===========
ஆதியாகமம் 32:9
===========
பின்பு யாக்கோபு: "என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும்", என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,
என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனே. ஏசாவின் எல்லையை நெருங்கும் போது யாக்கோபு பயந்து நடுங்கினான். 20 வருடங்களுக்கு முன்னால் யாக்கோபு தன்னை ஏமாற்றியதாக நினைத்துக் கொண்டிருந்தான். அதற்காக பழி வாங்கவும் காத்திருந்தான். (ஆனால் யாக்கோபு யாரையும் ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை) இப்போது ஏசாவின் கையினால் யாக்கோபும், அவனது குடும்பமும் கொடுமை அனுபவிக்குமா ?
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் யாக்கோபு தேவனிடம் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுதல் செய்தான்.
யாக்கோபின் ஜெபம் விசுவாசிகள் அனைவருக்கும் ஒரு மாதிரி ஜெபமாய் இருக்கிறது. தங்கள் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படும் நெருக்கடியான சூழ்நிலையில் யாக்கோப்பை போல ஜெபிக்க வேண்டும்.
1) தேவனுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு தேவனுடைய பாதுகாப்பு ஒன்று என்று தேவன் கொடுத்த வாக்குத்தத்தை யாக்கோபு நினைவுபடுத்தினான்.
ஆதியாகமம் 32:9
2) தன்னுடைய அபாத்திரத் தன்மையை யாக்கோபு உணர்ந்து, கர்த்தர் கடந்த காலத்தில் அவனுக்குச் செய்த உதவிக்காகவும், கொடுத்த ஆசீர்வாதங்களுக்காகவும், தேவனுக்கு நன்றி செலுத்தினான்.
ஆதியாகமம் 32:10
3) தேவன் அவனை விடுவித்து இரட்சிக்க வேண்டும் என்று வேண்டினான்.
ஆதியாகமம் 32:11
4) தேவனுடைய பாதுகாப்பை வேண்டுவதற்குக் கடைசிக் காரணமாக , தேவனுடைய உடன்படிக்கையின் நோக்கத்தை தன் வாழ்வில் நிறைவேற்றக் கோரினான்.
ஆதியாகமம் 32:12
சில வேலைகளில் நாம் ஜெபிக்க வேண்டியதை பல பரிசுத்தவான்கள் மூலமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த தேவ மனிதர்களால் இந்த பரிசுத்த வேதாகமத்தை எழுதி உள்ளார், என்பதை நாம் நம்ப வேண்டும். நம்பி இதை வாசிக்க வேண்டும்.
அப்போதுதான் வேத வசனம் நமக்குள் ஆவியாகவும் ஜீவனாகவும் மாறும் என்பது உண்மை. ஆகையால் வேதத்தை தொடர்ந்து வாசிக்கு எப்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
=============
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்:சிலுவை ராஜா
தொடர்புக்கு: 9841711591
இந்த உலகம், நீ எப்போது கீழே விழுவாய் என்று பார்த்துக்கொண்டு இருக்கும். நீ ஏறுவதை எல்லாம் ரசிக்காது.
• பணம் இருந்தால் தான் நீ உறவினர். இல்லை என்றால் உறவு - இல்லார். அனாதை தான்.
• வாழ்க்கையில் எந்த ஒரு உயர்வுக்கு நீ போனாலும் உன்னை மட்டம் தட்ட கீழ் இருக்கும் நபர்கள் குறைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.
• பணத்திற்கு சாதி மதம் எல்லாம் இல்லை. பணம் இல்லையேல் சாதி மதம் எல்லாம் பார்க்கப்படும்.
• நீ ஒரு வேலையில் இருக்கும் போது வேலை இல்லாத நண்பன் போன் செய்தால் ஒரு தடவை நீ யோசிக்கதான் செய்வாய்.
• கடைசி வரை உன்கூட இருக்கப்போகும் உறவு நீ மட்டுமே. உன் மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தப்போவது உன் பெற்றோர் மட்டுமே.
• நாம் முன்னேறுவதை பார்த்து பொறாமை படும் கூட்டமே இங்கு ஜாஸ்தி. அந்த பொறாமை அவர்களை என்னென்னமோ வேலைகள் செய்ய தூண்டும்.
• பல நேரங்களில் நம் முதுகில் குத்துவது நாம் நேசிக்கும் உறவுகளே. இது புரிய நாள் ஆகும்.
