===============
கேள்வி (பொக்கிஷம்)
===============
1. யாருடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் ஆராய்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டது?
2. தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து காணிக்கை வைத்தவர்கள்
யார்?
3. எங்கே உங்கள் பொக்கிஷங்களைச் ஐக்சேர்த்து வையுங்கள்?
4. நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது எது?
5. எங்கே உங்கள் இருதயம் இருக்கும்?
6. இந்த பொக்கிஷத்தை எதிலே பெற்றிருக்கிறீர்கள்?
7. பிள்ளைகளுக்கு யார் பொக்கிஷம் சேர்த்து வைக்க வேண்டும்?
8. எப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்?
9. எகிப்திலுள்ள பொக்கி ஷங்களிலும் எதை அதிக பாக்கியமென்று மோசே எண்ணினான்?
10. அவருக்குள் அடங்கியிருக்கிற பொக்கிஷங்கள் எவை?
பதில் (பொக்கிஷம்)
===================
1. யாருடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் ஆராய்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டது?
Answer: ஏசாவினுடைய
ஒபதியா 1:6
2. தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து காணிக்கை வைத்தவர்கள்
யார்?
Answer: சாஸ்திரிகள்
மத்தேயு 2:11
3. எங்கே உங்கள் பொக்கிஷங்களைச் ஐக்சேர்த்து வையுங்கள்?
Answer: பரலோகத்தில்
மத்தேயு 6:20
4. நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது எது?
Answer: பரலோக ராஜ்யம்
மத்தேயு 13:14
5. எங்கே உங்கள் இருதயம் இருக்கும்?
Answer: உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே
லூக்கா 12:34
6. இந்த பொக்கிஷத்தை எதிலே பெற்றிருக்கிறீர்கள்?
Answer: மண்பாண்டங்களில்
11 கொரிந்தியர் 4:7
7. பிள்ளைகளுக்கு யார் பொக்கிஷம் சேர்த்து வைக்க வேண்டும்?
Answer: பெற்றார்
11 கொரிந்தியர் 12:14
8. எப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்?
Answer: உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திருக்குக் கொடுத்தால்
மத்தேயு 19:21
9. எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் எதை அதிக பாக்கியமென்று மோசே எண்ணினான்?
Answer: கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை
எபிரெயர் 11:26
10. அவருக்குள் அடங்கியிருக்கிற பொக்கிஷங்கள் எவை?
Answer: ஞானம், அறிவு
கொலோசெயர் 2:3
=============
கேள்விகள் (தூக்கம்)
=============
1. இராத்திரியில் இரதங்கள் இருக்கிற இடத்திலே நித்திரைச் செய்தவன் யார்?
2. கல்லையே தலையணையாக்கிக் கொண்டு நித்திரை செய்யப்படுத்தவன் யார்?
3. கடலில் பெருங்காற்று உண்டானபோதும் படகில் நித்திரையாயிருந்தது யார்?
4. சூரைச்செடியின் கீழ் படுத்து நித்திரை பண்ணினது யார்?
5. மூன்றாம் மாடியில் தூங்கிக் கொண்டே பிரசங்கம் கேட்டு கீழே விழுந்த வாலிபன் யார்?
6. ஒரு மணி நேரம் கூட விழித்திருக்க முடியாமல் தூங்கியவர்கள் யார்?
7. வீட்டிற்கும் போகாமல் எல்லா சேவர்களோடும் படுத்துக்கொண்டவன் யார்?
8. மண்ணிலேயே படுத்து தூங்கிய உத்தமன் யார்?
9. முதன்முதலில் அயர்ந்து தூங்கிய மனிதன் யார்?
10. தூக்கத்தில் வரத்தைக் கேட்டது யார்?
