===================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
=================
"வில்லியம் கேரி"
(1761-1834)
வில்லியம் கேரி என்பவர் 1761 ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தில் நாட்டிங்காம் என்ற இடத்தில் எட்மண்டு மற்றும் எலிசபெத் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் சிறுவனாய் இருக்கும்போதே அவருடைய தாயார் அநேக மிஷனெரிகளின் சரித்திரத்தை சொல்லி வில்லியம் கேரியை ஒரு மிஷனெரியாக கர்த்தரின் பணிக்கு அற்பணித்தார். கேரி பள்ளியில் படிக்கும்போதே அநேக மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். மேலும் தாவரங்களை குறித்ததான ஆய்விலும் அதிகமாக ஈடுபட்டார்.
வில்லியம் கேரியின் பெற்றோர் நெசவு தொழில் ஆலையில் பணிசெய்துகொண்டு இருந்தனர். ஆனால் குடும்பத்தின் வறுமையினிமித்தமாக, கேரி அங்கிருந்த ஒரு செருப்பு பழுது நீக்கும் கடையில் வேலைக்கு சேர்ந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு ஆசிரியரிடம் கிரேக்க மொழியை கற்றுக்கொண்டு வேதாகமத்தை கிரேக்கமொழியில் வாசிக்க கற்று கொண்டார்.
1781 ம் ஆண்டு வில்லியம் கேரி டோரத்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனால் அப்போது ஏற்பட்ட காலரா நோயினிமித்தனிமாக மூத்த மகனும் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் மரித்துப்போனார்கள்.
இந்நிலையில் கிறிஸ்துவை குறித்தும், இயேசு சிலுவையில் சம்பாதித்த இரட்சிப்பை குறித்தும் இந்திய மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஒரு மிஷனெரி ஸ்காட்லாந்து மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
இதைக்கேட்ட வில்லியம் கேரி தன்னை ஒரு மிஷனெரியாக கர்த்தருக்கு ஊழியம் செய்ய அற்பணித்து, அங்குள்ள வேதாக கல்லூரியில் சேர்ந்து எபிரேயம், பிரஞ்சு, டச்சு, இத்தாலி, இலத்தீன் மொழிகளை கற்று, இறையியல் கல்லூரி படிப்பை நிறைவு செய்து இங்கிலாந்து தேசத்தில் ஒரு பாப்டிஸ்ட் (Baptist) திருச்சபையில் போதகராக நியமிக்கபட்டார்.
1887 ம் ஆண்டு பாப்டிஸ்ட் திருச்சபையின் வருடாந்திர ஊழியர்கள் பொதுக்குழு கூடுகையில் வில்லியம் கேரி சுவிஷேசம் அறிவிப்பது எல்லா கிறிஸ்தவர்களின் கடமை என்பதை ஆணித்தரமாக வலியுருத்தினார்.
ஆனால் அங்கிருந்த ஒரு மூத்த வயதான பெரிய போதகர் வில்லியம் கேரியை பார்த்து இளம் வாலிபனே, உட்காருங்கள், கடவுள் புறஜாதி மக்களை எப்போது கிறிஸ்தவர்களாக மாற்றம் செய்ய சித்தமாய் இருக்கின்றாரோ அப்போதுதான் நடைபெறும். கடவுள் தான் செய்ய விரும்பும் செயல்பாடுகளுக்கு எந்த ஒரு மனிதனுடைய உதவியும் கடவுளுக்கு தேவைப்படாது என்று எதிர்மறையாக கூறினார். ஆனால் வில்லியம் கேரிக்கு ஆதரவாக பலர் பேசினார்கள். இதனிமித்தமாய் இங்கிலாந்து தேசத்தில் 1792 ம் ஆண்டு முதன்முதலாக பாப்டிஸ்ட் மிஷன் சங்கம் (Bsptist Mission Society) ஏற்படுத்தப்பட்டது.
பாப்டிஸ்ட் மிஷன் சங்கத்தின் முதல் மிஷனெரியாக வில்லியம் கேரி இந்தியா வருவதற்கு தன்னை அற்பணித்தார். ஆனால் வில்லியம் கேரியின் மனைவி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கேரியிடம் கடவுள் உங்களை மிஷனெரி ஊழியத்திற்கு அழைத்திருக்கின்றார் ஆனால் என்னை அல்ல என்று பதில் கொடுத்து தானும் தன்னுடைய நான்கு பிள்ளைகளும் இங்கிலாந்து தேசத்திலே இருக்கபோவதாக கூறினார்.
