பெரிய வெள்ளி செய்தி
ஆண்டவர் சிலுவையில் சொன்ன ஏழுவார்த்தைகள் பற்றிய தியானக் குறிப்புகள்
முதலாம் வார்த்தை
===============
லூக்கா 23:24
பிதாவே இவர்களுக்கு மன்னியும் - தாங்கள் செய்வது
இன்னதென்று அறியாதிருக்கிறார்களே
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் செய்த பரிந்துரை ஜெபமாக மன்னியும் என்ற இந்த வார்த்தை காணப்படுகிறது. இந்த ஜெபத்தின் சாராம்சம் என்னவென்று அறிந்துகொள்வோம்.
1. எல்லாருக்கும் மன்னிப்பு வழங்க செய்யப்பட்ட பரிந்துரை மன்றாட்டு
இன்றும் பரலோகத்தில் இந்த மன்றாட்டு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது
1 யோவான் 2:1,2
லூக்கா 13:6-9
2. எல்லாப் பாவங்களையும் மன்னிக்கும்படி செய்யப்பட்ட பரிந்துரை மன்றாட்டு இயேசுவின் போதனை இப்படித்தான் இருந்தது
மத்தேயு 12:31,32
சங்கீதம் 103:3
யோவான் 1:7
3. எல்லாக் காலங்களின் பாவங்களையும் மன்னிக்கும் படி செய்யப்பட்ட பரிந்துரை மன்றாட்டு இந்த மன்றாட்டை கிறிஸ்து நேற்றும் இன்றும் நாளையும் ஏறெடுக்கிறவராயிருக்கிறார். இந்த மன்றாட்டு ஜெபம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதல்ல
எரேமியா 31:34
எபிரெயர் 8:12
எபிரெயர் 10:17
இரண்டாம் வார்த்தை
==============
லூக்கா 23:43
இன்றைக்கு நீ என்னுடனே கூடப்பரதீசிலிருப்பாய்
இந்த வார்த்தை இயேசுவினால், தனது ஜீவமரணப் போராட்டத்தின் நடுவில் ஒரு கள்ளனை நோக்கிச் சொல்லப்பட்ட வார்த்தை. இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. தூண்டிவிடப்பட்ட உணர்வு
ஒரு கள்ளன் செய்த தவறான ஜெபம், மற்றொரு
கள்ளனுடைய குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டது. லூக் 23: 40,41. இந்த உணர்ச்சியால் கிறிஸ்து யார்? என்று அவன் அறிக்கை செய்தான். சகமனிதர்களோடு நம்மை ஒப்பிட்டு, நமது சுயநீதியை வெளிப்படுத்தக்கூடாது. கிறிஸ்துவோடு நம்மை ஒப்பிட்டு நமது குற்ற உணர்ச்சியை அறிந்து கொள்ள வேண்டும்
லூக்கா 18:10-14.
2. ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை
கள்ளன் தனது தூண்டிவிடப்பட்ட குற்ற உணர்வின் ஜெபத்தை இயேசு ஏற்றுக்கொண்டார். லூக்கா 23:42, அவனுடைய ஜெபம் குற்ற உணர்வை மட்டுமல்ல. கிறிஸ்துவின் வருகையின் பேரில் காணப்பட்ட அவனுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தியது.
3. அறிவிக்கப்பட்ட ஆசீர்வாதம்
கள்ளனின் குற்ற உணர்வு, அவனுடைய விசுவாச அறிக்கை, இவைகளை கிறிஸ்து ஏற்றுக்கொண்டதால், அறிவிக்கப்பட்ட ஆசீர்வாதம் தான் இந்த வார்த்தையாகும் லூக்கா 23:43. ஆண்டவர் நமது பாவ அறிக்கை மற்றும் விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்போது, ஆசீர்வாதத்தை அறிவிக்கிறார். அது தீத்து 1:3, 1 யோவான் 2:25-ன் படி நிலைவாழ்வாக, நித்திய ஜீவனாக இருக்கிறது.
