இராத்திரி | சிறுமை | மிருகங்களை கேட்டுப்பார்! | செழித்திருப்பார்கள் | கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் | கர்த்தர் வாசம் செய்யும் இடங்கள் | மெளனம் | பிரயாசப்படுங்கள் | உத்தமத்தின் நன்மை! | உமக்கு ஒப்பானவர் யார்?
===============
தலைப்பு: இராத்திரி
================
அப்போஸ்தலர் 9:25
சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டி கொண்டு கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில் வழியாய் இறக்கி விட்டார்கள்.
இராத்திரி என்ற வார்த்தையை வைத்து இந்தக் குறிப்பை சிந்திக்கலாம். முதலாவது இயேசு இல்லாத இராத்திரி எப்படியிருக்கும். இரண்டாவது இராத்திரி நேரத்தில் ஒரு கேள்வி மூன்றாவது இராத்திரி நேரத்தில் மனந்திரும்பினவன், இராத்திரியில் உங்கள் தீர்மானம் என்ன? இந்த இராத்திரி என்ற வார்த்தையை வைத்து இந்தத் தியானத்தை சிந்தித்து பார்க்கலாம். இயேசு இல்லாத இராத்திரி எப்படியிருக்கும்?
இயேசு இல்லாத இராத்திரி எப்படி இருக்கும்?
1. இயேசு இல்லாத இராத்திரி தோல்வி
யோவான் 21:3
2. இயேசு இல்லாத இராத்திரி மரணம்
தானியேல் 5:30
3. இயேசு இல்லாத இராத்திரி மகா கூக்குரல்
யாத்திராகமம் 12:30
இராத்திரி நேரத்தில் ஒரு கேள்வி?
1. மதிகேடனே உன் ஆத்துமா இந்த இராத்திரியில் எடுத்து கொள்ளப்படும்? நீ என்ன செய்வாய்?
லூக்கா 12:20
இராத்திரியில் நீங்கள் எடுக்கும் தீர்மானம் என்ன?
1. இராத்திரியில் இயேசுவின் மரணத்தை நினைவுக் கூற வேண்டும்.
1 கொரிந்தியர் 11:23
2. இராத்திரி நேரத்தில் துதிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 16:33
பவுலும் சீதாவும்
இராத்திரியில் மனந் திரும்பினவர்கள்
1. இராத்திரி மனத்திரும்பினான் "நிக்கோதேமு"
யோவான் 7:50
2. இராத்திரியில் மனந்திரும்பினவன் சிறைச்சாலைக்காரன்
அப்போஸ்தலர் 16:33
இராத்திரி என்ற வார்த்தையை வைத்து ஒரு தியானத்தைப் பார்த்தோம். இராத்திரியிலே இயேசு இல்லை என்றால் அந்த இராத்திரி எப்படியிருக்கும் என்றும் இராத்திரியிலே உன் ஆத்துமா எடுத்துக்
கொண்டால் என்ன செய்வாய் என்றும், இராத்திரியிலே மனந்திரும்பினவன் யாரென்றும், இராத்திரியிலே நாம் எடுக்க வேண்டிய தீர்மானத்தையும் சிந்தித்தோம். வேதம் சொல்கிறது கிரியையில்லாத இராக்காலம் வருகிறது. யோவான் 9:4 இப்படிப்பட்ட இராத்திரியில் நம் எடுக்கும் தீர்மானங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். இயேசு இல்லாத இராத்திரி நேரத்தையும் , கிரியை இல்லாத இராத்திரியையும் நினைத்துப்பார்க்கும் போது நமக்கு பயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட இராத்திரி நேரம் வரக்கூடாது. இதற்காக நாம் தேவனிடத்தில் இரவும் பகலும் வேண்டிக்கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
================
தலைப்பு: சிறுமை
===================
.. உன்னை நான் சிறுமை படுத்தினேன் இனி உன்னை சிறுமை படுத்தாதிருப்பேன்.
