கேள்விகள்
===============
யோனா 1 - 4 = மீகா 1 - 2
================
1. நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய எது என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்?
2. அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் எப்படிப்பட்டவன் என்றான்?
3. யோனாவை விழுங்கும்படி எதை கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்?
4. நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் எதை நோக்குவேன் என்றேன்?
5. இந்தச் செய்தி யாருக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்?
6. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத எத்தனை பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்?
7. எது அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்?
8. ஆகையால் யாரிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்?
9. கர்த்தரின் சபையில் எவைகளை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள்?
10. எவைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்?
============
கேள்விகள் (மீகா 3 - 7)
=============
1. யார் வெட்கி, யார் நாணி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்?
2. ஆகையால் உங்கள்நிமித்தம் எது வயல்வெளியைப்போல உழப்பட்டு? எது மண்மேடுகளாய்ப்போகும், ஆலயத்தின் பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போகும்?
3. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; யாருடைய வாய் இதைச் சொல்லிற்று?
4. ஆனாலும் அவர்கள் யாருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்?
5. சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; யாரைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்?
6. செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் எதைச் சரிக்கட்டுவேன் என்றார்?
7. நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, யார் யாரை உனக்கு முன்பாக அனுப்பினேன்?
8. ஆகையால் நான் உன் எதினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்?
9. நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, யாருக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்?
10. அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் எங்கு போட்டுவிடுவார்?