கேள்வி - பதில் (பிரசங்க குறிப்புகள்)
ரெபேக்காளிடம் காணப்பட்ட நல்ல குணங்கள் (அல்லது) ரெபேக்காள் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் என்னென்ன?
================
1)
2)
3)
===============
Sister Anuradha (Padappai)
1. ரெபெக்காள் மகா ரூபவதியாக இருந்தாள்
ஆதியாகமம் 24:16
2.கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; என்று .தன் பெற்றோரால், அண்ணனால் ஆசீர்வதிக்கப்பட்டவள்
ஆதியாகமம் 24:60
3. தன் புருக்ஷனுக்கு மிகுந்த மரியாதை தந்தவள்
ஆதியாகமம் 24:65
4. ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடையும் அளவிற்கு அன்பு தந்து நேசித்தாள்
ஆதியாகமம் 24:67
5. மலடியாக இருந்தபோதும் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. தன் கணவன் மனைவிக்காக வேண்டுதல் செய்யும் பாக்கியம் பெற்றவள்
ஆதியாகமம் 25:21
6. கர்த்தரின் ஆசீர்வாதத்தால் கர்ப்பமாகி முதன்முதலில் இரட்டை பிள்ளைகள் பெற்றவள்
ஆதியாகமம் 25:23
7. தனக்கான எல்லாவற்றையும கர்த்தரிடத்தில் விசாரித்து அறியும் அளவிற்கு ஜெபிக்கிறவளாய் கர்த்தரிடத்தில் பக்தியுடன் காணப்பட்டாள்
ஆதியாகமம் 25:22
8. "மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்" என்ற தேவனுடைய வெளிப்பாடு பெற்றாள்
ஆதியாகமம் 25:23
9. பிள்ளைகள் பெற்றபின்பும்கூட தன் கணவனிடத்தில் அன்போடும் நல்ல நட்போடும், விளையாடி மகிழ்ந்திருந்தாள்
ஆதியாகமம் 26:8
10. தேவனுடைய திட்டம் நிறைவேற இளையவன் யாக்கோபு சேஷ்டபுத்திர பாகத்தை பெற்றுக்கொள்ளும்படி தந்திரம் செய்தாள்
ஆதியாகமம் 27: 23-27
11. தன் பிள்ளைகள் இருவரும் சண்டையிட்டு மடியாதபடி அதை தடுக்கும்படி இருவரையும் பிரித்து யாக்கோபை தன் தகப்பன் வீட்டிற்கு அனுப்பினாள். ஆதியாகமம் 27:45
12.தன் மரணம் வரை தன் கணவனுக்கு ஒரே மனைவியாய் வாழும் பாக்கியம் பெற்றவள்
13. ரெபெக்காள் அடக்கம், உபசரணை, தாராள குணம், ஆர்வம், தேவபக்தி, விசுவாசம், பதிபக்தி,நட்பு, நேசம், பாசம், தேவபயம் ஆகிய நற்குணங்களும் கொண்ட குணசாலியான ஸ்திரீ யாக திகழ்ந்தாள் என்று வேதத்தில் வாசித்து அறிகிறோம்.
14. ஆனாலும் ஒரு தாயாக தன் இரு பிள்ளைகளையும் சரி சமமாக பார்க்க, பாசம் காட்டி நேசிக்க தவறிவிட்டாள். யாக்கோபுவினிடத்தில் பாரபட்சமாக நடந்துவிட்டாள்
Brother Jebakumar (Erode)
ரெபெ க்காளிடம் காணப்பட்ட நல்ல குணங்கள்:
1. உதவி செய்யும் மனப்பான்மை
ஆதியாகமம் 24:18
2. சுறுசுறுப்பு
ஆதியாகமம் 24:20
3. கணவனை மதித்தல்
ஆதியாகமம் 24:65
4. தன் காரியத்தை கர்த்தர் இடத்தில் விசாரித்தல்
ஆதியாகமம் 25:22
Sister Jeeva nesamani (Karamadai)
ஆதியாகமம் 24:15 முதல்.
1) ரெபேக்காள் ஈசாக்கை திருமணம் செய்யும் முன் வரை பிறர் முகம் பார்க்காமல் கற்புடன் இருந்துள்ளார்
2) சாந்தம், அன்பு, மரியாதையுடன் நடந்து கொள்ளும் நற்பண்புகள் உடையவள்.
3) கணவனுக்கு கீழ் படிந்து நடந்த பெண்.
4) கர்த்தரை நம்பியே ஜீவித்தாள்.
5) சிறந்த தாய் இருந்தவள்
6) மிருகங்களுக்கு உணவு வழங்குவதுடன் அதிகமாக நேசித்தார்.
7) இரக்கம், அன்பு, முன்மாதிரி தாய், தைரியம், கடின உழைப்பு, தாராளம் குணம் கொண்ட பெண்.
Sister Jessley Freeda (Coimbatore)
Sister Beula (Chennai)
ரெபேக்காள் - நல்ல குணங்கள்:
1) கடின உழைப்பாளி - 10 ஒட்டகங்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணிர் வார்த்து அவைகளின் தாகத்தை தீர்த்தாள் (ஒரு ஒட்டகம் ஒரே நேரத்தில் 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும்
ஆதியாகமம் 24:46
2) கொடுப்பதில், தியாகத்தில் சிறந்தவள்
ஆதியாகமம் 24:20
3) மணவாளனை கனம் பண்ணுகிறவள்
ஆதியாகமம் 24:65
4) ஜெபிக்கிறவள்
ஆதியாகமம் 25:22
5) மற்றவர்களை கனம் பண்ண அறிந்தவள்
ஆதியாகமம் 24:18
6) மனரம்மியமாக வாழ அறிந்தவள்
ஆதியாகமம் 24:25
7) அந்நியரை உபசரிக்கிறவள்
எபிரெயர் 13:2
ஆதியாகமம் 24:25
8) கணவனுடைய (ஈசாக்கு) துக்கத்தை நீக்கி அவனுக்கு ஆறுதல் கொடுத்தவள்
ஆதியாகமம் 27:67
9) ருசியாக சமையல் செய்பவள்
ஆதியாகமம் 27:9,31