இந்த குறிப்பில் சிறுமை யைக் குறித்து அறிந்துக் கொள்வோம். முதலாவது சிறுமையின் வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும், இரண்டாவது சிறுமை எதற்காக என்பதையும் இதில் சிந்திக்கலாம். சிறுமையை தேவன் ஏன் கொடுக்கிறார், சிறுமை ஏன் வருகிறது என்பதை சிந்திக்கலாம். நம்மை சீர்படுத்துவதற்காக இந்த சிறுமை வருகிறது சிறுமை என்பது கஷ்டம், நெருக்கம் என்று சொல்லலாம்.
புலம்பல் 3:33-ல் அவர் மனப்பூர்வமாக சிறுமை படுத்துவதில்லை.
1 இராஜாக்கள் 11:39-ல் தேவன் நம்மை என்றைக்கும் அந்த சிறுமையிலே விடுவதில்லை தேவ வாக்கு இனி சிறுமைப்படுத்தாமல் இருப்பேன்.
சிறுமை எதற்காக?
1. தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறோமா இல்லையா என்று அறிவதற்காக சிறுமை வருகிறது
உபாகமம் 8:2
உதாரணம்: ஆபிரகாம்
2. நம்முடைய பின் நாட்களில் நமக்கு நன்மையைக் கொடுப்பதற்காக சிறுமை வருகிறது
உபாகமம் 8:15
உதாரணம்: யோசேப்பு, யோபு
3. நாம் திரும்ப தேவனிடம் வருவதற்காகவே சிறுமை வருகிறது
ரூத் 1:21
உதராணம்: இளைய குமாரன்
4. தேவனுடைய கிரியைகளை உணருவதற்காகவே சிறுமை வருகிது
1 சாமுவேல் 1:11
உதாரணம்: அன்னாள், லேயோள்
சிறுமை வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?
1. சிறுமையை அனுபவிக்கும்போது ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 90:15
சங்கீதம் 10:17
உபாகமம் 26:7
நியாயாதிபதிகள் 6:6
உதாரணம்: அன்னாள், எசேக்கியா
2. சிறுமை அனுபவிக்கும்போது கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்
1 சாமுவேல் 30:6
உதாரணம்: தாவீது
3. சிறுமைப்படும்போது தேவனுக்கு தந்தவைகளை சிந்திக்கவேண்டும்
2 கொரிந்தியர் 8:2
4. சிறுமைப்படும்போது கர்த்தரை துதித்து பாட வேண்டும்
சங்கீதம் 34:2
5. சிறுமைப்படும்போது வாக்குத்தத்தங்களை நினைவு கூற வேண்டும்
சங்கீதம் 119:49,50
இந்தக் குறிப்பில் சிறுமையை தேவன் ஏன் கொடுக்கிறார் மற்றும் சிறுமைப் படும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் சிந்தித்தோம். இனி ஆண்டவர் உங்களை சிறுமைப்படுத்தாதிருப்பேன் என்ற வார்த்தையை விசுவாசித்து தேவனிடத்தில் நாம் ஜெபிக்கலாம்
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
=====================
தலைப்பு: மிருகங்களை கேட்டுப்பார்!
====================
யோபு 12:7
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும், ஆகாய்த்து பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
இந்தக் குறிப்பில் மிருகங்களும் பறவைகளும் நமக்கு என்ன போதிக்கிறது என்பதை இதில் சிந்திக்கலாம். வேதம் சொல்வது மிருகங்களை கேட்டுப்பார் அவைகள் உனக்கு போதிக்கும்.
மிருகங்கள், பறவைகள் நமக்கு என்ன போதிக்கிறது?
காகம் என்ற பறவை கர்த்தரை நோக்கி கூப்பிடுகிறது
யோபு 38:41
நாமும் கூப்பிட வேண்டும்
எப்படி கூப்பிட வேண்டும்?
1. இரவும் பகலும் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 88:1
2. முழு இருதயத்துடன் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 119:145
3. மனஞ்சலிக்காமல் கூப்பிட வேண்டும்
ஏசாயா 43:22
4. சத்தத்துடன் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 3:4
ஆடுகள் மேய்ச்சலில் நிறைந்திருக்கும்
சங்கீதம் 65:13
நாமும் ஆடுகள் தான்
சங்கீதம் 100:3
நம் மேய்ச்சல் எது?