ஆயினும் வில்லியம் கேரி தன் மனைவியை சமாதானப்படுத்தி 1792 ம் ஆண்டு அவருடைய 32 ம் வயதில் இந்தியாவில் உள்ள கல்கத்தா பகுதிக்கு கிறிஸ்துவின் நற்செய்திபணியை செய்ய வந்து இறங்கினார். ஆரம்பத்தில் கல்கத்தாவில் சுந்தர்பன்ஸ் என்ற இடத்தில் சணல் தயாரிக்கும் தொழிற்சாலையில் சேர்ந்து தொழிலாளிகளுக்கு கிறிஸ்துவை பற்றி அறிவித்து அவர்கள் மூலம் பெங்காலி மொழியும் கற்றுக்கொண்டார்.
வில்லியம் கேரி கல்கத்தாவில் பெங்காலி மொழி இலக்கணத்தை கற்றுகொடுக்கும் ஒரு இந்துமத பிராமண ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு அவர் மூலமாக சமஸ்கிருத மொழியையும் கற்றுக்கொண்டு மற்றும் இந்துமத வேதங்கள் பலவற்றையும் கற்றுக்கொண்டார்.
வில்லியம் கேரி பெங்காலி மொழியில் மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார். ஆயினும் ஏழு ஆண்டுகள் ஆனபின்னரும் ஒருவரும் கூட கிறிஸ்தவராக ஞானஸ்நானம் எடுக்க முன்வராமல் இருந்தது வில்லியம் கேரிக்கு மனச்சோர்வு ஏற்படுத்தியதது.
பிரச்சினைகளும் போராட்டங்களும் இவர் வாழ்வை பின்னிப் பிணைந்தது. ஒருபக்கம் கடுமையான உஷ்ணம், உணவு ஒவ்வாமை, குடியிருக்க சரியான வசதியின்மை. ஆனால் இந்த கடினமான சூழ்நியில் கல்கத்தாவில் மலேரியா தொற்றுநோய் பரவியதால் அவருடைய ஐந்து வயது மகனும் இறந்து போனான். மகனை புதைப்பதற்கு யாரும் முன்வராதநிலையில் வில்லியம் கேரியே கல்லறைதோண்டி அவரே மகனை அடக்கம் செய்தார்.
இவையெல்லாம் வில்லியம் கேரியின் மனைவியை மிகவும் பாதித்தது. இதில் மிகவும் பலவீனப்பட்டுபோடோரத்தி அம்மையார் நாளடைவில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்திலிருந்து வரவேண்டிய நிதி உதவி, ஒரு கப்பல் விபத்தினால் சுமார் மூன்று மாதம் தடைபட்டு போயிற்று. வீயாதி, மரணம், மனசோர்வு மற்றும் பொருளாதார நேருக்கடி எல்லாம் வில்லியம் கேரிக்கு மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.
ஆயினும் வில்லியம்கேரி மனம் தளராமல் கர்த்தர் மீது நம்பிக்கைவைத்து தொடர்ந்து நற்செய்தி பணியை செய்தார். சோதனைகளை சாதனைகளாக மாற்ற ஆரம்பித்தார்.
வெகுவிரைவில் பெங்காலி மொழியில் புலமைபெற்று, பரிசுத்த வேதாகமத்தை பெங்காலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்து சுவிசேஷத்தை அறிவித்ததால் பலர் இவருடைய நற்செய்திபணியை கேட்பதற்கு ஆர்வம் காட்டினார்கள்.
இந்த கால கட்டத்தில் வில்லியம் கேரிக்கு உதவியாக 1797 ம் ஆண்டு பாப்டிஸ்ட் மிஷனை சேர்ந்த வில்லியம் வார்டு என்ற திறமையான ஆசிரியரும் மற்றும் அச்சுக்கலையை நன்கு அறிந்திருந்த யோசுவா மார்ஷ்மன் என்ற மிஷனெரிகளாக இங்கிலாந்திலிருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார்கள்.
