===============
முதலாம் திருமொழி
மன்னிப்பின் வார்த்தை
=============
தலைப்பு: மன்னிப்பு எனும் மலர்ச்செண்டு
லூக்கா 23:34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். .
1. கர்த்தர் மன்னிக்கிறவர் மறுவாழ்வு அளிக்கிறவர்
யாத்திராகமம் 34:7
ஆயிரம் தலைமுறை மட்டும் மன்னிக்கிறவர்
சங்கீதம் 86:5
சங்கீதம் 86:5
நல்லவரும் மன்னிக்கிறவரும் கிருபை மிகுந்தவர்
ஏசாயா 55:7
மன்னிக்கிறதற்கு தயை பெருத்திக்கிறார்
தானியேல் 9:10
ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு
1 யோவான் 2:2
பாவங்களை நிவ்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே
எபேசியர் 1:7
இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
2. கர்த்தர் மன்னித்தவர் மனந்திரும்ப செய்தவர்
யோவான் 8:11 (3-11)
விபச்சாரி பெண்ணை நோக்கி: நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்று இயேசு மன்னிக்கிறார்.
லூக்கா 7:48 (37-48)
பாவியாகிய பெண் இயேசுவின் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்தாள். அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
மத்தேயு 9:2
படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.
படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.
3. கர்த்தர் மன்னிப்பவர் மன்னிக்கச் சொன்னவர்
மத்தேயு 18:22 (20-35)
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:22 (20-35)
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:20-35
இயேசு பேதுருவிடம் ஏழு எழுபதுமுறை மன்னிக்கச் சொல்லுகிறார். கடனை மன்னியுங்கள்.
மாற்கு 11:25,26
ஜெபம்பண்ணும்போது ஒருவருக்கொருவர் குறைபாடு வந்தால் அவனுக்கு மன்னியுங்கள்.
மத்தேயு 6:14
மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
எபேசியர் 4:32
கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:13
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
==============
முதலாம் வார்த்தை: மன்னிப்பு
===============
லூக்கா 23:34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
தீர்க்கதரிசன நிறைவேறுதல்
ஏசாயா 53:12
அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டார்
யாரை மன்னிக்க வேண்டுதல் செய்தார்?
1) சிலுவைகளில் அறைந்தவர்களை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
யாரை மன்னிக்க வேண்டுதல் செய்தார்?
1) சிலுவைகளில் அறைந்தவர்களை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
லூக்கா 23:33
2) சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டவர்களை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
2) சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டவர்களை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
லூக்கா 23:21
3) பரியாசம்பண்ணின போர்ச்சேவகர்ளை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
லூக்கா 23:36,37
4) அவரை (இயேசுவை) இகழ்ந்த குற்றவாளியையும், அதிகாரிகளை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
லூக்கா 23:35,39
5) குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்ற பிரதான ஆசாரியரையும், வேதபாரகரையும் மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
லூக்கா 23:10
6) காட்டிக்கொடுத்த யூதாசை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
லூக்கா 22:48
7) மூன்றுதரம் மறுதலித்த பேதுருவை மன்னிக்க வேண்டுதல் செய்தார்.
லூக்கா 22:61
1) நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்
I யோவான் 2:1
2) பிரசங்கித்தபடியே வாழ்ந்து காட்டினார்
மத்தேயு 5:44
3) துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
4) கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
4) கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13
5) நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
5) நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
மாற்கு 11:25
முதலாம் வார்த்தை நமக்கு மன்னிப்பின் நிச்சயம் தருகிறது, மன்னிப்பதற்கு நமக்கு கற்று கொடுக்கிறது
=============
First Word : Forgiveness
==============
Luke 23:34And Jesus said unto them, Father, forgive them, for they know not what they are doing.
1) Fulfillment of Prophecy
Isaiah 53:12
Prayed for the Wicked
Prayed for the Wicked
a) Jesus Prays for Whose Forgiveness
b) For Those who Crucified Him
b) For Those who Crucified Him
Luke 23:33
c) For The people who Shouted “Crucify Jesus”
c) For The people who Shouted “Crucify Jesus”
Luke 23:33
d) For The Soldiers who mocked Jesus
d) For The Soldiers who mocked Jesus
Luke 23:36
e) The criminal & Officers who despised him
Luke 23:35,39
f) For the high priests and scribes who stood accusing
Luke 23:10
g) For Judas, who betrayed Jesus
Luke 22:48
h) For Peter Who Denied Jesus 3 Times
h) For Peter Who Denied Jesus 3 Times
Luke 22:61
i) Jesus Who pleads for our forgiveness to Father
1 John 2:1
2) He lived and showed he preached
Matthew 5:44
Pray for those who persecute you.