வேத வசனமே நமது மேய்ச்சல்
சங்கீதம் 37:3
எப்படி மேய்ய வேண்டும்
1. உள்ளும் புறமும் சென்று மேய்ய வேண்டும்
யோவான் 10:9
2. வாஞ்சையுடன் மேய்ய வேண்டும்
1 பேதுரு 2:3
3. நல்ல மேய்ச்சலை மேய்ய வேண்டும்
எசேக்கியேல் 34:14
எறும்பு காலத்தை பயன்படுத்தும்
நீதிமொழிகள் 6:6-8
நாமும் காலத்தை பயன்படுத்த வேண்டும்
எபேசியர் 5:16
எந்த காலத்தை பயன் படுத்த வேண்டும்?
1. பகற் காலத்தை பயன்படுத்த வேண்டும்
யோவான் 9:4
2. தொழுதுகொள்ளும் காலத்தை பயன் படுத்த வேண்டும்
யோவான் 4:21
3. தேடும் காலத்தை பயன்படுத்த வேண்டும்
ஓசியா 10:12
4. பின் மாரிக்காலத்தை பயன் படுத்த வேண்டும்
சகரியா 10:1
5. செயல்பாடுங் காலத்தை பயன்படுத்த வேண்டும்
எஸ்தர் 12:4
திமிங்கலங்கள் கர்த்தருங்கு காத்திருக்கும்
சங்கீதம் 104:26,27
நாம் எப்படி காத்திருக்க வேண்டும்
1. பொறுமையுடன் காத்திருக்கவேண்டும்
சங்கீதம் 40:1
2. திடமனதுடன் காத்திருக்க வேண்டும்
சங்கீதம் 28:14
3. ஆயுதத்துடன் காத்திருக்கவேண்டும்
சங்கீதம் 5:3
4. விழிப்புடன் காத்திருக்க வேண்டும்
நீதிமொழிகள் 8:34
5. நாள் முழுதும் காத்திருக்கவேண்டும்
சங்கீதம் 25:5
ஆகாயத்து பறவைகள்பாடும்
சங்கீதம 104:12
நாமும் கர்த்தரை பாட வேண்டும்
சங்கீதம் 147:1
எப்படி பாட வேண்டும்?
1 துதியுடன் பாட வேண்டும்
சங்கீதம் 147:7
2. கெம்பீரமாய் பாட வேண்டும்
சங்கீதம் 66:1
3. கருத்துடன் பாட வேண்டும்
சங்கீதம் 47:7
4. ஆவியுடன் பாட வேண்டும்
1 கொரிந்தியர் 14:15
இந்தக் குறிப்பில் மிருகங்கள் பறவைகள் நமக்கு என்ன போதிக்கிறதென்பதை சிந்தித்தோம். இவைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
===================
தலைப்பு: செழித்திருப்பார்கள்
==================
சங்கீதம் 72:16
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும், அதின் விளைவு லிபனோனை போல அசையும், பூமியின் புல்லைப் போல நகரத்தார் செழித்திருப்பார்கள்.
இந்தக் குறிப்பில் யாரெல்லாம் செழித்திருப்பார்கள் என்பதை குறித்து சிந்திக்கலாம்.
எப்படி செழிப்பு வரும்?
கர்த்தரை நம்புகிறவர் கள் செழித்திருப்பார்கள்
நீதிமொழிகள் 28:25
எப்படி கர்த்தரை நம்ப வேண்டும்?
1. கர்த்தரை எப்பொழுதும் நம்ப வேண்டும்
சங்கீதம் 71:14
2. கர்த்தரை என்ன வந்தாலும் நம்ப வேண்டும்
யோபு 13:15
3. கர்த்தரை என்றென்றைக்கும் நம்ப வேண்டும்
ஏசாயா 26:4
4. கர்த்தரை இடைவிடாமல் நம்ப வேண்டும்
ஓசியா 12:6
நீதிமான்கள் செழித்திருப்பார்கள்
சங்கீதம் 92:12
யார் நீதிமான்கள்?
