===========
யோவேல் 1 - 3 = ஆமோஸ் 1
===============
1. பச்சைப்புழு விட்டதை எது தின்றது? வெட்டுக்கிளி விட்டதைப் எது தின்றது? பச்சைக்கிளி விட்டதை எது தின்றது?
2. அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள், சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல யாரிடத்திலிருந்து வருகிறது?
4. அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; எவைகள் ஒளி மழுங்கும்?
5. அப்பொழுது கர்த்தர் எதற்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்?
6. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே எது இருளாகவும், எது இரத்தமாகவும் மாறும?
7. யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, யாரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்?
8. யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எது பாழாய்ப்போகும்? எது பாழான வனாந்தரமாகும்?
9. யார் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரமனைகளைப் பட்சிக்கும்?
10. ஆமோஸ் 1 ஆம் அதிகாரத்தில் எந்தெந்த மதிலுக்குள் தீக்கொளுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
==================
ஆமோஸ் 2 - 6 அதிகாரங்கள்
==================
1. யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எவைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
2. வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; எதின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை?
3. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு எதை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்?
4. நான் யாருடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்?
5. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் எதைக்கொண்டு ஆணையிட்டார்?
6. ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் யாரைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு?
7. கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் எங்கு இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும்?
8. நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, எங்கு நியாயத்தை நிலைப்படுத்துங்கள்? ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
9. பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யாருக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்?
10. நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக்கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, எதில் மகிழுகிறார்கள்?
கேள்விகள்
==============
ஆமோஸ் 7 - 9 = ஒபதியா 1
=============
1. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, எதினாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்?
2. எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் யார் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்?
3. இப்போதும், நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; யாருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே? எந்த வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே?
4. அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாருடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்?
5. அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் எதினால் சோர்ந்துபோவார்கள்?
6. இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எந்தப் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்?
7. அந்நாளிலே விழுந்துபோன எதை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்?
8. அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று யார் சொல்லுகிறார்?
9. ஆனாலும் சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; எந்த வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்?
10. ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் எங்கு வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்?