இன்றைய வேத தியான கேள்விகள்
=======================
மல்கியா 1 - 4 அதிகாரங்கள்
======================
1. மல்கியாவைக்கொண்டு கர்த்தர் யாருக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்?2. இப்போதும் எதை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்?
3. தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற யார் சபிக்கப்பட்டவன்?
4. யாரோடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்?
5. நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் எதைக்குறித்துப் பட்சபாதம்பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்?
6. 2 ஆம் அதிகாரத்தில் *கர்த்தர் சொல்லுகிறார்* என்கிற வார்த்தை எத்தனை முறை எந்தெந்த வசனங்களில் உள்ளது?
7. அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்கு எப்படியிருக்கும்?
8. 3 ஆம் அதிகாரத்தில் *சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்* என்கிற வார்த்தை எத்தனை முறை எந்தெந்த வசனங்களில் உள்ளது?
9. கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் என்ன அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது?
10. இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு யாரை அனுப்புகிறேன்?