1. கட்டளைகளை கைக்கொள்ளுகிறவர்கள் நீதிமான்கள்
எசேக்கியேல் 18:6-9
2. தன்னை தாழ்த்துகிறவர்கள் நீதிமான்கள்
லூக்கா 18:11-14
3. இயேசுவின் இரத்தத் தால் கழுவப்பட்டவர் கள் நீதிமான்கள்
ரோமர் 5:9
4. அவரை விசுவாசிப்பவர்கள் நீதிமான்கள்
ரோமர் 5:1
5. மக்களுக்காக பாரப்படுபவர்கள் நீதிமான்கள்
2 பேதுரு 2:8
செம்மையானவர்கள் செழித்திருப்பார்கள்
நீதிமொழிகள் 14:11
செம்மையானவர்கள் எப்படி இருப்பார்கள்?
1. செம்மையானவர்கள் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்
சங்கீதம் 112:4
2. செம்மையானவர்கள் கர்த்தரை துதிப்பார்கள்
சங்கீதம் 33:1
3. செம்மையானவர்கள் சுத்தமாயிருப்பார்கள்
நீதிமொழிகள் 21:8
4. செம்மையானவர்கள் தீமையை விட்டு விலகுவார்கள்
நீதிமொழிகள் 16:17
ஆவியானவரை பெற்றவர்கள் செழித்திருப்பார்கள்.
ஏசாயா 32:15
ஆவியானவரை பெற்ற பக்தர்கள் யார்?
1. ஆவியானவரை பெற்ற யோசுவா
எண்ணாகமம் 27:18
யோசுவா 6:27
2. ஆவியானவரை பெற்ற தாவீது
1 சாமுவேல் 16:13
2 சாமுவேல் 23:1,2
3. ஆவியானவரை பெற்ற தானியேல்
தானியேல் 6:2,3,28
4. ஆவியானவரை பெற்ற யோசேப்பு
ஆதியாகமம் 41:38-44
இந்தக் குறிப்பில் யார் செழித்திருப்பார்கள் என்பதைக் குறித்து சிந்தித்தோம். செழித்திருப்பவர்கள் கர்த்தரை நம்புகிறவர்களும், நீதிமான்களும் செம்மையானவர்களும் மற்றும் ஆவியானவரை பெற்றவர்களுமே செழித்திருப்பார்கள்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
===================
தலைப்பு: கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்
===================
சங்கீதம் 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார். அவர் ஆசீர்வதிப்பார், இஸ்ரவேல் குடும்பாத் தாரை ஆசீர்வதிப்பார் அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் குடும்ப குடும்பமாக நினைக்கிறார், ஆசீர்வதிக்கிறார் இந்த குறிப்பில் கர்த்தர் நினைத்தவர்களைக் குறித்து இதில் சிந்திக்கலாம்.கர்த்தர் நினைத்தவர்கள் யார் யாரென்று சிந்தித்து கர்த்தர் நினைக்கும் படியாக அவர்களிடத்தில் காணப்படும் பண்புகள் என்னென்ன என்பதை சிந்திக்கலாம். நாமும் அவரது நினைவுகளின் வட்டத்தில் நல்ல பண்புகளோடு காணப்படுவோம்.
அவர் நம்மை நினைத்தால் என்ன நடக்கும்?
கர்த்தர் நம்மை நினைத்தால் நாம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவோம்
சங்கீதம் 115:12
யார் யாரையெல்லாம் கர்த்தர் நினைத்தார்?
கர்த்தர் ஆபிரகாமை நினைத்தார்
ஆதியாகமம் 19:29
ஆபிரகாமை கர்த்தர் நினைக்க காரணம் என்ன?
1. ஆபிரகாமை கர்த்தர் நினைப்பதற்கு ஆபிரகாம் விசுவாசிப்பவர்
ஆதியாகமம் 15:6
2. ஆபிரகாமை கர்த்தர் நினைப்பதற்கு ஆபிரகாம் விட்டுக் கொடுப்பவர்
ஆதியாகமம் 13:8,9
3. ஆபிகாமை கர்த்தர் நினைப்பதற்கு ஆபிரகாம் பொருளாசை இல்லாதவர்
ஆதியாகமம் 14:22
4. ஆபிரகாமை கர்த்தர் நினைப்பதற்கு ஆபிரகாம் திறப்பில் நின்று ஜெபித்தவர்
ஆதியாகமம் 18:22,32
5. ஆபிரகாமை கர்த்தர் நினைப்பதற்கு ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன்
யாக்கோபு 2:23
கர்த்தர் அன்னாளை நினைத்தார்
1 சாமுவேல் 1:19
அன்னாள் எப்படிப்பட்ட வளாயிருந்தாள்?
