நமக்காக கிறிஸ்து | கிருபையின் ஐசுவரியம் | எம்மாத்திரம் | உன் ஊழியத்தை நிறைவேற்று | ஆவிக்கேற்ற பலிகள் | கர்த்தர் ஆசீர்வதிப்பார்
=============
தலைப்பு: நமக்காக கிறிஸ்து
==============
2 கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்
இந்தக் குறிப்பில் நமக்காகவே கிறிஸ்து என்பதைக் குறித்து அறிந்துக்கொள்வோம் நமக்காக கிறிஸ்து எப்படியெல்லாம் இருந்தார் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. கிறிஸ்து நமக்காக மாம்சமானார்
யோவான் 1:14
2. கிறிஸ்து நமக்காக ஸ்திரீயின் வித்தானார்
கலாத்தியர் 4:4,5
3. கிறிஸ்து நமக்காக தாவீதின் சந்ததி ஆனார்
ரோமர் 1:5
4. கிறிஸ்து நமக்காக மனுஷர் சாயலானர்
பிலிப்பியர் 2:7
5. கிறிஸ்து நமக்காக வெறுமையானார்
பிலிப்பியர் 2:7
6. கிறிஸ்து நமக்காக தேவதூதரிலும் சிறியவனானார்
எபிரெயர் 2:7
7. கிறிஸ்து நமக்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழானார்
கலாத்தியர் 4:4,5
8. கிறிஸ்து நமக்காக சாபமானார்
கலாத்தியர் 3:13
9. கிறிஸ்து நமக்காக பாவமானார்
2 கொரிந்தியர் 5:21
10. கிறிஸ்து நமக்காக பலியானார்
எபிரெயர் 5:2
11. கிறிஸ்து நமக்காக ஜீவன் கொடுத்தார்
1 யோவான் 3:16
12. கிறிஸ்து நமக்காக பரிந்துறைப்பானர்
ரோமர் 8:34
இந்தக் குறிப்பில் கிறிஸ்து நமக்காக எப்படியெல்லாம் இருந்தார் என்பதை அறிந்துக் கொண்டோம். கிறஸ்துவைக் குறித்து என்ன நினைக்கிறாய்? இந்தக் கேள்விக்கு கிறிஸ்து நமக்காக இப்படி எல்லாம் இருந்தார் என்பதை நினைவுகூறவேண்டும்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
===============
தலைப்பு:கிருபையின் ஐசுவரியம்
==============
எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
இந்தக் குறிப்பில் கிருபையின் ஐசுவரியத்தைக் குறித்து அறிந்துக் கொள்வோம். குறிப்பாய் நம் இரட்சிப்பின் பூரண திட்டத்தில் கிருபையின் ஐசுவரியத்தின் மகத்துவத்தை நாம் விளங்கிக்கொள்வோம்.
