======================
பாடல் பிறந்த கதை:
கீர்த்தனை: கர்த்தரின் பந்தியில் வா
=======================
ஆசிரியர்: மரியான் உபதேசியார்
இசை: சங்கராபரணம்
தாளம்: ரூபகதாளம்
வேதபகுதி: லூக்கா 22:19,20
கீர்த்தனை பாடல்
கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி
கர்த்தரின்
1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட
- கர்த்தரின்
2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே
– கர்த்தரின்
3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்
பாடல் பிறந்த கதை
====================
கிறிஸ்தவ வழிபாட்டு கீர்த்தனைகளை இயற்றிய கவிஞர்களுள் மரியான் உபதேசியார் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்வதியாபுரத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே கிறிஸ்துவைப் பற்றி பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவராய் திகழ்ந்தார்.
மரியான் உபதேசியார் எளிய வாழ்வை மேற்கொண்டவர். ஆண்டவருக்காக உற்சாகமாக பல இடங்களுக்குச் சென்று பணியாற்றினார். பல இனிய பக்தி பாடல்களை, தன் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி ததும்ப எழுதினார்.
இவர் ஸ்ரீவைகுண்டம், கிறிஸ்தியன் பேட்டை, குளக்கட்டாக்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை, பனையடி பட்டி, வத்றாப்பு, மாதாங்கோயில்பட்டி, அன்பின் நகரம் போன்ற இடங்களில் தொடர்ந்து நற்செய்தி பணியாளராக ஊழியம் செய்து வந்தார்.
கிராமங்களில் பகல் பொழுதில், வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை பற்றி போதனை செய்வது இவரது அன்றாட வழக்கம். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு தனி மரியாதை இருந்து வந்தது.
மரியான் உபதேசியார் 19 கீர்த்தனை பாடல்களை எழுதியுள்ளார். அதில் ஒரு பாடல் தான் கர்த்தரின் பந்தியில் வா சகோதரா கர்த்தரின் பந்தியில் வா என்ற உருக்கமான பாடல் ஆகும்.
ஒருமுறை திருச்சபையின் வளர்ச்சி நிலை குறித்து மரியான் உபதேசாயார், அங்கிருந்த மூப்பரான ஞானப்பிரகாசத்துடன் விவாதித்துக்கொண்டு இருக்கும்போது மனக்கசப்பு உண்டாயிற்று. நாளடைவில் இது பகையாக மாறிவிட்டது.
இதனால் ஞானப்பிரகாசம் திருச்சபையின் ஆராதனைகளில் கலந்துகொள்ளவில்லை. இதை அறிந்து துயருற்ற மரியான் உபதேசியார் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
இந்நிலையில் வருகின்றவாரம் ஞாயிற்றுகிழமையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடைபெரும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆகவே சனிக்கிழமை இரவு பொழுதில் திருவிருந்திற்கான ஆயத்த ஆராதனையிலும் ஞானப்பிரகாசம் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் திருவிருந்து ஆராதனையில் பங்கு பெறுவதாக இருந்தால், பிறரிடம் பகைமை உணர்வுடன் இருக்கக்கூடாது. ஆகவே எப்படியும் மூப்பரான ஞானப்பிரகாசத்திடம் பகையை மறந்து, நட்பு கொண்டு, இருவரும் திருவிருந்தில் பங்கு பெற வேண்டும் என்ற சிந்தனை செய்தவராக ஒரு பாடலை எழுதி முடித்தார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணி அளவில், மரியான் உபதேசியார், மூப்பரான ஞானப்பிரகாசத்தின் வீட்டின் முன் சென்று, முந்தைய நாள் இரவில் எழுதிய கர்த்தரின் பந்தியில் வா சகோதரா கர்த்தரின் பந்தியில் வா என்னும் கீர்த்தனையை பாடினார். இந்த உணர்வுபூர்வமான கீர்த்தனை பாடல் ஞானப் பிரகாசத்தின் உள்ளத்தைத் தொட்டது. ஆகவே வீட்டினுள்ளே இருந்த ஞானப்பிரகாசம், பாடல் முடிந்ததும் வெளியே வேகமாக வந்து, மரியான் உபதேசியாரை கட்டித்தழுவி, மன்னிப்பு கேட்டு, சமாதானம் ஆனார். இருவரும் மனத்தூய்மையுடன் அன்றைய திருவிருந்து ஆராதனையில் பங்கு கொண்டார்கள். பக்திநெறி கொண்ட இந்த கீர்த்தனை, இரண்டுபேரின் உள்ளங்களை ஒன்றாக இணைத்தது.
பிற்காலத்தில் மரியான் உபதேசியார் தேவனின் அழைப்பை பெற்று ஏழாயிரம்பண்ணை அடக்கம் செய்யப்பட்டார்.
