=============
இரண்டாம் திருமொழி - இரட்சிப்பின் வார்த்தை
=============
தலைப்பு: நம்பிக்கை எனும் ஒளிக்கீற்று
லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே
கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்
யோவான் 14:53
கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்
யோவான் 14:53
யோவான் 17:24
யோவான் 12:26
நான் எங்கே இருக்கிறேனோ அவர்களும் என்னுடனே இருக்க விரும்புகிறேன்.
1. கர்த்தரே இரட்சிப்பு
எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
1. கர்த்தரே இரட்சிப்பு
எபேசியர் 1:7
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
ஏசாயா 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
சங்கீதம் 62:2,6
சங்கீதம் 62:2,6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை
சங்கீதம் 25:5
சங்கீதம் 25:5
நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுவதும் காத்திருக்கிறேன்.
சங்கீதம் 27:1
சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்
சங்கீதம் 3:8
யோனா 2:9
இரட்சிப்பு கர்த்தருடையது
2. கர்த்தரால் இரட்சிப்பு
அப்போஸ்தலர் 4:12
2. கர்த்தரால் இரட்சிப்பு
அப்போஸ்தலர் 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.
ஏசாயா 43:11
ஏசாயா 43:11
நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை
ஓசியா 13:4
என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை
சங்கீதம் 37:39
சங்கீதம் 37:39
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்
சங்கீதம் 62:1
சங்கீதம் 62:1
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்
எரேமியா 3:23
எரேமியா 3:23
இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே
3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு
சங்கீதம் 130:7
3. கர்த்தரிடத்தில் இரட்சிப்பு
சங்கீதம் 130:7
கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு.
லூக்கா 19:90
இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார்.
புலம்பல் 3:26
புலம்பல் 3:26
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
சங்கீதம் 62:7
சங்கீதம் 62:7
என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது
===============
சிலுவை தியான அருட்செய்தி
===============
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
இரண்டாவது வார்த்தை: இரட்சிப்பு
================
லூக்கா 23:43இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
ஏசாயா 53:12
அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
2. யாருக்காக சொல்லப்பட்டது
2. யாருக்காக சொல்லப்பட்டது
லூக்கா 23:43
ஒரு கள்ளனுக்காக / குற்றவாளிக்காக
3. முதல் ஜெபத்தையும், கடைசி ஜெபத்தையும் ஒரே ஜெபமாக செய்து பதில் பெற்று கொண்ட கள்ளன்
3. முதல் ஜெபத்தையும், கடைசி ஜெபத்தையும் ஒரே ஜெபமாக செய்து பதில் பெற்று கொண்ட கள்ளன்
லூக்கா 23:42
4. பரதீசு என்ற பதம் வேதாகமத்தில் முன்று முறை வருகிறது
4. பரதீசு என்ற பதம் வேதாகமத்தில் முன்று முறை வருகிறது
லூக்கா 23:43
2 கொரிந்தியர் 12:3
வெளிப்படுத்தல் 2:7
5. கள்ளனின் ஜெபம் ஏன் கேட்கப்பட்டது?
தன் பாவத்தை உணர்ந்து அறிக்கை செய்தான்
இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கை செய்தான்
இயேசு சமீபத்தில் இருக்கிறதை அறிந்து கிடைத்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டான்
தன் பாவத்தை உணர்ந்து அறிக்கை செய்தான்
இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கை செய்தான்
இயேசு சமீபத்தில் இருக்கிறதை அறிந்து கிடைத்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டான்
ஏசாயா 55:6,7
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார் தேவன்
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார் தேவன்
2 பேதுரு 3:9
6. ஞானஸ்நானம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? கள்ளனே எடுக்கவில்லை
நீ கள்ளனா?/மரிப்பதற்கு ஆயத்தமா?/ எடுக்க தடையா?
இயேசுவே ஞானஸ்நானம் எடுத்திருக்க நாமும் எடுக்க வேண்டியது அவசியம், வேறு விளக்கம் தேவையில்லை.
7. சிலுவையில் இயேசு பேசின இரண்டாம் வார்த்தை நமக்கு இரட்சிப்பின் நிச்சயம் தருகிறது மற்றும் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ள கற்று தருகிறது.
=============
Pastor: Jeyaseelan
Mumbai
=============
The second word: salvation
=============
Luke 23:43Verily I say unto thee, Today thou shalt be with me in Paradise.
1. Fulfillment of Prophecy
Isaiah 53:12
Jesus was numbered with the transgressors.