Pray for those who persecute you.
Just as Jesus Christ forgave you, forgive one another
Colossians 3:13
I. And when you stand praying, if you hold anything against anyone, forgive them, so that your Father in heaven may forgive you your sins.”
I. And when you stand praying, if you hold anything against anyone, forgive them, so that your Father in heaven may forgive you your sins.”
Mark 11:25
II. The first word gives us certainty of forgiveness and teaches us to forgive
III. “FIRST WORD ON CROSS “ WORD OF FORGIVENESS”
==========
Pastor: Jeyaseelan
Mumbal
==========
மன்னியுங்கள்
=========
எபேசியர் 4:32 (22-32) ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13
கொலோசெயர் 3:13
மாற்கு 11:25
ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
மத்தேயு 18:22 (21-35)
மத்தேயு 18:22 (21-35)
இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபது தரமட்டும் மன்னிக்கவேண்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
அப்போஸ்தலர் 5:31
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக... இயேசுவை உயர்த்தினார்.
ஏசாயா 55:7
ஏசாயா 55:7
அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
மீகா 7:18
மீகா 7:18
அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?
1. சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்த இயேசு
லூக்கா 23:34,46 (31-34)
1. சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்த இயேசு
லூக்கா 23:34,46 (31-34)
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
2. கல்லெறிந்து கொன்றவர்களை மன்னித்த ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:60 (54-60)
2. கல்லெறிந்து கொன்றவர்களை மன்னித்த ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:60 (54-60)
ஸ்தேவானோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரை யடைந்தான்.
3. குழியில் தள்ளி விட்டவர்களை மன்னித்த யோசேப்பு
ஆதியாகமம் 50:17 (14-22)
3. குழியில் தள்ளி விட்டவர்களை மன்னித்த யோசேப்பு
ஆதியாகமம் 50:17 (14-22)
உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்க வேண்டும் என்று அவனுக்குச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.
ஆதியாகமம் 50:20
ஆதியாகமம் 50:20
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
================
சிலுவை தியான அருட்செய்தி
================
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
=============
மன்னிப்பின் மாண்பு
=============
மத்தேயு 18:20-35 இயேசு பேதுருவிடம்: ஏழு எழுபதுமுறை மன்னிக்கச் சொல்லுகிறார்; கடனை மன்னியுங்கள்.
மத்தேயு 6:14
மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்
எபேசியர் 4:32
கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கொலோசெயர் 3:13
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
1. மன்னிப்பதின் மூலம் மறுவாழ்வு (Re Life)
யோவான் 8:3-11
1. மன்னிப்பதின் மூலம் மறுவாழ்வு (Re Life)
யோவான் 8:3-11
விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்திலே கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்... இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
2. மன்னிப்பதின் மூலம் புதுவாழ்வு (New Life)
லூக்கா 15:11-35
2. மன்னிப்பதின் மூலம் புதுவாழ்வு (New Life)
லூக்கா 15:11-35
மன்னிக்கும் தகப்பன்- மனந்திருந்திய மைந்தன்
லூக்கா 15:21
லூக்கா 15:21
குமாரன்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்றான்
லூக்கா 15:24
லூக்கா 15:24
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
மாற்கு 2:5 (1-12)
மாற்கு 2:5 (1-12)
இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்
3. மன்னிப்பதின் மூலம் நிலைவாழ்வு (Eternal Life)
லூக்கா 23:42 (39-43)
3. மன்னிப்பதின் மூலம் நிலைவாழ்வு (Eternal Life)
லூக்கா 23:42 (39-43)
சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்கா 23:43
லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னோடேகூடப் பரதீசில் (பேரின்ப வீட்டில்) இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
===================
சிலுவை தியான அருட்செய்தி
===================
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
===============
பாவங்களை மன்னிக்கும் கர்த்தர்
===============
1 யோவான் 3:9(1-10) நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
1. பாவங்களைத் தூரமாக விலக்கி விட்டார்
சங்கீதம் 103:12
1. பாவங்களைத் தூரமாக விலக்கி விட்டார்
சங்கீதம் 103:12
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்
ஏசாயா 44:22
ஏசாயா 44:22
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்.
