=====================
மோசேயோடு கூட கர்த்தர்
=====================
யோசுவா 1:5 இந்த குறிப்பில் ஆண்டவர் யோசுவாவுக்கு தைரியம் சொல்லும்படி நான் மோசேயோடு கூட இருந்ததை போல உன்னோடு இருப்பேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்தார். ஆனால் ஆண்டவர் இந்த குறிப்பில் யோசுவாவை குறித்து அல்ல, மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்க்கு மோசேயோடு காணப்பட்ட குணாதிசியங்களை இதில் கவனிக்கலாம். மோசேயின் தேவன் நம்முடைய தேவன்.
மோசேயோடு கூட தேவன்:
1. மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு மோசேயின் கீழ்படிதல்.
யாத்திராகம் 3:4
2. மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு மோசேயின் தாழ்மை.
யாத்திராகமம் 3:11
3. மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு மோசேயின் உண்மை.
எண்ணாகமம் 12: 7
எபிரெயர் 3: 2
4. மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு மோசே ஜெபிக்கிற தேவ மனிதன்.
யாத்திராகமம் 34:8,9,28
5. மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு மோசேயின் விசுவாசம்.
எபிரெயர் 11:24-27
6. மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு மோசேயின் சாந்த குணம்.
எண்ணாகமம் 12:3
7. மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு மோசே தேவனுக்காக எகிப்தை விட்டவன்.
எபிரெயர் 11:24-27
மோசேயோடு கூட தேவன் இருந்ததிற்கு காரணம் மோசேயின் உயர்ந்த ஆவிக்குரிய குணாதிசியம். நாமும் இப்படிப்பட்ட குணாதிசியத்தோடு காணப்படும் போது தேவன் நம்மோடு கூட இருப்பார். மோசேயின் தேவன் நம்முடைய தேவன்.
ஆமென்!
================
உன்னைக் காப்பேன்
=================
என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால் பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
வெளிப்படுத்தல் 3:10
இந்தக் குறிப்பில் உன்னை சோதனைக் காலத்தில் காப்பேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். இதில் எப்படிக் காப்பார் என்று மற்றும் யாரை காப்பார் என்றும் நாம் விரிவாக கவனக்கலாம்.
எவற்றிலிருந்து காப்பார்
===============
சோதனைகாலத்தில் காப்பேன்
வெளிப்படுத்தல் 3:10
எல்லா தீமைக்கும் காப்பார்
சங்கீதம் 121:7
இக்கட்டுகளுக்கு காப்பார்
சங்கீதம் 32:7
யாரைக் காப்பார்?
============
பரிசுத்தவான்களைக் காப்பார்
சங்கீதம் 97:10
பரிசுத்தவான்களாக எப்படி மாற முடியும்?
1. இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தமாக மாற முடியும்
எபிரெயர் 13:12
2. ஆவியானவரால் பரிசுத்தமாக மாற முடியும்
2 கொரிந்தியர் 2:13
3. சத்தியத்தினால் பரிசுத்தமாக மாற முடியும்
யோவான் 17:19
4. இயேசுவின் நாமத்தில் பரிசுத்தமாக மாற முடியும்
1 கொரிந்தியர் 6:11
அன்பு கூறுகிறவர்களை காப்பார்
===================
எப்படி அன்பு கூற வேண்டும்.
உபாகமம் 7:8
1. முழுமையாக அன்பு கூறவேண்டும்
மத்தேயு 22:37
2. அழியாத அன்பு கூறவேண்டும்
எபேசியர் 6:24
3. மாய்மற்ற அன்பு கூறவேண்டும்
ரோமர் 12:9
4. பரிசுத்த அன்பு கூறவேண்டும்
எபேசியர் 1:4
ஊழியம் செய்பவர்கள் காக்கப்படுவார்கள்
====================
2 தீமோத்தேயு 4:18
எப்படி ஊழியம் செய்ய வேண்டும்.
1. பரிசுத்தமாக ஊழியம் செய்யவேண்டும்
லூக்கா 1:71
2. நீதியுடன் ஊழியம் செய்ய வேண்டும்
லூக்கா 1:71
3. அவரது சித்தத்தின் படி ஊழியம் செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 13:36
4. உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்ய வேண்டும்
மத்தேயு 25:21
கர்த்தருக்கு பயப்படும் போது காப்பார்
====================
பிரசங்கி 7:18
எப்படி பயப்பட வேண்டும்?
1. எப்பொழுதும் பயப்படவேண்டும்
நீதிமொழிகள் 28:14
2. தீமையை வெறுத்து பயப்படவேண்டும்
நீதிமொழிகள் 8:13
3. உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயப்பட வேண்டும்
உபாகமம் 4:9
4. தசமபாகம் செலுத்தி பயப்படவேண்டும்
உபாகமம் 14:22
இந்தக் குறிப்பில் உன்னை காப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் அதற்கு நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதையும் எவற்றிற்கு காப்பார் என்பதையும் தெரிந்துக் கொண்டோம்.
ஆமென்!
=================
உன் சுகவாழ்வும் உன் வெளிச்சமும்
=================
ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பை போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும். கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்
உன் சுகவாழ்வு துளிர்க்க உன் வெளிச்சம் எழும்பவேண்டும்.உன் வெளிச்சம் என்றால் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்ட வெளிச்சம்
ஏசாயா 60:19,20
கர்த்தரே அந்த நித்திய வெளிச்சம்
சங்கீதம் 18:28
சங்கீதம் 27:1
கர்த்தரே நமது வெளிச்சம் நமது இருளை வெளிச்சமாக்கி விளக்கை ஏற்றுகிறவர். உன் வெளிச்சம் என்பது கர்த்தருடைய வெளிச்சம் நம் வாழ்க்கையில் காணப்படுவது ஆகும். உன் சுகவாழ்வு துளிர்க்க வேண்டுமானால் உன் வெளிச்சம் அதாவது கர்த்தருடைய வெளிச்சம் நமது வாழ்க்கையில் எழும்பும் போது கிடைக்கிற நன்மை என்ன என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. சுகவாழ்வு கொடுக்கிற வெளிச்சம்
ஏசாயா 30:26
ஏசாயா 58:8
2. வழிகாட்டுகிற வெளிச்சம்
நெகேமியா 9:12,13
யாத்திராகமம் 13:20,21
3. மகிழ்ச்சியாக்குகிற வெளிச்சம்
எஸ்தர் 8:16,17
சங்கீதம் 97:11
4. நீதிமானக்குகிற வெளிச்சம்
மீகா 7:8,9
5. நம்மை உயத்துகிற வெளிச்சம்
ஏசாயா 60:3
யோவான் 60:35
.
இந்த ஐந்துவித வெளிச்சம் நமது வாழ்க்கையில் எழும்பி நமது சுகவாழ்வை துளிர்விடச் செய்யும். உன் வெளிச்சம் எழும்புவதாக, உன் சுவாழ்வு துளிர்விடுவதாக !
ஆமென்!
===================
கட்டளைக்கு கீழ்படி கட்டளை பிறக்கும்
====================
அப்போஸ்தலர் 17:30
அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணதவர்போல் இருந்தார். இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷர் எல்லோருக்கும் கட்டளையிடுகிறார்.
கட்டளை என்ற வார்த்தையை மையப்படுத்து இந்த செய்தியை கவனிக்கலாம். நாம் தேவனதுக் கட்டளைக்கு கீழ்படிந்தால் தேவன் நமக்கு தேவையானதை கட்டளையிடுவார். வேதத்தில் மூன்று தேவ மனிதர்கள் தேவ கட்டளைக்கு கீழ்படிந்ததால். தேவன் அவர்கள் விரும்பிய காரியத்திற்கு கட்டளை பிறப்பித்தார்.
வேத ஆதாரம்
லேவியராகமம் 26:1-12
அப்போஸ்தலர் 17:30
1. பஞ்சத்தில் எலியாவுக்கு போஷிப்புக்கான கட்டளை
1 இராஜாக்கள் 17:1-9
2. நெருக்கத்தில் யோனாவுக்கு இரட்சிப்புக்கான கட்டளை
யோனா 2:9,10
3. இக்கட்டில் தானியேலுக்கு ஜெபத்தின் பதிலுக்கு கட்டளை.
தானியேல் 9:21-23
கட்டளையிடும் தேவன் அதன் கால நேரத்துக்கு ஏற்றபடி கட்டளைக் கொடுத்தார். எலியா லுக்கு பஞ்ச நேரத்திலே கட்டளைக் கொடுத்தார். எலியா தேவனுக்கு கீழ்படிந்ததால் தேவன் அவன் பஞ்சம் மாறும்படி கட்டளைக்கொடுத்தார். அப்படியே யோனாவுக்கும் செய்தார். அப்படியே தானியேல் ஜெபத்திற்கு கட்டளை பிறப்பித்தார். எலியா வின் தேவன் நம்முடைய தேவன். யோனாவின் தேவன் நம்முடைய தேவன். தானியேலின் தேவன் நம்முடைய தேவன். நம்முடைய தேவனும் ஏற்ற நேரத்தில் நமக்காக கட்டளைக் கொடுப்பார்.
ஆமென்!