=============
குட்டிக் கதை
மனசு சஞ்சலப்படுகிறதா?
==============
ஒருமுறை ஒரு குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது.
அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பி விட்டான். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.நீர்நிலை அருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை மொண்டு கொண்டு சீடன் குருவிடம் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார். தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி! நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அமைதியாக மனதை அப்படியே கடவுளிடம் விட்டு விட வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பின் அந்த மனது கடவுளின் அருளால் சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது கடவுளின் அற்புத சக்தியால் அமைதியாகிவிடும் .
நடக்க வேண்டியது எல்லாம் சரியாய் நடக்கும் அது நம்முடைய முயற்சியின்றி நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! கடவுளின் பங்கு மாத்திரமே
it is an effortless process! என்றால். 0குரு..
என் அன்புக்குாியவா்களே,
மனங்கலங்கி போய் சஞ்சலப்படுகிறீா்களா? பலவிதமான பிரச்சனைகளினால் நீங்கள் அமைதியின்றி தவித்து என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் பொது... தேவன் சொல்கிறாா்.
யோசுவா 1:9
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறாா்.
Joshua 1:9
Have not I commanded thee? Be strong and of a good courage; be not afraid, neither be thou dismayed: for the LORD thy God is with thee whithersoever thou goest.
சங்கீதம்138: 8
கா்த்தா் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாா். அவா் யாவையும் செய்து முடிப்பாா்.
எனவே எதைக்குறித்தும் சஞ்சலப்படாதீா்கள். கலக்கமடையாதீா்கள். இஸ்ரேல் ஐனங்களுக்கு விரோதபாக யுத்தம் செய்கிற எதிாிகளைக் குறித்து தேவன் சொல்கிற காாியம் என்ன வென்றால்..
To get daily story and pray for nation contact +917904957814
உபாகமம் 20:3,4
3. இஸ்ரலேரே, கேளுங்கள், இன்று உங்கள் சத்துருக்களுடன்யுத்தம் செய்யப் போகிறீர்கள், உங்கள் இருதயம் துவள வேண்டாம், நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
4. உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லுங்கள்.
இந்த வசனங்களின்படி உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள். அவர்தான் உங்களுக்காக யுத்தம் செய்கிறவா் நீங்கள் சும்மாயிருங்கள். (அமைதியாயிருங்கள்) என்ற கருத்தினை தேவன் வலியுறுத்துகிறார்.
விசுவாசமாய் பேசுங்கள் !! விசுவாசமாய் ஜெபியுங்கள்.!! இப்படி விசுவாசத்தை செயல் படுத்துங்கள்.கா்த்தா் உங்களுக்காக செயல் படுவாா்.
ஏசாயா 41:10 -13
கா்த்தா் சொல்கிறாா். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன்,நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள், உன்னோடே வழக்காடு கிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமல் போவார்கள். உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்,
உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றும் இல்லாமல் இல்பொருளாவார்கள். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான்உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன் என்றாா்.
எரேமியா 31:13
நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
சஞ்சலத்தோடே மனம் கலங்கிபோன உங்கள் மனதை சஞ்சலம் நீங்கி சந்தோஷப்படுத்துவாா்!
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்!!!
===============
ஓர் குட்டிக் கதை
சோழ நாட்டு வீரச்சிறுவன்
===============
சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் “சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.
அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.
அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர். சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு “”என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?” என்று ஆணவத்துடன் கேட்டான். மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.
முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.
மறுநாள் மற்போர்
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன. கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.
”மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?” என்று இறுமாப்புடன் சொன்னான். மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.
அதே நேரத்தில்
”இதோ, நானிருக்கிறேன்,” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.அனைவரும் திரும்பிப் பார்த்தனர். பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான். “”ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,” எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.
என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்… கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான். கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது. யாரிந்தச் சிறுவன்?
உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான். கடோத்கஜன் வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.
என் அன்பு வாசகர்களே,
இக்கதையில் வருவது போல நம் வேதாகமத்திலும் ஒரு சரித்திரம் நாம் நன்றாய் அறிந்தது ஒன்று உண்டு. தாவீது, கோலியாத்தின் சரித்திரம். சிறுமையும், எளிமையுமான சிறிய தாவீதைக்கொண்டு தேவன் பலத்தவனான கோலியாத்தை ஒரே அடியில் வீழ்த்தினான்.
சரி தாவீது எவ்வாறு கோலியாத்தை வீழ்த்தினான் என்றால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவோம் தேவ பெலத்தை கொண்டு தான் வென்றான் என்று. ஆம் அது உண்மைதான். எனினும் ஏன் நெற்றியில் குறி வைத்து கல்லை எறிய வேண்டும் என்றால் அந்த இடம் மட்டும் தான் திறந்திருக்கும் மற்ற இடமெல்லாம் கவசங்களால் மூடி மறைத்திருப்பான் என்று பதில்.
பெரும்பாலான வேதாகம ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, கோலியாத் மட்டுமல்ல அவனை போன்ற இராட்சதர்கள் (Acromegaly) என்னும் ஒருவித நோயின் காரணமாக தான் இவ்வாறு அசுரத்தனமாக வளர்கின்றனர். மேலும் இவர்களுக்கு கிட்டப்பார்வை (short sight) குறைவாகத்தான் இருக்குமாம்.