எபிரெயர் 12:1
எபிரெயர் 12:1
நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு, இயேசுவை நோக்கி... பொறுமையோடே ஓடக்கடவோம்
2. பாவங்களைப் பின்னாக எறிந்து விட்டார்
ஏசாயா 38:17
ஏசாயா 38:17
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்
ஏசாயா 43:25
ஏசாயா 43:25
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே
குலைத்து போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமல் இருப்பேன்.
குலைத்து போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமல் இருப்பேன்.
எபிரெயர் 8:12
நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்
எபிரெயர் 10:17
3. பாவங்களை மறைவாக புதைத்து விட்டார்
சங்கீதம் 85:2
உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தை யெல்லாம் மூடினீர்.
மீகா 7:19
மீகா 7:19
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
சங்கீதம் 51:9
சங்கீதம் 51:9
என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
சங்கீதம் 32:5
சங்கீதம் 32:5
என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்
சிலுவை தியான அருட்செய்தி
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
முதலாம் வார்த்தை
===============
லூக்கா 23:34
பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது
இன்னதென்று அறியாதிருக்கிறார்களே
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் செய்த பரிந்துரை ஜெபமாக மன்னியும் என்ற இந்த வார்த்தை காணப்படுகிறது. இந்த ஜெபத்தின் சாராம்சம் என்னவென்று அறிந்துகொள்வோம்.
1. எல்லாருக்கும் மன்னிப்பு வழங்க செய்யப்பட்ட பரிந்துரை மன்றாட்டு.
இன்றும் பரலோகத்தில் இந்த மன்றாட்டு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது
1 யோவான் 2:1,2
லூக்கா 13:6-9
2. எல்லாப் பாவங்களையும் மன்னிக்கும்படி செய்யப்பட்ட பரிந்துரை மன்றாட்டு.
இயேசுவின் போதனை இப்படித்தான் இருந்தது
மத்தேயு 12:31,32
சங்கீதம் 103:3
யோவான் 1:7
3. எல்லாக் காலங்களின் பாவங்களையும் மன்னிக்கும் படி செய்யப்பட்ட பரிந்துரை மன்றாட்டு.
இந்த மன்றாட்டை கிறிஸ்து நேற்றும் இன்றும் நாளையும் ஏறெடுக்கிறவராயிருக்கிறார். இந்த மன்றாட்டு ஜெபம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதல்ல
எரேமியா 31:34
எபிரெயர் 8:12
எபிரெயர் 10:17
ஒன்றாம் திருமொழி
(அருட்பணி. ஜான்சன் அசோக்குமார்)
அப்பொழுது இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை“ என்றார். (லூக்கா 23:34)
ஆண்டவராகிய இயேசு சிலுவையிலிருந்து கூறிய முதலாவது திருமொழி இதுவாகும். இம்மொழியில் இயேசுவுக்கும் தன் தந்தைக்கும் இடையே இருந்த உறவு தெளிவாக வெளிப்படுகிறது. இதனை நான்கு நற்செய்தி நூல்களும் ஆங்காங்கே பதிவு செய்யத் தவறவில்லை. சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம்.
1. கிறிஸ்து இயேசுவை உலகத்திற்கு அவரின் தந்தையே அனுப்பினார். தாமாக இந்த பணிக்கு வரவில்லை.
(யோவான் 3:16)
2. கடவுளின் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே வாழ்வியல் என்று வாழ்ந்தவர்.
(யோவான் 8:38)
3. இயேசு தன் சொந்த விருப்பத்தினடிப்படையில் எதையுமே செய்ய முற்படவில்லை. அதனால் தோல்வியுமடையவில்லை.
(யோவான் 8:29)
4. கிறிஸ்து தனது வாழ்வில் எதனைச் செய்தால் கடவுள் / தந்தை பிரியப்படுவாரோ, மாட்சிமை அடைவாரோ அதனை மாத்திரமே செய்தார்
(யோவான் 8:29)
5. தன்னுடைய தந்தையின் கடவுளின் உள்ளிருப்பை அனுபவித்தவர். எப்பொழுதும் கடவுளோடு இருந்தவர்.