• நாம் இருக்கும் போதும், இறக்கும் போதும் நம் பின்னால் பேசுபவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.
• இங்கு பாதி பேர் கடவுளை தரிசிப்பதற்கு காரணமே, அவர்களின் புலம்பலை கேட்க ஆள் இல்லாத காரணங்கள் தான்.....
நன்றி...
================
அந்நிய தெய்வங்களை விலக்கி
================
ஆதியாகமம் 35:2
அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
ஆதியாகமம் 34 ஆம் அதிகாரத்தில் உள்ள பயங்கரமான நிகழ்ச்சிகளுக்கு பின், தேவன் யாக்கோபின் குடும்பத்தைப் பெத்தேலுக்கு போக சொன்னார். அங்கே அவர்களைக் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாக கீழ்ப்படியச் செய்வது அவரது நோக்கம். தன்னுடைய குடும்பத்திலிருந்த ஆவிக்குரிய வீழ்ச்சியைக் கண்ட யாக்கோபு, தன்னுடைய வீட்டாரையும், தன்னிடம் இருந்த மற்றவர்களையும், தங்களிடமிருக்கும் அந்நிய தேவர்கள், விக்கிரகங்கள், சுருபங்கள் அனைத்தையும் விலக்கிவிடுமாறு கண்டிப்பாக கட்டளையிட்டான்.
யாக்கோபின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த ஆவிக்குறிய மறுமலர்ச்சி, கீழ்க்கண்ட காரியங்களில் அடங்கியிருக்கிறது.
1) தங்கள் வீட்டிலிருந்து தேவனுக்கு பிரியம் இல்லாத அனைத்து பொருட்களையும் விலக்கி தூர எரிந்து விடுதல்.
ஆதியாகமம் 35:2
2) தங்களை முற்றிலுமாகப் பரிசுத்தப்படுத்துதல். (சரீரம், உடை)
ஆதியாகமம் 35:2
3) பக்தியிலும், ஆராதனையிலும் தேவனுடன் தங்கள் உறுதிமொழிகளைப் புதுப்பித்துக் கொள்ளுதல்.
ஆதியாகமம் 35:7
ஆதியாகமம் 28:20-22
4) தேவனோடு ஐக்கியப்படுதல்
ஆதியாகமம் 35:9
5) தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல்.
ஆதியாகமம் 35:10-15
ஆவிக்குரிய பலி செலுத்துதல்.
ஆதியாகமம் 35:14
யாக்கோபு இவ்வாறு ஆவி கூறிய நிலையில் ஒரு புது மலர்ச்சி அடைந்தபடியால், அவன் மறுபடியும் தேவனுடைய பாதுகாப்பு, சமூகம், வெளிப்படுத்தல், ஆசிர்வாதம் ஆகிய நன்மைகளை பெற்று அனுபவித்தான்.
ஆதியாகமம் 35:5,9-13-ல் கர்த்தர் மறுபடியும் அவனுக்குத் தரிசனமானார்.
இப்பொழுது, யாக்கோபு கடைசியாக வாக்குத்தத்தத்தின் தேசத்தில் திரும்ப வந்து சேர்ந்து, தேவனுடைய சித்தத்துக்கு இசைந்து இருக்கிறபடியால், தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை வாக்குத்தத்தங்கள் யாவையும் (ஆதியாகமம் 17:1-8) மறுபடியும் யாக்கோப்போடு புதுப்பித்துக் கொண்டார்.
நம்முடைய வாழ்க்கையில் நாமும் நம்முடைய குடும்பத்தில் எழுப்புதல் அல்லது மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமானால் தேவனுக்கு பிரியம் இல்லாத எதுவும் நமக்குள்ளும் நம்முடைய இல்லத்துக்குள்ளும் இராதபடிக்கு அவைகளை தூக்கி எறியுங்கள்.
தேவனோடு நம் உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
அவர் நமக்கு கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொள்வதற்கு பிரயாசப்படுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
==============
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்: சிலுவை ராஜா.
தொடர்புக்கு: 9841711591
================
தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்
ஆதியாகமம் 34:1
===============
யாக்கோபு தெய்வபக்தியற்ற மக்களின் பட்டணமான சீகேமுக்கருகில் குடியிருந்தான். தேவன் அவனை அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கின் ஊருக்கு போக கட்டளையிட்டிருந்தார். (ஆதியாகமம் 31:13; ஆதியாகமம் 35:1;) அதை மீறி யாக்கோபு தன் விருப்பப்படி சீகேமில் குடியமர்ந்தான்.
