தேவ அன்பு | தேவ அன்பின் தனித்துவம் | அறியப்படாத தேவன் - Unknown God | TRIAD OF SIN பாவத்தின் மூவொருமை | எல்லாவற்றிலும் - OF ALL | பாவத்தின் மேல் பாவம் - SIN ADDED TO SIN | பாவத்தின் 3 கொடிய குணங்கள் | சிந்திக்க வைக்கும் கேள்வி | மரணம் மங்களம்
===========
தேவ அன்பு
GOD'S LOVE
===========
”நான்கு விதமான அன்பு”
========================
1. ஸ்டார்கே.. இயற்கை பந்தம்
Storge – empathy bond
Storge ( *storgē, Greek: στοργή* ) is liking someone through the fondness of familiarity, family members or people who relate in familiar ways that have otherwise found themselves bonded by chance. An example is the natural love and affection of a parent for their child. It is described as the most natural, emotive, and widely diffused of loves: It is natural in that it is present without coercion, emotive because it is the result of fondness due to familiarity, and most widely diffused because it pays the least attention to those characteristics deemed "valuable" or worthy of love and, as a result, is able to transcend most discriminating factors.
2. பிலியோ - சிநேக பந்தம்
Philia – friend bond
Philia, Greek: φιλία* ) is the love between friends as close as siblings in strength and duration. The friendship is the strong bond existing between people who share common values, interests or activities
3. ஈரோஸ் - உணர்ச்சி பந்தம்
Eros – romantic love
Eros ( *erōs, Greek: ἔρως)* for Lewis was love in the sense of "being in love" or "loving" someone, as opposed to the raw sexuality of what he called Venus:
4. அகப்பே - நிபந்தனை இல்லாத பந்தம்
Agape – unconditional "God" love
Charity ( *agápē, Greek: ἀγάπη* ) is the love that exists regardless of changing circumstances. Lewis recognizes this selfless love as the greatest of the four loves, and sees it as a specifically Christian virtue to achieve. "The natural loves are not self-sufficient" to the love of God, who is full of charitable love, to prevent what he termed their "demonic" self-aggrandizement.
==========================
தேவ அன்பின் தனித்துவம்
==========================
1. தேவ அன்பின் பூரணம்
1 யோவான் 2: 5
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் *தேவ அன்பு* மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
2. தேவ அன்பின் வெட்கப்படுத்தாத தன்மை
ரோமர் 5: 5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே *தேவஅன்பு* நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
3. தேவ அன்பின் நிலையானதன்மை
1 யோவான் 4: 16
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். *தேவன் அன்பாகவே* இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
4. தேவ அன்பின் நடைமுறை தன்மை
1 யோவான் 3: 17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் *தேவஅன்பு* நிலைகொள்ளுகிறதெப்படி?
5. தேவ அன்பின் அறியும் தன்மை
1 யோவான் 4: 8
அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
நம்மை ஆராய்ந்து பார்ப்போம்
யோவான் 5: 42
உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
===================================
அறியப்படாத தேவன் - Unknown God
===================================
Who is the unknown god in
Acts 17: 23
unknown god
ANSWER..
In Acts 17, Paul arrives in Athens, the citadel of the many Greek gods.
In that city was the Areopagus, or Mars Hill, where a council of civic leaders met.
This council, also called the Areopagus, had charge of religious and educational matters in Athens.
While in Athens, Paul was provoked by the many idols he saw.
As was his custom, he went to the synagogue and reasoned with the Jews and God-fearing Gentiles.
He also preached to those in the marketplace. That is when he encountered the Epicurean and Stoic philosophers, who were always looking to discover something “new” to discuss.
The Epicureans were followers of Epicurus (341—270 BC), who taught that happiness was the ultimate goal in life.
The Stoic thinkers regarded Zeno (340—265 BC) as their founder.
He was noted for promoting the rational over the emotional.
Both Epicurus and Zeno believed in many gods.
Hearing Paul teach about Jesus, the philosophers had Paul come to the Areopagus and asked him to tell them about this “new,” strange teaching he was proclaiming.
Standing in the midst of the Areopagus, Paul tells those gathered that he realized Athenians were very religious, having seen their many objects of worship.
But one altar among the many caught his attention.
On it were inscribed the words “TO AN UNKNOWN GOD.”
In their ignorance, the Greeks had erected an altar to whatever god they might have inadvertently left out of their pantheon.
Paul masterfully uses this altar as an opportunity to share the one true God.
அப்போஸ்தலர் 17: 22
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று; அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
அப்போஸ்தலர் 17: 23
எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாததேவனுக்கு* என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
தேவன் ஒருவரே
1 தீமோத்தேயு 2: 5
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
லூக்கா 5: 21
அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
ரோமர் 3: 30
விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற *தேவன் ஒருவரே.
1 கொரிந்தியர் 12: 6
கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற *தேவன் ஒருவரே.*
அப்போஸ்தலர் 17: 24-31
24. உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
25. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
26. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.
27. கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
28. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
29. நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்கமென்று நாம் நினைக்கலாகாது.
30. அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
தேவனால் பிறந்தவன்
பேசும் கிளி..
கிளி விற்பவன் ஒருவரிடம் பேசும் கிளி என்று விற்கிறான்..
கிளி பேசவில்லை..
கிளி விற்பவன் அநேக வழிமுறைகளை சொல்லி அனுப்புகிறான்..
ஒரு ஏணி வாங்கி வையுங்கள்..
ஒரு ஊஞ்சல் வாங்கி வையுங்கள்..
இறுதியில் கிளி இறந்து விடுகிறது..
இறந்து போகும் போதும் அது இவ்வாறு கூறி இறந்து விடுகிறது..
" நண்பா.. நான் பேச வேண்டும் என்று அநேக பொருட்கள் வாங்கி வந்தாய்.. எனக்கு உணவு வாங்கி வரவில்லையே "
அநேகர் பாவத்திற்கான வேர்க்கரணம் Root Cause.. கண்டுபிடிக்காமல் அநேக நற்காரியங்கள் மட்டும் செய்து இறுதியில் பாவப்பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து அவரை ஏற்றுக்கொள்ளாமல் மரித்து போகிறார்கள்..
1 யோவான் 5: 1
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும்..
ரோமர் 10: 9, 10
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
பாவம் இருதய வியாதி
எரேமியா 17: 9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
ஏசாயா 44: 18
அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
வேதம் கடின இருதயம், முரட்டாட்டமான இருதயம், வியாதி நிறைந்த இருதயம்.. இன்னும் அநேக இருதய முரண்பாடுகள் குறித்து பேசுகிறது..
1 யோவான் 3: 9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 5: 4
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான் 4: 7
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 5: 18
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
====================
TRIAD OF SIN
பாவத்தின் மூவொருமை
====================
பாவம் மூன்று நிலைகளில் மனிதனில் பிரவேசித்து கிரியை செய்கிறது..
ஆவி, ஆத்துமா, சரீரம்
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம்
ஆதியாகமம் 3: 6
புசிப்புக்கு நல்லதும் (சரீரம்)
பார்வைக்கு இன்பமும் (ஆத்துமா)
புத்தியைத் தெளிவிக்கிறதற்கு (ஆவி) இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
பாவத்தின் மூவொருமை
=================
1. மீறுதல்:
சங்கீதம் 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் *மீறுதல்கள்* நீங்க என்னைச் சுத்திகரியும்.
2. பாவம்
சங்கீதம் 51: 3
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் *பாவம்* எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
3. அக்கிரமம்
சங்கீதம் 51: 2
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
பாவத்தின் மூவொருமையை அழிக்க கிறிஸ்து உலகத்தில் வந்தார்
=========================
மீறுதலைத்
(ஆத்துமா) தவிர்க்கிறதற்கும்,
பாவங்களைத்
(சரீரம்) தொலைக்கிறதற்கும்,
அக்கிரமத்தை
(ஆவி )நிவிர்த்திபண்ணுகிறதற்கும்
தானியேல் 9: 24
நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
பாவத்தின் மூவொருமையை கிறிஸ்து சிலுவையில் முறியடித்தார்
=======================================
1. மீறுதல்
ஏசாயா 53: 5
நம்முடைய *மீறுதல்களினிமித்தம்* அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
2. பாவம்
ஏசாயா 53: 12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, *அநேகருடைய பாவத்தைத்* தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
3. அக்கிரமம்
கொலோசெயர் 2: 13-15
உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து, நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.
பாவத்தின் மூவொருமை இல்லாமையின் பாக்கியம்
=======================
சங்கீதம் 32: 1
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,
எவனுடைய பாவம் மூடப்பட்டதோ,
அவன் பாக்கியவான்.
சங்கீதம் 32: 2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.
பாவத்தின் மூவொருமை நம்மில் இருந்து நீக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்?
===========================
ரோமர் 4: 6
அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
ரோமர் 4:7
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ,
எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ரோமர் 4: 8
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
Closing thought
சரீரம்
நீதிமொழிகள் 28: 13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
ஆத்துமா
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்:
ஆவி
நீதிமொழிகள் 28: 14
தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
====================
எல்லாவற்றிலும் - OF ALL
====================
கிறிஸ்தவ வாழ்க்கையில் இரட்சிப்புக்கு இணையாக அனுதின பரிசுத்தமாகுதல் இன்றியமையாதது..
Progressive Sanctification அல்லது பூரணம் முதிர்ச்சி.. கிறிஸ்துவின் சாயலாக மாறுதல்
முழுமை.. பூரணம் என்பது ஆவிக்குரிய கனிகள் அல்லது ஆவியின் முதற்பலன் என்று சிந்திக்கலாம்.
நான் ஒரு விஷயத்தில் பெலவீனனாக இருந்து அநேக விஷயங்களில் பூரணாக இருக்கிறேன் என்பது ஆவிக்குரிய பிரமானத்திற்கு புறம்பானது.
