கேள்விகள்
===============
நாகூம் 1 - 3 = ஆபகூக் 1 - 2
===============
1. கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; யாரை அறிந்திருக்கிறார்?
2. இதோ, சமாதானத்தைக் கூறுகிற யாருடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது? யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; யார் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்?
3. எது பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது?
4. உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று யார் சொல்லுகிறார்?
5. உன் யாரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும்?
6. ஆகையால் எது பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது?
7. யாரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?
8. அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதை யார் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை?
9. எது சுவரிலிருந்து கூப்பிடும்? எது மச்சிலிருந்து சாட்சியிடும்?
10. கர்த்தரோவென்றால், தமது எங்கு இருக்கிறார்? எவையெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது?
கேள்விகள்
================
ஆபகூக் 3 = செப்பனியா 1-3
================
1. ஆபகூக் தீர்க்கதரிசி எதில் பாடின விண்ணப்பம்?
2. எவைகள் உம்மைக்கண்டு நடுங்கின? எது பிரவாகித்துக் கடந்துபோயிற்று?
3. நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் யாருக்குள் களிகூருவேன்?
4. யாருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது?
5. கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்கு யார் முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்?
6. எது குடியற்று? எது பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்?
7. யாராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்?
8. அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் எவைகள்? அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான எவைகள்?
9. உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்?
10. அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் எதைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?