கர்த்தருடைய மன்னா
தலைப்பு
===========================
மகதலேனா மரியாளுடைய கண்ணீரை உயிர்த்தெழுந்த இயேசு துடைத்தார்
===========================
இன்று: உங்களுடைய கண்ணீரை இயேசு கிறிஸ்து துடைப்பார்
வசன வாசிப்பு
ஆதியாகமம் 23:1,2
1 சாமுவேல் 30:10
1 சாமுவேல் 1:10
லூக்கா 7:15
மாற்கு 9: 24-29
யோவான் 11:32-35
யோவான் 20:13,14,18
1. ஆபிரகாம் கண்ணீரை தேவன் துடைத்தார்
ஆதியாகமம் 23: 1, 2
ஆபிரகாம் தன் மனைவி சாராளுக்காக அவன் அழுதான் ; அவனுடைய கண்ணீரை தேவன் துடைத்து ; அவனுடைய மனைவி சாராளுடைய அடக்க ஆராதனையை தேவன் பொறுப்பேற்றுக் கொண்டார்
2. தாவீது கண்ணீரை தேவன் துடைத்தார்
1 சாமுவேல் 30: 10
தாவீது சிக்லாக் என்கிற இடத்தில் தன்னுடைய மனைவி பிள்ளைகளுக்காகவும், அவனோடு இருந்த 600 பேருடைய மனைவி பிள்ளைகளுக்காகவும், தன் பெலன் போகும் மட்டும் சத்தமிட்டு அழுதான்.
தேவன் தாவீது கண்ணீரை துடைத்து அவனுக்கு அற்புதம் செய்தார்
3. அன்னாளின் கண்ணீரை தேவன் துடைத்தார்
1சாமுவேல் 1: 10
அன்னாள் பிள்ளைக்காக அழுது ஜெபம் பண்ணினாள் ;
தேவன் அவளுக்கு அற்புதம் செய்தார்
4. விதவையின் கண்ணீரை தேவன் துடைத்தார்
லூக்கா 7: 15
நாயீன் என்னும் ஊரில் வாழ்ந்த, விதவையின் கண்ணீரை, தேவன் துடைத்து அவளுக்கு கர்த்தர் அற்புதம் செய்தார்
5. பிள்ளையின் தகப்பனுடைய கண்ணீரை தேவன் துடைத்தார்
மாற்கு 9: 24 - 29
ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்காக அவன் சத்தமிட்டு அழுதான் ; தேவன் அவனுடைய அழுகுரலைக்கேட்டு அவனுக்கு கர்த்தர் அற்புதம் செய்தார்
6. மார்த்தாள் மரியாள் கண்ணீரை தேவன் துடைத்தார்
யோவான் 11: 32 - 35
லாசருக்காக மார்த்தாள் மரியாள் அழுதார்கள் ;
தேவன் அவர்களுடைய கண்ணீருக்கு பதில் தந்து, ஆண்டவர் அவர்களுக்கு அற்புதம் செய்தார்
7. மகதலேனா மரியாளுடைய கண்ணீரை தேவன் துடைத்தார்
யோவான் 20: 13,14,18
மகதலேனா மரியாளுடைய கண்ணீரை உயிர்த்தெழுந்த இயேசு துடைத்தார்
அருமையானவர்களே !
உங்களுடைய கண்ணீரை தேவன் துடைத்து ; அவர் உங்களுக்கு அற்புதம் செய்ய வேண்டுமானால் தேவனுடைய கற்பனைகளையும், பிரமாணங்களையும்; நீதி நியாயங்களையும், நீங்கள் கைக்கொள்ளுங்கள்
அன்று: மகதலேனா மரியாளுடைய கண்ணீரை உயிர்த்தெழுந்த இயேசு துடைத்தார்
இன்று: உங்களுடைய கண்ணீரை இயேசு கிறிஸ்து துடைப்பார்
கர்த்தருடைய மன்னா
தலைப்பு
கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகும்
வசனவாசிப்பு
உபாகமம் 28:4-9
சங்கீதம் 118:5
சங்கீதம் 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்
உங்களுடைய நெருக்கத்தை தேவன் மாற்றுவார் ; விசாலத்தில் தேவன் உங்களைக் கொண்டு வந்து நிறுத்துவார் என்று நீங்கள் அறிக்கையிடுங்கள்
அப்பொழுது கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகும். தேவன் அவருடைய ஜனங்களை அவர் ஆசீர்வதிக்கும்படி விரும்புகிறார். அவரிடத்தில் ஆசீர்வாதத்தையும், விடுதலையையும், சுகத்தையும்,
கேட்கிறவர்கள் அதை இலவசமாக அவரிடத்தில் பெற்றுக்கொள்ளலாம்
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாா்
தேவன் உங்களுடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பாா்
தேவன் உங்களுடைய கைகளின் பிரியாசங்களை
ஆசீர்வதிப்பாா்
ஆனால் கர்த்தருடைய வார்த்தைகளுக்கும்,
அவருடைய கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்
உபாகமம் 28 : 4-9
4. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
5. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
6. நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
7. உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்
8. கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்
9. நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்
அருமையானவர்களே !