To get daily message in whats app contact +918148663456
தாவீதின் கையிலிருந்தது ஏதோ பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு பொருளல்ல மாறாக ஒவ்வொரு ஆட்டு மேய்ப்பனும் காட்டு விலங்குகளிடமிருந்து தன்னையும் தன் மந்தையையும் பாதுகாக்க உபயோகப்படுத்துகிற ஒரு ஆயுதம் தான் அந்த கவண். சிந்தித்துப் பாருங்கள் ஒரு காட்டு விலங்கை துரத்த வேண்டும் என்றால் எப்பேற்பட்ட ஆயுதம் தேவைப்படும் என்று. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது தாவீது பயன்படுத்திய கவண் ஒரு துப்பாக்கியிலிருந்து (.45 caliber pistol) வெளிவரும் வேகத்திற்கு நிகரானது என்று. இவ்வளவு வலிமை நிறைந்த ஆயுதத்துடன் தேவனுடைய பெலனும் சேர்ந்ததால் தாவீது கோலியாத்தை எளிதில் வென்றான். தாவீது சொல்கிறார்,
சங்கீதம் 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.
எனவே நம்மேல் நினைவாயிருக்கிற தேவன் அனுதினமும் நம்மை வழிநடத்தி கோலியாத்தை போன்ற எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும் நமக்கு உறுதுணையாய் நின்று நம்மை விடுவித்து நம்மை காத்துக் கொள்வார்.
===========
ஓர் குட்டிக் கதை
யார் சிறந்தவர்?
============
பட்டிட்ணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துத் க் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான்.
“அரசே! நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர்
தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாம் பாஸ்கபட்டரின் உதவியை நாடலாம்,'' என்றார்.
நாடெங்கிலும் பறை சாற்றுவித்துத் அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என
அறிவித்தார். குறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால்,
இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.
“இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை
பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்துத் அதில் தேர்ந்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள்,'' என்றார்.
மறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, “இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,'' எனக் கூறி
விவரிக்கலானார்.
“என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர்; இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழிதவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வர்தைக் கண்டார். “மங்கிய இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து
நடந்து சென்றார்.
அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது. “நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார்.
கொஞ்ச தூரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார். “அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்துத் ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே அவர் பயந்து, வந்த வழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார்.
“பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச தூரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கரராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர்ஜபயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.
“இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச தூரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.
அமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, “பார்த்த்தீர்கர்ளா? எவ்வளவு பயங்கரமான கனவு என்று! இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார்,'' என்றார்.
அப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய்த் தாழ்ந்த குரலில், “கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது,'' என்றான்.
அதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, “ஆகா! என்ன அருமையான கட்டுக்கதை ,'' என்றான். அமைச்சரும், “கட்டுக்கதையா? ஏன் அப்படிக் கூறுகிறாய்?'' என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார். “தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள்.
To Get Daily Story Contact +917904957814
நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும்? அவர் தான் கனவைக் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவைத் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன்,'' என்றான். அமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையே மன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.
என் அன்பு வாசகர்களே,
நிதானமே பிரதானம் எந்தவொரு காரியத்தையும் நன்றாக ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதே இன்றைய கதையின் கருத்து.
என்னத்தான் உலகின் உயரிய படிப்பை படித்திருந்தாலும் ஒரு காரியத்தின் உண்மைத்தன்மை அறியாது செயல்பட்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். உதாரணமாக உலகின் பிரசித்தப்பெற்ற விஞ்ஞானி சில பொருட்களை கரைக்கக்கூடிய ஒரு அமிலத்தை உண்டாக்கி அதற்காக பல விருதுகளை பெற்றார். அதே உத்வேகத்தோடு எந்த பொருளாயினும் அதை கரைக்கக்கூடிய அமிலத்தை உருவாக்க போகிறேன் என்று முற்பட்டபோது அவரின் உதவியாளர் அந்த அமிலத்தை எதில் வைத்து?? எப்படி கொண்டு போவீர்கள் என்று கேட்டான். அதற்கு அந்த விஞ்ஞானியிடம் பதில் இல்லை. காரணம் எந்த பொருளையும் கரைக்குமாயின் அதை எதிலும் பாதுகாக்கவோ, எடுத்துச்செல்லவோ முடியாது.
வேதாகமத்தில் சிம்சோனின் வாழ்க்கையும் இதுபோலத்தான். தனக்கு அதீத பலன் இருந்தும் அதை எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும், தான் நேசித்த பெண் கூறியதால் எதையும் ஆராய்ந்து நோக்காது செயல்பட்டு இறுதியில் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டான்.
வேதம் சொல்கிறது,
1 கொரிந்தியர் 2:15
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
எனவே நாமும் ஆவிக்குரியவர்களாய் வாழ்ந்து எல்லாவற்றையும் உய்த்து ஆராய்ந்து செயல்படுவோம் மற்றவர்களால் நிதானிக்கப்படாமல் ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!