(யோவான் 17:11)
6. கடவுள் / தந்தை தன்னை எப்பொழுதும் தனியே விடுதில்லை என்ற உணர்வில் வாழ்ந்தவர்.
(யோவான் 8:29)
7. கடவுளின் / தந்தையின் கட்டளையின் அன்பில் நிலைத்திருந்தார்.
(யோவான் 15:10)
தந்தை என 84 முறை யோவானில் வருகிறது. அவரோடு இவரும், இவரோடு அவரும் இணைந்தே இருந்தனர். எனவே இயேசுவும் தந்தையும் எப்பொழுதும் இணைந்தே இருந்தனர்.
இயேசு தன் வாழ்வில் செய்த ஒவ்வொரு செயலுக்கும் முன்னால் தன் தந்தையிடம் அனுமதி பெற்று அல்லது ஆலோசனை பெற்று செய்தார். இதற்காக இயேசு தந்தையிடம் ஒவ்வொரு முறையும் இறை வேண்டல் செய்தார் என்று கூறினாலும் தவறில்லை. அவ்வகையில் இயேசு தன் வாழ்வில் தன் தந்தையிடம் பலமுறை இறைவேண்டல் செய்துள்ளார். அவைகளில் சிலவற்றை காண்போம்.
1. தன் பணியை துவக்கும் முன்பு 40 நாட்கள் தனித்து இறைவனுடன் வேண்டுதல் செய்தார்.
(மத்தேயு 4)
2. திருப்பணிக்கு சீடர்களை நியமிக்கும்பொழுதும், தெரிவு செய்யும் முன்பும் இறைவேண்டல் செய்தார்.
(லூக்கா 6:12)
3. திருப்பணி பணிக்காய் நன்றி.
(மத்தேயு 11:25)
(லூக்கா 10:21)
4. பசித்த மக்களுக்கு உணவளித்த போது
(யோவான் 6:11)
5. லாசருவை உயிரோடு எழுப்பும்போது.
(யோவான் 11:11)
6. இயேசுவைப் பார்க்கக் கிரேக்கர்கள் வந்தபோது நன்றியின் இறைவேண்டல்.
(யோவான் 12:27,28)
7. பணி நிறைவு இறை வேண்டல்
(யோவான் 17:1)
8. போராட்ட இறைவேண்டல்.
(மத்தேயு 28:39)
(மாற்கு 14:36)
(லூக்கா 22:42)
9. சிலுவையில் மன்னிப்பு இறைவேண்டல்
(லூக்கா 26:32)
10. ஆவியை ஒப்புகொடுத்தல்
(மாற்கு 14:26,42)
இது போன்று பல இறைவேண்டல்களைச் செய்தார்.
இங்கு ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லவிரும்புகிறேன். தன் இறை வேண்டலில் ஒருமுறைகூட கடவுளே என்று இறைவேண்டலை தொடங்கவோ முடிக்கவோ இல்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவாகவே எல்லா இறைவேண்டல்களும் அமைந்திருக்கும்.
முதலாவதாக இவ்வார்த்தையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய வார்த்தை "இவர்களை மன்னியும்" என்பது. இவர்களை என்று இயேசு யாரைக் குறிப்பிடுகின்றார்? அனைவரையும் மன்னித்தார் என்று பொதுவாகக் கூறக்கூடாது. ஏனென்றால், வார்த்தையை தெளிவாக புரிந்துகொள்வது முதலாம் திருமொழிக்கு கூடுதல் பொருள்தரும். கிரேக்க மொழியில் இவர்கள் என்றால் யாராவது ஒரு கூட்டத்தை கூட்டிக்காட்ட வேண்டும். இந்த இலக்கணம் தமிழுக்கும் வேறுசில மொழிக்கும் பொதுவானது. அப்படியென்றால் இயேசு யாரைச் சுட்டிக்காட்டினார். சிலுவையில் இயேசுவை அறைந்த போர்ச்சேவகர்களையா? கேலிப்பேசிய எருசலேம் யூதர்களையா? பண்டிகைக் கொண்டாட வந்து சிலுவை வேதனையை வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டத்தினரையா? போகிற வழியில் வேடிக்கைப் பார்த்த வழிப்போக்கர்களையா? அங்குமிங்கும் மறைந்து பார்த்துக் கொண்டிருந்த கைவிட்டுவிட்ட சீடர்களையா? யாரை மன்னிக்குமாறு வேண்டினார்.