வில்லியம் கேரியின் அயறாத நற்செய்திபணியினால் 1801 ம் ஆண்டு ஜனவரி 1 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிருஷ்ணன் பால் என்பவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு வங்க தேசத்திற் முதல் விசுவாசியாய் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய மக்கள் கிறிஸ்துவினிடம் வழிநடத்தப்பட வேண்டும் என்றால் வேதாகமம் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது கேரியின் எண்ணம். ஆகவே வேதாகமத்தை 1802 ம் ஆண்டு பெங்காலி மொழியில் மொழிபெயர்த்தார். அதை வில்லியம் வார்டு அச்சு இயந்திரம் மூலம் வெளியிட முயற்சிகள் செய்தார். அப்படியே யோசுவா மார்ஷ்மன் அவர்கள் கல்கத்தாவிலுள்ள செராம்பூர் பகுதியில் சிறுபிள்ளைகளுக்கு கல்வி கற்று கொடுக்க ஒரு பாடசாலையை உறுவாக்கினார்.
இந்நிலையில் 1808 ம் ஆண்டு மனநோய் முற்றியநிலையில் டாரத்தி அம்மையார் மரித்துப்போனார்கள். ஒருவகையில் தன்னை கர்த்தருக்குள் திடப்படுத்திகொண்டு தொடர்ந்து நற்செய்தி பணியை வில்லியம் கேரி மேற்கொண்டார். காலை மற்றும் மாலை தெருபிரசங்கத்தின் மூலம் நற்செய்திபணிக்காக பல இடங்களுக்கு சென்று அறிவிக்கப்பட்டதால் அநேகர் ஞானஸ்நானம் பெற்று இயேசுவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.
வில்லியம் கேரியின் நற்செய்தியின் மூலமாய் 1810 ஆண்டு வரை 300 பேர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்து இயேசுவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.
ஆகவே இவர்கள் ஆராதனைக்கு என்று பல ஆலங்கள் அவர்கள் கிராமங்களில் கட்டப்பட்டது. ஆதறவற்ற பிள்ளைகளுக்கு என்று 6 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் பெண்களுக்கு என்று முதன்முறையாக கல்விக்கூடங்களை நிறுவி மேலைநாட்டு கல்வி கற்றுகொடுக்கப்பட்டது.
இந்நிலையில் வில்லியம் கேரி அவர்கள் கல்கத்தாவில் சமாச்சார் தர்ப்பன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து அதன்மூலம் சமுதாயத்தில் இருந்த கொடுமைகளை வெளியிட்டு, சமுதாய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
வில்லியம் கேரி வாழ்ந்த காலத்தில் இந்துமத பூசாரிகள் மூலம் நடைபெற்ற சமூதாய கொடுமைகளான தேவதாசி, சதி அல்லது உடன்கட்டை ஏறுதல்(கணவர் மரித்துபோனால் மனைவியை உயிரோடு எரிப்பது), குழந்தை நரபலி, குழந்தை திருமணம், வயோதிகர்களை உணவில் விஷம் வைத்து கொலை செய்தல், உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களை முதலைகள் நிறைந்த நதியோரத்தில் விட்டுவிடுதல், குஷ்டரோகியை உயிருடன் எரித்தல் மற்றும் ஜாதீய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அதை பத்திரிக்கை மூலமாக வெளியிட்டார். இதனால் ஆங்கிலேய அரசாங்கம் வில்லியம் கேரியின் கோரிக்கையை ஏற்று பல சமுதாய கொடுமைகளை 1829 ம் ஆண்டு தடைசெய்தது. இதையெல்லாம் பார்த்து வேகுண்டு எழுந்த இந்துமத பூசாரிகள் வில்லியம் கேரியை கடுமையாக எதிர்த்தார்கள். மேலும் அவர்கள் வில்லியம் கேரி வேதாகமத்தை மொழிபெயர்க்கும் அச்சு கூடத்தையும் பத்திரிக்கை அலுவலகத்தையும் தீ வைத்து எரித்தார்கள். இந்த இழப்புகளை கிறிஸ்துவுக்காக சகித்துக்கொண்டார்.
வில்லியம் கேரியின் சமுதாய கொடுமைகளுக்கு எதிரான பணியை கண்ட திரு. இராஜா ராம் மோகன்ராய் அவர்களும் வில்லியம் கேரியோடு இனைந்து சமுதாய கொடுமைகளுக்கு எதிரான கொடுமைகளுக்காக போராடினார்.
இந்நிலையில் 1818 ம் ஆண்டு வில்லியம் கேரி, யோசுவா மார்ஷ்மன் மற்றும் வில்லியம் வார்டு மூவரும் சேர்ந்து கல்கத்தாவில் உள்ள செராம்பூர் பகுதியிதில் ஒரு வேதாக கல்லூரியை நிறுவி அநேக போதகர்களையும், சபை ஊழியர்களையும் உறுவாக்கினார்கள். இவர்கள் மூலமாக 126 கிராமங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவர்கள் பாடபுத்தகங்களையும், இலக்கண நூல்களையும் எழுதினார்கள்.
