பிரசங்க குறிப்பு
============
பிள்ளையாகிய கிறிஸ்து
============
லூக்கா 2:6 ,7
அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில் அவளுக்கு பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால் பிள்ளையை துணிகளில் சுற்றி முன்னனையிலே கிடத்தினாம்.
இது ஒரு கிறிஸ்துமஸ் செய்தி இயேசுவை பாலகனாக பார்க்கிறோம். இயேசுவை குமாரனாக பார்க்கிறோம். ஆனால் இந்த குறிப்பில் இயேசுவை பிள்ளையாக பார்க்க போகிறோம். அதேபிள்ளை என்ற தரிசனத்தோடு அவரை நாம் சிந்திக்கலாம். பிள்ளையாகிய கிறிஸ்து எப்படிப்பட்ட பிள்ளை என்பதை வரிசைப்படுத்தி அழகு பார்க்கலாம். லூக்கா 2 ஆம் அதிகாரத்தில் ஏழு வகையான பிள்ளைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஏழு வகையான பிள்ளைகள் எப்படிப்படட பிள்ளைகள் எனாபதை சிந்திக்கலாம்
வேதபாடம்
லூக்கா 2ம் அதிகாரம்
கிறிஸ்துமஸ் செய்தி
1. இயேசு அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளை
லூக்கா 2:12
2. இயேசு அவர் தாழ்மையின் பிள்ளை.
லூக்கா 2:16
3. இயேசு பாரட்டப்பட்ட பிள்ளளை
லூக்கா 2:17,20
4. இயேசு பிரித்தெடுக்பட்ட பிள்ளை.
லூக்கா 2:21
மத்தேயு 1:20,31
5. இயேசு அவர் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளை
லூக்கா 2:27
6. இயேசு அபிஷேகிக்கப்பட்ட பிள்ளை
லூக்கா 2:40
யோவான் 4:18,10
யோவான் 3:34
7. இயேசு அவர் தெய்வீக பிள்ளை
லூக்கா 2:43
இந்த கிறிஸ்துமஸ் செய்தியில் இயேசுவை பிள்ளை என்ற தரிசனத்தோடு நாம் சிந்திப்போம்
ஆமென்!
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
===========
இயேசு கிறிஸ்துவின் "பிறப்பு"
===========
மத்தேயு 2:1,2
1. எரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த போது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து
யூதருக்கு இராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திருத்தைக் கண்டு அவரை பணிந்துக்கொள்ள வந்தோம் என்றார்கள்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பினால் நடந்த காரியங்கள் என்னென்ன என்பதைக் குறித்த சிந்திக்கலாம். இது ஒரு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி
கிறிதுமஸ் செய்தி
1. இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் தேவனுக்கு மகிமை
லூக்கா 2:14
2. இயேசு கிறிஸ்து வின் பிறப்பால் சாஸ்திரிகளுக்கு சந்தோஷம்.
மத்தேயு 2:10
3. இயேசு கிறிஸ்து வின் பிறப்பால் மேய்ப்பர்களுக்க நற்செய்தி
லூக்கா 2:10
4. இயேசு கிறிஸ்து வின் பிறப்பால் யோசேப்புக்கு ஆச்சிரியம்
லூக்கா 2:33
5. இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் மரியாளுக்கு சிந்தனை
லூக்கா 2:18,19
6. இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் சிமியோனுக்கு சமாதானம்
லூக்கா 2:28,29
7. இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் ஏரோது ராஜாவுக்கு கலக்கம்.
மத்தேயு 2:2,3
இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் நடந்தவைகளைக் குறித்து இதில் சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
================
இயேசு இரட்சகராக பிறந்திருக்கிறார்
=================
லூக்கா 2:11
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
இயேசுவின் பிறப்பு அனைத்து மதத்தினராலும் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை. இயேசு யாருக்காக பிறந்தார்? இயேசு பிறந்ததின் நோக்கம் என்ன இவற்றைக் குறித்து இந்த குறிப்பில் அறிந்துக்கொள்வதே கிறிஸ்மஸ் செய்தி. கிறிஸ்துவின் பிறப்பை அறிந்துக் கொள்வதே மிகப் பெரிய சத்தியம்.
