=====================
தாழ்த்தபடுவார்கள் - யார்?
=====================
1) தன்னை உயர்த்துகிறவன் மத்தேயு 23:12
2) மேட்டிமையானவர்கள்
2) மேட்டிமையானவர்கள்
2 சாமுவேல் 22:28
3) அகந்தையாய் நடக்கிறவர்கள்
3) அகந்தையாய் நடக்கிறவர்கள்
தானியேல் 4:37
4) கர்வமாய் நடக்கிறவன்
சகரியா 10:11
4) கர்வமாய் நடக்கிறவன்
சகரியா 10:11
===========
கெட்ட கண்
============
1) திருப்தி அடையாத கண் (உலக காரியங்களில் & உலக பொருட்களில்)
நீதிமொழிகள் 27:20
2) தேவ பயம் இல்லாத கண்
ரோமர் 3:18
3) விபச்சார மயக்கத்தால் நிறைந்த கண்
2 பேதுரு 2:14
4) அக்கம் பக்கம் பார்க்கும் கண்
நீதிமொழிகள் 4:25
5) மற்றவர்கள் குறைகளை பார்க்கும் கண்
மத்தேயு 7:3
6) மாயையை (உலகத்தை) பார்க்கும் கண்
சங்கீதம் 119:37
7) கொழுப்பு நிறைந்த கண்
சங்கீதம் 73:7
8) மேட்டிமை நிறைந்த கண்
சங்கீதம் 18:27
9) ஏழைக்கு தன் கண்களை விலக்கும் கண்
நீதிமொழிகள் 28:27
10) இடறல் உண்டாக்கும் கண்
மத்தேயு 18:9
11) பின்னானவைகளை பார்க்கும் கண்
ஆதியாகமம் 19:17-26
12) சூழ்நிலைகளை பார்க்கும் கண்
மத்தேயு 14:3
===============
தாவீதின் ஜெபம்
================
1) இளவயதின் பாவங்களையும், மீறுதல்களையும் நினையாதேயும்
சங்கீதம் 25:7
2) பாதி வயதில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்
சங்கீதம் 102:24
3) பெலன் ஒடுங்கும் போது கைவிடாதிரும்
சங்கீதம் 71:9
4) முதிர் வயதில் என்னை தள்ளி விடாதேயும்
சங்கீதம் 71:9
===========================
இயேசு செய்து நாம் செய்யும்படி இயேசு சொன்ன சில வார்த்தைகள்
============================
1) நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
1 பேதுரு 1:16
2) நான் உலகத்தானல்லாதது போல நீங்களும் உலகத்தாரல்ல
யோவான் 17:16
3) நான் உனக்கு இரங்கினது போல நீயும் உன் வேலைக்காரனுக்கு இரங்கு
மத்தேயு 18:33
4) நான் உங்களுக்கு செய்தது போல நீங்களும் செய்யுங்கள்
யோவான் 13:15
5) நான் உங்களில் அன்பாய் இருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்
யோவான் 13:34
6) கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13
7) நான் பிதாவின் அன்பில் நிலைத்திருக்கிறது போல நீங்களும் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்
யோவான் 15:10
====================
அவிசுவாசியை பார்த்து தேவன் கேட்கும் கேள்விகள்
=====================
1) உன் விசுவாசம் எங்கே?
லூக்கா 8:25
2) ஏன் பயப்பட்டிர்கள்
மத்தேயு 8:26
3) அவிசுவாசியாயிராமல் விசுவாசியாய் இரு
யோவான் 20:27
4) அற்ப விசுவாசியே
மத்தேயு 16:8
5) விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே
மத்தேயு 17:17
========================
ஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்
========================
1) போஜனபிரியன் தரித்திரன் ஆவான்
நீதிமொழிகள் 23:21
2) போஜன பிரியனாயிருந்தால் தொண்டையில் கத்தியைவை
நீதிமொழிகள் 23:2
3) மாம்ச பெருந்தீனிக்காரருடன் சேரக்கூடாது
நீதிமொழிகள் 23:20
4) போஜனத்தினால் இருதயம் ஸ்திரப்படாது
எபிரெயர் 13:9
5) போஜனத்தினால் நாம் தீட்டு (கறை) படக்கூடாது
தானியேல் 1:8
6) பெருந்திண்டியினால் இருதயம் பாரம் அடைய கூடாது
லூக்கா 21:34
7) போஜனம் சகோதரனுக்கு இடறல் உண்டாக்க கூடாது
1 கொரிந்தியர் 8:13
8) போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது
1 கொரிந்தியர் 8:8
9) போஜனபிரியரூக்கு தோழனாக இருப்பவன் தன் தகப்பனை அவமானப் படுத்துகிறான்
நீதிமொழிகள் 28:7
10) உன் சத்துரு பசியாய் இருந்தால் அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு
நீதிமொழிகள் 25:21
11) தேவனுடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்க தசம பாகம் கொடுக்க வேண்டும்
மல்கியா 3:10
12) தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல
ரோமர் 14:17
13) கர்த்தருக்கு என்று புசிக்க வேண்டும்
ரோமர் 14:6
14) புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாக நினைக்க கூடாது
ரோமர் 14:3
15) புசியாதிருக்கிறவன் புசிக்கிறவனை குற்றவாளியாக தீர்க்க கூடாது
ரோமர் 14:3
16) நமது ஆகாரத்தை ஏழைகள், அநாதைகள் உடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்