மூன்றாம் வார்த்தை
=============
யோவான் 19:26,27
ஸ்திரீயே, அதோ, உன்மகன்: அதோ உன்தாய்
இந்த வார்த்தை இயேசுவினால், கண்ணீர் வடிக்கும் தன் தாயிக்கும், தனக்கு அன்பான சீஷனுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும். இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. உலாவும், கர்த்தரின் களர்கள்:
தன் கண்களைத் திறக்க முடியாத வேதனையின் நடுவில் இயேசுவின் கனர்கள், கண்ணீர் வடிக்கும் மரியாளையும், இயேசுவின் மார்பை இழந்த அன்பின் சீஷன் யோவானையும் நோக்கிப்பார்த்தது. இது I நாளாகமம் 16:9 வசனத்தை நினைவுபடுத்துகிறது. இதனால் தனது வேதனையின் மத்தியிலும், பிறருடைய வேதனையை நோக்கிப் பார்க்கிறவராக இயேசு இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறோம். இதன்படி நாமும் வாழ அழைக்கப்படுவோம். பிலிப்பியர் 2:4,5
2. உள்ளங்களை இணைக்கும் கர்த்தரின் வார்த்தைகள்:
ஆண்டவர் சொன்ன இந்த வார்த்தை மரியாள் - யோவான் இருவரின்
உள்ளங்களையும் புது உறவின் வழியாக இணைத்தது. இந்த வார்த்தை லூக்கா 10:27ன் பின்பாகத்தை நிறைவேற்ற உதவுகிறது. இதனால் ரோமர் 15:7ஐ நிறைவேற்ற நம்மாலும் இயலும் என்பதை இந்த வார்த்தை கற்றுக்கொடுக்கிறது.
3. பிரமாணத்தை நிறைவேற்றும் கர்த்தரின் உள்ளம்:
மத்தேயு 5:17னஸ் படி இயேசுவானவர் சிலுவைக்கு முன்னும், சிலுவையிலும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். அதில் பத்துக் கற்பனையில் இருக்கும் வாக்குத்தத்தமுள்ள ஒரே ஒரு கற்பனையான, பெற்றோர்களைக் கனம் பண்ண வேண்டும் என்ற கற்பனையை கிறிஸ்து உள்ளார்ந்த மனதோடு நிறைவேற்றினார். இதனால் நாமும் கற்பனைகளை முழுமனதோடு நிறைவேற்ற அழைக்கப்படுகிறோம். இந்த வார்த்தையில் மட்டும் இயேசுவின் கனர்கள், வாயின் வார்த்தை, நல்ல உள்ளம் வெளிப்படுகிறது. இப்படி நாமும் வாழ வேண்டும்.
நான்காம் வார்த்தை
================
மாற்கு 15:34என் தேவனே! என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்
இயேசு சிலுவையில் இந்த வார்த்தையைக் கூறும் போது மனித வரையறைக்குள்ளும், தெய்வ வரையறைக்குள்ளும் செயல்பட்டார். இதைப் புரிந்துகொள்ள
இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. மனித வரையறைக்குட்பட்ட அழைப்பு:
மாம்சத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவன் என்று ஒருவர் கட்டாயம் தேவை. எனவே மனிதர்கள் ஜெபிக்கும் போது தேவனே என்று ஜெபிக்கிறார்கள். அதைப்போல இயேசுவானவர் மாம்ச வரையறைக்குட்பட்டு சிலுவையில் தொங்கியதால், அவருக்கும் தேவன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்த என் தேவனே என்று அழைத்தார்.
இதை உறுதிப்படுத்த இயேசு உயிர்த்தெழுந்து மரியாளுக்குத் தரிசனம் கொடுத்த போது, மாம்சத்திலிருக்கும் மரியாளுக்குத் தேவன் இருப்பதைப் போல, மாம்சத்திலிருக்கும் தனக்கும் தேவன் இருக்கிறார் என்பதை யோவான் 20:17ல் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று கூறினார். இதையே இயேசு சிலுவையிலும் நிறைவேற்றினார். இதையே பரிசுத்த பவுலும் 11 கொரிந்தியர் 1:3-லும் கூறுகிறார்.