1. நம் தெரிந்து கொள்ளப்படுதலில் கிருபையின் ஐசுவரியம்
கலாத்தியர் 1:15
2. நம் இரட்சிக்கபடுதலில் கிருபையின் ஐசுவரியம்
ரோமர் 5:20,21
3. நம் பாவமன்னிப்பில் கிருபையின் ஐசுவரியம்
எபேசியர் 1:7
4. நம் அனுதின பரிசுத்தமாகுதலில் கிருபையின் ஐசுவரியம்
1 கொரிந்தியர் 15:10
5. நம் ஊழிய பாதையில் கிருபையின் ஐசுவரியம்
எபேசியர் 3:8
யாக்கோபு 4:6
6. நம் பெலவீனத்தில் கிருபையின் ஐசுவரியம்
2 கொரிந்தியர் 12:9
7. நம் மகிமைபடுதலில் கிருபையின் ஐசுவரியம்
எபேசியர் 2:6,7
எபேசியர் 3:19
8. நம் அனைத்திலும் (பூரணத்திலும்) கிருபையின் ஐசுவரியம்
யோவான் 1:16,17
இந்தக் குறிப்பில் கிருபையின் ஐசுவரியத்தைக் குறித்து நாம் அறிந்துக்கொண்டோம். நம் இரட்சிப்பின் பூரண திட்டத்தில் கிருபையின் ஐசுவரியத்தை நாம் அறிந்துக்கொண்டோம். தேவ கிருபையில்லையே ஒன்றுமில்லை. நம் தேவன் கிருபையில் ஐசுவரிமுள்ளத் தேவன்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
============
தலைப்பு:எம்மாத்திரம்
=============
1 சாமுவேல் 18:18
அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்
இந்தக் குறகிப்பில் நாம் எம்மாத்திரம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை கவனிக்கலாம். இந்த எம்மாத்திரம் என்ற வார்த்தை தாழ்மையாய் பேசுகிற வார்த்தை. சிலர் தம்மை தாழ்த்துவதுப்போல பெருமை பேசுவார்கள். இந்த எம்மாத்திரம் என்ற வார்த்தையை வேதத்தில் சொன்னவர்கள் யார் யாரென்றும் எந்த சூழ்நிலையில் இந்த வார்த்தையை சொன்னார்கள் என்று இதில் சிந்திக்கலாம்
1. மோசே
இஸ்ரவேல் புத்திரரை அழைத்து வர நான் எம்மாத்திரம்
யாத்திராகமம் 3:11
2. தாவீது
இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம்
1 சாமுவேல் 17:26
3. பர்சிலா
நான் உயிரோடிருக்கும் என் ஆயுசு நாட்கள் எம்மாத்திரம்
2 சாமுவேல் 19:34
4. சாலமோன்
நான் கட்டின ஆலயம் எம்மாத்திரம்
1 இராஜாக்கள் 8:27
5. ஆசகேல்
நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம்
2 இராஜாக்கள் 8:13
6. மோவிபோசேத்
செத்த நாயைப் போலிருக்கிற உமது அடியான் எம்மாத்திரம்
2 சாமுவேல் 9:8
7. யோபு
காத்துக் கொண்டிருக்கிற பெலன் எம்மாத்திரம்
யோபு 6:11
8. ஆந்திரேயா
அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்
யோவான் 6:9
9. அப்போஸ்தலனாகிய பேதுரு
தேவனை தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம்
அப்போஸ்தலர் 11:17
10 கர்த்தர்
கோதுமைக்கு முன் பதிர் எம்மாத்திரம்
எரேமியா 23:28
இந்தக் குறிப்பில் எம்மாத்திரம் என்ற வார்த்தையை சொல்லியது யார்
என்றும் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை நாம் கவனித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
=================
தலைப்பு: உன் ஊழியத்தை நிறைவேற்று
==================
2 தீமோத்தேயு 4:5
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவுக்கு சொன்ன ஊழிய ஆலோசனையை மேல் சொன்ன வசனத்தில் நாம் கவனித்தோம். இந்தக் குறிப்பில் உன் ஊழியத்தை நிறைவேற்று என்ற வார்த்தையில் ஊழியத் நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை கவனிக்கப்போவதில்லை. நாம் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நமக்கு ஏற்படும் தடைகளை இந்தக் குறிப்பில் வேத வசனத்தின் மூலம் நாம் சிந்திக்கலாம்.
1. சரீர சுகவீனத்தால் ஏற்படும் தடையால் ஊழியத்தை நிறைவேற்ற முடியவில்லை.