கிறிஸ்துமஸ் செய்தி
கிறிஸ்து யாருக்காக பிறந்தார்?
இயேசு நமக்காக பிறந்தார்
நமக்கு ஒரு பாலகன் (இயேசு) பிறந்தார்
ஏசாயா 9:6
இயேசு நமக்காக பிறந்ததின் நோக்கம் என்ன?
பாவிகளை இரட்சிக்க இயேசு பிறந்தார்?
1 தீமோத்தேயு 1:15
நாம் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?
1. நாம் இரட்சிக்கப்பட விசுவாசிக்க வேண்டும்
ரோமர் 10:9
2. நாம் இரட்சிக்கப்பட அறிக்கை செய்ய வேண்டும்.
ரோமர் 10:10
3. நாம் இரட்சிக்கப்பட இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட வேண்டும்
ரோமர் 5:9
4. நாம் இரட்சிக்கப்பட ஆவியானவரால் புதிதாக்கப்பட வேண்டும்
தீத்து 3:5
5. நாம் இரட்சிக்கப்பட கர்த்தரை நம்ப வேண்டும்
ரோமர் 8:24
பிசாசின் கிரியைகளை அழிக்க இயேசு பிறந்தார்.
1 யோவான் 3:8
====================
இயேசு எப்படி பிசாசின் கிரியைகளை அழித்தார்?
எபிரெயர் 2:14
அவருடைய மரணத்தால் பிசாசின் கிரியைகளை அழித்தார்.
நாம் எப்படி பிசாசை மேற்க்கொள்ள முடியுமா?
1. கர்த்தரை விசுவாசிப்பதால் மேற்கொள்ள முடியும்.
மாற்கு 16:17
2. கர்த்தருக்கு கீழ்படிவதினால் பிசாசை மேற்க்கொள்ள முடியும்
யாக்கோபு 4:7
3. விசுவாசத்தில் உறுதியாயிருந்து பிசாசை எதிர்ப்பதால் பிசாசை மேற்கொள்ள முடியும்?
1 பேதுரு 5:9
4. இயேசுவின் இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும் பிசாசை மேற்க்கொள்ள முடியும்
வெளிப்படுத்தல் 12:11
ஒளியை கொடுக்க இயேசு பிறந்தார்
யோவான் 12:46
============
ஒளியை நாம் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்?
1. வேத வசனத்தின் வழியாக ஒளியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்
சங்கீதம் 119:105
2. அவரது ஜீவனை பெற்றுக்கொள்வதால் ஒளியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்
யோவான் 1:4
3. கர்த்தருக்கு பயப்படுவதால் ஒளியை பெற்றுக்கொள்ள முடியும்
மல்கியா 4:2
4. இயேசுவை பின்பற்றுவதால் ஒளியைப் பெற்றுக் கொள்ள முடியும்
. யோவான் 8:13
அக்கினியை போட இயேசு பிறந்தார்
லூக்கா 12:49
==========
எதற்கு நமக்கு அக்கினி தேவை?
1. நாம் சுத்திகரிக்கபட அக்கினி தேவை
மல்கியா 3:2,3
2. நம்மை சோதிக்க அக்கினி தேவை
1 பேதுரு 4:12,13
3. நமாமை வழி நடத்த அக்கினி தேவை
யாத்திரானமம் 13:21
நாம் கெட்டு போகாமல் இருக்க இயேசு பிறந்தார்?
யோவா 3:16
============
எப்படி கெட்டுபோகிறோம்?
1. இச்சையினாலே கெட்டுபோகிறோம்.