யோபு 31:17
17) மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
உபாகமம் 8:3
=======================
கனி கொடுக்க நாம் செய்ய வேண்டியது
=======================
1) இயேசுவில் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:5
2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட வேண்டும்
சங்கீதம் 92:13-15
3) இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்க வேண்டும்
சங்கீதம் 1:1-3
4) இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 1:1-3
5) கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்க வேண்டும்
எரேமியா 17:7,8
6) கர்த்தர் நம்மை சுத்தம் பண்ணும் போது (சிட்சைக்கும் போது)
யோவான் 15:2
7) விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு பெருகும் போது
2 பேதுரு 1:5-8
=============================
கழுகு மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்
===========================
1) கழுகு தன் கூட்டை உயரத்தில் கட்டும் (யோபு 39:27) = நமது குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது (பிலிப்பியர் 3:20). கர்த்தர் நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணி கொண்டு இருக்கிறார்
யோவான் 14:3
2) கழுகு கன்மலையில் வாசம் பண்ணும் (யோபு 39:28) = இரட்சிக்கபட்ட உடன் நாம் உன்னதங்களில் கர்த்தரோடு உட்கார்ந்து இருக்கிறோம்
எபேசியர் 2:7
3) கழுகு இரையை நோக்கி தீவிரிக்கும் (ஆபகூக் 1:8) = நாமும் நமது ஆகாரமாகிய வசனத்தை வாஞ்சிக்க வேண்டும்
எரேமியா 15:16
4) கழுகு தூரப் பார்வை உடையது (யோபு 39:29) = விசுவாசிக்கு தூரப் பார்வை வேண்டும் (மேலானவைகளை நாட வேண்டும்) சரியான பார்வை இல்லா விட்டால் பின்மாற்றம்தான். ஆபிரகாம் பெரிய செல்வந்தனாக இருந்தாலும் தூரப்பார்வை உடையவனாக இருந்தான். (தூரத்திலேயே அதை கண்டு என்று எபிரெயர் 11:13 ல் வாசிக்கிறோம்). உன் கண்கள் தூரத்தில் உள்ள தேசத்தை பார்க்கும் (ஏசாயா 33:17). பன்றி எப்போதும் கிழேயே (உலகத்தை) பார்த்து கொண்டு நடக்கும். கசாப்பு கடைக்கு போகும் போது தான் மேலே பார்க்கும் (பன்றியின் கால்களை கட்டி ஒரு கம்பை நடுவில் சொறுகி தூக்கி செல்வார்கள்) அப்போது தான் அதற்கு தெரிந்தது இவ்வளவு அழகான வானம், சூரியன் உண்டு என்று. இன்றைக்கு சில விசுவாசிகள் பன்றியை போல (உலகம், உலக ஆசிர்வாதம்) ஜீவிக்கிறார்கள்.
5) கழுகு தன் பெலனை புதுப்பித்துக் கொள்ளும் (ஏசாயா 40:31) = உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து (நாகூம் 2:1) என்று வாசிக்கிறோம். உம்மில் பெலன் கொள்ளுகிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் 84:5
6) கழுகு தன் கூட்டை கலைத்து தன் குஞ்சுகளை சுமப்பது போல கர்த்தர் நம்மை சுமந்து செல்கிறார்
உபாகமம் 32:11,12
யாத்திராகமம் 19:4
7) கழுகு நீண்ட ஆயுள் உடையது (சங்கீதம் 103-5) = கழுகு இந்த பூமியில் 70 வருடம் வாழ்வதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். கர்த்தர் நமக்கு நித்திய ஜீவனை கொடுத்து உள்ளார்
1 யோவான் 2:25
8) கழுகு ஆகாயமார்க்கமாக வேகமாக பறந்து போகும் (நீதிமொழிகள் 23:5, 2 சாமுவேல் 1:23) = அது போல எக்காளம் தொனிக்கையில் நாமும் மேகத்தில் பறந்து போவோம்
1 கொரிந்தியர் 15:51
9) கழுகு தன் கூட்டை கலைக்கும் (உபாகமம் 32:11) = இயேசுவின் வருகையில் நாம் இந்த உலகம்/சரிரம் ஆகிய கூட்டை விட்டு இயேசுவிடம் போக போகிறோம்
2 கொரிந்தியர் 5:1
10) கழுகு உயர பறக்க கூடியது (யோபு 39:27) = விசுவாசிகள் சிந்தனை உயர்ந்தவைகளாக இருக்க வேண்டும். பூமிக்குரிய சிந்தனை அதிகம் இருக்க கூடாது. மாம்ச சிந்தனை மரணம்
ரோமர் 8:6
11) கழுகு தைரியமான பறவை. விஷம் உள்ள பாம்பை கூட பிடித்து சாப்பிடும். = விசுவாசிகள் தைரியமாக இருக்க வேண்டும். மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டு விடாதிருங்கள் (எபிரெயர் 10:35). நீதிமான்களோ சிங்கத்தை போல தைரியமாகயிருக்கிறார்கள்
நீதிமொழிகள் 28:1
12) பிணம் உள்ள இடத்தில் கழுகு கூடும் (லூக்கா 17:37) = பிணம் என்பது கர்த்தரை குறிக்கும். கழுகுகள் என்பது பரிசுத்தவான்களை குறிக்கும். இரகசிய வருகையில் பரிசுத்தவான்கள் இயேசுவோடு சேர்த்து கொள்ளபடுவார்கள்