=======================
கேள்விக்கான பதிலை கூறவும் (நீதிமொழிகள் 1-31)
======================
1) வீதிகளில் சத்தமிடுவது எது?
2) காப்பாற்றுவது எது? பாதுகாப்பது எது?
3) இருதயத்தில் எதை எழுத வேண்டும்?
4) விளக்கு, வெளிச்சம், ஜீவவழி எதற்கு ஒப்புமைப்படுத்தபட்டுள்ளது?
5) மரணத்துக்கு தப்புவிப்பது எது?
6) கோபாக்கினையின் நாளில் நமக்கு எது உதவாது?
7) நீதியின் பாதையில் இருப்பது என்ன? இல்லாதது என்ன?
8) யாருடைய வீடு கர்த்தரால் பிடுங்கப்பட்டது?
9) அழிம்பனின் சகோதரன் யார்?
10) சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கு சமானமாயிருப்பது எது?
11) யாருக்கு பரியாசக்காரன் என்று பெயர் சூட்டப்பட்டது?
12) யாருக்கு நாம் நண்பனாகக் கூடாது?
13) ஞானத்தால் கட்டப்பட்டு விவேகத்தால் நிலை நிறுத்தப்படுவது எது?
14) எந்த இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்?
15) யாருடைய விலை முத்துக்களை விட உயர்ந்தது?
பதில்: (நீதிமொழிகள் 1-31)
======================
1) வீதிகளில் சத்தமிடுவது எது?
Answer: ஞானம்
நீதிமொழிகள் 1:20
2) காப்பாற்றுவது எது? பாதுகாப்பது எது?
Answer: நல்யோசனை காப்பாற்றும், புத்தி பாதுகாக்கும்
நீதிமொழிகள் 2:11
3) இருதயமாகிய பலகையில் எதை எழுதிக்கொள்ள வேண்டும்?
Answer: கிருபையையும், சத்தியத்தையும்
நீதிமொழிகள் 3:3
4) விளக்கு, வெளிச்சம், ஜீவவழி எதற்கு ஒப்புமைப்படுத்தபட்டுள்ளது?
Answer: கட்டளையே விளக்கு
வேதமே வெளிச்சம்
போதகசிட்சை ஜீவவழி
நீதிமொழிகள் 6:23
5) மரணத்துக்கு தப்புவிப்பது எது?
Answer: நீதி
நீதிமொழிகள் 10:2
நீதிமொழிகள் 11:4
6) கோபாக்கினையின் நாளில் நமக்கு எது உதவாது?
Answer: ஐசுவரியம் உதவாது
நீதிமொழிகள் 11:4
7) நீதியின் பாதையில் இருப்பது என்ன? இல்லாதது என்ன?
Answer: நீதியின் பாதையில் இருப்பது ஜீவன்
அந்தப் பாதையில் மரணம் இல்லை
நீதிமொழிகள் 12:28
8) யாருடைய வீடு கர்த்தரால் பிடுங்கப்படும்?
Answer: அகங்காரியின் வீடு
நீதிமொழிகள் 15:25
9) அழிம்பனின் சகோதரன் யார்?
Answer: வேலையில் அசதியாய் இருப்பவன்
நீதிமொழிகள் 18:9
10) சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கு சமானமாயிருப்பது எது?
Answer: ராஜாவின் உறுக்குதல்
நீதிமொழிகள் 20:2
11) யாருக்கு பரியாசக்காரன் என்று பெயர்?
Answer: அகங்காரமும், இடும்பும் உள்ளவனுக்கு
நீதிமொழிகள் 21:24
12) யாருக்கு நாம் நண்பனாகக் (தோழன்) கூடாது?
Answer: கோபக்காரனுக்கு
நீதிமொழிகள் 22:24
13) ஞானத்தால் கட்டப்பட்டு விவேகத்தால் நிலை நிறுத்தப்படுவது எது?
Answer: வீடு
நீதிமொழிகள் 24:3
14) எந்த இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்?
Answer: தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில்
நீதிமொழிகள் 29:18
15) யாருடைய விலை முத்துக்களை விட உயர்ந்தது?
Answer: குணசாலியான ஸ்தீரி
நீதிமொழிகள் 31:10
=====================
கேள்விகள்: நீதிமொழிகள் 1-31 அதிகாரம்
=====================
1) கர்த்தர் எதை உண்டாக்கினார்?
2) யாரிடம் சேர கூடாது?
