===============
சபையின் செய்தி
நற்கிரியைகள்
================
Verse for meditation..
யோவான் 10.32
இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
கர்த்தருடைய வார்த்தை..
இரட்சிக்கப்படுகிறதற்கு நற்கிரியைகள் வேண்டாம்..
இரட்சிப்பின் அனுதின பரிசுத்தமாகுதலுக்கு நற்கிரியைகள் அவசியம் ..
ரோமர் 4:5
ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
சாத்தானின் தந்திரம்..
இரட்சிக்கப்படுகிறதற்கு நற்கிரியைகள் வேண்டும்..
இரட்சிப்பின் அனுதின பரிசுத்தமாகுதலுக்கு நற்கிரியைகள் அவசியம் இல்லை ..
மத்தேயு 23:5a
சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள், தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்,
நற்கிரியைகளும் இரட்சிப்பின் நிலைகளும்
================
1. கிறிஸ்துவின் சிலுவை மரணம்..
நாம் நற்கிரியைகள் செய்ய கிறிஸ்து மரித்தார் ..
தீத்து 2:14
(இயேசு கிறிஸ்து )அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்தஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
2. முன்குறிக்கப்படுதல் ..
முன்னதாக சிருஷ்டிக்கப்பட்டோம். .
எபேசியர் 2:10
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
3. இரட்சிப்பின் பாதுகாப்பு..
நித்திய ஜீவனுக்கு பாத்திரராகிறோம்..
1 தீமோத்தேயு 6:19
நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
4. அனுதின பரிசுத்தமாகுதல் ..
நற்கிரியைகளில் ஜாக்கிரதை..
தீத்து 3:8
இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
5. தேவ பக்தியில் நிலைத்திருத்தல் ..
நற்கிரியைகளினால் அலங்கரித்தல்..
1 தீமோத்தேயு 2:10
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும் , தங்களை அலங்கரிக்கவேண்டும்.
6. இரட்சிப்பின் முன்மாதிரி..
வார்த்தையும் வாழ்க்கையும் நற்கிரியைகளில் ..
தீத்து 2:6-7
6. அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,
7. நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
7. இரட்சிப்பில் பூரணமாகுதல் ..
கர்த்தர் நற்கிரியை செய்பவர்களை பெருக செய்கிறார் ..
2 கொரிந்தியர் 9.8
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
8. இரட்சிப்பில் மகிமைப்படுதல் ..
பரலோகத்தின் தேவன் நற்கிரியைகளினால் மகிமை அடைகிறார்..
மத்தேயு 5:16
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
9. இரட்சிப்பில் மறுரூபமாகுதல்..
நித்திய ஜீவனில் பிரவேசம்..
ரோமர் 2.7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து , மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
10. இரட்சிப்பின் கனிகள்..
நற்கிரியை இல்லாவிடில் கனியற்ற வாழ்கை..
தீத்து 3.14
நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.
11. இரட்சிப்பின் பிரதிபலன்..
சந்திப்பின் நாளில் அதாவது மத்திய வானத்தில் ( bema ) நற்கிரியைகளின் முக்கியத்துவம் ..
1 பேதுரு 2.12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Closing thought..
கர்த்தர் சீக்கிரமாய் வருகிறார்..
நற்கிரியைகள் செய்வோம்
எபிரேயர் 10:24-25
24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,
25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
==================
இப்பொழுதே.. NOW..
==================
1. இப்பொழுதே இரட்சிப்பு..
2 கொரிந்தியர் 6:2
அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
2 Corinthians 6:2
For He saith, I have heard thee in a time accepted, and in the day of salvation have I succoured thee: behold, now is the accepted time; behold, now is the day of salvation.
2. இப்பொழுது தேவனுடைய பிள்ளைகள்..
1 யோவான் 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
1 John 3:2
Beloved, now are we the sons of God, and it doth not yet appear what we shall be: but we know that, when He shall appear, we shall be like him; for we shall see him as He is.
3. இப்பொழுது பரிசுத்தமாகுதல் ..
ரோமர் 6:22
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
Romans 6:22
But now being made free from sin, and become servants to God, ye have your fruit unto holiness, and the end everlasting life.
4. இப்பொழுது உபதேசத்திற்கு கீழ்ப்படிதல் ..
ரோமர் 6:17
முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Romans 6:17
But God be thanked, that ye were the servants of sin, but ye have obeyed from the heart that form of doctrine which was delivered you.
5. இப்பொழுது ஞானஸ்னானம்..
அப்போஸ்தலர் 22:16
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
Acts 22:16
And now why tarriest thou? arise, and be baptized, and wash away thy sins, calling on the name of the Lord.
6. இப்பொழுது நிலைத்திருங்கள் ..
1 கொரிந்தியர் 13:13
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது.
1 Corinthians 13:13
And now abideth faith, hope, charity, these three; but the greatest of these is charity.