1. கர்த்தர் அன்னாளை நினப்பதற்கு அன்னாள் பொருத்தவரை செய்பவள்
1 சாமுவேல் 1:11
2. கர்த்தர் அன்னாளை நினைப்பதற்கு அன்னாள் வெகுநேரம் ஜெபிப்பவள்
1 சாமுவேல் 1:12
3. கர்த்தர் அன்னாளை நினைப்பதற்கு அன்னாள் கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றுபவள்
1 சாமுவேல் 1:15
4. கர்த்தர் அன்னாளை நினைப்பதற்கு அன்னாள் விசுவாசமுள்ளவள்.
1 சாமுவேல் 1:18
கர்த்தர் தாவீதை நினைத்தார்
சங்கீதம் 40:17
ஏன் தாவீதை கர்த்தர் நினைத்தார்?
1. கர்த்தர் தாவீதை நினைப்பதற்கு தாவீது கர்த்தரை துதிப்பவர்
சங்கீதம் 34:1
2. கர்த்தர் தாவீதை நினைப்பதற்கு தாவீது ஜெபிப்பவர்
சங்கீதம் 5:3
3. கர்த்தர் தாவீதை நினைப்பதற்கு தாவீது தியானிப்பவர்
சங்கீதம் 39:1
4. கர்த்தர் தாவீதை நினைப்பதற்கு தாவீது பாவத்தை அறிக்கையிட்டவர்
சங்கீதம் 32:5
5. கர்த்தர் தாவீதை நினைப்பதற்கு தாவீது தேவனை எப்போதும் நம்புபவர்
சங்கீதம் 31:1
6. கர்த்தர் தாவீதை நினைப்பதற்கு தாவீது இரட்சிப்பில் களிகூறுகிறவர்
சங்கீதம் 21:1
கர்த்தர் இஸ்ரவேலின் மக்களை நினைத்தார்
யாத்திராகமம் 2:25
ஏன் அவர்களை நினைத்தார்?
இஸ்ரவேல் ஜனங்கள் பெருமூச்சு விட்டார்கள்
அப்போஸ்தலர் 7:34
யாத்திராகமம் 2:24
நாம் எப்படி பெருமூச்சு விட வேண்டும்?
1. நாம் இடுப்பு நொறுங்கும் படி பெருமூச்சு விட வேண்டும்
எசேக்கியேல் 21:6
2. நாம் மனங்கசந்து பெருமூச்சு விட வேண்டும்
எசேக்கியேல் 21:6
3. அருவருப்புகளைப் பார்த்து பெருமூச்சு விட வேண்டும்
எசேக்கியேல் 9:4
4. ஆவியில் பெருமூச்சு விட வேண்டும்
மாற்கு 8:12
கர்த்தர் குடும்பம் குடும்பமாக நினைக்கிறவர். நினைத்த குடும்பத்தை ஆசீர்வதிக்கிறவர். கர்த்தர் நம்மை நினைப்பதற்கு நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
================
தலைப்பு: கர்த்தர் வாசம் செய்யும் இடங்கள்
===============
சங்கீதம் 132:14
இது என்றென்றைக்கும் நான் நங்கும் இடம். இதை நான் விரும்பினபடியால் இங்கே வாசம்பண்ணுவேன்
கர்த்தர் தாம் விரும்புகிற இடத்தில் தங்குவார் அங்கே வாசம் செய்வார் கர்த்தர் எங்கெல்லாம் வாசம் செய்வார் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்.
கர்த்தர் வாசம் செய்யும்இடங்கள்
1. துதியின் மத்தியில் வாசம் செய்வார்
சங்கீதம் 22:3
2. எங்கே 2 பேர் 3 பேர் கூடும் இடம் அதவாது ஜெபிக்கும் இடத்தில் வாசம் செய்வார்
மத்தேயு 18:20
3. வசனத்தை கைக்கொள்கிறவர் இடத்தில் வாசம் செய்வார்
யோவான் 14:23
4. கேருபீன்கள் அதாவது பரிசுத்தவான்கள் மத்தியில் வாசம் பண்ணுவார்
ஏசாயா 37:16
5. நொருங்குண்ட இருதயம் உள்ளவர் தாழ்மையுள்ளவர்கள் மத்தியில் வாசம் பண்ணுவார்.