3) யார் வாயாடி? யார் நிர்மூடமுமாய் இருப்பாள்?
4) யாருடைய வாய் எதை வெளிப்படுத்தும்?
5) எதை நாடனும், எதை தேடனும்?
6) எது விசனமாய் இருக்கும், எவன் சாவான்?
7) எது கருக்கும்?
8) ஒரு அதிகாரத்தில் ஒரு வார்த்தை எத்தனை முறை தொடரும்? அவைகள் எவை?
9) யாருக்காக வாயைத் திறக்க வேண்டும்?
10) ____________, ___________ கொளுவுகிறான்?
11) யாரை சகோதரி என்பாய், யாரை இனத்தாள் என்பாய்?
12) யார் ஏழை? யார் செல்வம்?
13) ராஜாவின் கோபம் எதற்கு சமானம்?
14) யார், யார் உத்தமன்?
15) ___________ பேசுகிறவன்____________.
நீதிமொழிகள் - பதில்கள்
===========
1) கர்த்தர் எதை உண்டாக்கினார்?
Answer: கேட்கிற காதும், காண்கிற கண்ணும்
நீதிமொழிகள் 20:12
2) யாரிடம் சேர கூடாது?
Answer: மதுபானப்பிரியர், மாம்சப் பெருந்தீனிக்காரர்
நீதிமொழிகள் 23:20
3) யார் வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாய் இருப்பாள்?
Answer: மதியற்ற ஸ்திரீ
நீதிமொழிகள் 9:13
4) யாருடைய வாய் எதை வெளிப்படுத்தும்?
Answer: நீதிமான், ஞானம்
நீதிமொழிகள் 10:31
5) ஞானத்தை எப்படி கூப்பிட வேண்டும்? புத்தியை எப்படி அழைக்க வேண்டும்
Answer: ஞானம் - வா என்று கூப்பிட வேண்டும்
புத்தி - சத்தமிட்டு அழைக்க வேண்டும்
நீதிமொழிகள் 2:3
6) எது விசனமாய் இருக்கும், எவன் சாவான்?
Answer: புத்திமதி, கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறேன்
நீதிமொழிகள் 15:10
7) எது கருக்கும்?
Answer: இரும்பை இரும்பு
நீதிமொழிகள் 27:17
8) அவையாவன என்ற வார்த்தை நீதிமொழிகள் புத்தகத்தில் எத்தனை முறை வந்துள்ளது?
Answer: ஐந்து முறை
நீதிமொழிகள் 6:17
நீதிமொழிகள் 30:16,19,25,30
9) யாருக்காக வாயைத் திறக்க வேண்டும்?
Answer: ஊமையனுக்காக, திக்கற்றவர்களின் நியாயத்துக்காக
நீதிமொழிகள் 31:8
10) ____________, ___________ கொளுவுகிறான்?
Answer: பெருநெஞ்சன், வழக்கை
நீதிமொழிகள் 28:25
11) யாரை சகோதரி என்றும், யாரை இனத்தாள் என்றும் சொல்லுவாயாக?
Answer: ஞானத்தை நோக்கி, புத்தியை பார்த்து
நீதிமொழிகள் 7:5
12) யார் ஏழை? யார் செல்வம்?
Answer: சோம்பற்கையால் வேலை செய்கிறவன், சுறுசுறுப்புள்ளவன் கையோ
நீதிமொழிகள் 10:4
13) ராஜாவின் கோபம் எதற்கு சமானம்?
Answer: மரண தூதருக்கு
நீதிமொழிகள் 16:14
14) யார், யார் உத்தமன்?
Answer: பலவானை பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தை பிடிக்கிறவனை பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்;
நீதிமொழிகள் 16:32
15) ___________ பேசுகிறவன்____________.
Answer: பொய்களை, நாசமடைவான்
நீதிமொழிகள் 19:9
================
நீதிமொழிகள் 1-5
================
1) ஞானம் எப்போது ஆரம்பம் ஆகும்?2) எப்போது கர்த்தர் நமக்கு தம்முடைய ஆவியை ஆவியை அருளுவார்? அவருடைய வார்த்தைகளை நமக்குத் தெரிவிப்பார்?
3) யார் ஆபத்திற்கு பயப்படாமல் அமைதியாக இருப்பான்?
4) எது உன்னை காப்பாற்றும்? எது உன்னை பாதுகாக்கும்?
5) கர்த்தர் யாருக்கு கேடகமாய் இருக்கிறார்?
6) எது ஆத்துமாவுக்கு இன்பமாய் இருக்கும்?