நிச்சயமாக போர் சேவகர்களை மன்னிக்குமாறு வேண்டியிருக்க மாட்டார். ஏனென்றால், அவர்கள் செய்தது தங்கள் எஜமானர்களின் உத்தரவை நிறைவேற்றியது. இது உண்மை ஊழியர்களின் கடமை என்று உணர்தல் வேண்டும். மற்றவர்களுக்கும் சிலுவை மரணத்திற்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. இந்நிலையில் யாரை மன்னிக்குமாறு வேண்டினார்?
இரண்டு கிரேக்க வார்த்தைகளை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இவர்கள் என்பதற்கு, “ஹுட்டாய்“ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் புதிய ஏற்பாட்டில் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, “இவர்களுக்கு எதை செய்தீர்களோ" என்ற மத்தேயுவின் வாசகத்திலும் (25:40), “யார் இவர்கள்“ என்ற வெளிப்படுத்தின விசேஷத்தின் வாசகத்திலும் (7:13) பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலுவை மொழியில் கிரேக்கத் திருமறையில் இயேசு இந்த முதலாவது வார்த்தையை உச்சரித்தபொழுது “அவுட்டோயிஸ்“ என்ற வார்த்தையை, அதாவது அவர்களை என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். இவ்வாறெனில் அவர்கள் என்பது யாரைக் குறிக்கிறது? கண்ணுக்கு மறைவாக உள்ளவர்களையே அவர்கள் என்று சொல்லுவது வழக்கம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அவர்கள் யார்?
1. பரிசேயர்களும் ஏரோதியர்களும் (பரிசேயர் சமயத் தலைவர்கள், ஏரோதியர் அரசியல் கூட்டத்தினர்)
மாற்கு 3:6
2. இயேசு வளர்ந்து, தங்கி, பணிசெய்த பகுதி மக்கள் அவரின் மேலான பணியைக் கண்ட பின்னரும் எதிர்த்தனர்.
லூக்கா 4:29
3. திருமறை அறிஞர்கள் (மலை பிரசங்கம் மற்றும் ஓய்வுநாள் பற்றிய விளக்கம் தந்ததால்) எதிராயினர்.
மாற்கு 11:18
4. இயேசு கலிலேயாவைச் சார்ந்து வாழ்ந்ததால் (கலிலேயா சபிக்கப்பட்ட பகுதி என்ற புரிதல் யூதர்களுக்கு இருந்தது) யூதர்கள் இயேசுவை பெறுத்தனர்.
யோவான் 7:1
5. எருசலேம் யூத சமயத் தலைவர்கள், ஆசாரியர்கள், தலைமை ஆசாரியர் (மத்தேயு 27:20) மற்றும் இவர்களோடு எருசலேம் மூப்பர், சனகரீம் சங்கம், பிலாத்து, ஏரோது ஆகியோரை இந்த பட்டியலில் அடக்க வேண்டும்.
அறியாமல் செய்தது என்ன?
1. பன்னெடுங்காலமாய் கலிலேயர்களும், சமாரியரும் மற்றும் யூதர்களும் நாடற்ற, அரசற்ற, தலைமையற்ற, விடுதலையற்ற தங்கள் நிலையை மாற்ற கடவுள் மேசியாவை (கிறிஸ்துவை, அருட்பொழிவு பெற்றவர்) அனுப்புவார் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் அவர் யூதேயாவில் தோன்றுவார், அவரின் பணி மையம் எருசலேம் நகராக இருக்கும். யூதர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவர் என்ற நம்பிக்கை யூதர்களுக்கு கூடுதலாய் இருந்தது.
ஆனால் இயேசு பிறந்தது யூதேயா. வளர்ந்ததும், வாழ்ந்ததும், பணி செய்ததும், நட்பு பாராட்டியதும் ஓரங்கட்டப்பட்ட மக்களிடம். குறிப்பாக கலிலேயாவில். எனவே யூதர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை.
