==========
ஓர் குட்டிக் கதை
==========
ஒவ்வொருவரும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகவும் உற்சாகமாகவும் செய் யும் போது வேலை செய்யும் கம்பேனி மட்டுமல்ல நீங்களும் வளாச்சியும் செழிப்பும்அடைய முடி யும் என்பதைக் குறித்த கதையும் வேத வசனங் களையும் இன்று படியுங்கள் அதன்படிநடந்து
மேன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
வளர்ச்சிக்குத் தடை
=============
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,
அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவா்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,
பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.
சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சி க்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப் பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க் கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப் பெட்டி யுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந் தது ...
”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
#என் அன்புக்குாியவா்களே,
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
.
வேலைக்குப் போகும் அநேகர் பணம் சம்பாதிப்ப தற்காக மட்டும் தான் வேலை செய்கிறார்கள். ஆனால் நீங்கள் வேலை செய்யும் எந்த டிப்பாா்ட்மென்டாய் இருந்தாலும் அதில் உற்சாகமாயும் உண்மையாயும் வேலை செய்யும் போது ..
கா்த்தா் அதைப் பாா்த்து பின்வரும் வசனங்களின்படி உங்களை ஆசீாவதிப்பாா்.
#ஆசீா்வாதமும்_செழிப்பும்
உங்கள் கைகளின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிடுவீா்கள். உங்களுக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டா யிருக்கும். - சங். 128:2
அதாவது நீங்கள் எவ்வளவு தூரம் பிரயாசப்பட்டு உண்மையாய் வேலை செய்தீா்களோ அதில் அதற்கேற்ற பலனை நீங்களே தான் பெற்றுக் கொள்வீா்கள்.
வேறு யாரும் தொடவோ சாப்பிடவோ முடியாது அதுமட்டுமல்ல,கா்த்தா் தந்த வேலையின்றி கஷ்டத்தைப் பாா்க்காமல் நீங்கள் உண்மையாய் வேலை செய்வதன் பலனே தான்
#பாக்கியமும்்நன்மையும். ..
பாக்கியமும் நன்மையுமே
உங்களின் நல்ல வளா்ச்சியாகும். ஆங்கிலத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்.
You will eat the fruit of your labor; blessings and prosperity will be yours.
ஆசீா்வாதமும் செழிப்பும் உண்டாயிருக்கும் (automatically) தானாகவே உண்டாகும். இது தேவன தந்த உண்மைக்கான பாிசாகும்.
கா்த்தருக்கும் கா்த்தாின் ஆலயததுக்கும்
மனபூா்வமாய் முதற்பலனையும் ,தசம பாகத்தை யும் கொடுக்க முன் வரவேண்டும்.
நீதிமொழிகள் 3:9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
2 கொரிந்தியர் 9:7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கையிலுந்தானே.
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும் படி தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். மங்கிய 3:8-10
அதுமாத்திமல்ல.
உங்களுக்குாிய சம்பாத்தியத்தில் மனபூா்வமாய்
குறைச்சலுள்ளவனுக்கு கொஞ்சம் கொடுங்கள். என்றே வேதம் பின்வருமாறு சொல்கிறது.
எபேசியர் 4:28
குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
தேவன் உங்களைக் கொண்டு உலக மக்களில் ஏழை எளிய மக்களையும் ஆசீாவதிக்கவும் ஊழியங்கள் ஆசீா்வதிக்கப்படவும் வேண்டும் என்றுதான் உங்கள் வேலையில் ஆசீா்வாதங் களையும் செழிப்பையும் உங்களுக்குத் தந்திருக்கிறாா் என்பதை உணருங்கள். அதை மறவாதிருங்கள்.
இதை செய்ய வில்லை யென்றால் கீழ்வரும் ஆசீா்வாதங்களை ப் பெற்றுக் கொள்ள முடியாது.
அப்படி கொடுக்கும் போது என்ன நடக்கும்???
நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரண முடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளி லும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையை யும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத் தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
To get daily message in whats app send ur name to +917904957814
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து,
2 கொரிந்தியர் 9:10
அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
மல்கியா 3:10
அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டே னோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது உன் களஞ்கியங்கள் பூரணமாய் நிரம்பும்: உன் ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். - நீதி. 3:8 -10
வேலைக்கு சாதாரணமாய் போகிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் வேலையினி மித்தம் உண்டாகும் ஆசீா்வாதங்களை உணரு வீா்களென்றால் வேலையை சாதாரணமாய் நினைக்க மாட்டீா்கள்.
கா்த்தா் என்னை மேன்மைப்படுத்தவே இந்த வேலையை கொடுத்துள்ளார் என்றே நினைத்து உண்மையும் உத்தமுமாய் வேலை செய்வீா்கள்.
ஒவ்வொருவரும் இப்படி நினைத்தால் நம் நாடு, தேசம் எவ்வளவாய் உலக நாடுகளின் மத்தியில் மேன்மையடையும்.
இன்றே சிந்தித்து செயல்படுங்கள்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
================
ஓர் குட்டிக் கதை
உண்மையான அழகு எது?
================
ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.
நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.
சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.
அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.
கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.
அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான்.
உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
என் அன்பு வாசகர்களே,
இந்த உலகத்தில் தாயின் அன்பு ஈடற்றது, இணையற்றதுஎன சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் அழகு என்பதை வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணக்கிடக்கூடாது.
நாம் நல்லெண்ணத்தோடு பிறருக்கு உதவி செய்யும்போது அவர்களின் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். ஆம் இன்றைய கதையில் தன்னுடைய தாய் கருப்பாகவும், ஒரு கண்ணில் காட்சி இல்லாமல் இருந்தபோதும் தன்னை அன்போடும், பண்போடும் நடத்தினதால் அவன் கண்களுக்கு மிகுந்த அழகுள்ளவளாய் காணப்பட்டாள்.
To get daily story contact +917904957814
நாம் எத்தனை பேர்களின் கண்களுக்கு அழகுள்ளவர்களாய் காணப்படுகிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். சிலரின் எண்ணம் இதுதான். நான் கருப்பாயிருக்கிறன் என்னை யார் நேசிப்பார்கள், எனக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை என்று எந்நேரமும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இருதயம் அழகாக இருப்பவர்கள் தான் இந்த உலகத்தில் மிகுந்த அழகுள்ளவர்கள்.
இந்த தாயைப்போல அன்பும், அரவணைப்பும் நமக்கு இருக்கும் பட்சத்தில் அனைவரின் கண்களுக்கும் நாம் அழகானவர்கள் தான். ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்,
ஏசாயா 53:2
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
நாம் விரும்பத்தக்க ரூபம் இல்லாமல் போக காரணம் நாம் தான். நம்முடைய பாவங்களை, பாபங்களை, வியாதிகளை தன்மேல் சுமந்துகொண்டு அடிக்கப்பட்டு, நொருக்கப்பட்டார். அவர் பூரண அழகுள்ளவராய் இருந்தும் நமக்காக அவருடைய அழகை இழந்தார் மட்டுமல்ல தன் ஜீவனையே கொடுத்தார்.
ஆகவேதான் பல நூறு ஆண்டுகளாக அநேகருடைய இருதயத்தில் மிகுந்த அழகுள்ளவராய் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை நாம் இந்த உலகத்தில் இருந்து எடுக்கப்பட்டாலும் இந்த உலகம் உள்ளவரை அவருடைய அழகும், அன்பும் போற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே இவ்வுலகில் வாழும் நாட்களில் நம்மால் மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவுவோம் அழகுள்ளவர்களாய் மாறுவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
=========
ஓர் குட்டிக் கதை
==========
கர்த்தருடைய பெரிதான நாமம் மகிமைப்படுவதாக..
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்தநாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
தேவதையின் தீர்ப்பு
=================
அது ஓர் அழகிய பனிக்காலம். ரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரேவகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் யார் பெரியவர் என்று. அதை நிரூபிக்க, இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு படிப்பதும் உண்டு.