7) எதை அற்பமாய் எண்ணக்கூடாது எப்போது சோர்ந்து போகக்கூடாது?
8) கர்த்தர் யாரை சிட்சிக்கிறார்?
9) யாருக்கு கிருபையளிக்கிறார்?
10) உடலுக்கெல்லாம் ஆரோக்கியம் எது?
11) எது முக்கியம்?
12) எப்பொழுது பிழைப்பாய்?
13) என் வாயின் ___________ விட்டு நீங்காதிருங்கள்.
14) மனுஷனுடைய வழிகள் யாருக்கு முன்பாக இருக்கிறது?
15) எப்பொழுது நீ விவேகத்தை பேணிக்கொள்வாய் உன் உதடுகள் அறிவைக் காத்துக் கொள்ளும்?
நீதிமொழிகள் 1-5 (பதில்கள்)
==========
1) ஞானம் எப்போது ஆரம்பம் ஆகும்?Answer: கர்த்தருக்கு பயப்படும்போது
நீதிமொழிகள் 1:7
2) எப்போது கர்த்தர் நமக்கு தம்முடைய ஆவியை அருளுவார்? அவருடைய வார்த்தைகளை நமக்குத் தெரிவிப்பார்?
Answer: அவருடைய கடிந்து கொள்ளுதலுக்கு திரும்பும் போது
2) எப்போது கர்த்தர் நமக்கு தம்முடைய ஆவியை அருளுவார்? அவருடைய வார்த்தைகளை நமக்குத் தெரிவிப்பார்?
Answer: அவருடைய கடிந்து கொள்ளுதலுக்கு திரும்பும் போது
நீதிமொழிகள் 1:23
3) யார் ஆபத்திற்கு பயப்படாமல் அமைதியாக இருப்பான்?
Answer: கர்த்தருக்கு செவி கொடுக்கிறவன்
நீதிமொழிகள் 1:33
4) எது உன்னை காப்பாற்றும்? எது உன்னை பாதுகாக்கும்?
Answer: நல்யோசனை, புத்தின
நீதிமொழிகள் 2:11
5) கர்த்தர் யாருக்கு கேடகமாய் இருக்கிறார்?
Answer: உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு
நீதிமொழிகள் 2:7
6) எது ஆத்துமாவுக்கு இன்பமாய் இருக்கும்?
Answer: அறிவு
நீதிமொழிகள் 2:10
7) எதை அற்பமாய் எண்ணக்கூடாது? எப்போது சோர்ந்து போகக்கூடாது?
Answer: கர்த்தருடைய சிட்சையைய அற்பமாக எண்ணாதே
அவர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே
நீதிமொழிகள் 3:10
8) கர்த்தர் யாரை சிட்சிக்கிறார்?
Answer: கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை சிட்சிக்கிறார்
நீதிமொழிகள் 3:12
9) யாருக்கு கிருபையளிக்கிறார்?
Answer: தாழ்மையுள்ளவர்களுக்கு
நீதிமொழிகள் 3:34
10) உடலுக்கெல்லாம் ஆரோக்கியம் எது?
Answer: கர்த்தருடைய வார்த்தைகள்
நீதிமொழிகள் 4:20-22
11) எது முக்கியம்?
Answer: ஞானமே
நீதிமொழிகள் 4:7
12) எப்பொழுது பிழைப்பாய்?
Answer: கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது பிழைப்பாய்
நீதிமொழிகள் 4:4
13) என் வாயின் ___________ விட்டு நீங்காதிருங்கள்.
Answer: வசனங்களை
நீதிமொழிகள் 5:7
14) மனுஷனுடைய வழிகள் யாருக்கு முன்பாக இருக்கிறது?
Answer: கர்த்தரின் கண்களுக்கு
நீதிமொழிகள் 5:21
15) எப்பொழுது நீ விவேகத்தை பேணிக்கொள்வாய் உன் உதடுகள் அறிவைக் காத்துக் கொள்ளும்?
Answer: கர்த்தருடைய ஞானத்தை கவனித்து அவருடைய புத்திக்கு செவியை சாய்க்கும் பொழுது
நீதிமொழிகள் 5:1
============
சரீர உறுப்புகள் (நீதிமொழிகள்)
============
1. துன்மார்க்கருடைய எந்த உறுப்பு அக்கிரமத்தை விழுங்கும்?
அ. நாவு
ஆ. இருதயம்
இ. வாய்
2. மூடனுடைய எந்த உறுப்பு விவாதத்தில் நுழையும்?