ஏசாயா 57:15
6. பிரித்தெடுக்கப்பட்ட மக்களிடத்தில் வாசம் செய்வார்
2 கொரிந்தியர் 6:16,17
7. ஒளியில் வாசம் செய்வார்
1 தீமோத்தேயு 6:16
8. விசுவாசமுள்ளவர் களிடத்தில் வாசம் செய்வார்
எபேசியர் 3:17
கர்த்தர் எங்கெல்லாம் வாசமாய் இருப்பார் என்று மேல் சொன்ன வசனங்கள் வெளிப்படுத்துகிறது. கர்த்தர் தங்கும் இடம் அவர் விரும்பும் இடம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
===========
தலைப்பு: மெளனம்
===========
ஆபகூக் 2:20
கர்த்தரோவென்றால் தமது பரிசுத்தா ஆலயத்தில் இருக்கிறார். பூமி எல்லாம் அவருக்கு முன்பாக மெனமாயிருக்கக்கடவது.
இந்தக் குறிப்பில் மெளனம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இதை சிந்திக்கலாம். நாம் தேவனுக்கு முன்பாக மெளனமாக இருக்க வேண்டும். அப்படியானால் நம் தேவன் எப்படிப்பட்டவர் என்றும், அதே சமயத்தில் நாம் எதில் மெளனமாயிருக்கக் கூடாதென்பதையும் இந்த குறிப்பில் சிந்திக்கலாம்
மெளனமாயிருங்கள்!
1. கர்த்தர் பரிசுத்தர் ஆதலால் மெளனமாகயிருங்கள்.
சகரியா 2:13
2. கர்த்தர் நியாயாதிபதி ஆதலால் மெளனமாகயிருங்கள்
ஆமோஸ் 5:13
3. கர்த்தர் ஆராதனைக்கு பாத்திரர் ஆதலால் மெளனமாயிருஙாகள்
ஆபகூக் 2:20
4. கர்த்தர் வருகிறார். ஆதாலால் மெளனமாயிருங்கள்
செப்பனியா 1:7
5. கர்த்தர் சர்வ ஞானி ஆதலால் மெளனமாயிருங்கள்
புலம்பல் 3:28
6. கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் ஆதலால் மெளனமாகயிருங்கள்
ஆதியாகமம் 24:21
7. கர்த்தர் திருத்துபவர் ஆதலால் மெளனமாகயிருங்கள்
யோபு 6:24
8. கர்த்தர் சர்வ வல்லமையானவர் ஆதலால் மெளனமாகயிருங்கள்
சங்கீதம் 39:9
மெளனமாயிராதே!
1. ஊழியம் செய்ய மெளனமாயிராதே
எஸ்தர் 4:14
2. கர்த்தரை அறிவிக்க மெளனமாயிராதே
எசேக்கியேல் 24:27
3. சாட்சியாக வாழ மெளனமாயிராதே
அப்போஸ்தலர் 18:9
நாம் எப்போது மெளன மாயிருக்க வேண்டும் என்றும் எப்போது மெளனமாயிருக்கக் கூடாதென்பதையும் இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். நாம் மெளனமாயிருந்து நம் தேவன் எப்படிப்பட்டவர் என்ற வெளிப்பாட்டை அறிந்துக்கொண்டோம். அதே சமயத்தில் ஊழியத்திலும், அவரை அறிவிப்பதிலும் மற்றும் சாட்சியாய் வாழ்விலும் மெளனமாயகருக்கக் கூடாதென்பதையும் அறிந்துக் கொண்டோம். நாம் மெளனமாய் அமர்ந்து அவரே தேவன் என்று அறியக்கடவோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
===============
தலைப்பு: பிரயாசப்படுங்கள்
===============
கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.