இவ்வாறு செய்ததற்காகப் பின்னர் மிகவும் மனங்கசந்து அழுதான்.
தீனாள் சம்பந்தமான துக்ககரமான நிகழ்ச்சி நடந்த பின்னர் தான் யாக்கோபுக்கு பெத்தேலுக்குச் சென்று, தன் வீட்டில் இருந்த அந்நிய தேவர்கள் யாவையும் அழித்து விட்டான்
ஆதியாகமம் 35:2
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.
ஆதியாகமம் 34:2
தீனாளும், அவளுடைய பெற்றோரும் தவறு செய்தார்கள். ஒழுக்கக்கேடும், தீமையும் நிறைந்த அந்நிய மக்களுக்கருகில் மிக நெருங்கிய தொடர்புடன் குடியிருக்க அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது யாக்கோபு செய்த பெரிய தவறு. லோத்து முன்னால் இப்படித்தான் செய்திருந்தான். (ஆதியாகமம் 13:12,13) யாக்கோபு தன் பிள்ளைகளுக்கு அவர்கள் சஞ்சரிக்க வேண்டிய இடங்களின் எல்லையையும், அனுசரிக்க வேண்டிய விதிமுறைகளையும் திட்டமாக வகுத்துக் கொடுக்கவில்லை. அவர்கள் அவிசுவாசிகளுடன் எப்படி பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.
அவன் தன் பிள்ளைகளின் நடத்தையைச் சரி வர மேற்பார்வை செய்யவும் இல்லை. தீனாளைப் பொறுத்தவரையில் அவள் தேவ பயமற்ற பெண்களைச் சந்தித்துத் தனக்கு சிநேகிதிகளைச் சம்பாதிக்க விரும்பினாள். முடிவாக ஏற்பட்ட விளைவு, தூக்ககரமானது, யாக்கோபுக்கு மிகுந்த வெட்கத்தைக் கொடுத்தது. அவனுடைய குமாரத்திக்கும் ,அவனுடைய குடும்பத்துக்கும், மிகுந்த அவமானத்தைக் கொடுத்தது .
2) தங்கள் பிள்ளைகள் நண்பர்களுடன் சேராமல் கண்டிப்பாக இருந்து, தங்கள் குடும்பத்தை நல்வழியில் நடக்கும் தனி குடும்பமாகப் பிரிந்து வைக்காத பெற்றோர், பிள்ளைகளைச் சோதனை நிறைந்த இடங்களில் அனுமதிக்கிறார்கள். அங்கே அவர்கள் சோதனைகளில் விழவும், கெட்ட பழக்கங்களைப் பழகிக் கொள்ளவும் ஏதுவுண்டாகிறது, அதனால் வெட்கமும், அழிவும் விசுவாசின் குடும்பத்துக்கு ஏற்படும்.
ஆகையால் என் அன்பு தேவனுடைய சகோதர சகோதரிகளே, இதை வாசிக்கும் அன்பர்களே நம்முடைய வாழ்க்கையில் 'தீனாள்' என்ற மகளுக்கு நடந்தது போல நம்முடைய குடும்பத்தை நாம் காக்க மறந்தால் அல்லது கவனிக்க மறந்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரிட வாய்ப்புகள் அதிகம்.
ஆகையால் பெற்றோர்கள் பொறுப்புடன் பிள்ளைகளை கவனிக்கவும், அன்பு செலுத்தவும், கவனமாக இருக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
வேதத்தில் உள்ள ஒவ்வொரு சம்பவங்கள் நமக்கு புத்தி சொல்ல முடியாதோ எச்சரிப்பு உண்டாகும் படியாகவும் எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள்.
தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
================
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்: சிலுவை ராஜா
தொடர்புக்கு: 9841711591
=============
ஒரு புருஷன் பொழுது விடியும் அளவும் அவனுடனே போராடினான்
ஆதியாகமம் 32:24
============
யாக்கோபுடன் போராடியது "கர்த்தருடைய தூதனாயிருக்கலாம்"
ஆதியாகமம் 16:7
ஆதியாகமம் 21:17
ஆதியாகமம் 22:11
ஆதியாகமம் 31:11
ஓசியா 12:4
இந்த கர்த்தருடைய தூதன் கர்த்தர் தாமென்று அடிக்கடி கூறப்படுவதுண்டு.
