சமீபமான தேவன் - THE LORD IS NEAR | மடியில் நெருப்பு - FIRE IN BOSOM | GOOD THINGS IF EXCEEDS - நல்லவைகள் ஆனால் அதிகமானால் | SEVEN BEATITUDE IN REVELATION - வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு பாக்கியவான்கள் | சோதிக்கப்படுதல் பாவமா? - Is temptation an act of sin? | நல்லவைகள் ஆனால் அதிகமாகும் போது - GOOD THINGS IF EXCEEDS | அவருடைய நாமம் என்ன?
====================
சமீபமான தேவன் - THE LORD IS NEAR
====================
Red Ribbon in Red Indian
செவ்விந்தியன் கழுத்தில் சிகப்பு நாடா
ஒரு வயதான செவ்விந்தியர் அனுதின போஜனத்திற்காக அமெரிக்கா தெருக்களில் அலைந்து கொண்டிருந்தார்.
இதை கவனித்த ஒருவர் அவரை அணுகி உங்கள் கழுத்தில் அணிந்திருக்கிற இந்த சிகப்பு ரிப்பன் பற்றி விசாரித்தார்.
அந்த சிகப்பு நாடாவில் அமெரிக்கா ராணுவ முதியோர் பென்ஷன் உத்தரவு அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் கையெழுத்துடன் இருந்தது.
அவருக்கு எல்லா சலுகைகளும், வீடும் கூட அதில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
நம்மில் அநேகர் இவ்விதமாக இருக்கிறோம்.
தேவன் நம் தேவைகளில் நாம் குறைவு படாமலிருக்க அநேகம் வாக்குத்தத்தங்களும் உறுதியும் வேதத்தின் வாயிலாக தருகிறார்.
தேவனுடைய வார்த்தைகள் நித்தியம். மாறாதது. எல்லா வாக்குத்தத்தங்களும் போதுமானது.
பாவமன்னிப்பு, தேவனோடு சமாதானம், நித்திய ஜீவன், நித்திய மகிமை இவை அனைத்திற்கும் நீங்கள் பாத்தியமானவர்கள்.
நீங்கள் உரிமை கோரி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் கிறிஸ்து தன் சிலுவை மரணத்தின் மூலமாக இலவசமாய் நமக்கு அளிக்கிறார்.
ஏசாயா 55: 1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள், பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள், நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
ஏசாயா 55: 2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
ஏசாயா 55: 3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும், தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நிந்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
1. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
ஏசாயா 55: 6
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
2. கர்த்தருடைய வசனம் சமீபம்
ரோமர் 10: 8
இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது, இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
3. கர்த்தருடைய நாமம் சமீபம்
சங்கீதம் 75: 1
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம், உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
4. சமீபமான ஜாதி
உபாகமம் 4: 7
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
5. கர்த்தருடைய நீதி சமீபம்
ஏசாயா 56: 1
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள், என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
6. கிறிஸ்துவின் இரத்தத்தினால் சமீபம்
எபேசியர் 2: 13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
7. கர்த்தருடைய நாள் சமீபம்
ஒபதியா 1: 15
எல்லாஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடையநாள் சமீபமாய் வந்திருக்கிறது. நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும். உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
8. காலம் சமீபம்
வெளிப்படுத்தின விசேஷம் 1: 3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது.
கசந்த வாழ்வுக்கு வசந்த வாழ்வுண்டு
மனம் உடைந்த வாழ்வுக்கு மனம் நிறைந்த வாழ்வுண்டு
சோர்ந்திடாதே
சோர்ந்திடாதே
இயேசு உண்டு... 2
shalomjjj@gmail.com
===================
மடியில் நெருப்பு - FIRE IN BOSOM
=====================
நீதிமொழிகள் 6:27
தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக் கூடுமோ?
நீதிமொழிகள் 6:28
தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக் கூடுமோ?
இது சாலொமோன் தவறான உறவை குறித்து கூறின நீதி மொழி.
பாலியல் உண்மைத்துவம் ( sexual faithfulness) என்பது அநேக ஆசிர்வாதங்களையும் அதன் எதிர்மறை அநேக விளைவுகளையும் கொண்டு வரும்.
தவிர்க்க முடியாது. அனுமானிக்கவும் முடியாது.
நெருப்பும் வஸ்திரமும் எந்த விஷயத்திலும் பொருந்தாது.
விபத்து ஏற்பட்டு அழிவு நேரிடும்.
விதி முறைக்கு முரணான பாலியல் (illicit sex) நெருப்போடு விளையாடுவது போன்றது.