அ. நாவு
ஆ. உதடு
இ. வாய்
3. ஞானன்களின் எந்த உறுப்புகள் அவர்களைக் காப்பாற்றும்
அ. இருதயம்
ஆ. உதடு
இ. வாய்
4. பொல்லாத மனுஷர்களின் எந்த உறுப்பு கொடுமையை யோசிக்கும?
அ. இருதயம்
ஆ. செவி
இ. வாய்
5. எந்த உறுப்பின் தாறுமாறுகளை உன்னை விட்டு அகற்ற வேண்டும?
அ. இருதயம்
ஆ. உதடு
இ. வாய்
6. பேளியாளின் மனுஷனாகிய துன்மார்க்கன் எந்த உறுப்பினால் சைகை காட்டுகிறான்
அ. கண்
ஆ. கை
இ. கால்
7. பிறனுடைய முகஸ்துதி செய்கிறவன் அவன் எந்த உறுப்புகளுக்கு வலையை விரிக்கிறான்?
அ. கை
ஆ. இருதயம்
இ. கால்
8. பரஸ்திரி தன் எந்த உறுப்புகளினால் உன்னை பிடிக்கவிடாதே
அ. கண்
ஆ. கண்மணி
இ. கண்ணிமை
9. எந்த உறுப்புகளின் பேச்சோ வருமையை மாத்திரம் தரும்?
அ. நாவு
ஆ. உதடு
இ. வாய்
10. நீதிமானுடைய எந்த உறுப்புகள் அநேகரைப் போஷிக்கும்?
அ. இருதயம்
ஆ. உதடு
இ. வாய்
11. என் __________தீர்க்காயுசும் அதின் ____________ செல்வமும் கனமும் இருக்கிறது.
12. மரணமும் ஜீவனும் எதின் அதிகாரத்திலிருக்கும்?
அ. வாய்
ஆ. உதடு
இ. நாவு
13. ஆபத்துக் காலத்தில் துரோகியை நம்புவது__________ மொழி புரண்ட _________ சமானம்
சரீர உறுப்புகள் (பதில் - நீதிமொழிகள்)
=================
1. துன்மார்க்கருடைய எந்த உறுப்பு அக்கிரமத்தை விழுங்கும்?
Answer: இ. வாய்
நீதிமொழிகள் 19:28
2. மூடனுடைய எந்த உறுப்பு விவாதத்தில் நுழையும்?
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 18:6
3. ஞானவான்களின் எந்த உறுப்புகள் அவர்களைக் காப்பாற்றும்?
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 14:3
4. பொல்லாத மனுஷர்களின் எந்த உறுப்பு கொடுமையை யோசிக்கும்?
Answer: அ. இருதயம்
நீதிமொழிகள் 24:1,2
5. எந்த உறுப்பின் தாறுமாறுகளை உன்னை விட்டு அகற்ற வேண்டும?
Answer: இ. வாய்
நீதிமொழிகள் 4:24
6. பேளியாளின் மனுஷனாகிய துன்மார்க்கன் எந்த உறுப்பினால் சைகை காட்டுகிறான்?
Answer: அ. கண்
நீதிமொழிகள் 6:12,13
7. பிறனை முகஸ்துதி செய்கிறவன் அவன் எந்த உறுப்புகளுக்கு வலையை விரிக்கிறான்?
Answer: இ. கால்
நீதிமொழிகள் 29:5
8. பரஸ்திரீ: தன் எந்த உறுப்புகளினால் உன்னை பிடிக்கவிடாதே?
Answer: இ. கண்ணிமை
நீதிமொழிகள் 6:24,45
9. எந்த உறுப்புகளின் பேச்சோ வருமையை மாத்திரம் தரும்?
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 14:23
10. நீதிமானுடைய எந்த உறுப்புகள் அநேகரைப் போஷிக்கும்?
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 10:21
11. வலது கையில் ----------- , இடது கையில் ------- இருக்கிறது
Answer: வலது கை - தீர்க்க ஆயுசு
இடது கை - செல்வமும், கனமும்
நீதிமொழிகள் 3:16
12. மரணமும் ஜீவனும் எதின் அதிகாரத்திலிருக்கும்?
Answer: இ. நாவு
நீதிமொழிகள் 18:21
13. எது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும ்சமானம்?
Answer: ஆபத்துக் காலத்தில் துரோகியை நம்புவது
நீதிமொழிகள் 25:19