ஆதியாகமம் 28:30
நியாயாதிபதிகள் 6:12-14,22
யாத்திராகமம் 3:2
1) யாக்கோபு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறத் தீவிரமாக போராடிக் கொண்டிருந்தபோது தேவன் அவனைப் போராட அனுமதித்தார். ஆனால் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கும்படி செய்துவிட்டார்.
ஆதியாகமம் 32:25
இது எப்போதும் அவன் தன் பலத்தில் நடக்கக்கூடாது. அவன் முற்றிலும் தேவனையே சார்ந்திருந்து, அவர் வழிகளிலே நடக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டது.
ஆதியாகமம் 32:30-32
2) உன்னுடைய பெயர் இனிமேல் 'இஸ்ரவேல்' எனப்படும்.
ஆதியாகமம் 32:28
'யாக்கோபு' என்னும் பெயரின் பொருள்."ஒரு வஞ்சகமான ஏமாற்றுக்காரன்"என்பது. அது இப்போது மாற்றப்பட்டு'இஸ்ரவேல்'என்னும் புதுப் பெயர் கொடுக்கப்படுகிறது. இதன் பொருள்"தேவனோடும் மனுஷரோடும் போராடி மேற்கொள்பவன்"என்பதாகும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் சில வேலைகளில் 'கர்த்தருடைய இஸ்ரவேலர்' என்று அழைக்கப்படுகிறார்கள்.(கலாத்தியர் 6:16) அதாவது தேவனோடு போராடுகிறவர்கள். தேவன் தமது மக்கள் எப்போதும் செயலற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. அவருடைய கிருபையையும், ஆசீர்வாதத்தையும் பெற தீவிரமாக அவரைத் தேடுகிறவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்
மத்தேயு 5:6
மத்தேயு 6:33
மத்தேயு 7:7,8
மத்தேயு 11:12
லூக்கா 11:5-10
3) அங்கே அவனை ஆசீர்வதித்தார்
ஆதியாகமம் 32:29
யாக்கோபு தேவனோடு போராடிய இரவு, அவனுக்கு தேவனுடைய ஆசிர்வாதத்தைப் பெற்று தந்தது.
1) அன்று முதல் யாக்கோபு தனது வாழ்வும் , வளமும் தன்னுடைய முயற்சியாகவோ, வழிமுறைகளாகவோ அல்ல, தேவனுடைய வழிநடத்தல், உதவி, ஆசிர்வாதங்கள் இவற்றினால் வந்தவை என்று அறிந்து கொண்டான். பின்னர் தேவன் இஸ்ரவேலரின் சந்ததி யாருக்கு இந்தச் சத்தியத்தை நினைவு படுத்தினார்.
சகரியா 4:6
"பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்"
2) தேவனுடைய மக்களின் வாழ்வில் வெற்றியும், ஆசிர்வாதமும் இதே முறையில் தான் வருகிறது, ஒருவேளை நாம் தேவனுடன் சரீரப் பிரகாரமாகப் போராடவிட்டாலும், நாம் அவரை ஊக்கமான விசுவாச ஜெபத்தினால் தேடலாம்.
லூக்கா 11:5-10
நாம் நமது பாவங்களை அவரிடம் அறிக்கை செய்து அவரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.
லூக்கா 11:4
தேவனுடைய சமூகத்துக்காகவும், அவருடைய இராஜ்ஜியத்துக்காகவும், பசி தாகமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
லூக்கா 11:2
பரிசுத்த ஆவியின் உண்மை, வல்லமை இவற்றைப் பெற்று (அப் 1:8; 2:4) உண்மையான விசுவாசமும், நீதியும் உள்ள வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ வேண்டும்
மத்தேயு 6:30-33
4) ஏசா யாக்கோப்பைக் கட்டித்தழுவி முத்தம் செய்தான். இருவரும் அழுதார்கள்
ஆதியாகமம் 33:4
தேவன் ஏசாவைத் திடப்படுத்தி, யாக்கோபுடன் ஒப்புரவாக வேண்டும் என்னும் ஒரு ஆசையை அவன் உள்ளத்தில் ஏற்படுத்தினார். ஏசாவின் அன்பான வரவேற்பும், சிநேக பாவமும், யாக்கோபின் ஜெபத்திற்கு தேவன் அளித்த பதிலாகும்
ஆதியாகமம் 32:11
தேவனுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பது உண்மைதான். ஆனால் சில வேலைகளில் தேவனோடு போராடி நம்முடைய ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
அதேபோல் தேவனிடத்தில் இரட்சிப்பை பெற்ற தேவ பிள்ளைகள் இரட்சிப்புக்கு ஏற்ற வாழ்க்கை வாழ தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
நம்முடைய ஆசீர்வாதத்தை ஒரு நாளும் இழந்து போகக்கூடாது அதை காத்துக் கொள்ள தேவ கிருபையை ஒவ்வொரு நாளும் நாட வேண்டும்.