Jesus was numbered with the transgressors.
2. For whom it was said?
Luke 23:43
For a thief / criminal
For a thief / criminal
3. The thief who received the answer by performing the first prayer and the last prayer as a single prayer
Luke 23:42
4. Paradise comes three times in the Bible.
Luke 23:43
Luke 23:43
2 Corinthians 12:3
Revelation 2:7
5. Why was the thief's prayer heard?
a. He realized his sin and Confessed
a. He realized his sin and Confessed
Luke 23:41
b. He declared Jesus to be lord.
b. He declared Jesus to be lord.
Luke 23:42
c. Jesus took advantage of the moment he came to know
that he was near
c. Jesus took advantage of the moment he came to know
that he was near
Isaiah 55:6,7
d. God’s Desire & Will is No One Should perish, but all repent
2 Peter 3:9
6. What is the need to be baptized? The thief didn't take Baptism.
d. God’s Desire & Will is No One Should perish, but all repent
2 Peter 3:9
6. What is the need to be baptized? The thief didn't take Baptism.
Are you a thief?/ Are you prepared to die?/ Is it forbidden to take Baptism?
It is necessary for us to be baptized, As Jesus as a son of God Taken Baptism no other explanation is required for us to take Baptism.
It is necessary for us to be baptized, As Jesus as a son of God Taken Baptism no other explanation is required for us to take Baptism.
7. The second word Jesus spoke on the cross gives us the certainty of salvation and teaches us to make the most of the opportunity that we have before the time is Gone. Redeem the time for the days are evil.
இரண்டாம் வார்த்தை
==============
லூக்கா 23:43
இன்றைக்கு நீ என்னுடனே கூடப்பரதீசிலிருப்பாய்
இந்த வார்த்தை இயேசுவினால், தனது ஜீவமரணப் போராட்டத்தின் நடுவில் ஒரு கள்ளனை நோக்கிச் சொல்லப்பட்ட வார்த்தை. இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. தூண்டிவிடப்பட்ட உணர்வு
ஒரு கள்ளன் செய்த தவறான ஜெபம், மற்றொரு
கள்ளனுடைய குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டது. லூக் 23: 40,41. இந்த உணர்ச்சியால் கிறிஸ்து யார்? என்று அவன் அறிக்கை செய்தான். சகமனிதர்களோடு நம்மை ஒப்பிட்டு, நமது சுயநீதியை வெளிப்படுத்தக்கூடாது. கிறிஸ்துவோடு நம்மை ஒப்பிட்டு நமது குற்ற உணர்ச்சியை அறிந்து கொள்ள வேண்டும்
லூக்கா 18:10-14.
2. ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை
கள்ளன் தனது தூண்டிவிடப்பட்ட குற்ற உணர்வின் ஜெபத்தை இயேசு ஏற்றுக்கொண்டார். லூக்கா 23:42, அவனுடைய ஜெபம் குற்ற உணர்வை மட்டுமல்ல. கிறிஸ்துவின் வருகையின் பேரில் காணப்பட்ட அவனுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தியது.
3. அறிவிக்கப்பட்ட ஆசீர்வாதம்
கள்ளனின் குற்ற உணர்வு, அவனுடைய விசுவாச அறிக்கை, இவைகளை கிறிஸ்து ஏற்றுக்கொண்டதால், அறிவிக்கப்பட்ட ஆசீர்வாதம் தான் இந்த வார்த்தையாகும் லூக்கா 23:43. ஆண்டவர் நமது பாவ அறிக்கை மற்றும் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்போது, ஆசீர்வாதத்தை அறிவிக்கிறார். அது தீத்து 1:3, 1 யோவான் 2:25-ன் படி நிலைவாழ்வாக, நித்திய ஜீவனாக இருக்கிறது.