பதில்கள் (தூக்கம்)
=============
1. இராத்திரியில் இரதங்கள் இருக்கிற இடத்திலே நித்திரைச் செய்தவன் யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 26:7
2. கல்லையே தலையணையாக்கிக் கொண்டு நித்திரை செய்யப்படுத்தவன் யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 28:11,18
3. கடலில் பெருங்காற்று உண்டானபோதும் படகில் நித்திரையாயிருந்தது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
மத்தேயு 8:24
4. சூரைச்செடியின் கீழ் படுத்து நித்திரை பண்ணினது யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 19:1-5
5. மூன்றாம் மாடியில் தூங்கிக் கொண்டே பிரசங்கம் கேட்டு கீழே விழுந்த வாலிபன் யார்?
Answer: ஐத்திகு
அப்போஸ்தலர் 20:9
6. ஒரு மணி நேரம் கூட விழித்திருக்க முடியாமல் தூங்கியவர்கள் யார்?
Answer: பேதுரு, யாக்கோபு, யோவான்
மத்தேயு 26:37-40
7. வீட்டிற்கும் போகாமல் எல்லா சேவர்களோடும் படுத்துக்கொண்டவன் யார்?
Answer: உரியா
2 சாமுவேல் 11:9
8. மண்ணிலேயே படுத்து தூங்கிய உத்தமன் யார்?
Answer: யோபு
யோபு 7:21
9. முதன்முதலில் அயர்ந்து தூங்கிய மனிதன் யார்?
Answer: ஆதாம்
ஆதியாகமம் 2:21
10. தூக்கத்தில் வரத்தைக் கேட்டது யார்?
Answer: சாலொமோன்
2 நாளாகமம் 1:7-12
=================
கேள்விகள் (களஞ்சியம்)
=================
1) களஞ்சியங்களை எல்லாம் திறந்து எகிப்தியருக்கு விற்றவன் யார்?
2) எதினால் களஞ்சியங்கள் இடிந்து போயின?
3) எங்கு களஞ்சியம் வெறுமையாயிருக்கும்?
4) பெலிஸ்தர் எதைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது?
5) கர்த்தர் களஞ்சியத்தில் எதைச் சேர்ப்பார்?
6) களஞ்சியங்களில் சேர்த்து வைக்காத உயிரினம் எது?
7) என் களஞ்சியங்களை இடித்துப் பெரிதாகக் கட்டுவேன் என்று கோட்டை கட்டியவன் யார்?
8) உன் தானியத்தை அது உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ? அது எது?
9) கர்த்தர் உனக்கு எவைகளில் ஆசீர்வாதம் கட்டளையிடுவார்?
10) எப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்?
பதில் (களஞ்சியம்)
==============
1) களஞ்சியங்களை எல்லாம் திறந்து எகிப்தியருக்கு விற்றவன் யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 41:56
2) எதினால் களஞ்சியங்கள் இடிந்து போயின?
Answer: பயிர் தீய்ந்துபோகிறதினால்
யோவேல் 1.17
3) எங்கு களஞ்சியம் வெறுமையாயிருக்கும்?
Answer: எருதுகளில்லாத இடத்தில்
நீதிமொழிகள் 14:4
4) பெலிஸ்தர் எதைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது?
Answer: களஞ்சியங்களை
I சாமுவேல் 23:1
5) கர்த்தர் களஞ்சியத்தில் எதைச் சேர்ப்பார்?
Answer: தமது கோதுமையை
மத்தேயு 3:12
6) களஞ்சியங்களில் சேர்த்து வைக்காத உயிரினம் எது?
Answer: ஆகாயத்துப் பட்சிகள்
மத்தேயு 6:26
7) என் களஞ்சியங்களை இடித்துப் பெரிதாகக் கட்டுவேன் என்று கோட்டை கட்டியவன் யார்?
Answer: ஐசுவரியமுள்ள ஒருவன்
லூக்கா 12:16, 18
8) உன் தானியத்தை அது உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ? அது எது?
Answer: காண்டாமிருகம்
யோபு 39:9,12
9) கர்த்தர் உனக்கு எவைகளில் ஆசீர்வாதம் கட்டளையிடுவார்?
Answer: உன்களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும்
உபாகமம் 28:8
10) எப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும் ?
Answer: உன் பொருளாலும், உன் விளைவின்முதற்பலனாலும் கர்த்தரைக்கனம் பண்ணும் பொழுது
நீதிமொழிகள் 3:9,10