மாம்சப்பிரமானம் என்ன சொல்கிறது..
கவனியுங்கள்
For whosoever shall keep the whole law, and yet offend in one point, he is guilty of all.
யாக்கோபு 2: 10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
நீயோ
===========
1. எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு
2 தீமோத்தேயு 4: 5
தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
2. எல்லாவற்றிலேயும் உண்மையாயிரு
1 தீமோத்தேயு 3: 11
அந்தப்படியே ஸ்திரிகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.
3. எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிரு
1 கொரிந்தியர் 9: 25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.அவர்கள் அழிவுள்ள கீரிடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
4. எல்லாவற்றிலேயும் வளருங்கள்
எபேசியர் 4: 15
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் , நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
5. எல்லாவற்றிலேயும் தேவன் மகிமைப்படட்டும்
1 பேதுரு 4: 11
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
6. எல்லாவற்றிலேயும் மாதிரியாகுங்கள்
தீத்து 2: 7
நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து
7. எல்லாவற்றிலேயும் வாழ்ந்து சுகமாயிருங்கள்
3 யோவான் 1: 2
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
Closing thought
பிரசங்கி 7: 18
மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே, உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?
நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம், தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.
shalomjjj@gmail.com
Whatsapp: +91 9965050301
==============
பாவத்தின் மேல் பாவம் - SIN ADDED TO SIN
================
1. பாவத்தோடே மீறுதல் கூட்டப்படுகிறது
யோபு 34: 37
தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார். அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
2. பாவத்தோடே பாவம் கூட்டப்படுகிறது
ஏசாயா 30: 1
பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,
3. பாவம் மிகுந்த பாவமுள்ளதாகிறது
ரோமர் 7: 13
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல, பாவமே எனக்கு மரணமாயிற்று, பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
4. பாவம் மிகவும் கொடிதாகிறது
ஆதியாகமம் 18: 20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,
5. பாவம் இருதயத்தை கடினமாக்குகிறது
யாத்திராகமம் 9: 34
மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நிற்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தை கடினப்படுத்தினார்கள்.
6. பாவம் இரும்பெழுத்தணியினால் எழுதப்படுகிறது
எரேமியா 17: 1
யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
7. பாவம் பலிபீடத்தின் கொம்புகளில் பதிந்திருக்கிறது
எரேமியா 17: 1
யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
8. பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது
ஓசியா 13: 12
எப்பிராயீமின் அக்கிரமம் கட்டி வைத்திருக்கிறது,அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
9. பாவம் நிலை நிற்கிறது
யோவான் 9: 41
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது, நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலை நிற்கிறது என்றார்.
10. பாவம் வானபரியந்தம் எட்டுகிறது
வெளிப்படுத்தின விசேஷம் 18: 5
அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.
===================
பாவத்தின் 3 கொடிய குணங்கள்
==================
1. பாவம் குற்றமின்மையை கொல்லுகிறது
SIN KILLS INNOCENCE
பாவம் நிரந்தரமான விளைவை மனிதன் மேல் வைக்கிறது..
Sin leaves a permanent effect on mankind
2. பாவம் சீர்மையை கொல்லுகிறது
SIN KILLS IDEALS
ஒவ்வொரு பாவமும் அடுத்த பாவத்தை இலகுவாக்குகிறது
Each sin makes the next sin easier
3. பாவம் விருப்பாற்றலை கொல்லுகிறது
SIN KILLS WILL
பாவம் என்கிற பழக்கம் தேவையாக மாற தூரமில்லை
Habitual sin is not far from being a necessity
=============
சிந்திக்க வைக்கும் கேள்வி
=============
ரோமர் 6: 1-2
ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே.
பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
கிருபையின்மேல்
==================
யோவான் 1: 16
அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
சங்கீதம் 13: 5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
1 பேதுரு 1: 13
ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
=================
மரணம் மங்களம்
==================
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான காரணம்
PURPOSE OF CHRIST'S SECOND ADVENT
===========================
1.To receive His own
தம்முடையவர்களை சேர்த்துக்கொள்ள
யோவான் 14: 3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
2. To complete salvation
இரட்சிப்பை பூரணப்படுத்த
எபிரேயர் 9: 28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
3. To reveal hidden things
இருளில் இருக்கிறவைகளை வெளியரங்கமாக்க
1 கொரிந்தியர் 4: 5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
4. To reward His people
தம்முடையவர்களுக்கு பலன் அளிக்க
2 கொரிந்தியர் 5: 10
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
5. To reveal His glory to His people
என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக
யோவான் 17:24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
6.To reign nations
ஜாதிகளை ஆளுகை செய்ய
வெளிப்படுத்தின விசேஷம் 11: 15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
7. To judge the nations
ஜாதிகளை நியாயம் தீர்க்க
2 தீமோத்தேயு 4: 1
நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
சங்கீதம் 96: 13
அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
யூதா 1: 14-15
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
8.To destroy death
மரணத்தை பரிகரிக்க
1 கொரிந்தியர் 15: 25-26
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.