SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
=======================
என் ஆத்தும நேசர்
MY BELOVED FOR MY SOUL..
=======================
Verse for meditation..
மத்தேயு 12.18
இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
Matthew 12:18
Behold my servant, whom I have chosen; my beloved, in whom my soul is well pleased : I will put my spirit upon him, and He shall shew judgment to the Gentiles.
1. ஆத்துமா கெம்பீரித்து மகிழும்..
சங்கீதம் 71.23
நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
2. என் சிருஷ்டிப்பு ஆத்துமாவுக்கு தெரியும் ..
சங்கீதம் 139:14
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
3. அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும் ..
நீதிமொழிகள் 2:10
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
4. கர்த்தருடைய வார்த்தை உன் ஆத்துமாவுக்கு ஜீவன் ..
நீதிமொழிகள் 3:21-22
என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக: மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
5. வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது ..
நீதிமொழிகள் 13:19
வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது: தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
6. ஒழுக்கமுள்ள மகன் ஆத்துமாவுக்கு ஆறுதல் ..
நீதிமொழிகள் 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
7. நல்ல வழி ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் ..
எரேமியா 6:16
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
8. தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர் .
புலம்பல் 3:25
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
கடைசியாக சகோதரரே..
1 பேதுரு 2.11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி,
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
GOSPEL MOMENTS
சுவிசேஷ மணித்துளிகள்
=======================
The penitent thief..
தவறுக்காக வருந்தின கள்ளன். .
=======================
penitent
sorry for having done something wrong.
தவறு செய்தமைக்காக வருந்துகிற; தவற்றுக்கு உள்ளுறுத்தல் கொள்கிற .
penitent
showing that you are sorry for something you have done because you feel it was wrong:
" I'm sorry," she said with a penitent smile.
It was hard to be angry with him when he looked so penitent.
=============================
ஒரு தேவனுடைய மனிதன் தன் அனுதின பரிசுத்தமாகுதல் குறித்து கூறும் போது ஆண்டவரிடம் " I am sorry " என்று கூறின சந்தர்ப்பத்தை நினைவு கூர்ந்ததாக குறிப்பிடுகிறார்.
Thief's 7 penitent action..
கள்ளனின் ஏழு மனம் வருந்தும் செயல்கள்..
===================
1. Rebuked his sinful companion..
குற்றவாளி நண்பனை கடிந்து கொண்டான் ..
லூக்கா 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
Luke 23:40
But the other answering rebuked him, saying, Dost not thou fear God, seeing thou art in the same condemnation?
2. Confessed his own sin..
தன்னுடைய சுய பாவத்தை அறிக்கை செய்தான் ..
லூக்கா 23:41a
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்,
Luke 23:41a
And we indeed justly; for we receive the due reward of our deeds:
3. Declared Christ to be sinless..
கிறிஸ்துவை பாவமில்லாதவராக பிரகடனம் செய்கிறான் ..
லூக்கா 23:41b
இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
Luke 23:41b
but this man hath done nothing amiss.
4. Confessed Christ as Lord..
லூக்கா 23:42a
கிறிஸ்துவை ஆண்டவரே என்று அறிக்கை செய்கிறான் .. இயேசுவை நோக்கி: ஆண்டவரே,
Luke 23:42a
And He said unto Jesus, Lord,
5. Exhibited glorious hope. .
மகிமையான நம்பிக்கையை தெரிவிக்கிறான் ..
லூக்கா 23:42b
நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது..
Luke 23:42b
when thou comest into thy kingdom.
6. Made a model prayer..
முன்மாதிரி ஜெபம் செய்கிறான் ..
லூக்கா 23:42c
அடியேனை நினைத்தருளும் என்றான்.
Luke 23:42c
remember me..
7. Received an immediate forgiveness. .
உடனடியான மன்னிப்பை பெறுகிறான்..
லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Luke 23:43
And Jesus said unto him, Verily I say unto thee, Today shalt thou be with me in paradise.
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
======================
ஒரே நிகழ்ச்சி.. வெவ்வேறு அனுபவம்
========================
1. சிவந்த சமுத்திரம்..
இஸ்ரவேலருக்கு ..
யாத்திராகமம் 14:22
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
எகிப்தியருக்கு ..
யாத்திராகமம் 14:27
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது. எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்டார்.
2. வானம் ..
இஸ்ரவேலருக்கு ..
யாத்திராகமம் 16:14
பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.
எகிப்தியருக்கும் எமோரியருக்கும் ..
யாத்திராகமம் 9:23
அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார். அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று. எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
3. மேகஸ்தம்பம் ..
இஸ்ரவேலருக்கு ..
யாத்திராகமம் 14:19
அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
எகிப்தியருக்கு ..
யாத்திராகமம் 14:20
அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது. இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
4. ஜலப்ரளயம் ..
கீழ்ப்படிந்த நோவா குடும்பம்..
2 பேதுரு 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி,
கீழ்ப்படியாத சோதோம்..
2 பேதுரு 2:6
சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து:
5. உடன்படிக்கை பெட்டி..
ஓபேத் ஏதோம் வீட்டார்..