1 தீமோத்தேயு 5:23
2. மனதின் சோர்வினால் ஏற்படும் தடையால் ஊழியத்தை நிறைவேற்று முடியவில்லை
1 இராஜாக்கள் 19:4
3. அவிசுவாசத்தினால் ஏற்படும் தடையால் ஊழியத்தை நிறை வேற்ற முடியவில்லை
யாத்திராகமம் 3:10
4. அதைரியத்தினால் ஏற்படும் தடையால் ஊழியத்தை நிறைவேற்ற முடியவில்லை
எரேமியா 1:5
5. அபிஷேகத்தை அலட்சியம் செய்வதால் ஏற்படும் தடையால் ஊழியத்தை நிறைவேற்ற முடியவில்லை
நியாயாதிபதிகள் 16:6
6. தேவனைவிட்டு வழிவிலகச் செய்யும் தடையால் ஊழியத்தை நிறைவேற்ற முடியவில்லை
யோனா 1:3
7. தேவ ஊழியர்களை விட்டுப் பிரிந்து போகும் தடையால் ஊழியத்தை நிறை வேற்ற முடியவில்லை
2 தீமோத்தேயு 4:10
உன் ஊழியத்தை நிறைவேற்று என்று வேதம் நமக்கு சொல்கிறது. ஆனால் ஊழியத்தை நிறை வேற்ற முடியாதபடிக்கு ஏழுவிதமான ஊழிய தடைகளை மேல் சொல்லப்பட்ட வசனத்தின் மூலம் நாம் கவனித்தோம்.மேல் சொல்லப்பட்ட ஊழியர்கள் எலியா, மோசே, எரேமியா, சிம்சோன், யோனா, போன்றவர்கள் தமது ஊழியத்தை நிறைவேற்ற முடியாத படிக்கு அவர்களது ஊழியத்தின் தடைகளைத் கவனித்தோம். நாம் நமது ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு இப்படிப்பட்ட தடையில் இருந்து விலகி நாம் நமது ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும் ஒவ்வொரு நாளும் நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை நிறை வேற்றுவதில் அதிக கவனத்தோடு, விழிப்போடு ஜாக்கிரதையாக ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும். கர்த்தர் உங்கள் ஊழியத்தை நினைத்து ஆசீர்வதிப்பார்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
============
தலைப்பு: ஆவிக்கேற்ற பலிகள்
===============
1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைக் போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியன் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
இந்தக் குறிப்பில் ஆவிக்கேற்ற பலிகள் என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
1. ஆவிக்கேற்ற பலி தேவனுக்கு பிரியமான ஜீவபலி
ரோமர் 12:1
2. ஆவிக்கேற்ற பலி உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலி
எபிரெயர் 13:15
3. ஆவிக்கேற்ற பலி உங்கள் விசுவாசமாகிய பலி
பிலிப்பியர் 2:17
4. ஆவிக்கேற்ற பலி நன்மை செய்வதும் தானதர்மமாகிய பலி
எபிரெயர் 13:16
5. ஆவிக்குரிய பலி பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்படும் கானிக்கையாகிய பலி
பிலிப்பியர் 4:18
6. ஆவிக்கேற்ற பலி பொருத்தனை பலி
எண்ணாகமம் 15:8
7. ஆவிக்கேற்ற பலி உற்சாக பலி
ஆமோஸ் 4:5
எண்ணாகமம் 15:3
இந்தக் குறிப்பில் ஆவிக்கேற்ற பலிகள் என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இப்படிப்பட்ட பலிகளை தேவனுக்கு செலுத்தி பரிசுத்த ஆசாரிய கூட்டமாக தேவனுடைய பார்வையில் நாம் காணப்படுவோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
=================
தலைப்பு: கர்த்தர் ஆசீர்வதிப்பார்
==================
சங்கீதம் 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார் இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார் அவர் ஆரோன் குடும்பாத்தாரை ஆசீர்வதிப்பார்.
இந்தக் குறிப்பில் ஆரோன் குடும்பம் இஸ்ரவேல் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் என்பதை அறிந்திருக்ககிறோம். யார் யாரை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்பதையும், கர்த்தர் ஆசிர்வதித்தின் காரணத்தையும் இதில் அறிந்துக்கொள்வோம்.
ஏன் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார்?
ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்
எண்ணாகமம் 24:1
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யார்?
கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்ட "ஆபிரகாம்"
ஆதியாகமம் 24:35
=========================
கர்த்தர் ஆபிராகமை ஏன் ஆசீர்வதித்தர்?
