பிரசங்கம் செய்ய சரியான தலைப்புகள் | அதிசயம் | கிறிஸ்துவின் மேய்ப்பத்துவம் | Bro Jayasingh Joseph J | Gospel Sermon Notes Tamil Jesus Sam
Jesus Sam7/22/2023 06:00:00 PM
0
==================
அதிசயம் - Wonderful
==================
1. Wonderful..God's name - தேவனுடைய நாமம் அதிசயம்
நியாயாதிபதிகள் 13:18
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
2. Wonderful..Jesus' name - கிறிஸ்துவின் நாமம் அதிசயம்
ஏசாயா 9: 6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர் , ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
3. Wonderful..His might - தேவனுடைய வல்லமை அதிசயம்
யோபு 10: 16
சிங்கத்தைப் போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசயவல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
1. Christ the Personal shepherd - தனக்கேயுரிய மேய்ப்பன்
சங்கீதம் 23: 1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
Elders the personal shepherd
1 பேதுரு 5: 2
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
2. Christ the nourishing shepherd - போஷிக்கும் மேய்ப்பன்
சங்கீதம் 23: 2
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
Elders the nourishing shepherd ..
1 தீமோத்தேயு 3: 2
ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியமுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
3. Christ the comforting shepherd - ஆறுதல் அளிக்கும் மேய்ப்பன்
சங்கீதம் 23: 3
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
Elders the comforting shepherd
1 தீமோத்தேயு 3: 5
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான் ?
4. Christ the protecting shepherd - பாதுகாக்கும் மேய்ப்பன்
சங்கீதம் 23: 4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
Elders the protecting shepherd..
அப்போஸ்தலர் 20.29
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும்.
5. Christ the honouring shepherd - கனப்படுத்தும் மேய்ப்பன்
சங்கீதம் 23: 5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
Elders the honouring shepherd..
பிலிப்பியர் 2: 3
ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
6. Christ the eternal shepherd - நித்திய மேய்ப்பன்
சங்கீதம் 23: 6
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
Elders the eternal shepherd..
1 பேதுரு 5: 1-4
1. உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:
2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
4. அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
======================================
மேய்ப்பரான மூப்பர்கள் தங்கள் மேய்ப்பரின் இறையாண்மையை நினைவில் கொள்ள வேண்டும்
======================================
1. நல்ல மேய்ப்பன்
மேய்ப்பனின் மரணம்
யோவான் 10: 11
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
===========================
மூப்பர்களின் மேய்ப்பத்துவத்திற்கு நிழலான அல்லது முன்மாதிரியான மேய்ப்பர்கள்
===========================
1. ஆபேல்
பலியான மேய்ப்பன் - Sacrificing shepherd
ஆதியாகமம் 4: 2
பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
2. யாக்கோபு
உழைக்கும் மேய்ப்பன் - Toiling shepherd..
ஆதியாகமம் 30: 31
அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான். யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை. நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.
3. யோசேப்பு
உயர்த்தப்பட்ட மேய்ப்பன் - Exalted shepherd
ஆதியாகமம் 37: 2
யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யேசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
4. மோசே
விடுவிக்கும் மேய்ப்பன் - Delivering shepherd
யாத்திராகமம் 3: 1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
5. தாவீது
ராஜரீகம் பண்ணும் மேய்ப்பன் - Reigning shepherd
1 சாமுவேல் 16: 11
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான். அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி. அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்க மாட்டேன் என்றான்.
Closing thought.
இந்த மேற்கோளை கவனியுங்கள்..
"A sheep who teaches something to the shepherd is no more a sheep but a shepherd" - Mehmet
"ஒரு ஆடு தன் மேய்ப்பனுக்கு ஒன்றை கற்றுக்கொடுத்தால்
அந்த ஆடும் மேய்ப்பனாகும்"
===============================
குடும்பத்தில் மனைவியின் பங்கு =============================== Role of wife in the family ====================
Companion – தோழியானவள்
மல்கியா 2: 14
ஏன் என்றுகேட்கிறீர்கள். கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே.
Malachi 2: 14
Yet ye say, Wherefore? Because the LORD hath been witness between thee and the wife of thy youth, against whom thou hast dealt treacherously: yet is she thy companion, and the wife of thy covenant.
Crown – கிரீடமானவள்
நீதிமொழிகள் 12: 4
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்
Proverbs 12: 4
A virtuous woman is a crown to her husband: but she that maketh ashamed is as rottenness in his bones.
Whoso findeth a wife findeth a good thing, and obtaineth favour of the LORD.
Weaker – பெலவீனமானவள்
1 பேதுரு 3: 7
அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
1 Peter 3: 7
Likewise, ye husbands, dwell with them according to knowledge, giving honour unto the wife, as unto the weaker vessel, and as being heirs together of the grace of life; that your prayers be not hindered.
Submissive – கீழ்ப்படிகிறவள்
1 பேதுரு 3: 5
இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரிகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
1 பேதுரு 3: 6
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள். நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்
1 Peter 3: 5
For after this manner in the old time the holy women also, who trusted in God, adorned themselves, being in subjection unto their own husbands:
1 Peter 3: 6
Even as Sara obeyed Abraham, calling him lord: whose daughters ye are, as long as ye do well, and are not afraid with any amazement.