இரண்டாம் திருமொழி
(அருட்பணி. ஜான்சன் அசோக்குமார்)
“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்“ (லூக்கா 23:43)
இயேசுவின் சிலுவை மொழிகளில் இது இரண்டாவது மொழியாகும். இயேசுவோடு அதே நாளில் வேறு இரண்டு கள்வர்கள் (குற்றவாளிகள்) சிலுவையில் அறையப்பட்டார்கள். கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரையில் இரண்டு கள்வர்கள். ஆனால் யூதர்களைப் பொறுத்த வரையில் இயேசு உட்பட மூவருமே ரோமர்களுக்கு எதிரான கலகக்காரர்கள். இயேசுவின் காலத்தில் அரசுக்கெதிரான கலகக்காரர்கள் கள்வர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். இக்கள்வர்கள் புதிய ஏற்பாட்டின் காலத்திற்கு முன்பு கிரேக்க ஆட்சி நடைபெற்ற பொழுது அவர்களுக்கெதிராக தங்கள் சமய உரிமையை அரசியல் உரிமையை நிலைநாட்ட போராடிய மக்கபேயு புரட்சியாளர்கள். இவர்களே இயேசுவின் காலத்தில் ஆயுதம் ஏந்தி ரோமருக்கு எதிராக கலகம் செய்த செலோத்தியர்கள். ஒரு குறிப்பை நாம் மறந்துவிடக் கூடாது. இயேசுவின் சீடர்களில் ஒருவரான சீமோன் என்பவர் செலோத்தியன் என்ற குறிப்பை லூக்கா 6:15 தருகிறது. (காணானியன்) சில வேளைகளில் இவ்வகை விடுதலைப் போராளிகள் அப்பாவி மக்களை அச்சுறுத்தி வாழ்வதும் உண்டு. இவர்கள் குகைகளில், மலைகளில், அடர்ந்த காடுகளில், மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் மறைந்து வாழ்ந்தனர். வணிகர்கள், செல்வந்தர்கள் பயணவழியாகச் செல்லும்போது அவர்கள் வருகையை அறிந்து அவர்களிடம் இருக்கும் பணத்தை, செல்வத்தை பறிப்பர். ஏழைகளுக்கு இவர்கள் தங்களையும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. இது தேவையற்ற அச்சமாகவே புரிய வேண்டும். ஏனெனில் இவர்களில் பலர் ஏழைகளே. மேலும் ரோம அரசு ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் ரோமரல்லாத ஆண்கள் அரசுக்கு தலைவர் (poll tax) செலுத்த வேண்டும். ஆனால் அக்காலத்தில் உணவுக்கே வழியில்லாமல், வேலைவாய்ப்பில்லாமல் மக்கள் அவதிப்பட்டனர் (மத்தேயு 20:6,7). இந்நிலையில் வரி எப்படி கட்டுவது? வரி கட்ட இயலாத ஆண்கள் அரசின் அடக்குமுறைக்கு பயந்து ஊரைவிட்டு வெளியேறி, மறைவாக வாழ்ந்த கள்வர்கள் என அழைக்கப்பட்ட விடுதலைப் போராளிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். பலர் இவ்வியக்கத்திலிருந்து கொண்டே ஊரில் வாழும் தங்கள் குடும்பத்திற்கு தங்களுக்கு கிடைக்கும் பணத்தை குடும்பத்தின் உணவுத் தேவைக்காக அனுப்புவதும் உண்டு என்று தீயிசன் என்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் கூறுகிறார். இவர்களில் இருவரே இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டார்கள்.
இயேசுவின் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள்:
1. தன்னை இறைமகன் என்று அறிக்கை செய்தாள் (யோவான் 19:7,12). இயேசுவின் காலத்தில் ரோம அரசனைத் தவிர வேறு யாரையும் கடவுளின் மகன் என்று அழைக்கக் கூடாது. வரி தொடர்பான கேள்விகளுக்கு இயேசு விடையளித்த போது (மத்தேயு 22:15-21) ரோம நாணயத்தில் உள்ள உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேள்வியெழுப்புகிறார். அதில் பொறிக்கப்பட்டிருப்பது ”ரோம அரசன் கடவுளின் மகன்“ (அகஸ்டஸ் சீசர்களின் மகன்) எனவே தான் வேறு எவரையும் அவ்வாறு அழைக்கக் கூடாது என்ற எதிர்ப்பு இருந்தது. அப்படி அழைத்தால் அவன் அரசனுக்கு எதிரானவன். தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டார்கள்.
2. ரோம அரசராகிய சீசருக்கு வரி கொடுக்க வேண்டாமென்று மக்களை ஏவிட்டார்.
(லூக்கா 23:2)
3. கலிலேயா முதல் யூதேயா வரை மக்களிடையே கலகத்தைத்தூண்டி விட்டார்
(லூக்கா 23:5,14)
4. மக்கள் சீரழிய காரணமாயிருந்தார். (லூக்கா 23:5) இன்றைய மக்களின் தவறான பண்பாட்டுத் தகவுகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து விடுபட்டு மனம் திரும்பி கடவுளின் அரசிற்கென தகவுகளை வாழ்வில் கைக்கொள்ளச் செய்தார். ஆனால் மக்களை தூண்டிவிடுவதாக குற்றச் சாட்டு.
