=====================
வேத வினா (ஆற்றைக் கண்டுபிடியுங்கள்)
=====================
1) ஏதேனிலிருந்து எந்த ஆறு அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்?
அ) இதேக்கேல்
ஆ. கீசோன்
இ. ஐபிராத்து
2) தெலிலாள் எந்த ஆற்றங்கரையில் இருந்தாள்?
அ. கெதரோன்
ஆ. சோரேக்
இ. அர்னோன்
3) தானியேல் எந்த ஆற்றங்கரையில் இருந்ததாக தரிசனத்தில் கண்டான்?
அ. ஊலாய்
ஆ. கீதரோன்
இ. பேசோர்
4) ஏதேனிலிருந்து பிரிந்த நான்காம் ஆறு எது?
அ. சோரேக்
ஆ. கீகோன்
இ. ஐபிராத்து
5) எருசலேமில் உண்டான பலிபீடங்களையும் தூபபீடங்களையும் அகற்றி எந்த ஆற்றிலே போட்டார்கள்?
அ. கீதரோன்
ஆ. யாபோக்
இ. கேரீத்
6) இஸ்ரவேல் ஜனங்கள் காதேஸ்பர்னேயாவை விட்டு புறப்பட்டது முதற்கொண்டு எந்த ஆற்றைக் கடக்குமட்டும் சென்றகாலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று?
அ. கீதரோன்
ஆ. பைசோன்
இ. சேரேத்
7) ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கொண்டு வந்தபோது லேவியர் அதை எடுத்து வெளியே எந்த ஆற்றிற்கு கொண்டு போனார்கள்?
அ. கீதரோன்
ஆ. கேரீன்
இ. பைசோன்
8) தாவுதோடே போன அறுநூறு பேர்களில் இருநூறு பேர் விடாய்த்துபோன படியால் எந்த ஆற்றைக் கடக்க மாட்டாமல் நின்று போனார்கள்?
அ. கீகோன்
ஆ. பேசோர்
இ. யாபோக்
9) அப்சலோம் காரியத்தை அறிந்த தாவீது ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால் நடையாய்ப் புறப்பட்டு எந்த ஆற்றைக் கடந்து வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்து போனார்கள்?
அ. பேசோர்
ஆ. கீதரோன்
இ. கீகோன்
10) நீங்கள் எழுந்து பிரயாணம் பன்னி எந்த ஆற்றைக் கடந்துபோய் எஸ்போனின் ராஜாவாகிய சிகோன் என்னும் எமோரியரையும் அவன் தேசத்தையும் சதந்தரித்துக் கொள்ளும்படி அவனோடே யுத்தம் செய் என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார்?
அ. யாபோக்
ஆ. எத்தியோபியா
இ. அர்னோன்
11) எது வானத்திலிருந்து எரிந்து ஆறுகளில் விழுந்தது?
ஆ. சூரியன்
ஆ. சந்தின்
இ. நட்சத்திரம்
விடை (ஆறு)
=============
1) ஏதேனிலிருந்து எந்த ஆறு அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்?
Answer:அ) இதேக்கேல்
ஆதியாகமம் 2:14
2) தெலிலாள் எந்த ஆற்றங்கரையில் இருந்தாள்?
Answer:ஆ. சோரேக்
நியாயாதிபதிகள் 16:4
3) ,தானியேல் எந்த ஆற்றங்கரையில் இருந்ததாக தரிசனத்தில் கண்டான்
Answer:அ. ஊலாய்
தானியேல் 8:2
4) ஏதேனிலிருந்து பிரிந்த நான்காம் ஆறு எது?
Answer:இ. ஐபிராத்து
ஆதியாகமம் 2:14
5) எருசலேமில் உண்டான பலிபீடங்களையும் தூபபீடங்களையும் அகற்றி எந்த ஆற்றிலே போட்டார்கள்?
Answer: அ. கீதரோன்
2 நாளாகமம் 30:14
6) இஸ்ரவேல் ஜனங்கள் காதேஸ்பர்னேயாவை விட்டு புறப்பட்டது முதற்கொண்டு எந்த ஆற்றைக் கடக்குமட்டும் சென்றகாலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று?
Answer:இ. சேரேத்
உபாகமம் 2:14
7) ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கொண்டு வந்தபோது லேவியர் அதை எடுத்து வெளியே எந்த ஆற்றிற்கு கொண்டு போனார்கள்?
Answer:அ. கீதரோன்
2 நாளாகமம் 29:16
8) தாவுதோடே போன அறுநூறு பேர்களில் இருநூறு பேர் விடாய்த்துபோன படியால் எந்த ஆற்றைக் கடக்க மாட்டாமல் நின்று போனார்கள்?