1. ஆபிரகாம் உண்மையுள்ளவர்
நெகேமியா 9:7,8
2. ஆபிரகாம் விசுவாசமுள்ளவர்
ஆதியாகமம் 15:6
3. ஆபிரகாம் தேவனுக்கு சிநேகிதன்
யாக்கோபு 2:23
4. ஆபிரகாம் விட்டுக்கொடுப்பவர்
ஆதியாகமம் 13:8,9
5. ஆபிரகாம் திறப்பில் நிற்பவர்
ஆதியாகமம் 18:22-32
கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்ட "ஈசாக்கு"
ஆதியாகமம் 26:29
===========================
கர்த்தர் ஈசாக்கை ஏன் ஆசீர்வதித்தார்?
1. ஈசாக்கு தியானிப்பவர்
ஆதியாகமம் 25:63
2. ஈசாக்கு தொழுதுகொள்பவர்
ஆதியாகமம் 26:25
3. ஈசாக்கு ஜெபிப்பவர்
ஆதியாகமம் 25:21
4. ஈசாக்கு விசுவாசமுள்ளவர்
எபிரெயர் 11:20
கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்ட "சாமுவேல்"
1 சாமுவேல் 15:13
=======================
கர்த்தர் சாமுவேலை ஏன் ஆசீர்வதித்தார்
1. சாமுவேல் இடைவிடாமல்ஜெபிப்பவர்
1 சாமுவேல் 15:11
2. சாமுவேல் கர்த்தரின் குரலைக் கேட்டவர்
1 சாமுவேல் 3:4-10
3. சாமுவேல் கர்த்தரின் சந்நிதியில் வளர்ந்தவர்
1 சாமுவேல் 2:21
4. சாமுவேல் பொருளாசை இல்லாதவர்
1 சாமுவேல் 12:4
5. சாமுவேல் ஆத்தும பாரமுள்ளவர்
1 சாமுவேல் 15:35
கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்ட "தாவீது"
1 சாமுவேல் 26:25
==========================
கர்த்தர் தாவீதை ஏன் ஆசீர்வதித்தார்?
1. தாவீது கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவன்
அப்போஸ்தலர் 13:22
2. தாவீது கர்த்தரின் சித்தத்தின்படி ஊழியம் செய்தவர்
அப்போஸ்தலர் 13:36
3. தாவீது எப்பொழுதும் கர்த்தரை துதிப்பவர்
சங்கீதம் 34:1
4. தாவீது கர்த்தரை எப்பொழுதும் தமக்கு முன் வைத்தவர்
அப்போஸ்தலர் 2:25
5. தாவீது கர்த்தரையே நம்பியிருந்தவர்.
சங்கீதம் 71:14
கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்ட "மரியாள்"
லூக்கா 1:28
==========================
கர்த்தர் மரியாளை ஏன் ஆசீர்வதித்தார்?
1. மரியாள் மிகவும் தாழ்மையுள்ளவர்
லூக்கா 1:48
2. மரியாள் கர்த்தரை மகிமைபடுத்துகிறவர்
லூக்கா 1:46
3. மரியாள் தேவனுக்கு அடிமையானவர்
லூக்கா 1:38
4. மரியாள் உதவி செய்பவர்
லூக்கா 1:39,56
5. மரியாள் கிருபை பெற்றிருந்தவர்
லூக்கா 1:30
கர்த்தர் எல்லா குடும்பங்களையும் ஆசீர்வதிக்கிறவர் என்றும், கர்த்தர் யார் யாரை ஆசீர்வதித்தார் என்றும் , எதற்காக அவர்களை ஆசீர்வதித்தாரென்பதையும் இதில் சிந்தித்தோம். கர்த்தர்
உங்கள் குடும்பத்தையும், ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஏன் என்றால் எல்லாக் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதே அவருக்கு பிரியம் !
ஆமென்!
S. Daniel Balu
Tirupur