தேவன் உங்களுடைய கர்பத்தின் கனி, நிலத்தின் கனி, ஆடு மாடுகளின் பெருக்கம், போக்கையும் வரத்தையும், தேவன் ஆசீர்வதிப்பார்
ஒருவேளை !
உங்களுடைய ஆசீர்வாதத்தை சத்துரு கெடுக்க நிலைத்தால்,
அந்த சத்துரு ஏழு வழியாய் உங்களுக்கு முன்பாக அவைகள் ஒடிப்போகும் என்று ஆவியானவர் சொல்லுகிறார். உங்களுடைய சத்துருக்களை
கர்த்தர் அழிப்பார்
ஆனால் தேவனுடைய கட்டளைகளை கைக்கொண்டு அவருடைய வழிகளில் நீங்கள் நடந்தால் தான்; தேவன் உங்களை ஆசீர்வதிக்க முடியும்...
ஆனப்படியினால் தேவனுடைய கட்டளைகளை உங்களுக்குள் நீங்கள் காத்துக்கொள்ளுங்கள்
அப்பொழுது உங்களுடைய காரியங்கள் கைக்கூடி வரும் ;
கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தை கட்டளையிடுவாராக
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
கர்த்தருடைய மன்னா
தலைப்பு
இயேசுவின் நாமம் விடுதலை தரும் நாமம்
ஏழு விதமான அடிமைத்தனத்திலிருந்து இயேசு கிறிஸ்து இன்று உங்களை அவர் விடுவிப்பார்
வசன வாசிப்பு
எபிரெயர் 10:26
எபிரெயர் 12:14
பரிசுத்தம் என்பது: தேவனால் மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
தேவன் தன்னுடைய பிள்ளைகளை பரிசுத்தப்படுத்த விரும்புகிறார்
தேவன் தன்னுடைய பரிசுத்தத்தையே மனிதனுக்கு பொக்கிஷமாக அவர் தருகிறார்
ஆகவே பரிசுத்தத்தை மனிதன் நேசிக்க வேண்டும்
இயேசு கிறிஸ்து தேவனோடு மனிதனை அவர் ஒப்புவராக்கினார்
கர்த்தருடைய நோக்கத்தை மனிதன் விளங்கிக்கொள்ள வேண்டும்
எபிரெயர் 10: 10
இயேசு கிறிஸ்துவின் சரீரம் பலியிடப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது
எபிரெயர் 13:12
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மனிதனுக்காக சிந்தப்பட்டுள்ளது
எபிரெயர் 10: 26
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை
சத்தியம் மனிதனை அறிவுள்ளவனாக்குகிறது
சத்தியம் மனிதனுக்கு தெளிந்த புத்தியை அது தருகிறது
சத்தியம் மனிதனை பாவத்திலிருந்து அவனை விடுதலை பண்ணுகிறது
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய் பாவஞ்செய்யவே கூடாது
பரிசுத்த ஜீவியம் தான், பரலோக ராஜ்யத்திற்குள் மனிதன் போகும் அனுமதி சீட்டாக இருக்கிறது
எபிரெயர் 12: 14
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே
மனிதனுக்குள் காணப்படும் சில சிறைப்பை நான் உங்களுக்கு காட்டுகிறேன்
1. பாவம்*
2. வியாதி
3. கடன்தொல்லை
4. பண ஆசை
5. பொருளாசை
6. இச்சை
7. மரணம்
ஆகிய ஏழு விதமான சிறையிருப்புகள் மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்று இயேசு கிறிஸ்துதாமே சொல்லியிருக்கிறார்
மேலே உள்ள ஏழு விதமான அசுத்த ஆவிகள் மனிதனை கறைப்படுத்தி, சிறைபிடித்து வைத்திருக்கிறது
சங்கீதம் 14: 7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;
கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான்
பாவம் மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
வியாதி மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
கடன்தொல்லை மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
பண ஆசை மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
பொருளாசை மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