சத்ருக்கள் நம்மோடு கூட சமாதானமாய் இருந்தாலும் நாம் தேவனோடு எப்பொழுதும் அவருக்கு பிரியமானதை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.
முயற்சி செய்து பாருங்கள். நம்முடைய வாழ்க்கையில் தினமும் அற்புதத்தை காணலாம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
================
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்: சிலுவை ராஜா.
தொடர்புக்கு: 9841711591
============
உயர்ந்த முத்துக்கள்
பரிசுத்த ஆவியும், நானும் நிறைந்து
============
பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிறைந்து, அதில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான நற்சாட்சி பெற்றவர்களாய் அந்த ஏழு பேர் இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் கூறினார்கள்.
விசுவாசிகளில் பலர் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பூரணமாய்ப் பெறவில்லை என்று அப்போஸ்தலர்கள் கருதினார்கள். பரிசுத்த ஆவிக்கு உண்மையாக வாழாதவர்கள், (கலாத்தியர் 5:16-22), பரிசுத்த ஆவியின் நிறைவை இழந்து விடுவார்கள். பரிசுத்த ஆவியினால் நிறைந்து"அல்லது"பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு"என்னும் சொற்றொடர்கள் குறித்து கீழ்க்கண்ட காரியங்களைக் கவனிக்க வேண்டும்.
1) "பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு" இந்தச் சொற்றொடர் மூன்று வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
அ) பரிசுத்த ஆவியில் ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதைக் குறிக்கிறது
அப்போஸ்தலர் 1:5
அப்போஸ்தலர் 2:4
அப்போஸ்தலர் 9:17
அப்போஸ்தலர் 11:16
ஆ) ஒரு விசுவாசி அல்லது விசுவாசிகள் ஒரு இடத்தில் பேச பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் முன் வரும்போது வல்லமையினால் நிரப்பப்படுவதை காட்டுகிறது.
அப்போஸ்தலர் 4:8
அப்போஸ்தலர் 13:19
லூக்கா 1:41-45;67-79
இ) பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் அல்லது அபிஷேகத்தால் ஒரு தீர்க்கதரிசன ஊழியம் நடத்த வேண்டுமென்று, அந்த ஊழியம் எவ்வளவு நேரம் நடைபெறும் என்பது திட்டமாகக் கூறப்படாமல் குறிப்பிடுவது.
அப்போஸ்தலர் 4:31-33
லூக்கா 13:52
லூக்கா 1:15
3) பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற பின்னர், உண்மையாக ஆவியின் வழியில் நடக்கும் நபர்கள், தங்கள் சரீரத்தின் பாவ செயல்களை முற்றிலும் அழித்து விட்டவர்கள்,(ரோமர் 8:13,14)"பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள்"என்று சொல்லப்படலாம். அதாவது இவர்கள் ஆவியின் நிறைவைத் தங்கள் வாழ்க்கையில் காத்துக் கொண்டவர்கள்.(உதாரணமாக அந்த ஏழு பேர். அவர்களில் சிறப்பாக ஸ்தேவான் 4:3,5; 7:55. அல்லது பர்னபா 11:24). மேலும் பரிசுத்த ஆவியின் நிறைவை காத்துக் கொள்ளுகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக மீண்டும் பரிசுத்த ஆவினால் நிரப்பப்படுவார்கள். சிறப்பாக ஒரு தெய்வீக வரத்துடன் பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் பேசுவதற்காக ஒரு புது அபிஷேகத்துடன் நிரப்பப்படுவார்கள்.
மறுபடியும் மறுபடியும் நீங்கள் தேவ ஆவியினால் நிரப்பப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.
அந்தந்த காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கையில் தேவனுக்காக பேசுவதற்கு ஒரு புது அபிஷேகத்துடன் நிரப்பப்படுவீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
==============
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன். சிலுவை ராஜா
தொடர்புக்கு 98 41 711 591