7. இப்பொழுது பார்க்கிறோம்..
1 கொரிந்தியர் 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
1 Corinthians 13:12
For now we see through a glass, darkly; but then face to face: now I know in part; but then shall I know even as also I am known.
Closing thought..
இப்பொழுது கனம் மகத்துவம்..
யூதா 1.25
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
Jude 1:25
To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
SHALOM STEWARD MORNING GRACE
===========================
OUR GOD.. GOD OF POSTERITY
நம் தேவன்.. சந்ததிகளின் தேவன்
===========================
1. கர்த்தருக்கு பயப்படுகிற சந்ததி..பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும் ..
சங்கீதம் 25:12-13
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
அவன் ஆத்துமா நன்மையில் தங்கும், அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
2. நீதிமானின் சந்ததி..
கைவிடப்படுவதில்லை ..
சங்கீதம் 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.
நீதிமொழிகள் 11:21
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
3. கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததி..
ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்..
ஏசாயா 61:9
அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும், அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.
4. தேவ பக்தியுள்ள சந்ததி..
ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள் .
மல்கியா 2:15
அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
ஏசாயா 65:23
அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை, அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள் .
5. தேவனுடைய சந்ததி..
விக்கிரகங்களை நினைக்கலாகாது
அப்போஸ்தலர் 17:29
நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க , மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்கமென்று நாம் நினைக்கலாகாது.
6. வாக்குத்தத்தம் பெற்ற சந்ததி..
சுதந்தரிப்பார்கள் ..
ரோமர் 4:16
ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது, நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல , நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படிவருகிறது.
7. தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி..
புண்ணியங்களை அறிவிப்போம்..
1 பேதுரு 2.9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் , ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
8. உடன்படிக்கையின் சந்ததி ..
கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரர்..
ஆதியாகமம் 9:8-10
பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியோடும்,
உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
Closing thought..
சந்ததியின் கர்த்தர் வருகிறார்..
வெளிப்படுத்தின விசேஷம் 22.16
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும் , பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
SHALOM STEWARD MORNING GRACE
=======================
நீ வெட்கப்படுவதில்லை
=======================
1. தேவன் உன் நடுவில் இருக்கிறார் ..
யோவேல் 2:26-27
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள், என் ஜனங்கள ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
2. கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் ..
ஏசாயா 49:23
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள், தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள், நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்
3. கர்த்தரை நோக்கி பார்க்கிறவர்கள் ..
சங்கீதம் 34:5
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை .
4. கர்த்தரை நம்புகிறவர்கள்..
சங்கீதம் 71:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
5. கர்த்தருடைய கற்பனைகளை கண்ணோக்குகிறவர்கள் ..
சங்கீதம் 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை .
சங்கீதம் 119:80
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
6. தேவ அன்பு இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால் ..
ரோமர் 5:5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது .
7. இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ..
ரோமர் 9:33
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன், அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
8. இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறவன் ..
1 யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
9. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார் ..
ஏசாயா 50:7
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன், ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
Closing thought..
உத்தமர்கள் ..
சங்கீதம் 37:18-19
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து , பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
SHALOM STEWARD MORNING GRACE
தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நிய " PROFANE ..
===========================
meaning,, தெய்வ நிந்தனை..
Strange ..
meaning,, விசித்திரமான..
1. அந்நிய தூபம்..
Strange Incence..
யாத்திராகமம் 30.9
அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம். அதின் மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.
2. அந்நிய தேவன்..
Other God..
யாத்திராகமம் 34.14
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
உபாகமம் 32:12
கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.
3. அந்நிய அக்கினி..
Profane Fire..
லேவியராகமம் 10.1
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
4. அந்நிய நுகம்..
Unequal Yoke..
2 கொரிந்தியர் 6.14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
5. அந்நிய தேசம்..
Strange Land..
சங்கீதம் 137.4
கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
6. அந்நிய தேவர்கள்..
Strange Gods..
யோசுவா 24.23
அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
7. அந்நிய பெண்..
Strange Woman..
நீதிமொழிகள் 7.4
இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
8. அந்நிய காரியம்..
Strange Thing..
ஓசியா 8.12
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
1 பேதுரு 4.15
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
9. அந்நிய ஜனங்கள்..
Heathens ..
சங்கீதம் 105.45
அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார், அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.
10. அந்நிய பாஷை..
Another Tongue..
ஏசாயா 28.11
பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
11. அந்நிய மாம்சம்..
Strange Flesh..
யூதா 1.7
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து நித்திய ஆக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
12. அந்நிய சத்தம்..
Strange Voice..
யோவான் 10.5
அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்
Closing thought..
அந்நிய போதனைகள்..
Strange Doctrines..
எபிரேயர் 13.9
பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்.போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது. போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301