கடவுளால் அனுப்பப்பட்ட கிறிஸ்துவாகிய இயேசுவை கடைசிவரை அறியவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை.
2. மேசியா உலகமெங்கும் வாழ்ந்த யூதர்களை கூட்டிச் சேர்ப்பார். (எசேக்கியேல் 34:11,12,13) என்று நம்பினர். கிரேக்க மன்னன் அலெக்சாந்தர் காலத்தில் கி.மு.4-ம் நூற்றாண்டில் யூதர்கள் இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் அரசுபணி மற்றும் இதர காரியங்களுக்காக குடியமர்த்தப்பட்டனர். இப்படி பல்வேறு நாடுகளில் வளமாய் (செல்வத்திலும், அறிவிலும்) வாழ்ந்த மக்கள் எசேக்கியல் தீர்க்கத்தில் கூட்டிச் சேர்க்கும் பணியில் உட்படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையிருந்தது.
ஆனால் இயேசுவோ நாட்டிற்குள்ளேயே சிதறடிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு வாழ்விழந்து மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல் வாழ்ந்த (மத்தேயு 9:36,37) பெண்களை, நோயுள்றோரை, பாவிகளை, ஆயக்காரர்களை, தன்னை மேசியா என்று நம்பிய அந்நியர்களை, ஊனமுற்றோர்களை, ஏழைகளை ஒன்று திரட்டினார். இப்பணியை மேசியாவின் பணியென இயேசுவின் எதிரிகளால் அங்கீகரிக்க முடியவில்லை.
3. ஓய்வு நாள் போன்ற சடங்குகள் பொருளற்று பின்பற்றி வந்த நேரத்தில் வாழ்வுதரும் செயல்களை ஓய்வுநாளில் செய்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்தியும் பண்பாடும் இயேசுவால் சிதைந்து விடுமோ என்ற போலி கௌரவம் அவர்களைக் கவ்வி பிடித்தது.
4. கடவுளை தந்தை என்று இயேசு அழைத்ததை அவர்களால் அங்கீகரிக்கவே முடியவில்லை.
5. இயேசுவை கள்ளத்தீர்க்கதரிசிகளில் ஒருவராக நினைத்து அவரைக் கொலை செய்யத் துணிந்தனர் (உபாகமம் 13:1-18). ஆனால் ஒன்றை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். கள்ளத் தீர்க்கதரிசிகள் மக்களை வேற்றுக் கடவுளிடம் வழிநடத்துவார்களேத் தவிர திருமறையின் கடவுளை நோக்கி வழிநடத்த மாட்டார்கள் என்பதை உணரத்தவறினர்.
6. மேசியா தங்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ரோம அரசை வீழ்த்தி புதிய அரசை எருசலேமில் தொடங்கி, தாவீது அரசை மீண்டும் உருவாக்குவார் என்று நம்பினர். ஆனால் இயேசுவோ தனது அரசு இவ்வுலகு அரசு பேன்றதல்ல. இவ்வுலகத்திற்குரியதல்ல என்று தெளிவாக உரைத்து விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத சமயத்தலைவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளத் தயங்கினர்.
7. சுயநலம் கண்களை மறைத்தது. மக்கள் வழிபடக் கடவுள் அளித்த கொடையாகிய கோயிலை வணிகத்தலமாக மாற்றி மக்கள் வழிபட வழிமறித்தனர். இதற்கு கோயில் தூய்மை என்று பெயரிட்டனர். ஆனால், இயேசுவோ, கோயிலை அனைத்து மக்களுக்குமான வழிபடும் தளமாக மாற்றினார்.
8. தன் சமயத்தவரைக் கொல்ல அந்நியரின் உதவியை நாடினர். சமயமும், அரசியலும் அநீதியைச் செய்ய இன்றுபோல் அன்றும் உடன்படிக்கை செய்து கொண்டது.
ஏன் தந்தையிடம் வேண்டுதல் செய்தார்?
1. இயேசு மரியாளைப் போன்று கடவுளின் பணிசெய்ய ஒப்புக்கொடுத்த ஒரு கருவியே.
2. இயேசுவின் பணி தந்தை அனுமதித்த பணியே
யோவான் 10:36
3. தந்தையே இயேசுவைப் பணிக்கு அனுப்பினார்.