மேல்கண்ட வசனத்தில் ஸ்திரிகளை முக்கியப்படுத்தாமல் இதில் காணப்படும் பிரயாசம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நாம் எப்படி கர்த்தருக்குள் பிரயாசப்பட வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
கர்த்தருக்குள் பிரயாசப்படுங்கள்!
1. தியாகத்தோடு பிரயாசப்படுவோம்
1 கொரிந்தியர் 4:7
1 தெசலோனிக்கேயர் 2:9
2. தரிசனத்தோடு பிரயாசப்படுவோம்
பிலிப்பியர் 2:14
கலாத்தியர் 4:11
கொலோசெயர் 1:28,29
3. நிந்தை அவமானத்தோடு பிரயாசப்படுவோம்
1 தீமோத்தேயு 4:10
2 கொரிந்தியர் 11:27
2 கொரிந்தியர் 4:17
4. நல்மனசாட்சியோடு பிரயாசப்படுவோம்
அப்போஸ்தலர் 24:16
எபேசியர் 6:8
5. மனதுருக்கத்தோடு பிரயாசப்படுவோம்
அப்போஸ்தலர் 20:24,35
இந்தக் குறிப்பில் பவுல் தமது வாழ்க்கையிலும் ஊழியத்திலும் எப்படி பிரயாசப்பட்டார் என்பதைக் குறித்து சிந்தித்தோம். நாமும்
1 கொரிந்தியர் 11:1, 1 கொரிந்தியர் 15:58ன்படி பவுலை பின்பற்றி பிரயாசப்படுவோம். கர்த்தருக்குள் படுகிறபிரயாசங்கள் விருதவாக போகாது.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==================
தலைப்பு: உத்தமத்தின் நன்மை!
==================
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 84:11
சங்கீதம் 19:13
2 கொரிந்தியர் 4:2
இந்தக் குறிப்பில் உத்தமம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, உத்தமமாய் வாழ்பவர்களுக்கு தேவன் நன்மையை வழங்காதிருக்கமாட்டார் உத்தமத்தால் வரும் நன்மைகளைக் குறித்து சிந்திக்கலாம்.
உத்தமத்தின் நன்மைகள்
1. உத்தமத்தின் நன்மை தேவ வல்லமை
2 நாளாகமம் 16:9
2. உத்தமத்தின் நன்மை தேவ துணை
2 நாளாகமம் 19:11
3. உத்தமத்தின் நன்மை தேவ பாதுகாவல்
நீதிமொழிகள் 2:7
4. உத்தமத்தின் நன்மை தேவ சமாதானம்
சங்கீதம் 37:37
5. உத்தமத்தின் நன்மை தேவன் தரும் வெகுமதி
யாக்கோபு 1:12
உத்தமத்தின் நன்மை என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். ஆதலால் நமது உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
===================
தலைப்பு: உமக்கு ஒப்பானவர் யார்?
====================
எரேமியா 10:6
கர்த்தாவே உமக்கு ஒப்பானவர் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.
இந்தக் குறிப்பில் ஒப்பானவர் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம் கர்த்தர் எதிலெல்லாம் ஒப்பானவர்?
ஒப்பனவர் யார்?
1. பரிசுத்தத்தில் ஒப்பானவர் யார்?
யாத்திராகமம் 15:11
2. வானத்திலும் பூமியிலும் ஒப்பானவர் யார்?
2 நாளாகமம் 6:14
3. ஆகாயமண்டபத்தில் ஒப்பானவர் யார்?
சங்கீதம் 89:6
4. வல்லாமையில் ஒப்பானவர் யார்?
எரேமியா 10:6
5. மன்னிகிறதில் ஒப்பானவர் யார்?
மீகா 7:18
6. உடன்படிக்கையை காக்கிறதில் ஒப்பானவர் யார்?
7. கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானவர் யார்?
ரோமர் 15:5
8. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
யாத்திராகமம் 8:10
இந்தக் குறிப்பில் கர்த்தர் எப்படி எல்லாம் ஒப்பானவர் என்பதைக் குறித்து சிந்தித்தோம் கர்த்தருக்கு ஒப்பானவர் ஒருவருமில்லை தேவனுக்கு நிகரானவர் தேவனே.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur