பிதாக்களே | பஸ்கா பண்டிகை! | ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது | சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள் | எட்டாம் மாதத்தில் புதிய காரியம் செய்யும் தேவன் | உன் வேண்டுதல் என்ன? | ராஜாவுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் | பாக்கியமுள்ள கழுதை | இயேசுவின் உயிர்த்தெழுதலை தடுக்க முடியாத கல் |
============
தலைப்பு: பிதாக்களே
=============
1. பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாகஎபேசியர் 6:4
2. உன் மகனைச் சிட்சைசெய்
நீதிமொழிகள் 19:18
நீதிமொழிகள் 29:17
நீதிமொழிகள் 3:12
3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து
நீதிமொழிகள் 22:6
4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து
உபாகமம் 6:6-7
நீதிமொழிகள் 19:18
நீதிமொழிகள் 29:17
நீதிமொழிகள் 3:12
3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து
நீதிமொழிகள் 22:6
4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து
உபாகமம் 6:6-7
5. தன் இஷ்டத்திற்கு பிள்ளைகளைக் விடாதிரு
நீதிமொழிகள் 29:15
6. பிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்
மத்தேயு 19:13,14
7. உங்கள் பிள்ளைகளுக்குக் கோபமூட்டாதிருங்கள்
கொலோசெயர் 3:21
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
==============
தலைப்பு: பஸ்கா பண்டிகை!
===============
லேவியராகமம் 23:4,5
யாத்திராகமம் 12:1-23;
உபாகமம் 16:1-3
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான அந்த நாளில்தானே இஸ்ரவேலரால் எகிப்து தேசத்தில் ஆசரிக்கப்பட்டது. இது முதலாம் மாதம் 14-ம் தேதி (யாத்திராகமம் 12:6). கர்த்தர் ஒரு இரட்சகனை எழும்பப் பண்ணினார். அவர் பெயர் மோசே. எகிப்தின் மேல் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பாக ஒன்பது வாதைகள் வந்து இறங்கின. (யாத்திராகமம் 7-11 அதிகாரங்கள்). பஸ்கா பண்டிகையானது, கடைசி வாதையாகிய எகிப்தில் தலைப்பிள்ளை சங்காரத்திற்கு முன்பு இஸ்ரவேலர் ஆசரித்தார்கள்.
1. புதிய ஆரம்பம்: (யாத்திராகமம் 12:2)
இஸ்ரவேலருக்கு ஒரு புதிய நாள்காட்டி, காலண்டர் ஆரம்பமானது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம். அப்படியே நாம் மறுபடியும் பிறக்கும்போது எல்லாம் புதிதாகிறது. புதிய ஆரம்பத்தை மேற்கொள்கிறோம். (2 கொரிந்தியர் 5:17)
2. வீட்டுக்கொரு ஆட்டுக்குட்டி: (யாத்திராகமம் 12:3)
இந்த ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. 1 கொரிந்தியர் 5:7 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறார். வீட்டிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினர்களுக்கும் ஆட்டுக்குட்டியோடு நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.
3. ஆட்டுக்குட்டியைப் பற்றிய தன்மைகள்: (யாத்திராகமம் 12:5)
அ) அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும்:
1பேதுரு: 1:18,19 - "நீங்கள் ஆசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின்
விலையேறப்பெற்ற இரத்தத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே"
கிறிஸ்து தூய்மையானவர், கறைதிரையற்றவர், குற்றமற்றவர், பழுதற்ற ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானவருக்கு நிழலாட்டமாய் இருக்கிறது. (யோவான்: 1:29)
ஆ) ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி
யாத்திராகமம் 12:5
இளமையான ஆட்டுக்குட்டி குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. நாமும் தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
இ) நான்கு நாட்கள் அதை பரிசோதிக்க வேண்டும்
யாத்திராகமம் 12:2,6
அது குற்றமில்லாத பழுதற்றதுதானா? என்பதைப் பரிசோதிக்க நான்கு நாட்கள் வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குருடானதாகவோ, காயம் பட்டதாகவோ காணப்பட்டால் அதை உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல கிறிஸ்து, பிதாவினாலும், பிலாத்துவினாலும், பிரதான ஆசாரியனாலும், சாத்தானாலும் சோதிக்கப்பட்டு களங்கமற்றவராக காணப்பட்டார். ஆட்டுக்குட்டியை பரிசோதிப்பதற்காக அதன் ரோமத்தை இழுத்துப்பார்ப்பார்கள். தேவபிள்ளையே! அப்படியே உன்னையும், உலகமும், சபையும், பின் மாற்றக்காரரும் சோதித்துப் பார்க்கக் கூடும்.
4. ஆட்டுக்குட்டி கொல்லப்பட வேண்டும்; அதின் இரத்தம்பூசப்பட வேண்டும்:
யாத்திராகமம் 12:5,7
இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தம் சிந்தப்படாவிட்டால் எந்த மனுஷனும் தேவனுக்கு முன்பாக அங்கீகரிப்பட முடியாது.
எபிரேயர் 9:22 - "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை." அந்த இரத்தம்பூசப்படவேண்டும். அந்த ஆட்டுக் குட்டியின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து ஒரு ஈசோப்புத் தண்டில் வீட்டின் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற் சட்டத்திலும் தெளிக்க வேண்டும்.
யாத்திராகமம்: 12:6,7,21,22
பாத்திரத்திலுள்ள அந்த இரத்தம் யாரையும் பாதுகாக்கக் கூடியது அல்ல. ஆனால், சிலுவையில் நிறைவேற்றப்பட்ட கிரியையை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கிறது
ரோமர் 3:25,26
5. எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படக் கூடாது:
யாத்திராகமம் 12:46
ஒரு ஆடு கட்டுப்படாமல் அலைந்த திரிகிறதாய் இருந்தால், அதை அடங்கியிருக்கும் பொருட்டு மேய்ப்பன் எலும்புகளில் ஒன்றை முறிப்பதுண்டு. இது இஸ்ரவேல் மேய்ப்பர்களின் வழக்கம்.
கால் - நமது நடக்கைக்கு அடையாளம்
யோவான் 19:33,36
சங்கீதம் 34:20
6. அதின் மாமிசம் தீவிரமாய் புசிக்கப்பட வேண்டும்:
யாத்திராகமம்: 12:8,11
யோவான் 6:53-55 - "நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தை புசியாமலும் அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்... என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது".
மாம்சத்தைப் புசிப்பது என்பது - வேத வசனத்தை தியானிப்பதற்கு அடையாளம். (சங்கீதம்: 1, லேவியராகமம் 11:3). வேதவசனம் நம்மில் ஒரு பகுதியாக மாறும் வரை உட்கொள்ளப்பட வேண்டும்.
யாத்திராகமம்: 12:11
அரைகள் கட்டப்பட வேண்டும் என்பது - புறப்படுவதற்கு அடையாளம். இரட்சிக்கப்பட்ட பின் உலகத்தை பின்னே தள்ளி கிறிஸ்துவுக்குள் முன்னேற வேண்டும். இரட்சிப்பிலே கூடாரமடித்து தங்கி விடாதே.
====================
தலைப்பு: ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது
======================
பிரசங்கி 7:8
1) சவுல்
சவுல் தன்னை தானே கொலை செய்து கொண்டான்
1 சாமுவேல் 31:4
கர்த்தர் சவுலை தெரிந்து கொண்டார் என்று 1 சாமுவேல் 10:24 ல் வாசிக்கிறோம். கர்த்தரால் தெரிந்து கொள்ளபட்டவன் இந்த நிலைக்கு (தற்கொலை) வரக்காரணம் அவன் வாழ்க்கையில் பல ஒழுங்கினங்கள் காணப்பட்டது. சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்
(a) நன்மைக்கு தீமை செய்தான்
1 சாமுவேல் 24:17
(b) பொறாமை (காய்மகாரம்) காணப்பட்டது
1 சாமுவேல் 18:6-9
2) உசியா ராஜா
இவன் தனது மரண நாள் மட்டும் குஷ்டரோகியாய் இருந்து மரித்தான். கர்த்தர் அவன் காரியங்களை வாய்க்க செய்தார்.
2 நாளாகமம் 26:5
உலக ஆசிர்வாதங்களை பெற்றான் (26:10) இவன் குஷ்டரோகியாக மாற சில கெட்ட சுபாவங்கள் காணப்பட்டது . மேட்டிமை அடைந்தான் (26:16) - ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்பட்ட போது மேட்டிமை/பெருமை அடைந்தான். பெருமையினால் பிசாசு அன்றும் இன்றும் அநேகரை வீழ்த்தி வருகிறான். சிலர் சபையில் worship/sunday class எடுப்பார்கள். அதனால் அவர்கள் பெருமையோடு காணப்படுவதை இந்த நாட்களில் கண்கூடாக காணலாம். சில நாட்கள் முன்பு வெளிநாடு சென்று வந்த ஊழியரை சந்தித்து பேசினேன். அவர் பேச்சில் பெருமை அதிகம் காணப்பட்டது. நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17:10 இந்த வசனத்தை ஊழியம் செய்கிறவர்கள் மறக்க கூடாது. அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
நீதிமொழிகள் 16:18
3) சிம்சோன்
சிம்சோன் முடிவு தற்கொலை. இவன் தேவ தூதனின் அறிவிப்புபடி பிறந்தவன்.
நியாயாதிபதிகள் 13:3
கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் (13:24) கர்த்தர் ஆவி அவன் மேல் பலமாக இறங்கியது (14:6). ஆனால் முடிவு சரியில்லை. காரணம் பெண் ஆசை (தெலிலாள்). சிம்சோன் வேசித்தனத்திற்கு விலகி ஓடவில்லை (1 கொரிந்தியர் 6:18) எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இன்று அந்த கொடிய பெண்ணாசை ஆவிக்குரிய வட்டாரங்களில் தலைவிரித்தாடுகின்றது
4) கேயாசி
இவனது முடிவு குஷ்டரோகம் (2 இராஜாக்கள் 5:27) எலிசா உடன் இருந்தான் இவனை Assistant pastor என்றே கூறலாம். முடிவு நாகமானின் குஷ்டரோகம் இவனை பிடித்தது. காரணம் பொருள் ஆசை (5:20)
5) அனனியா/சப்பிராள்
இவர்கள் 2 பேரும் ஒரே நாளில் சபையில் மரணம் அடைந்தார்கள். இவர்கள் சபைக்கு ஒழுங்காக சென்றவர்கள் (அப்போஸ்தலர் 5:11) சொத்தை விற்று கர்த்தருக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஏற்பட காரணம் ஒரு பொய் (5:8)
இந்த வரிசையில் இன்னும் அநேகரை சேர்க்கலாம் (சாலமோன், எசேக்கியா ராஜா, மோசே, ஆதாம், ஏவாள் etc.)
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக நமக்கு எச்சரிப்புண்டாக்கும் படி எழுதப்பட்டும் இருக்கிறது
1 கொரிந்தியர் 10:11
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்
மத்தேயு 24:13
தேவ ஜனமே உனது முடிவை குறித்து எச்சரிக்கையாயிரு. உனது ஆவிக்குரிய ஒட்டம் நஷ்டம் அடையக் கூடாது.
=====================
தலைப்பு: சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள்
(நியாதிபதிகள் 13,14,15,16)
=====================
1) சொந்த பெலத்தை நம்பினான்
2) கடந்த கால வெற்றிகளை நம்பினான் (சிங்கத்தை துண்டு துண்டாக கிழித்ததையும், பெலிஸ்தர்களால் கட்டப்பட்டு அதை எளிதாக அறுத்து கொண்டதையும்)
3) அவனுடைய பெலன் கர்த்தரால் கொடுக்கபட்டது என்பதை மறந்தான்.
4) நான் என்ற அகங்காரத்தினாலும், பெருமையினாலும் அவன் வழி நடத்தப்பட்டான்
5) தன்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்று அவன் தன்னை பற்றிக் கருதினான்.
6) அவன் சுயக் கட்டுப்பாடு இல்லாதவனாய் இருந்தான்
7) அவன் தனது கண்களால் நடத்தப்பட்டான். தனது கண்களை கட்டுப்பாடின்றி அலைய விட்டான்
8) தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இரையாகிப் போனான்
9) அவனது வல்லமையையும், அபிஷேகத்தையும் இழந்து போனான்
10) அவன் தன்னை குறித்து கவனமாயிராதபடியால் அவன் விழுந்து போனான்
11) அழைப்பின் நோக்கத்தை அசட்டை செய்கிறவனாக ஆரம்பம் முதல் காணப்படுகிறான்
12) ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் என்று சொன்ன சிமியோன் தானும் தேவனை நினைத்து வாழ்ந்திருந்தால் இப்படிப்பட்ட பரிதாபமான முடிவு நேர்ந்திருக்காது.
13) கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியவில்லை (பாவத்தில் வாழ்ந்து கொண்டு கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்று நினைத்தான்)
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டு இருக்கிறது
1 கொரிந்தியர் 10:11
=======================
தலைப்பு: எட்டாம் மாதத்தில் புதிய காரியம் செய்யும் தேவன்
========================
1. பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்.ஆதியாகமம் 24:40
God will Prosper your ways
genesis 24:40
2. திரும்பவும் போகப்பண்ணுவார்.
ஆதியாகமம் 48:21
God will bring a distinction.
2. திரும்பவும் போகப்பண்ணுவார்.
ஆதியாகமம் 48:21
God will bring a distinction.
Genesis 48:21
3. வித்தியாசம் பண்ணுவார்.
யாத்திராகமம் 9:4
Lord will make a distinction.
3. வித்தியாசம் பண்ணுவார்.
யாத்திராகமம் 9:4
Lord will make a distinction.
Exodus 9:4
4. யுத்தம்பண்ணுவார்.
யாத்திராகமம் 14:14
The Lord Shall Fight for you
4. யுத்தம்பண்ணுவார்.
யாத்திராகமம் 14:14
The Lord Shall Fight for you
Exodus 14:14
5. விருத்தியடையப்பண்ணுவார்.
உபாகமம் 13:18
The Lord shall Multiply thee
5. விருத்தியடையப்பண்ணுவார்.
உபாகமம் 13:18
The Lord shall Multiply thee
Deuteronomy 13:18
6. நன்மை செய்து பெருகப்பண்ணுவார்.
உபாகமம் 30:5
God will do thee good and multiply thee
6. நன்மை செய்து பெருகப்பண்ணுவார்.
உபாகமம் 30:5
God will do thee good and multiply thee
Deuteronomy 30:5
7. அபிஷேகம் பண்ணினவரின் கொம்மை உயரப்பண்ணுவார்.
1 சாமுவேல் 2:10
The Lord Shall Exalt the horn of the righteous
7. அபிஷேகம் பண்ணினவரின் கொம்மை உயரப்பண்ணுவார்.
1 சாமுவேல் 2:10
The Lord Shall Exalt the horn of the righteous
I Samuel 2:10
8. வீட்டை உண்டு பண்ணுவார்.
2 சாமுவேல் 7:11
The Lord himself will establish a house for you.
8. வீட்டை உண்டு பண்ணுவார்.
2 சாமுவேல் 7:11
The Lord himself will establish a house for you.
2 Samuel 7:11
=====================
தலைப்பு: உன் வேண்டுதல் என்ன?
