரதம் அம்போ
நியாயாதிபதிகள் 16:17
சகோதரர் செல்லையா சென்னை
சகோதரி. தனகிருபா (தூத்துக்குடி)
1. சிம்சோன் பெலிஸ்தியர் பெண்ணை விவாகம் செய்தான் - கண்களின் இச்சை.
நியாயாதிபதிகள் 14:2,18
2. நசரேய விரதம் பெற்றவன் யாதொரு பிரேதத்தண்டையிலும் செல்லக்கூடாது.
எண்ணாகமம் 6:6
சிம்சோன் செத்த சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதுக்கு போனான்
நியாயாதிபதிகள் 14:8
3. பராக்கிரமசாலியான சிம்சோனைப் பிடிக்க அவனது சத்துருக்களான பெலிஸ்தர் தெலீலாள் என்ற வேசியை பொறியாகப் பயன்படுத்தின அந்த வலையில் விழுந்தான்.- மாம்சத்தின் இச்சை
நியாயாதிபதிகள் 16:1
4. எப்பொழுதும் கர்த்தர் தன்னோடு இருப்பார் என்று நினைத்து அந்த சுய பலத்தை நம்பி இருந்தான். - ஜீவனத்தின் பெருமை
நியாயாதிபதிகள் 16:9,13,17
5. நசரேய விரதம் பெற்றவன் தலைமுடியை சிரைக்க கூடாது சவரகன் கத்தி அவன் தலையின் மேல் படக்கூடாது.
தன்னைக் குறித்த தேவ சித்தத்தை மறந்து போனாரன்.
எண்ணாகமம் 6:5
நியாயாதிபதிகள் 16:19
6. கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாதிருந்தான்
நியாயாதிபதிகள் 16:20
இஸ்ரவேல் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய சிம்சோனின் இரண்டு
கண்களும் பிடுங்கப்பட்டு மாவு அரைக்க வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டான். அவன் முடிவோ பரிதாபமானது அவருடைய கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சை ஜீவனத்தின் பெருமை அவனை இப்படிப்பட்ட கீழான நிலைமைக்கு கொண்டு சென்றது.
சகோதரி சத்யபிரியா கடம்பத்தூர்
சகோதரி அனுராதா படப்பை
1. சிம்சோன் விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தரிடத்தில் பெண் கொண்டான்.
நியாயாதிபதிகள் 14:3
2. தன் தாய் தந்தையின் சொல் பேச்சிற்கு கீழ்ப்படியவில்லை
நியாயாதிபதிகள் 14:6
3. தன் கோபத்தை அடக்கிக் கொள்ளாமல் பகையை காட்டி பழி வாங்கினான்.
நியாயாதிபதிகள் 15:5
4. தெலீலாள் மேல் அவன் கொண்ட அன்பினால் தன்னுடைய பலத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தினான்.
நியாயாதிபதிகள் 16:17,19
5.நசரேயனானவனின் தலை முடியை சிரைக்கப்படக்கூடாது என்ற கர்த்தரின் கட்டளையை மீறினான்.
6. பெறுவதற்கு அரிய பரிசுத்த ஆவியின் வல்லமையை அபிஷேகத்தை இழந்து போனான்.
7. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பராக்கிரமசாலியாக இருந்த போதிலும், பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றிருந்த போதிலும், அதை அசட்டை பண்ணி பெண் மீது கொண்ட இச்சையினாலும் , கண்களின் இச்சைக்கு அடிமையானதாலும் , தன் ஆசீர்வாதத்தையும் ஏன் தன் வாழ்க்கையும் இழந்து போனான்
நியாயாதிபதிகள் 16:30
நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் "
இந்த வசனத்தின்படி சிம்சோன் வாழ்க்கையில் கர்த்தரின் மேலான கிருபையை இழந்தான்
சகோதரர் அசோக்குமார் தூத்துக்குடி
சகோதரி ரெக்சிலின் கோவில்பட்டி
1) கண்களில் ஜெய ஜீவியம் இல்லை
நியாயாதிபதிகள் 14:2
2) தெலீலாள் எனன்னும் ஸ்திரீயோடு சிநேகமாயிருந்தான்
நியாயாதிபதிகள் 16:4
3) கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாதிருந்தான்
நியாயாதிபதிகள் 16:20
சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள்
(நியாயாதிபதிகள் 13,14,15,16)
===================
1) சொந்த பெலத்தை நம்பினான்
2) கடந்த கால வெற்றிகளை நம்பினான் (சிங்கத்தை துண்டு துண்டாக கிழித்ததையும், பெலிஸ்தர்களால் கட்டப்பட்டு அதை எளிதாக அறுத்து கொண்டதை)
3) அவனுடைய பெலன் கர்த்தரால் கொடுக்கபட்டது என்பதை மறந்தான்.
4) நான் என்ற அகங்காரத்தினாலும், பெருமையினாலும் அவன் வழி நடத்தப்பட்டான்
5) தன்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்று அவன் தன்னை பற்றிக் கருதினான்.
6) அவன் சுயக் கட்டுப்பாடு இல்லாதவனாய் இருந்தான்
7) அவன் தனது கண்களால் நடத்தப்பட்டான். தனது கண்களை கட்டுப்பாடின்றி அலைய விட்டான்
8) தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இரையாகிப் போனான்
9) அவனது வல்லமையையும், அபிஷேகத்தையும் இழந்து போனான்
10) அவன் தன்னை குறித்து கவனமாயிராதபடியால் அவன் விழுந்து போனான்
11) அழைப்பின் நோக்கத்தை அசட்டை செய்கிறவனாக ஆரம்பம் முதல் காணப்படுகிறான்
12) ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் என்று சொன்ன சிமியோன் தானும் தேவனை நினைத்து வாழ்ந்திருந்தால் இப்படிப்பட்ட பரிதாபமான முடிவு நேர்ந்திருக்காது.
13) கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியவில்லை (பாவத்தில் வாழ்ந்து கொண்டு கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்று நினைத்தான்)