இச்சை மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
மரணம் மனிதனை அது அடிமைப்படுத்துகிறது
இந்த சிறையிருப்பினிமித்தமாக மனிதன் கொடிய துர்க்குணத்தோடு, பிசாசுக்கு அவன் அடிமைப்பட்டுள்ளான்
சங்கீதம் 14: 7
அடிமைத்தனமும், சிறையிருப்பும், மாறினால் தான்
சந்தோஷம் வரும்
மனிதனுடைய சிறையிருப்பு மாற, ஒரே ஒரு வழி மட்டும் தான் மனிதனுக்கு உண்டு
பரிசுத்த ஜீவியத்திற்கு மனிதன் தன்னை ஒப்புக்கொடுத்தால் தான், மனிதனுடைய சிறையிருப்பு மாறும்
எபேசியர் 4: 8
ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்
எபேசியர் 4: 8
இயேசு கிறிஸ்து பூமிக்கு மனிதனாக அவர் இரங்கி வந்து, பிசாசின் சிறையிருப்பிலிருந்து தன்னுடைய பிள்ளைகளை அவர் சிறைப்பிடித்தார்.
இருதயத்தில் பாதிக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் குணமாக்குகிறார்
சரீரத்தில்: வியாதி பெலவீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஜனங்களை கர்த்தர் குணமாக்குகிறார்
இயேசுவின் நாமம், விடுதலை தரும் நாமம், நோய்கள் பேய்கள் பரந்து ஒடும் நாமம் இயேசுவின் நாமம் வியாதிகளை குணமாக்கும் நாமம் என்பதை விசுவாசிக்கிறவர்களை கர்த்தர் இன்று அவர் குணமாக்குகிறார்
இதை வாசிக்கிற சகோதரனே ! சகோதரியே ! உங்களுடைய சிறைப்பை மாற்ற கர்த்தர் வல்லவராக இருக்கிறார். கர்த்தருடைய வசனத்திற்கு அடிமையாக உங்களை ஒப்புக்கொடுங்கள்
இரவும் பகலும் கர்த்தருடைய
வசனத்திற்கு அடிமையாக இருங்கள்
அப்பொழுது உங்களுடைய கண்ணீரை கர்த்தர் துடைப்பார்
உங்களுடைய வாழ்க்கையில் நிறைவான சந்தோஷத்தை கர்த்தர் தருவார்
கர்த்தருக்கு பயந்து அவருடைய கட்டளைகளை நீங்கள் காத்துக்கொள்ளுங்கள்
கர்த்தருடைய மன்னா
தலைப்பு
உண்மையான அன்பு நமக்குள் வெளிப்பட வேண்டும்
வசனவாசிப்பு
மாற்கு15: 47
ரோமர் 6: 5
மத்தேயு 28: 9
மாற்கு15: 47
இயேசு கிறிஸ்து மரித்து ஒரு கல்லறையில் தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டாா். அவரை அடக்கம் பண்ணும்போது இரண்டு ஸ்திரீகள் மட்டும் தான் அதை பார்த்தார்கள்
மாற்கு 16:1
1. மகதலேனா மரியாள்
2. சாலோமே
3. யாக்கோபின் தாயாகிய மரியாள்
யோவான்20: 1
மூன்று ஸ்தீரிகளும் இணைந்து, அதிகாலையில், அதிக இருட்டோடு , மரித்துப்போன இயேசுவைத்தேடி கல்லறைக்குப்போனார்கள்
செத்துப்போன இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின்மீது இவர்கள் பாசம் வைத்தாா்கள். ஒரு உண்மையான அன்பு; இவர்கள் மூவருக்குள்ளும் வெளிப்பட்டது. இந்த மூன்று ஸ்தீரிகளுடைய விசுவாசத்தையும், அன்பையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்
பொதுவாக நாம் எல்லாரும், ஏதோ ஒரு விதத்தில், லாபத்திற்காக தான்,
இயேசு கிறிஸ்துவை தேடிக்கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்து எனக்கு நன்மை செய்வார் என் பிள்ளைக்கு நன்மை செய்வார், என் தேவைகள் சந்திக்கப்படும், எனக்கு வீடு கிடைக்கும், சொத்து கிடைக்கும்,
கார் பங்களா கிடைக்கும், எல்லாவற்றையும் கர்த்தர் எனக்காக செய்து கொடுப்பார், என்கிற ஒரு லாப நோக்கத்தோடு தான் இயேசுவை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மகதலேனா மரியாள், சலோமே இன்னொரு மரியாள், ஆகிய மூவரும் லாபத்துக்காக, வியாபார நோக்கத்தோடு இயேசுவை அவர்கள் தேடவில்லை
அருமையானவர்களே!