அந்த ஸ்திரீயின் புருஷனாலே பழிவாங்கப்படுவான். V34
அவன் தன் ஆத்துமாவை கெடுத்து போடுகிறான். V32
1. SIN STAINS
பாவம் கறைபடுத்தும்
2. SIN SATURATES
பாவம் நிறை செறிவு உண்டாக்கும்
3. SIN STINGS
பாவம் நச்சுப்படுத்தும்
4. SIN SADDENS
பாவம் துயரப்படுத்தும்
5. SIN SICKENS
பாவம் நோய்ப்படுத்தும்
6. SIN SOURS
பாவம் கசப்பாக்கும்
7. SIN STEALS
பாவம் திருடும்
சங்கீதம் 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
சங்கீதம் 51:2
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
சங்கீதம் 51:3
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
சங்கீதம் 51:4
தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன், நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்
சங்கீதம் 51:16
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன், தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
சங்கீதம் 51:17
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
shalomjjj@gmail.com
Whatsapp:+91 9965050301
====================
GOOD THINGS IF EXCEEDS
நல்லவைகள் ஆனால் அதிகமானால்
======================
1. சரீர இளைப்பாறுதல்
சோம்பேறித்தனம்
2. அமைதியாயிருத்தல்
தொடர்பற்ற நிலை
3. லாபம் சம்பாதித்தல்
பேராசை
4. தன்னை பாதுகாத்தல்
தன்னலம்
5. தகவல் பரிமாற்றம்
வீண் பேச்சு
6. எச்சரிக்கை உணர்வு
நம்பிக்கையின்மை
7. தாராள மனப்பான்மை
வீணாக்குதல்
8. சாப்பாட்டில் ஆசை
பெருந்தீனி
9. கவனமாயிருத்தல்
பயம்
10.சரீர ஆசை
உணர்ச்சிக்கு அடிமை
சிந்திக்க
தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்ட அநேக நல்ல காரியங்கள் விசுவாசிகளை சோதனைக்குட்படுத் தி பாவத்திற்கு கொண்டு போயிருக்கிறது என்பதை கவனிப்போம்
EXAMPLE
தாவீது
சிம்சோன்
shalomjjj@gmail.com
Whatsapp: +91 9965050301
====================
SEVEN BEATITUDE IN REVELATION
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு பாக்கியவான்கள்
===================
1. வாசிக்கிறவர்கள், கேட்கிறவர்கள், கைக்கொள்ளுகிறவர்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 1: 3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
2. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 14: 13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.
3. தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன்
வெளிப்படுத்தின விசேஷம் 16: 15
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
4. கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 19: 9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
5. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன்
வெளிப்படுத்தினத விசேஷம் 20: 6
முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான், இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை, இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
6. வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன்
வெளிப்படுத்தினத விசேஷம் 22: 7
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
7. கற்பனைகளின்படி செய்கிறவர்கள்
வெளிப்படுத்தினத விசேஷம் 22: 14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்
மத்தேயு 5 ல் உள்ள Beattitudes பாக்கியவான்கள் வாசித்து தியானிக்கவும்..
shalomjjj@gmail.com
Whatsapp:+91 9965050301
=======================
சோதிக்கப்படுதல் பாவமா?
Is temptation an act of sin?
========================
கிறிஸ்து மாதிரி
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
எபிரேயர் 4:15
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1:13
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்
யாக்கோபு 1:14
பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1:15
===========================
நல்லவைகள் ஆனால் அதிகமாகும் போது..
GOOD THINGS IF EXCEEDS
==============================
1. சரீர இளைப்பாறுதல்...
சோம்பேறித்தனம்
2. அமைதியாயிருத்தல்..
தொடர்பற்ற நிலை
3. லாபம் சம்பாதித்தல்..
பேராசை
4. தன்னை பாதுகாத்தல்..
தன்னலம்
5. தகவல் பரிமாற்றம்..
வீண் பேச்சு
6. எச்சரிக்கை உணர்வு..
நம்பிக்கையின்மை
7. தாராள மனப்பான்மை..
வீணாக்குதல்
8. சாப்பாட்டில் ஆசை..
பெருந்தீனி
9. கவனமாயிருத்தல்..
பயம்
10.சரீர ஆசை..
உணர்ச்சிக்கு அடிமை
சிந்திக்க
தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்ட அநேக நல்ல காரியங்கள் விசுவாசிகளை சோதனைக்குட்படுத் தி பாவத்திற்கு கொண்டு போயிருக்கிறது என்பதை கவனிப்போம்.
EXAMPLE..
தாவீது
சிம்சோன்
என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
யாக்கோபு 1:16
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12
shalomjjj@gmail.com
Whatsapp: +91 9965050301
======================
அவருடைய நாமம் என்ன?
======================
ஒருவரை/ஒன்றை இனம்காண அல்லது அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொற்கள்; பெயர்.
A name is a term used for identification by an external observer. They can identify a class or category of things, or a single thing, either uniquely, or within a given context. The entity identified by a name is called its referent. A personal name identifies, not necessarily uniquely, a specific individual human.
நீதிமொழிகள் 30:4
வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
நியாயாதிபதிகள் 13:17
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
நியாயாதிபதிகள் 13:18
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
ஆதியாகமம் 32:29
அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
எரேமியா 16:20
20. மனுஷன் தனக்குத் தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
21. ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன், என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன், என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
யாத்திராகமம் 3:13
13. அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
யாத்திராகமம் 3:14
15. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக. என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
எரேமியா 23:6
அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும், அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.
எரேமியா 33:16
அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும், அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
மத்தேயு 1:23
அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
shalomjjj@gmail.com
Whatsapp:+91 9965050301