அன்றும் அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே விவாதம் முற்றியது. ரவி சொன்னான், “நான்தான் உன்னை விட அறிவில் சிறந்தவன்'' என்று. ஆனால் சீதாவோ, அதை மறுத்தாள். “நிச்சயமா இல்லை.. நாந்தான்'' என்றாள் ஆணித்தரமாக. அதற்குச் சான்றாக அவரவர் தங்கள் பிரதாபங்களை சுட்டிக் காட்டிகொண்டிருந்தனர். இதே ரீதியில் பேச்சுச் வளர்ந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றியது ஓர் அழகிய தேவதை . தேவதையைக் கண்ட இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பின் இருவரும் சுதாரித்துக்கொண்டு, “நீங்கள் யார்?'' என்றனர். தேவதை அவர்களிடம், “நான் தேவலோகத்துத் மங்கை . இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலா செல்வேன்... இன்றும் அவ்வாறு போகும்போது உங்களது வாக்குவாதம் கேட்டது. பொறுக்கமுடியாமல் இறங்கி வந்தேன்'' என்றது.
பின், “உங்களுக்குள் என்ன பிரச்சினை? என்னிடம் சொல்லுங்கள்.. முடிந்தால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்'' என்றது. உடனே ரவி, “தேவதையே! இவளைவிட நான்தான் அறிவில் சிறந்தவன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறா'' என்றான். “ஒண்ணும் கெடயாது... நாந்தான் இவனை விட அறிவாளி..'' என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.
இதைக்கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது. “சரி, சரி... உங்கள் சண்டையை சற்று நிறுத்துங்கள். இதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறியது. “உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவர்தான் அறிவில் சிறந்தவர்'' என்று கூறி, “உங்களுக்கு இதில் சம்மதமா?'' என்று கேட்டது. ரவியும் சீதாவும் "சம்மதம்' எனத் தலையாட்டினர்.
உடனே போட்டி என்ன என்பதை தேவதை அவர்கர்ளிடம் சொல்ல ஆரம்பித்தது. “நான் உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தருகிறேன். இது பனிக்காலம் அல்லவா? அந்தக் குடுவையில் இரவு முழுவதும் பனித்துளிகளைச் சேமிக்க வேண்டும். இருவரில் யார் அதிகம் சேமிக்கிறீர்களோ அவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்'' என்று கூறியது. “ஆனால் ஒரு நிபந்தனை. இத்தருணத்திலிருந்து போட்டி முடியும் வரை நீங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது.
நான் நாளை மாலைதான் மீண்டும் வருவேன். இதே மைதானத்தில் எனக்காகக் காத்திருங்கள்'' என்று கூறி, மூடியில்லாத இரு குடுவைகளை அவர்களிடம் கொடுத்து விட்டு மறைந்தது. இருவரும் குடுவையுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். செங்கதிர் சூரியன் மறைந்து, பால் ஒளி வீசும் இரவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பனியும் கொட்ட ஆரம்பித்தது. ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான். திறந்தவெளியில் வைத்தான். பின் உறங்கச் சென்றான். ஆனால் உறக்கமே வரவில்லை. அடிக்கடி சென்று குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துள்ளதா எனப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
சீதாவும் அவளது வீட்டின் முன்புறம் உள்ள புல்தரையில் குடுவையை வைத்தாள். இடையிடையே பனித்துளியின் அளவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "நாளை எப்படியாவது ரவியை ஜெயிக்கணும்' என்ற சிந்தனையிலேயே அவள் தூங்கிப்போனாள். மறுநாள் பொழுது புலர்ந்தது.
சீதாவும் ரவியும் சென்று அவரவர் குடுவையைப் பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனி நிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ என்று சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தால் என்ன செய்வது என்று ரவியும் நினைத்தனர்.