முழு வேதாகமத்தை 20 மொழிகளிலும் புதிய ஏற்பாட்டை 40 மொழிகளில் (சமஸ்கிருதம், ஒரியா, மராத்தி, இந்தி, பெர்சியா, சீன மொழி, அரபிக் உட்பட) மொழிபெயர்க்க பட்டு 2,12,000 வேத புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியாயின. பல மொழிகளைக் கற்ற பேரறிஞர் என்று கேரி புகழ்பெற்றார்.
கல்கத்தாவில் செராம்பூர் பகுதியில் வில்லியம் கேரி தாவரவியல் தோட்டத்தை அமைத்து அதில் பல 427 வகையான மரச்செடிகளை நட்டு பத்திரிக்கைகளில் காடு வளர்த்தல் மற்றும் காடுகள் பராமரித்தல் போன்ற விளிப்புணர்வுகளை இந்தியாவில் ஏற்படுத்தினார். 1820 ம் ஆண்டு வேளான்மை மற்றும் தோட்டக்கலைக்கான சங்கத்தையும் நிறுவினார்.
இந்தியாவிலுள்ள சமூகத்தினருக்கு மாற்றம் கொண்டுவருவதற்கு கேரி துணிச்சலுடன் மேற்கொண்ட திட்டம் சேமிப்பு வங்கி 1820 ல் தொடங்கி வைத்தார். 19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 60-72% வரை இருந்ததால் மக்கள் கடன்வாங்குவது நடைமுறையில் சாத்தியமில்லால் இருந்து. வில்லியம் கேரியின் சேமிப்பு வங்கி தொடங்கியது இந்திய மக்களுக்கு நன்மையாய் கானப்பட்டது. இதன்மூலம் சுதேச தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டியினை பெற்று தொழில்வளம் உயர்ந்தது.
வில்லுயம் கேரி, நீராவி இஞ்சினை இந்தியாவிற்கு அறிமுகம் செய்துவைத்து அநேக பொரியாளர்களையும் வேலைவாய்ப்புகளையும் உறுவாக்கினார்.
இந்தியாவில் உள்ள ஜோசிய மூடநம்பிக்கையை தகற்பதற்காக செராம்பூர் பல்கழைகளகத்தில் இந்தியாவில் வானசாஸ்திர படிப்பு, பூகோள படிப்பு, மற்றும் மேல் நாட்டு அறிவியல் பாடங்களை வில்லியம் கேரி அறிமுகம் செய்துவைத்தார். இதனால் பல வேலைவாய்ப்புகளை உறுவாக்கினார்.
இந்நிலையில் வங்காள மொழியின் புதிய ஏற்பாட்டின் எட்டாவது பதிப்பின் கடைசிதாளைத் திருத்தியபோது எனது வேலை முடிந்துவிட்டது, தேவனுடைய சித்தத்திற்கு காத்திருப்பதைவிட, நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறிய வில்லியம் கேரி தன்னுடைய 73 ம் வயதில் இந்தியாவில் 42 வருடங்கள் சேவையை நிறைவு செய்து ஜுன் மாதம் 9 ம் நாள் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்.
1793 ம் கல்கத்தாவில் காலடியெடுத்து வைத்த இவர் திரும்பி தன் நாட்டிற்கு சென்றதே இல்லை. வில்லியம் கேரி ஒரு தலைசிறந்த நற்செய்தி பணியாளர், கல்வி பணி, வேதாகம மொழிபெயர்ப்பாளர், சமுதாய சீர்திருத்தவாதி என்று பல துறைகளில் சிறந்து விளங்கினார்.
வில்லியம் கேரியின் புகழ்பெற்ற வாசகம் (ஏசாயா 54: 2) Expect great things from God; attempt great things for God (கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்; கடவுளுக்காக பெரிய காரியங்கள் சாதிக்கப்பாருங்கள்) உலக அளவில் பிரசித்தி பெற்றது. வில்லியம் கேரி இந்தியாவில் ஆற்றிய பணியை இங்கிலாந்து சீர்திருத்த திருச்சபை (Church of England) ஆராதனை நாட்காட்டியில் அக்டோபர் 19 ம் நாள் நினைவுகூறப்படுகிறது.