எபேசியர் 4:2
2. பிசாசின் தந்திரத்தால் கெட்டு போகிறோம்
2 கொந்தியர் 11:13
3. மதியீனத்தால் கெட்டுபோகிறோம்
பிரசங்கி 10:1
4. சில மனிதர்களால் கெட்டுபோகிறோம்
சங்கீதம் 74:3
இன்று இயேசு இரட்சகர் பிறந்தார். இயேசு யாருக்காக பிறந்தார்? மற்றும் அவர் பிறப்பின் நோக்கம் என்ன என்பதையும் இந்தக் குறிப்பில் அறிந்துக் கொண்டோம். இந்த நாளில் நமக்காக பிறந்த இயேசுவை வாழ்த்தி வணங்குவோம்
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
கிறிஸ்துவின் குணாதிசயத்தின் சாட்சிகள்
==============
லூக்கா 24:48
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்
இந்தக் குறிப்பில் இயேசு கிறிஸ்துவின் குணாதிசயத்திற்க்கு சாட்சிகளாய் இருந்தவர்கள் யார் யார் என்று சிந்திக்கப்போகிறோம். நாமும் கிறிஸ்துவின் குணாதிசயத்திற்கு சாட்சியாகவும், இயேசுவை குறித்து சாட்சி சொல்லுபவர்களாகவும் இருக்க வேண்டும் இதைத்தான் உயிர் தெழுந்த இயேசு சொன்னது இவைகளுக்கு சாட்சியாகயிருங்கள் யாரெல்லாம் அவரைக் குறித்து சாட்சி சொன்னார்கள் என்பதை இதில் சிந்திக்கலாம்.
1. வானத்திலிருந்து இயேசுவை குறித்து பிதாவின் சாட்சி "நேசகுமாரன்"
மத்தேயு 3:17
மத்தேயு 17:5
2 பேதுரு 1:17,18
2. பாதாளத்திலிருந்து இயேசுவை குறித்து அசுத்த ஆவிகளின் சாட்சி "பரிசுத்தர்"
மாற்கு 1:24
3. இயேசுவை காட்டி கொடுத்த யூதாஸின் சாட்சி அவர் "குற்றமற்றவர்"
மத்தேயு 27:4
1 பேதுரு 1:19
4. இயேசுவை குறித்து அரசனாகிய ஏரோதுவின் சாட்சி "நிரபராதி"
லூக்கா 23:15
5. இயேசுவைக் குறித்து தேசாதிபதியாகிய பிலாத்து, மற்றும் அவரது மனைவியின் சாட்சி "நீதிமான்"
மத்தேயு 27:19,24
6. இயேசுவை குறித்து கள்ளனுடைய சாட்சி "மாசில்லாதவர்"
லூக்கா 23:41
7. இயேசுவை குறித்து நூற்றுகு அதிபதியின் சாட்சி "நீதிபரர்"
லூக்கா 23:47
"தேவகுமாரன்"
மத்தேயு 27:54
மேல் சொல்லப்பட்ட சாட்சிகள் கிறிஸ்துவின் குணாதிசயத்திற்க்கு உண்டான சாட்சிகள். நாமும் இயேசுவை குறித்து சாட்சி சொல்லுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
===============
இயேசுவுக்கு இடம் உண்டா?
==============
ஆதியாகமம் 24:23
நீ யாருடைய மகள் எனக்கு சொல்ல வேண்டும். நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா?
மேல் சொன்ன வசனத்தில் அந்த வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் வரும் ஒரு வார்த்தையை முக்கியப் படுத்தி அதாவது இடம் உண்டா என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம். இயேசுவின் பிறப்பில் அவருக்கு சத்திரத்தில் இடம் இல்லை, ஆனால் உன் இருதயத்தில் இடம் உண்டா? இடம் உண்டு சொல்வதே கிறிஸ்துமஸ். யார் யார் இயேசுவுக்கு இடம் தந்தார்கள் என்பதை குறித்து சிந்திக்கலாம்.
1. முன்னனையில் இயேசுவுக்கு இடம் உண்டு
லூக்கா 2:7
2. மரியாள் வயிற்றில் இயேசுவுக்கு இடம் உண்டு
லூக்கா 1:31
3. யோசேப்பு குடும்பத்தில் இயேசுவுக்கு இடம் உண்டு.