=====================
உபாகமம் 18:16
உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின் படியெல்லாம் அவர் செய்வார்
ஏழு பேரின் வேண்டுதல் பற்றி பார்ப்போம்
1. மனோவா
நியாயாதிபதிகள் 13:8
நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்கு கற்பிப்பாராக என்று மனோவா வேண்டிக்கொண்டான்
2. சாலொமோன்
1 இராஜாக்கள் 3:11
ஞானத்தை சாலொமோன் வேண்டிக் கொண்டான்
3. யாபேஸ்
1 நாளாகமம் 4:10
என்னை ஆசீர்வதித்து என் எல்லையை பெரிதாக்கும் என்று வேண்டிக் கொண்டான்
4. பிசாசுகள்
மாற்கு 5:1
பன்றிகளுக்குள் எங்களை அனுப்பும் என்று பிசாசுகள் எல்லாம் வேண்டிக் கொண்டன
5. நூற்றுக்கு அதிபதி
மத்தேயு 8:6
வேலைக்காரன் சுகத்துக்காக நூற்றுக்கு அதிபதி வேண்டிக்கொண்டான்
6. யவீரு
லூக்கா 8:41,42
தன் வீட்டிற்கு இயேசு வரும்படி வேண்டிக்கொண்டான்
7. சமாரியர்
யோவான் 4:40
இயேசு தங்களிடத்தில் தங்க வேண்டும் என்று சமாரியர் வேண்டிக்கொண்டார்கள்
Bro Jeyaseelan Mumbai
9820532501
===============================
தலைப்பு: ராஜாவுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்
==============================
சகரியா 9:9
சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்;
1. உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்
மத்தேயு 21:4
2. கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா
லூக்கா 19:38
3. சாந்தகுணமுள்ளவராய் வருகிற ராஜா
மத்தேயு 21:4
4. எருசலேமுக்கு வருகிற ராஜா
மாற்கு 11:11
5. தேவாலயத்திலே வருகிற ராஜா
மாற்கு 11:11
6. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி வருகிற ராஜா
மத்தேயு 21:5
7. ராஜாவுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்
யோ 12:13
Bro. Jeyaseelan, Mumbai
Mobile: 9820532501
=========================
தலைப்பு: பாக்கியமுள்ள கழுதை
========================
சகரியா 9:9
1. ஒரு கழுதையும் ஒரு குட்டியும் கட்டப்பட்டிருப்பதை கண்ட இயேசு.
மத்தேயு 21:2
2. வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டப்பட்டிருந்த கழுதை
மாற்கு 11:4
3. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட கழுதை
சகரியா 9:9
4. ஆண்டவருக்கு வேண்டும், கழுதையை கொண்டு வரும்படி இயேசு சீஷரில் இரண்டு பேரை அனுப்பினார்
மத் 21:3
5. இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்
மாற்கு 11:7
6. மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதை, ஆனால் இயேசு அதின்மேல் ஏறிப்போனார்
மாற்கு 11:2,7
7. வஸ்திரங்கள் மேலும் மரக்கிளைகள் மேலும் நடக்கிற கழுதை
மாற்கு 11:8
1. கீழ்ப்படிந்த 2 சீஷர்கள் சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து
மத்தேயு 21:6
2. கீழ்ப்படிந்த கழுதையும், குட்டியும் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டது
மாற்கு 11:7
3.ஒசன்னா பாடின முன் நடப்பாரும், பின் நடப்பாரும்
மத் 21:9
4. இரு வழியில் நின்ற கழுதைதான் ஆனால் இயேசுவே வழி என்று தெரிந்து கொண்டது
மாற்கு 11:4
Bro. Jeyaseelan, Mumbai
Mobile: 9820532501
===============================
தலைப்பு: இயேசுவின் உயிர்த்தெழுதலை தடுக்க முடியாத கல்
==============================
மாற்கு 16:3
மிகவும் பெரிய கல்
மாற்கு 16:3
மத்தேயு 27:60
கல்லறை வாசலை அடைக்க புரட்டி வைக்கப்பட்ட கல்
மத்தேயு 27:60
முத்திரை போடப்பட்ட கல்
மத்தேயு 27:66
காவல் வைத்து காக்கப்பட்ட கல்
மத்தேயு 27:66
தேவதூதரால் புரட்டி போடப்பட்ட கல்
மத்தேயு 28:2
தேவ தூதன் அமர்ந்த கல்
மத்தேயு 28:2
இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிவிக்கும் கல்
மாற்கு 16:4
மத்தேயு 28:6
Bro Jeyaseelan, Mumbai
9820532501