Answer:ஆ. பேசோர்
1 சாமுவேல் 30:10
9) அப்சலோம் காரியத்தை அறிந்த தாவீது ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால் நடையாய்ப் புறப்பட்டு எந்த ஆற்றைக் கடந்து வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்து போனார்கள்?
Answer:ஆ. கீதரோன்
2 சாமுவேல் 15:23
10) நீங்கள் எழுந்து பிரயாணம் பன்னி எந்த ஆற்றைக் கடந்துபோய் எஸ்போனின் ராஜாவாகிய சிகோன் என்னும் எமோரியரையும் அவன் தேசத்தையும் சதந்தரித்துக் கொள்ளும்படி அவனோடே யுத்தம் செய் என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார்?
Answer:இ. அர்னோன்
உபாகமம் 3:24
11)எது வானத்திலிருந்து எரிந்து ஆறுகளில் விழுந்தது?
Answer:இ. நட்சத்திரம்
வெளிப்படுத்தல் 8:10
=====================
வேதாகமத்தில் சகோதர சகோதரிகள்
======================
1.தன் சகோதரிக்காக தேவனை நோக்கிக் கெஞ்சின சகோதரன் யார்?
2.ஏழு சகோதரிகளையுடைய சகோதரன் யார்?
3. தங்கள் சுதந்தரத்திற்காக உரிமைக்குரல் கொடுத்த ஐந்து சகோதரிகள் யார்?
4. பதினான்கு வயது வித்தியாசம் உள்ள சகோதரர் யார்?
5. கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுத சகோதரர் யார்? யார்?
6. தன் சகோதரனை ஏமாற்றி சேஷ்ட புத்திர பாகத்தை அடைந்தவன் யார்?
7 . தன் சகோதரிக்காகச் சகோதரனைக் கொன்ற சகோதரன் யார் ?
8. தன் சகோதரனிடம் ராஜ்யபாரத்திற்காக போட்டியிட்ட சகோதரன்
யார்?
9. தன் சகோதரனுக்கு குமாரன் இல்லாதபடியால் ராஜாவான இஸ்ரவேலின் ராஜா யார்?
10.கில்போவா மலையில் சவுலுடன் கொல்லப்பட்ட அவன் குமாரரில் தப்பிப் பிழைத்த சகோதரன் யார்?
வேதாகமத்தில் சகோதர சகோதரிகள்
============================
1.தன் சகோதரிக்காக தேவனை நோக்கிக் கெஞ்சின சகோதரன் யார்?
Answer:மோசே
எண்ணாகமம் 12:10-13
2.ஏழு சகோதரிகளையுடைய சகோதரன் யார்?
Answer: ஓபா
எண்ணாகமம் 10:29
யாத்திராகமம் 2:16
3. தங்கள் சுதந்தரத்திற்காக உரிமைக்குரல் கொடுத்த ஐந்து சகோதரிகள் யார்?
Answer: மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள்
எண்ணாகமம் 27:1,4
4. பதினான்கு வயது வித்தியாசம் உள்ள சகோதரர் யார்?
Answer:இஸ்மவேல், ஈசாக்கு
ஆதியாகமம் 16:16
ஆதியாகமம் 21:5
5. கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுத சகோதரர் யார்? யார்?
Answer:ஏசா , யாக்கோபு -
ஆதியாகமம் 33:1,4
Answer:யோசேப்பு, பென்யமீன்
ஆதியாகமம் 45:1,14
6. தன் சகோதரனை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை அடைந்தவன் யார்?
Answer: யாக்கோபு
ஆதிபோஸ்தலர் 25:31,33
7 . தன் சகோதரிக்காகச் சகோதரனைக் கொன்ற சகோதரன் யார் ?
Answer:அப்சலோம்
11 சாமுவேல் 13:32
8. தன் சகோதரனிடம் ராஜ்யபாரத்திற்காக போட்டியிட்ட சகோதரன் யார்?
Answer:அதோனியா
I இராஜாக்கள் 1:25
1 இராஜாக்கள் 2:22
9. தன் சகோதரனுக்கு குமாரன் இல்லாதபடியால் ராஜாவான இஸ்ரவேலின் ராஜா யார்?
Answer:யோராம்
11 இராஜாக்கள் 1:17
10. கில்போவா மலையில் சவுலுடன் கொல்லப்பட்ட அவன் குமாரரில் தப்பிப் பிழைத்த சகோதரன் யார்?
Answer:எஸ்பால்
I சாமுவேல் 31:2
I நாளாகமம் 9:39