மரிய உபதேசியாரின் பாடலுக்கு உருகார், வேறு ஒருவரின் பாடலுக்கும் உருகார் என்று முனைவர் தயானந்தன் பிரான்சிஸ் அவர்கள் புகழ் அஞ்சலி கூறியுள்ளார்கள். இவருடைய கூற்று கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தமிழ் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல கிறிஸ்தவ பாமாலைகளும், கீர்த்தனைகளும் அதிக முக்கியத்துவம் பெற்று, திருச்சபையின் இதயதுடிப்பாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டு, மேலைநாட்டு இசையுடன் திருச்சபையில் பாடப்பட்டு வந்த பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து கிறிஸ்தவ பாமாலைகள் என்றும் கர்நாட இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞான பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரை பக்தியுடன் பாடுங்கள் என்ற (எபேசியர் 5:9) வார்த்தையின்படி, நம்முடைய ஆலய ஆராதனைகளில் இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
The Story behind the Hymns:
Hymnal: Because He lives
Author: Williams J. And Gloria Gaither (1942).
Hymn: Because He Lives
Scripture: John 14:29, Ephesians 2:4-7, Philippians 3:10
The Hymn
God sent His Son, they called Him Jesus
He came to love, heal and forgive
He lived and died, to buy my pardon
An empty grave, is there to prove, my Saviour lives
Because He lives,
1. I can face tomorrow
Because He lives,
all fear is gone
Because I know,
He holds the future
And life is worth,
the living just, because He lives
2. How sweet to hold, a newborn baby
And feel the pride, and joy He brings
But greater still, the calm assurance
This child can face, uncertain days, because He lives
3. And then one day, I’ll cross the river
I’ll fight life’s final, war with pain
And then as death, gives way to victory
I’ll see the lights, of glory and, I’ll know He lives
The Story behind the Hymn
The late 1960s were dark days for Bill and Gloria Gaither. Both of them were struggling with health problems, and Gloria was pregnant with their third child.
It was a special period of anxiety and mental anguish for Gloria. The thought of bringing another child into this world, with all of the "craziness" was taking its toll on her.
The world around them was swirling with news of the Vietnam War, Civil unrest, the drug culture, and violence in the streets. Was this any kind of world in which to raise a family?
Discouraged and disheartened, they looked for signs of hope. One day in the spring, Bill walked out of his office to inspect a newly paved parking area.
Construction workers had covered it with several coarse of tars. Bill was satisfied with the job that was done, but as he turned, he noticed a tiny blade of grass poking through the layers of rick and tar to reach into the sunlight.
On New Year’s Eve, Gloria was sitting in their living room, in agony and fear. The educational system was being infiltrated with the God is dead idea, while drug abuse and racial tensions were increasing. Then suddenly, and quite unexpectedly, she was filled with a gentle, calming peace. It was as if her heavenly Father, like an attentive mother bending over her baby, saw his child and came to her rescue. The panic gave way to calmness and an assurance that only the Lord can impart. She was assured that the future would be just fine, left in God’s hands.
In the early summer the baby was born, and when Bill and Gloria brought their child home, they wrote the song of joy, remembering the blade of grass that survived even in a hostile environment.
Shortly after the baby was born, both Bill and Gloria remembered that the power of the blessed Holy Spirit seemed to come to their aid. Christ’s resurrection, in all of its power and affirmation in their lives, revitalized their thinking. To Gloria, it was life conquering death in their daily activities. Joy once again dominated the fearful circumstances of the day.
Those events gave rise to one of the most famous Christian songs of our time “God sent His Son, they called Him Jesus; He came to love, heal and forgive. He lived and died to buy my pardon; An empty grave is there to prove my Saviour lives. … How sweet to hold a newborn baby; and feel the pride and joy he gives; but greater still, the calm assurance: This child can face uncertain days because He lives. … Because He lives, I can face tomorrow. Because He lives, all fear is gone. Because I know He holds the future, And life is worth the living just because He lives!” She also reminds us that God holds the future right in His hands and makes life worth living for all who trust in Him.
Bill, in most of their song writing ventures, will write a musical setting with an idea in mind and Gloria, using the same idea, will write the lyrics. Bill and Gloria Gaither (now 78 and 72 years old, respectively) are two of the most prolific and popular Southern Gospel music writers and performers in the world. To date, they have written more than 700 songs, produced 60 recordings and several musicals. Both are authors or co-authors of several books.
The apostle Paul wrote of singing psalms, hymns, and spiritual songs, thus recognizing that followers of Jesus can worship God with various musical tastes. These hymns will no doubt have a profound effect on our spiritual lives