Nevertheless let every one of you in particular so love his wife even as himself; and the wife see that she reverence her husband.
Loving – அன்புள்ளவள்
தீத்து 2: 4
தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
Titus 2: 4
That they may teach the young women to be sober, to love their husbands, to love their children,
Trust worthy – நம்பத்தகுந்தவள்
நீதிமொழிகள் 31: 11
அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும் : அவன் சம்பத்துக் குறையாது.
Proverbs 31: 11
The heart of her husband doth safely trust in her, so that He shall have no need of spoil.
===================
நானே அவர் - I AM HE
====================
Verse for meditation
யோவான் 8: 24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
John 8: 24
I said therefore unto you, that ye shall die in your sins: for if ye believe not that I am He, ye shall die in your sins.
"நானே அவர் " என்கிற வார்த்தை வேதத்தில் மிகவும் மேன்மையும் மகத்துவமும் வல்லமையும் உள்ள நாமம்..
தேவன் தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்தும் போதும், இயேசு கிறிஸ்து தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்தும் போதும் இதே வார்த்தையை " நானே அவர் " என்று கூறுகிறார்கள்
கவனியுங்கள்
தேவன் "நானே அவர்" என்று உரைத்ததை
மோசே எழுதுகிறார்
உபாகமம் 32: 39
நான் நானே அவர் , என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள், நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன், நான் காயப்படுத்துகிறேன், என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை
ஏசாயா எழுதுகிறார்
ஏசாயா 43: 10
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
இயேசு கிறிஸ்துவும் "நானே அவர் " என்றுரைத்ததை..
யோவான் எழுதுகிறார்
யோ 4: 26
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
யோவான் 8: 28
ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
யோவான் 8: 24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்
ஏழு நானே என்ற பேருண்மைகளும் ஏழு இரட்சிப்பின் வளங்களும்
Seven Deities of I AM & Seven Resources of Salvation
=============================
யோவான் எழுதின சுவிசேஷத்தின் கதிர்கள்
1. நானே நல்ல மேய்ப்பன்,
இரட்சிப்புக்கு கிறிஸ்துவின் மரணம் மட்டுமே ஆதாரம்..
யோவான் 10: 11
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
இயேசு அவர்களை நோக்கி: ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
3. நானே வாசல்
இரட்சிப்புக்கு கிறிஸ்துவே அல்லாமல் வேற மார்க்கம் இல்லை..
யோவான் 10: 9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
4. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
இரட்சிப்பின் வழி, இரட்சிப்பின் உண்மை, இரட்சிப்பின் ஜீவன் அனைத்தும் கிறிஸ்துவே
யோவான் 14: 6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
5. நானே திராட்சச்செடி
இரட்சிப்பின் கனி கொடுக்கும் ஜீவியமும் கிறிஸ்துவால் மட்டுமே
யோவான் 15: 5
நானே திராட்சச்செடி , நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
6. ஜீவ தண்ணீர் நானே
இரட்சிப்பின் பரிசுத்தமாகுதலில் கிறிஸ்துவாகிய தண்ணீர் மட்டுமே தாகம் தீர்க்க முடியும் ..
யோவான் 4: 14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
=====================
கிறிஸ்துவின் மரணத்தில் "நானே அவர்"
======================
யோவான் 8: 28
ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
யோவான் 13:18-19 ஷாலோம்
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்: ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
============================
நிச்சயமில்லாதவனாக ஓட வேண்டாம்
=============================
1. இரட்சிப்பில் நிச்சயம் பெறுவோம்
ரோமர் 5:10
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே .
2. தேவனுடைய அழைப்பில் நிச்சயம் பெறுவோம்
அப்போஸ்தலர் 16:10
அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று; நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு , உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
3. இரட்சிப்பின் நிறைவேறுதலில் நிச்சயம் பெறுவோம்
2 தீமோத்தேயு 1: 12
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன் .
என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன் .
13. இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
14. ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன், ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது. நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
10. பிதாவுக்கும் குமாரனுக்கும் உரிய இரகசியத்தின் நிச்சயத்தை பெறுவோம்
கொலோசெயர் 2: 2
அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
கடைசியாக சகோதரரே
பிலிப்பியர் 1: 26
இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து,
நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு, உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.
=============================
ஆவிக்குரிய வளர்ச்சி - Spiritual Growth
=============================
Similies - உவமைகள்
=============
1. As a seed - விதையை போல
Spring up - வசந்தமாய் இருப்பார்கள்
மாற்கு 4: 27
இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
Mark 4: 27
And should sleep, and rise night and day, and the seed should spring and grow up, He knoweth not how.
2. As a lily - லீலி புஸ்பத்தை போல
Lowliness - தாழ்மையாய் இருப்பார்கள்
ஓசியா 14: 5
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
Hosea 14: 5
I will be as the dew unto Israel: He shall grow as the lily, and cast forth his roots as Lebanon.
3. As a cedar - கேதுரு போல
Strengthfulness - வலிமையாய் இருப்பார்கள்
சங்கீதம் 104: 16
கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
Psalms 104: 16
The trees of the LORD are full of sap; the cedars of Lebanon, which He hath planted;