மத்தேயு 1:20-25
4. சகேயு வீட்டில் இயேசுவுக்கு இடம் உண்டு
லூக்கா 19:2,5
5. மார்த்தாள் வீட்டில் இயேசுவுக்கு இடம் உண்டு
லூக்கா 10:38
6. சீமோனின் படகில் இயேசுவுக்கு இடம் உண்டு
லூக்கா 5:1-11
7. இயேசுவுக்கு உன் வீட்டில் இடம் உண்டா இயேசு உன் வீட்டின் கதவை தட்டுகிறார்
வெளிப்படுத்தல் 3:20
இயேசுவுக்கு சத்திரத்தில் இடமில்லை ஆனால் இயேசுவுக்கு என் இருதயத்தில் இடம் உண்டு என்று உன் இருதயத்தை திறந்து கொடுப்பாய் என்றால் அது தான் கிறிஸ்துஸ். இயேசு உன் இருதயத்தில் பிறக்கவேண்டும் உனக்குள் மற்றும் உன் வீட்டில் இயேசு பிரவேசிக்கவேண்டும்
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
================
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
===============
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசியமானவர், ஆலோசனை கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா சமாதான பிரபு.
இது ஒரு கிறிஸ்துமஸ் செய்தி, நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் என்றும் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசி பல வருடங்களுக்கு முன் தீர்க்கமாய் அறிவித்தான். இதில் நமக்காக பிறந்த பாலகனுடைய மற்றும் கொடுக்கப்பட்ட குமாரனின் நாமத்தைக் குறித்து அறிந்துகொள்வோம். அவரது நாமத்தின் மேன்மையை குறித்து சிந்திக்கலாம்.
கிறிஸ்துமஸ் செய்தி
அவர் நாமம்
ஏசாயா 9:6
அதிசியமானவர்
ஆலோசனை கர்த்தர்
வல்லமையுள்ள தேவன்.
நித்தியப் பிதா
சமாதான பிரபு
அவர் நாமம் அதிசியமானவர்
ஏசாயா 9:6
=============
எப்படிப்பட்ட. அதிசியங்களைச் செய்வார்
எண்ணிமுடியாத அதிசியங்களைச் செய்வார்
யோபு 9:10
யாருக்கு அதிசியம் செய்வார்?
1. அவரால் மேய்க்கபடுகிறவர்களுக்கு அதிசியம் செய்வார்
மீகா 7:14,15
2. அவரிடம் வரும்போது அதிசியம் செய்வார்.
லூக்கா 5:18ஆ
3. பலி செலுத்தும் போது போது அதிசியம் செய்வார்
நியாயாதிபதிகள் 13:19
எபிரெயர் 13:15
4. அவரை மகிமைப்படுத்தும் போது அதிசியம் செய்வார்
சங்கீதம் 86:9,10
ஆலோசனை கர்த்தர்
ஏசாயா 9:6
==========
அவரது ஆலோசனைக எப்படிப்படது?
அவரது ஆலோசனை நித்திய காலமாக இருக்கக்கூடியது
சங்கீதம் 33:11
யாருக்கு ஆலோசனை தருவார்?
1. பாவத்தை அறிக்கை யிட்டவர்களுக்கு ஆலோசனை தருவார்
சங்கீதம் 32:5,8
2. ஆவியானவரை பெற்றுக்கொள்ளும் போது ஆலோசனை தருவார்
ஏசாயா 11:2
3. கர்த்தரை நம்பும் போது ஆலோசனை தருவார்.
சங்கீதம் 16:1,7
4. கர்த்திரின் சாட்சிகள் மூலம் ஆலோசனை தருவார்
சங்கீதம் 119:24
கர்த்தரின் சாட்சி வேத வசனம்
யோவான் 5:39
வல்லமையுள்ள தேவன்
ஏசா 9:6
==========
அவர் எப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன்?