யோவான் 8:42
4. இயேசுவின் போதனை கடவுளுடையது.
யோவான் 7:7
எனவே சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் கடவுளுக்கு எதிரானதே தவிர தனக்கு எதிரானது அல்ல என்ற நோக்கில் இயேசு தன் தந்தையாகிய கடவுளிடம் மன்னிக்குமாறு வேண்டுகிறார்.
மேலும் அவர்களின் பாவம் மானுட மகனுக்கு எதிரானது (யோவான் 5:27, மத்தேயு 9:6, மாற்கு 2:10, லூக்கா 5:24). உலகத் தோற்றம் முதல் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டிக்கு வாழ்வளிக்கும் பணியை இயேசு மேற்கொள்கிறார். ஆம் காலந்தோறும் காயீனின் குடும்பத்தால் நசுக்கப்படும் ஆபேலின் வீட்டாரை, கடவுளின் மக்களை மீட்கும் பணியே இப்பணி. இப்பணியை அங்கீகரிக்காமல் தடையேற்படுத்தி பணியை முடக்க நினைக்கும் மக்களுக்காக தந்தையிடம் மன்னிப்பு கோருகிறார்.
இயேசு தன் வாழ்நாளில் பகைவர்களை மன்னிக்கவும், அவர்களிடம் அன்பு செய்யவும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்யவும் கற்றுக்கொடுத்தார். அதையே தன் வாழ்வியலாக்குகிறார். மன்னிப்பு கடவுளின் சாயல். அச்சாயலை நாமும் பெற்று கிறிஸ்துவை உலகிற்கு அறிமுகம் செய்வோம். மன்னிப்பு ஒப்புறவுக்கும் புதுவாழ்விற்கும் வழிவகுக்கிறது.
தாங்கள் செய்வது இன்னதென்று தெரிந்தே செய்யும் நம்காலத்து சுயநலவாதிகள் மனம் மாற கடவுள் மன்னிக்க வேண்டுதல் செய்வோம். ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்தும் தொலைக்காட்சி பெட்யின் நிகழ்வுகள் உணவில், உடையில், சிந்தனையில், பேச்சில், செயலில், குடும்பத்தில், சமூகத்தில், சமயத்தில், சமாதான வாழ்வில் நஞ்சை லாபகமாக கரைத்துவிடுகிறதே யார் மன்னிப்பு கேட்பது?
பணம் விளையும் பூமியாய் பள்ளிகள் மாறி மானுட மூளையை முதலாளித்துவத்திற்கு சலவைச் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளன. யார் மூலம் மன்னிப்பு கேட்பது? பொறுப்பற்ற பெற்றோர். நல்ல ஆலோசனையை உதறும் பிள்ளைகள், எதிர்கால மானுடத்திற்கு சவாலாகிறதே இதை என்ன செய்வது?
காலை முதல் மாலை வரை ஏய்த்துப் பிழைப்பதையே நோக்கமாகக் கொண்டு எளியவரை வஞ்சகமாய் ஏமாற்றும் எல்லாத் துறைகளையும் சார்ந்த வலியவரை என்ன செய்வது? கடவுளிடம் உங்களுக்காய் மன்னிப்பு மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் உங்களை மன்னிப்பதன் மூலம் நீங்கள் வாழ்கிறீர்கள். கூட்டிணைக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவதில்லை. அதிலும் இன்றைய சூழலில் வாழ்வுக்காய் வேலைத்தேடி வரும் வடஇந்திய தொழிலாளர்கள் நிலை பரிதாபம். சக்கையாய் பிழியப்படுகிறார்கள். மோசே காலத்து ஆளோட்டிகள் நினைவுக்கு வருகிறார்கள். வீட்டு வேலை செய்வோர், வயலில் சூளைகளில் கொத்தடிமைகளாய் வேலை செய்வோர் இப்படிப்பட்ட தொழிலாளர்கள் தினமும் நம்மை மன்னிப்பதால்தான் நாம் வாழ்கிறோம். நமது தொழிலும் வாழ்கிறது. ஏய்ப்பவர்கள், ஏமாற்றுபவர்கள், வஞ்சிப்பவர்கள் மனம் திரும்புவது அவசியம் என்பதை உணர்த்துவோம்.