மரித்துப்போன இயேசுவை தேடி, அவருடைய சரீரத்தை, கனம்பண்ணி, சுகந்தவர்க்கமிட, மூன்று ஸ்திரீகள் அதிகாலையிலே, அதிக இருட்டோடு இயேசுவை அடக்கம் பண்ணின கல்லறையை நோக்கி புறப்பட்டு போனார்கள். மரித்துப்போன இயேசுவால் இவர்களுக்கு என்ன லாபம்?
எந்த லாபமும் கிடையாது!
உயிரோடு இருக்கிற இயேசுவை அவர்கள் தேடிப் போனாள், அவரால் இந்த மூன்று ஸ்திரீகளுக்கும் லாபம் கிடைத்திருக்கும் ஆனால் மரித்துப் போய், மூன்று நாட்கள் ஆனப்பிறகு இயேசுவை இவர்கள் கனம் பண்ண, ஒரு மனப்பட்டார்கள். மன தைரியத்தோடு புறப்பட்டுப் போனார்கள்
மூவரும் மிகவும் உறுதியாக, அவருடைய சரீரத்தை கனம்பண்ண,வேண்டும் என்று ஒருவரோடு ஒருவா் பேசிக்கொண்டே போனாா்கள். கல்லறையின் மீது வைக்கப்பட்டிருந்த பெரிய கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவார்கள் என்றும், பேசிக்கொண்டே கல்லறை நோக்கி போனார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம்
ஆகவே மரித்துப்போன இயேசு தான் இவர்களுக்கு தேவை அவர் அற்புதம் செய்ய வேண்டாம் எனக்கு நன்மை செய்ய வேண்டாம். என்னுடைய குடும்பத்திற்கு நன்மை செய்ய வேண்டாம், அவரால் எனக்கு எந்த லாபம் வேண்டாம் , அவருடைய மரித்துப்போன சரீரம்தான் எனக்கு தேவை, மரித்துப்போன இயேசு தான் எனக்கு தேவை அவருடைய மரித்துப்போன சரீரத்தை நாங்கள் கனம் பண்ணுவோம் என்கிற வாஞ்சையோடு காணப்பட்டாா்கள்
அவரால் எங்களுக்கு எந்த லாபமும் வேண்டாம், அவருடைய மரித்த சரீரம் தான் எங்களுக்கு வேண்டும்.
அந்த மூன்று ஸ்தீரிகளின் இருதயத்தின் எண்ணத்தை ஆவியானவா் உங்களுக்கு வெளிப்படுத்துகிறாா்
இது தான் ! இவர்களுடைய உறுதியான எண்ணமாக இருந்தது. அவா்கள் மூவரும் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டவா்கள் அவா்கள் மூவரும் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டவா்கள்
ரோமர் 6: 5
ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
பிரியமானவா்களே!
நம்மை அந்த மூன்று ஸ்தீரிகளோடு, நாம் ஒப்பிட்டுப் பார்த்தால்,
நம்முடைய இருதயம்
உயிர்த்தெழுந்த
இயேசுவை மாத்திரம் தான், தேடிக்கொண்டிருக்கிறது
ஆகவே
நாம் லாபத்துக்காக தான் இயேசுவை தேடிக்கொண்டிருக்கிறோம்
வியாபார எண்ணத்தோடு இயேசுவை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்
பிலிப்பியர் 3: 8
நமக்கு லாபமாக இருக்கிற உலக காரியத்தை *நஷ்டமென்று* கர்த்தருக்காக விட்டுவிடவேண்டும்
லாபத்துக்காக இயேசுவை நாம் தேடக்கூடாது அப்படி லாபத்திற்காக இயேசு கிறிஸ்துவை நாம் தேடினால் பரலோக ராஜ்யத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. மரித்துப்போன இயேசு கிறிஸ்துவை கனம்பண்ண மூன்று ஸ்திரீகள் ஒருமனப்பட்டாா்கள் அவர்களை போல நாமும் மாற வேண்டும்
ஊழியர்களும் லாபத்திற்காக தான் இயேசுவை தேடிக்கொண்டிருக்கிறார்கள். விசுவாசிகளும் கூட லாபத்துக்காக மாத்திரமே இயேசுவை தேடிக்கொண்டிருக்கிறார்கள்
பிரியமானவர்களே!