2 சாமுவேல் 6:11
கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்றுமாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
பெலிஸ்தியர் ..
1 சாமுவேல் 5:3
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தது. அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.
6. அக்கினி சூளை ..
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ
தானியேல் 3:25
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
பலவான்கள் ..
தானியேல் 3:22
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது.
7. கீழ்க்காற்று ..
இஸ்ரவேலருக்கு காடை..
எண்ணாகமம் 11:31
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
எகிப்தியருக்கு வெட்டுக்கிளி..
யாத்திராகமம் 10:13
அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இராமுழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார். விடியற்காலத்திலே கீழ்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
8. கர்த்தருடைய சத்தம்..
சீஷர்களுக்கு சந்தோசம்..
யோவான் 20:19-20
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
யூதருக்கு திகில்..
யோவான் 18:5-6
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
9. கல்வாரி சிலுவை..
ஒரு கள்ளன் பரதீசு..
லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மறு கள்ளன் பாதாளம்..
லூக்கா 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
கடைசியாக சகோதரரே..
சிலுவையின் உபதேசம்..
இரட்சிக்கப்படுற நமக்கு.. தேவபலன்
1 கொரிந்தியர் 1:18
சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
கெட்டுப்போகிறவர்களுக்குபைத்தியம்
1 கொரிந்தியர் 1:18
சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
MORNING GRACE
====================
நீர் என்னை காண்கின்ற தேவன்
====================
Verse for meditation..
ஆதியாகமம் 16.13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
========================
கர்த்தருடைய கண்கள்..
1. நேர்த்தியானவைகள் ..
உன்னதப்பாட்டு 5.12
அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
2. அக்கினிஜூவாலையைப்போலிருந்தது ..
வெளிப்படுத்தின விசேஷம் 1.14
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தது,
3. எப்பொழுதும் தேசத்தின் மேல் வைக்கப்பட்டிருக்கும் ..
உபா 11:12
..அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.
4. இரவும்பகலும் திறந்திருப்பதாக..
2 நாளா 6.20
உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.
5. பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது ..
2 நாளா 16.9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது, இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர், ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
6. நியாயமானவைகளை நோக்குவதாக
சங் 17.2
உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக, உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.
7. நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது ..
நீதி 15.3
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
8. நியாயம் தீர்க்கும் கண்கள்..
வெளி 19.12
அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன, அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
9. நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது ,.
சங்கீதம் 34.15..
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
1 பேதுரு 3.12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
10. மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது ..
யோபு 34.21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது. அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
11. சோதித்தறிகிறது ..
சங்கீதம் 11.4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
Closing thought..
வெளிப்படுத்தின விசேஷம் 1.7
இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
=======================
உமக்கு ஒப்பானவர் யார்?
Who is like unto thee,
======================
ஒப்பானவர் யார்?
1. பரிசுத்தத்தில் ஒப்பானவர் யார்?
யாத் 15.11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
Exodus 15:11
Who is like unto thee, O LORD, among the gods? who is like thee, glorious in holiness, fearful in praises, doing wonders?
2. வானத்திலும் பூமியிலும் ஒப்பானவர் யார்?
2 நாளா 6.14
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை, தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
2 Chronicles 6:14
And said, O LORD God of Israel, there is no God like thee in the heaven, nor in the earth; which keepest covenant, and shewest mercy unto thy servants, that walk before thee with all their hearts:
3. ஆகாயமண்டலத்தில் ஒப்பானவர் யார்?
சங் 89.6
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
Psalms 89:6
For who in the heaven can be compared unto the LORD? who among the sons of the mighty can be likened unto the LORD?
4. வல்லமையில் ஒப்பானவர் யார்?
எரே 10.6
கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை , நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.
Jeremiah 10:6
Forasmuch as there is none like unto thee, O LORD; thou art great, and thy name is great in might.
5. மன்னிக்கிறதில் ஒப்பானவர் யார்?
மீகா 7.18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
Micah 7:18
Who is a God like unto thee , that pardoneth iniquity, and passeth by the transgression of the remnant of his heritage? He retaineth not his anger for ever, because He delighteth in mercy.
6. உடன்படிக்கையை காக்கிறதில் ஒப்பானவர் யார்?
1 இராஜாக்கள் 8.23
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை, தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
1 Kings 8:23
And He said, LORD God of Israel, there is no God like thee, in heaven above, or on earth beneath, who keepest covenant and mercy with thy servants that walk before thee with all their heart:
7. கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானவர் யார்?
ரோமர் 5.15
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
Romans 5:15
But not as the offence, so also is the free gift. For if through the offence of one many be dead, much more the grace of God, and the gift by grace, which is by one man, Jesus Christ , hath abounded unto many.
8. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
யாத்திராகமம் 8.10
அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.
Exodus 8:10
And He said, To morrow. And He said, Be it according to thy word: that thou mayest know that there is none like unto the LORD our God.
கடைசியாக சகோதரரே..
Finally brethren..
யாத்20.4
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
ஷாலோம்
Exodus 20:4
Thou shalt not make unto thee any graven image, or any likeness of any thing that is in heaven above , or that is in the earth beneath, or that is in the water under the earth.