அவர் சர்வவல்லமையுள்ள தேவன்
ஆதியாகமம் 17:1
அவர் வல்லமை எங்கிருக்கிறது?
1. அவர் வல்லமை அவரது நாமத்தில் இருக்கிறது.
எரேமியா 10:6
2. அவர் வல்லமை அவரது வார்த்தயில் இருக்கிறது
எபிரெயர் 4:12
3. அவர் வல்லமை அபிஷேகத்தில் இருக்கிறது
அப்போஸ்தலர் 10:38
4. அவர் வல்லமை அவரது வஸ்திரத்தில் இருக்கிறது
லூக்கா 8:43-46
5. அவர் வல்லமை அவரது கரத்தில் இருக்கிறது
2 நாளாகமம் 20:6
நித்திய பிதா
ஏசாயா 9:6
========
நம் பிதா எப்படிப்பட்டவர்?
1. நம் பிதா எல்லோருக்கும் பிதா
மல்கியா 2:10
2. நம் பிதா சோதிகளின் பிதா
யாக்கோபு 1:17
3. நம் பிதா பரமபிதாவானவர்
லூக்கா 11:13
4. நம் பிதா இரக்கங்களின் பிதா
2 கொரிந்தியர் 1:3
5. நம் பிதா பட்சபாதமில்லாமல் நியாயம் தீர்க்கிற பிதா
1 பேதுரு 1:17
சமாதான பிரபு
ஏசாயா 9:6
========
எப்படிப்பட்ட சமாதானம் தருவார்?
1. நதியளவு சமாதானம்
ஏசாயா 66:13
2. சகலவிதமான சமாதானம் தருவார்
2 தெசலோனிக்கேயர் 3:16
3. மிகுந்த சமாதானம் தருவார்.
சங்கீதம் 119:165
4. பூரண சமாதானம் தருவார்
ஏசாயா 26:3
5. எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் தருவார்
பிலிப்பியர் 4:6,7
இந்தக் குறிப்பில் நமக்கு கொடுக்கப்பட்ட குமாரனின் நாமத்தை குறித்து விரிவாய் அறிந்துக் கொண்டோம்.
ஆமென் !
S. Daniel balu
Tirupur.
பிரசங்க குறிப்பு
============
இரட்சண்ணியம்
============
லூக்கா 2:31,32
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயுத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சண்ணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
இயேசு இரட்சண்ணிய மானவர் மற்றும் இரட்சிப்பின் அதிபதி இந்தக் குறிப்பில் இயேசு எப்படியெல்லாம் இரட்சிப்பானவர் என்பதை சிந்திக்கலாம்
1. இயேசு இரட்சணிய கன்மலை
உபாகமம் 32:5
சங்கீதம் 9:1
2. இயேசு இரட்சணிய கொம்பு
சங்கீதம் 81:2
3. இயேசு இரட்சிப்பின் தலைச்சீரா
ஏசாயா 59:17
எபேசியர் 6:17
4. இயேசு இரட்சிப்பின் கேடகம்
2 சாமுவேல் 22:36
சங்கீதம் 18:35
5. இயேசு இரட்சிப்பின் பாத்திரம்
சங்கீதம் 116:3
6. இயேசு இரட்சிப்பின் வஸ்திரம்
2 நாளாகமம் 6:41
ஏசாயா 61:40
7. இயேசு இரட்சிப்பின் மதில்
ஏசாயா 26:1
ஏசாயா 60:18
8. இயேசு இரட்சிப்பின் இரதம்.
ஆபுகூக் 3:8
9. இயேசு இரட்சிப்பின் ஊற்று.
ஏசாயா 2:3
இயேசு இரட்சணியமும் இரட்சிப்புமானவர். இயேசு எப்படி எல்லாம் இரட்சிப்பின் மேன்மையாயிருந்தார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இயேசு என்ற இரட்சண்ணியத்தை என் கண்கள் கண்டதே என்று சிமியோன் சொன்னான்
ஆமென் !
S. Daniel balu
Tirupur