மரித்துப்போன இயேசுவை நாம் தேடி அவரை கனம் பண்ணி,
அவரை வணங்க வேண்டும் என்கிற வாஞ்சை நமக்கு இருக்கிறதா! இல்லை. அந்த மூன்று ஸ்தீரிகள் நம்மைப்பாா்த்து ஒரு கேள்வி கேட்டால், நாம் என்ன பதில் அவா்களுக்கு சொல்ல முடியும். நாங்கள் லாபத்திற்காக இயேசுவை தேடிவில்லை, அவா் மரித்துவிட்டாா், அதிகாலையில் அதிக இருட்டோடு, அவருடைய மரித்த சரீரத்தை கனம்பண்ண நாங்கள் புறப்பட்டு போகிறோம்,
ஆனால் நீங்கள்: அவா் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்துவிட்டாா்,
அவா் உயிரோடு இருக்கிறாா். எதாவது அவா் உங்களுக்கு நன்மை செய்வாா் என்கிற நோக்கத்தோடு, லாபத்திற்காக அவரை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அவா்கள் நம்மைப்பாா்த்து கேள்வி கேட்டால் அருமையான சகோதரனே, சகோதரியை, நீ அவா்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய்.
நீ என்னை தேடிகிறாய், நீ என்னுடைய பிள்ளை தான், நான் உனக்கு அதிசயம் செய்யவேண்டும், உன் கண்ணீரை நான் துடைக்கவேண்டும், இது தானே உன் ஜெபமும் ஏக்கமும், இம்மைக்காக மாத்திரமே நீ என்னை தேடுகிறாய். என்னை விசுவாசிக்க மட்டும், உன்னை நான் அழைக்கவில்லை, என்னிமித்தம் உனக்கு பாடுகளும் உண்டு உலகத்தில் உபத்திரம் உண்டு, ஆனால் திடன்கொள், கர்த்தராகிய நான் உலகத்தை ஜெயித்தேன்
அந்த மூன்று ஸ்திரிகளும் இயேசு கிறிஸ்துவின் மரணத்தில் பங்கு உள்ளவா்கள் என்பது கர்த்தருடைய மன்னாவில் ஆவியானவா் உறுதிப்படுத்துகிறாா்
மத்தேயு 28: 9
இயேசு உயிர்தெழுந்தப்பிறகு அவா்களை தேடி, அவரே வந்தாா்
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர்
பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள்.
அந்த மூன்று ஸ்திரீகளுக்கும் என்ன ஒரு ஆசீர்வாதம் கிடைத்தது என்று மேலே இருக்கிற வேதப்பகுதியை படித்துப்பாருங்கள்
அந்த ஸ்திரீகள் இயேசுகிறிஸ்துவின் அருகில் போனாா்கள், அவா் அருகில் போனவுடன் அவருடைய பாதங்களை *கைகளால் தழுவிப்பாா்த்தாா்களாம். இப்படி ஒரு பாக்கியத்தை அவா்கள் பெற்றுக்கொண்டாா்கள். அவா்களுக்கு கிடைத்த சந்தோஷம், லாபம் எல்லாமே இது தான் அந்த ஸ்திரிகள்
இயேசு கிறிஸ்துவின் பாதங்களை தடவிப்பாா்த்து, அவரை பணிந்துக் கொண்டாா்கள்
அவா் உயிர்தெழுந்தப்பிறகும் அவா்கள் இயேசுவிடம் எதையுமே கேட்கவில்லை. அவருடைய பாதங்களை தழுவி, அவரை பணிந்துக்கொண்டாா்கள்.
