கேள்விகள்
===============
ஆகாய் 1 - 2 = சகரியா 1 - 2
=================
1. இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: எவைகளைச் சிந்தித்துப்பாருங்கள்?
2. எந்த ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே இது நடந்தது?
3. ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே எந்த தீர்க்கதரிசியின் மூலமாய், கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று?
4. இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை எதிலே சிந்தித்துப்பாருங்கள்?
5. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை என்னவாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
6.தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய யாருக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை?
7. அப்பொழுது எங்கு நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்?
8. பின்பு கர்த்தர் எனக்கு எவர்களை காண்பித்தார்?
9. இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, யார் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டு வந்தான்?
10. மாம்சமான சகலமானபேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் எங்கிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்?
==============
கேள்விகள் (சகரியா 3 - 7)
===============
1. யார் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்?
2. அப்பொழுது அவர்: யாருக்கு சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்?
3. அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற எதைப் பெற்றவர்கள் என்றார்?
4. நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கையில், இதோ, பறக்கிற எதைக் கண்டேன்?
5. அதற்கு அவர்: எங்கு அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்?
6. நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற எவைகளைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன?
7. தூரத்திலுள்ளவர்கள் வந்து எதைக் கூட இருந்து கட்டுவார்கள்?
8. நீங்கள் இந்த எத்தனை வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்?
9. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் எதை நினையாமலும் இருங்கள் என்றார்?
10. அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் எதைப் பாழாய்ப்போகப்பண்ணினார்கள் என்றார்?
தியான பகுதி
===================
சகரியா 8 - 11 அதிகாரங்கள்
===================
1. நான் எதற்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்?2. இப்போதோ இந்த ஜனத்தில் எவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்?
3. அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே யாரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்?
4. அஸ்தோத்தில் யார் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்?
5. அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட எதில் பதிந்திருப்பார்கள்?
6. பின்மாரிகாலத்து மழையைக் யாரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்?
6. பின்மாரிகாலத்து மழையைக் யாரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்?
7. நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் எதிலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
8. எவர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது?
9. அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த எது அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்?
8. எவர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது?
9. அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த எது அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்?
11. எதைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்?
வேத தியான கேள்விகள்
தியான பகுதி
சகரியா 12 - 14 அதிகாரங்கள்
====================
1. இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எதை தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்?2. 12 ம் அதிகாரத்தில் தாவீது என்ற வார்த்தை முறை எந்தெந்த வசனங்களில் உள்ளது?
3. அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய எதின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்?
4. 12 ம் அதிகாரத்தில் யார் யார் குடும்பங்கள் உள்ளன?
5. அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட எது உண்டாயிருக்கும்?
6. தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற எத்தனை பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்?
7. இதோ, எது வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்?
8. தேசமெல்லாம் எது தொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற எது வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்?
9. பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், எதை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்?
10. அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே என்ன என்று விலாசம் எழுதியிருக்கும்?
9. பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், எதை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்?
10. அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே என்ன என்று விலாசம் எழுதியிருக்கும்?