வில்லியம் கேரி அவர்கள் ஒரு செருப்பு பழுதுநீக்கும் மனிதராக இருந்து நற்செய்தி பணியின் மூலம் வேதாகமத்தை பல இந்திய மொழிகளில் வெளியிட்டு, எராளமான கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்தி அநேக திருச்சபைகளை நிறுவியதால் இன்று தற்கால மிஷனெரி இயக்கங்களின் தந்தை என்றும் வங்காள உரைடைத் தந்தை என்றும் எல்லோராலும் இன்று அழைக்கப்படுகின்றார்.
வில்லியம் கேரி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செராம்பூர் பல்கலைக்கழகம் இன்றும் இலட்சக்ணக்கான மாணவர்களையும் ஆயிரக்கணக்காக போதகர்கள் மற்றும் மிஷனெரிமார்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. வில்லியம் கேரியை கௌரவபடுத்திய விரும்பிய இந்திய அரசாங்கம் சிறப்பு தபால்தலையை வெளியிட்டு கனம் பண்ணியது.
இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கைக்காக வில்லியம் கேரி போன்ற மிஷனெரிகளை இந்தியாவிற்கு அனுப்பியதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த அழைக்கப்படுகின்றோம்.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
The Gospel Pioneer:
"William Carey"
(1761-1834)
William Carey was born in 1761 to Edmund and Elizabeth Carey, who were weavers in England. As a child, he was keenly interested in Botany and he possesses a gift for language, teaching himself Latin. He apprenticed in a local cobbler's shop, and enthusiastically took up the faith, and though little educated, the young convert borrowed a Greek grammar and proceeded to teach himself New Testament Greek.
Carey's family sunk into poverty and stayed there even after he took over his uncle business. He married Dorothy in 1781 had seven children, five sons and two daughters; both girls died in infancy, as well as son Peter, who died at the age of 5.
He further studied Hebrew, Italian, Dutch, and French and became a preacher, later he was ordained at one of the Baptist Church in England.
One Christian ministers’ meeting was arranged in 1787 and he raised the question of whether it was the duty of all Christians to spread the Gospel throughout the world. Then the president of the council retorted: "Young man, sit down; when God pleases to convert the heathen, he will do it without your aid and mine." But Carey persisted.
One day Carey preached a pro-missionary sermon in 1789 by using Isaiah 54:2–3, in which he repeatedly used the epigram which has become his most famous quotation: *Expect great things from God; attempt great things for God* which resulted in the formation of Baptist Missionary Society in 1792.
Then Carey at the age of 32 came to India and landed in Calcutta (1793) and he sought means to support themselves and a place to establish their mission.
Carey's early years there was miserable. He lived with people ravaged by extreme poverty and diseases. There were years of discouragement (no Indian convert for seven years), debt, disease, deterioration of his wife's mind, death, but by the grace of God — and by the power of the Word — Carey continued and conquered for Christ! He learned Bengali with the help of a pundit, and in a few weeks began translating the Bible into Bengali and preaching to small gatherings.
Meanwhile, the Baptist missionary society had begun sending more missionaries to India. Carey was followed by William Ward, a printer; Joshua Marshman, a school teacher. In December 1800, after seven years of missionary labor, Carey baptized his first convert, Krishna Pal (Dalit), and two months later; he published his first Bengali New Testament.
Once settled in Serampore, William Ward set up the printing press at the mission center and translated the Bible in Bengali, Sanskrit, and other major languages and dialects. Joshua Marshman opened schools for children, and Carey began teaching at Fort William College in Calcutta. He had laid an impressive foundation of Bible translations, education, and social reformation. He also used his influence with the Governor-General to help put a stop to the practices of infant sacrifice and Sati, after consulting with the pundits and determining that they had no basis in the Hindu sacred writings.
Carey and Marshman found “ Serampore College” in 1818, a Bible College for Indians to train indigenous ministers for the growing churches.
At the age of 73, Carey died in 1834. He has spent an active 41 years serving the Lord in India. Carey is honored with a feast day in the Calendar of Saints of some churches of the Anglican Communion on 19 October.
In Carey's lifetime, the mission printed and distributed the Bible in whole or part in 44 languages and dialects. The Famous author, John Brown Myers entitled his biography of Carey, ‘William Carey, the Shoemaker Who Became the Father and Founder of Modern Missions’. William Carey was one of God’s giants in the history of mission and evangelism. Let us remember these missionaries’ lives and dedicate our children for mission and evangelism in India.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.