இந்த மாதிரி அன்பை தான் கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பாா்க்கிறாா். நம்முடைய இருதயத்தை கர்த்தர் அறிந்திருக்கிறாா்
நம்முடைய குறைகளை நாம் கர்த்தரிடத்தில் அறிக்கையிடுவோம்
கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்துவாராக தேவனுக்கே மகிமை கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
இயேசுவைப்போல மாற வாஞ்சியுங்கள் பரிசுத்த ஜீவியத்தை காத்துக்கொள்ளுங்கள்
கர்த்தருடைய மன்னா
தலைப்பு
மனிதனை பூரணப்படுத்தவே இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார்
வசனவாசிப்பு
எபிரேயர் 10: 14
எபிரேயர் 9: 12
எபிரேயர் 10: 14
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்
பிரியமானவர்களே !
பெத்லகேமில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு மனிதனைக்குறித்து ஒரு நோக்கம் உண்டு
அந்த நோக்கம் என்ன?
மனிதனை பூரணப்படுத்தவே இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார்
ஆம்! பிரியமானவர்களே!
இயேசு கிறிஸ்துவின் பலி நம்மை என்றென்றைக்கும் பூரணப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. மனிதனை தேவன் பரிசுத்த அழைப்பினால் அவர் அழைக்கிறார். அழைக்கப்பட்ட மனிதனுக்கு தேவன் தன்னுடைய நீதியை அவர் வெளிப்படுத்துகிறார். ஆவிக்குரிய தரிசனம் வெளிப்பாடுகளை மனிதன் தேவனிடத்தில் அவன் பெற்றுக்கொள்ளும்போது..
ஆவியானவருடைய வல்லமையான செயல்கள் மனிதனுக்குள் ஆரம்பமாகுகிறது.
பரிசுத்த ஆவியினால் மனிதன் பெலப்படுகிறான். உள்ளான மனிதன் நாளுக்கு நாள் மனிதனுக்குள் புதிதாக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கும், தேவனுடைய வசனத்திற்கும், மனிதன் தன்னை பூரணமாக ஒப்புக்கொடுக்கும்போது. தேவனுடைய பிரமாணத்தை மனிதன் கைக்கொள்ள ஆரம்பிக்கிறான்.
இதுவே மனிதனை பூரணத்திற்கு நேராக வழிநடத்துகிறது. இயேசுவின் பலியினிமித்தமாக மனிதன் பூரணப்படுகிறான்
பிரியமானவர்களே!
எபிரேயர் 9: 12
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை (இயேசு மனிதனுக்கு) உண்டுபண்ணினார்
ஆனப்படியினால் இயேசுவின் சிலுவையின் அண்டையில் நாம் காணப்படுவோமாக இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக அவர் தன்னுடைய சொந்த இரத்ததத்தை சிந்தினார்
ஆம்! பிரியமானவர்களே!
பெத்லகேமில் பிறந்த இயேசு. கொல்கதா மலையில் நமக்காக அவர் பலியானார். அவருடைய பரிசுத்த பலியின் மேன்மையை நாம் விளங்கிக்கொண்டு. இந்த கிறிஸ்துமஸ் நாளில் நம்மை நாம் பூரணமாக சுத்திகரித்துக்கொள்வோம்
அருமையானவர்களே!
தேவன் நமக்கு ஒரு ராஜ்யத்தை அவர் வைத்திருக்கிறார். தேவராஜ்யத்தைப்பற்றி அவருடைய பரிசுத்தவான்களுக்கு தேவன் வெளிப்பாடுகளை அவர்தாமே தந்திருக்கிறார்
எபிரேயர் 12: 28
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்
நம்மை அழைத்த தேவன் பரிசுத்தராக இருக்கிறார். நமக்காக சிலுவை மரத்தில் தன்னுடைய ஜீவனை கொடுத்த தேவன் பரிசுத்தராக இருக்கிறார். அவருடைய பலியினிமித்தம் இன்று நாம் பூரணப்படுவோம் என்கிற விசுவாசத்தை ஆவியானவர்தாமே நமக்கு அவர் சொல்லிக் கொடுத்துள்ளார்
இப்பொழுது, நாம் கற்றுக்கொண்ட சத்தியத்திற்கு உண்மையாக நாம் ஜீவிப்போமாக இயேசுவைப்போல பரிசுத்தமாக நாமும் ஜீவிப்போமாக ஆவியானவர்தாமே நமக்கு அவர் உதவிசெய்வாராக.
என்னுடைய முகவரி
நம்பர் 66 மேட்டு தெரு, புழல்
சென்னை - 600066
இந்தியா தமிழ்நாடு
My address
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
ஜெப உதவிக்கு :
pr . Jeevan 9840593839