மதியத்துக்கு மேல் இருவரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்க கிளம்பினர். அப்போது மற்றவரது குடுவையில் அதிகமாக இருந்தால் நாம் தோற்றுவிடுவோமே என்று இருவருமே நினைத்ததால், குடுவை நிறையத் தண்ணீரை ஊற்றி எடுத்துச் சென்றனர். மைதானத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் குடுவையை மறைத்து வைத்தபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.
“சரியாக வந்துவிட்டீர்கர் ளே! எங்கே உங்கள் குடுவையைக் காட்டுங்கள்'' என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது. பின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை . இதைக் கண்ட இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான், “ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?'' என்று. அதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்த தேவதை , “சாதாரணமாக பனித்துளி என்பது என்ன தெரியுமா? மேலே உள்ள
நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவியாகிவிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள்
மதியத்திலிருந்து இங்கே காத்திருக்கிறீர்கள்.
என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவாவது ஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில் தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரது குடுவையும் நிரம்பி வழிகிறதே! இது எப்படி? இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது?'' என்று கூறியது. “இப்போது சொல்லுங்கள்.. உங்களில் அறிவில் சிறந்தவர் யார் என்று?'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை .
இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர். “பார்த்தீர்களா? இது நம் வாழ்வில் தினமும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு. இதைக்கூட நாம் தெரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். "இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில்
உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்கள் முயற்சிக்க
வேண்டுமே தவிர, இப்படி வீண் விவாதங்கள் செய்து நேரத்தை வீணடிப்பது எவ்வகை யில் சிறந்ததாகும்?'' என்று கேட்டது தேவதை.
To Get Daily Story Contact +917904957814
அதைக் கேட்ட இருவரும் தம் தவறை உணர்ந்து, “எங்களை மன்னித்துத் விடுங்கள். நாங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகளை எல்லாம் செய்யமாட்டோம்'' என்று கூறினர். பின் தேவதை அவர்களைப் பார்த்து , “உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும்? கேளுங்கள்'' என்றது. “நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு'' என்று ஒரே குரலில் கூறினர். “உங்களது இந்தப் பரிசை எங்களது மற்ற நண்பர்களுக்கும் கொடுத்து,
அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்'' என்றாள் சீதா.
“மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று கூறி மகிழ்ச்சியுடன் மறைந்தது தேவதை . ரவியும் சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்
உண்மையான நட்புடன்.
என் அன்பு வாசகர்களே,
கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பார்கள். ஆம் என்னத்தான் கற்றிருந்தாலும் தன் துறையை சார்ந்தவைகளை மட்டுமே ஒரு மனிதன் கற்கிறான். அதாவது ஒரு கையளவு மட்டுமே.
வேதாகமத்தில் புத்தியிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கிய ராஜாவாகிய சாலொமோன் தன் இறுதி காலத்தில் மதியற்றவனைப்போல, தனக்கு எல்லாவற்றையும் கொடுத்த தேவனை மறந்து அந்நிய தேவர்களை பின்பற்றி சோரம்போனான். மாத்திரமல்ல தான் சிறந்து விளங்கிய காலத்தில் இவ்வாறு கூறுகிறார்,
பிரசங்கி 12:12
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிகபடிப்பு உடலுக்கு இளைப்பு.
நாம் எவற்றில் அது வேலையாகலாம் அல்லது படிப்பாகலாம் எதுவாயினும் அதில் சிறந்து விளங்க வேண்டும். மாறாக எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று முயற்சித்தால் நாம் நம் துறையில் பெற்ற தனித்துவம் அர்த்தமற்றதாகிவிடும்.
இந்த பாடத்தில் அல்லது இந்த தொழிலில் அல்லது இந்த வியாபாரத்தில் இவர்கள் தான் சிறந்தவர்கள் என்ற பெயரை சம்பாதிப்பது என்பது சாதாரணமானதல்ல. அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த பெயரை இறுதிவரை கொண்டுசெல்ல வேண்டும். கர்வத்தில் அநேக நற்பெயரை பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டால் இருக்கின்ற நற்பெயரும் கெட்டுப்போகும்.
எனவே அளவாய் படிப்போம், ஆரோக்கியமாய் வாழ்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!