இயேசு இத்தகைய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தீர்ப்பிடப் பட்டார். ஆகவே இயேசு அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளோடு மூன்றாவது குற்றவாளியாக சிலுவையில் அறையப்பட்டார்.
இயேசுவோடு சிலுவையில் இரண்டு புறமும் இரண்டு கள்வர்கள் அறையப்பட்டார்கள். இக்கள்வர் இருவரும் இயேசுவை கேலிப்பேசிய மக்களோடு சேர்ந்து இயேசுவை கிண்டலும் கேலியும் செய்தனர் (மாற்கு 15:32, மத்தேயு 24:44). நீ மேசியாவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று கூறினர் (லூக்கா 23:39). ஆனால் இப்படிக் கேலி பேசிய கள்வர்களில் ஒருவன் எப்படி மனம் மாறினான்? இயேசுவின் எந்த வார்த்தையை (அ) செயலை கேட்ட பிறகு, கண்ட பிறகு மனம் மாறியிருப்பான். சிலுவையினடியில் நின்று கொண்டிருந்த ரோமனான நூற்றுக்கதிபதி இயேசு தன் தந்தையிடம் தன் உயிரை ஒப்படைத்த பின்பு, அனைத்தையும் கண்ட பின்பு இயேசுவை இறை மகன் என்றும், நீதிமான் என்றம் அறிக்கையிட்டான் (மாற்கு 15:39, மத்தேயு 27:57, லூக்கா 23:47). அரசின் உயர் பொறுப்பில் இருந்தவர் அனைத்து அதிகாரிகள் மற்றும் அரசன் ஆகியோரின் பண்பு நலன்களை நன்குணர்ந்த நூற்றுக்கதிபதியின் சான்று எத்துனை சிறப்புமிக்கது. ஆனால் இக்கள்வன் எதன் அடிப்படையில் இயேசுவை நோக்கி திரும்பியிருப்பான்? இயேசுவின் சிலுவைத் திருமொழிகளில் இம்மொழி வேறு எங்காவது இடம் பெற்றிருந்தால் சிறப்பாய் இருந்திருக்குமோ?
கள்வனில் ஏற்பட்ட மாற்றங்கள்:
1. அவனில் இருந்த கடவுள் பயம் வெளிப்படுகிறது. எனவேதான் தன் நண்பரிடம் கடவுள் பயம் இல்லையா? என கேள்வியெழுப்புகிறான். கள்வர்கள் என்று குறிப்பிடப்படும் இம்மக்கள் எத்துணை கடவுள் நம்பிக்கையுடனும், பயத்துடனும் வாழ்ந்துள்ளார்கள். நமக்கு இது ஓர் அறைகூவல். சிலுவையில் துன்புறும் இயேசுவை அவமதிப்பது கடவுளுக்குகந்த அல்ல என்ற உணர்வடைகிறான், தன் நண்பனுக்கு உணர்த்துகிறான்.
2. தாங்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதை ஒப்புக்கொண்டு தன் நண்பனிடம் அதனை பகிர்ந்து கொள்கிறான்.
3. இயேசு குற்றமற்றவர் என்பதை தன் நண்பனுக்கு எடுத்து உரைக்கிறான். யூத சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் இயேசுவை குற்றவாளியாக கண்டனர். பிலாத்துவும் அதனை ஏற்று தண்டனையும் அளித்துவிட்டான். ஆனால் சிலுவையில் தொங்கும் நிலையிலும் அவர் குற்றமற்றவர் என்று குரலெழுப்பிய ஒரே குரல் இக்கள்வனுடையதே.
4. தன் நண்பனை திருத்த முயற்சி செய்கிறான்.
5. துன்புறுகிற இயேசுவிடம் நம்பிக்கை கொள்கிறான். அற்புதத்தையும் அடையாளத்தையும் நம்பிய யூதர்களிலும், நம்மிலும் இவன் மேலானவனாய் காட்டப்படுகிறான்.
6. சமயத்தலைர்களும், அரசியல் தலைவர்களும் காணமுடியாத மேசியா குணத்தை இக்கள்வன் இயேசுவிடம் காண்கிறான்.
7. கடவுளுக்கும், இயேசுவுக்கும் இடையே இருந்த உறவை உணர்கிறான்.
8. இயேசுவை அணுகியவர்கள் பலரும் பல்வேறு அடைமொழிகள் கொடுத்தே இயேசுவை அழைத்தனர். ஆனால் இவனோ யதார்த்தமாய் இயேசுவை பெயர் சொல்லியே அழைத்தான். இயேசுவை பெயர் சொல்லி அழைத்தவன் இவன் ஒருவனே. தங்களின் சொந்த நன்மையை மையப்படுத்தும் சிலர் பல்வேறு விதங்களில் அடைமொழிகள் தருவதுண்டு. சிலர் சிலர் மீது கண்ட நற்பண்புகளின் அடிப்படையில் அடைமொழி தருவதும் உண்டு. இயேசுவின் வாழ்வில் இரண்டுமே நடைபெற்றதுண்டு. ஆனால் இக்கள்வன் எதார்த்தாதியாக, இயேசுவை நண்பராக புரிந்துகொள்கிறான். தோழமை இயக்கத்தினராக உரிமையுடன் பெயர் சொல்லி அழைக்கிறான்.
9. இயேசுவோடு எப்பொழுதும் இருப்போம் என்று உறுதி சொன்னவர்கள் ஓடிப்போனார்கள். ஆனால் துன்புறும் இயேசுவோடு கள்வன் தன்னை இணைத்துக்கொள்கிறான்.
10. இயேசு உயிரோடு மீண்டும் வருவார் என்று நம்பினான். அவரது அரசு இவ்வுலகில் உருவாக்கப்படும் என்றும் நம்பினான். இயேசுவின் தற்போதைய நிலையையும் முன்னிறுப்பு நிலையையும் உணர்ந்தவனாய் காணப்படுகிறான். செபதேயுவின் பிள்ளைகளால் உணரமுடியாத மேலான சிந்தனை இவனிடம் காணப்படுகிறது. இயேசுவின் அரசை, கடவளரசை நம்பிய முதல் மனிதனாக அடையாளப்படுகிறான்.
11. ஆயுதப் புரட்சி வெற்றி பெறாது. அது ஒரு சுழற்சி என்பதை தன் தோழர்களுக்கு சிலுவையில் இருந்து அறைகூவல் விடுத்து இயேசுவின் வழியே அரசு அமைக்கின்ற உன்னத வழி என்பதை எடுத்துரைக்கிறான். கருத்தியல் புரட்சி கலாச்சார புரட்சியும் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல மாறாக புதிய வாழ்வுமுறை, அது வன்முறையால், ஆயுதத்தால் முடியாது
(எபேசியர் 6:12)
12. இயேசு குடித்த அதே பாத்திரத்தை அவனும் குடிக்கிறான்.
13. கானானியப் பெண் எப்படி இயேசுவை வார்த்தையால் வென்றாளோ, வாழ்வைப் பெற்றாளோ (மாற்கு 7:29) அவ்வாறே இவனும் திருமுழுக்கு இல்லாமல் வார்த்தையால் கடவுள் அரசை வெற்றிக் கொள்கிறான்.
14. ரோம அரசு அழியும். கடவுளின் அரசு உதிக்கும் என்று அச்சமின்றி ஊரறிய உரக்க உரைக்கிறான்.
15. ஓர் ஓநாய் ஆடாய் மாறுகிறது. ஒரு ஈட்டி அரிவாளாய் மாறுகிறது. (கொலைக்கருவி உற்பத்திக் கருவியாகிறது)
16. பரதீசு என்றால் என்னவென்று பலர் ஆராய்ச்சி செய்து வியாக்கியானம் செய்வார்கள். அது தேவையற்றது. காரணம் பரதீசு என்பது ஒரு பாரசீகச் சொல். அதன் பொருள் மிகவும் அழகான பாதுகாப்பான இடம். அது கடவுள் உள்ள இடமே தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது. எனவே, இந்த ஆய்வை விடுத்து கள்வன், இயேசுவின் இயக்கத்துடன் இணைந்துக்கொண்டது போல் நாம் கடவுளரசை அமைக்க எவருடன், எந்த இயக்கத்துடன் இணைந்து பணி செய்தால் மக்கள் விடுதலை வாழ்வு வாழ்வார்கள் என்று ஆய்ந்து இணைந்து செயல்படுவதே சாலச்சிறந்தது.
ஒரு மனிதனுக்கு மீட்பு எத்தருணத்திலும் கிடைக்கும் என்பதற்கு இதை விட மிகப்பெரிய சான்று எதுவுமில்லை. நாமும் நம்முடைய பிழைகளைக் குற்றங்களை மீறுதல்களை, கீழ்ப்படியாமையை அறிக்கையிடுவோம். ஆண்டவரின் அரசில் இடம் பெறுவோம்.