2. மனித வரையறைக்குட்பட்ட கேள்வி:
மாம்சத்தில் வாழும் ஒவ்வொருவரும் சில இக்கட்டான சமயங்களில், தங்களுக்கு நேரிட்ட இக்கட்டின் காரணத்தை அறிய ஏன் என்று கேள்வி கேட்பது இயல்பு. இதை சங்கீதம் 22:1-ல் தாவீது கேட்டதாக வாசிக்கிறோம். அப்படியே இயேசுவும் சிலுவையில் மனித வரையறைக்குட்பட்டுத் தொங்கினதால் ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற கேள்வியைக் கேட்டார்.
3. தெய்வ வரையறைக்குட்பட்ட பதில்:
மாம்சத்தில் வாழும் நாம் ஜெபிக்கும் ஜெபங்களுக்கான பதிலைப்புரிந்து கொள்ள முடியாத நிலையில் கிறிஸ்து தெய்வ வரையறைக்குட்பட்டவராக, பிதாவாகிய தேவன் தன் ஜெபத்துக்குக் கொடுத்த பதிலைப்புரிந்து கொண்டார். அப்பதிலானது அவரது நான்கு விதமான செயல்களாயிருந்தது. அச்செயல்கள் :
(a) பிசாசின் அதிகாரத்தை உரிந்து கொண்டது
ஆதியாகமம் 3:15
கொந்தியர் 3:15
எபிரெயர் 2:14
யோவான் 3:8
b) மரணத்தை ஜெயித்தது
b) மரணத்தை ஜெயித்தது
யோவான் 5:25
1 கொரிந்தியர் 15:54
ஏசாயா 25:8
1 தெசலோனிக்கேயர் 4:14-16
ரோமர் 8:2
c) பாவம்
ரோமர் 8:23
கலாத்தியர் 6:14
II கொரிந்தியர் 5:21
d) பகை (எபேசியர் 2:16)
d) பகை (எபேசியர் 2:16)
யார் யாருக்கு? யூதர் - புறஜாதியார் பகை, மனிதன் - தேவன் பகை,
பரலோகம் - பூலோகம் பகை (கொ 1:20 இவைகளைக் கொன்றார் II Gan 5:18,19) அதாவது ஒப்புரவாக்கினார். இச்செயல்களே ஏன் கைவிட்டீர் என்ற கேள்விக்கு பதிலாயிருந்தது
பரலோகம் - பூலோகம் பகை (கொ 1:20 இவைகளைக் கொன்றார் II Gan 5:18,19) அதாவது ஒப்புரவாக்கினார். இச்செயல்களே ஏன் கைவிட்டீர் என்ற கேள்விக்கு பதிலாயிருந்தது
ஐந்தாம் வார்த்தை
==============
யோவான் 19:28
தாகமாயிருக்கிறேன்இயேசு சிலுவையில் தொங்கும் போது நான்காவது வார்த்தைக்கும் ஐந்தாவது வார்த்தைக்கும் நடுவில் மூன்றுமணி நேரக் காரிருள் சூழ்ந்திருந்தது. ஐந்தாவது வார்த்தையைக் கூறும் போதுதான் வெளிச்சம் வந்தது. அப்போது வேதவாக்கியமாகிய சங்கீதம் 22:15-ம் வசனம் நிறைவேறும்படியாகத் தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தையைக் கூறினார்.
இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. சிலுவை மரணத்தால் ஏற்பட்ட சரீரத்தாகம்-
இந்த வார்த்தை இயேசுவின் மனித வரையறையை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது. சிலுவையில் அறையப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் அதீத காய்ச்சல் வாரடிகள் மற்றும் ஆணிகளால் இரத்தம் வெளியேறுதல், இவைகளால் தாங்க முடியாத தாகம் ஏற்படுவது இயல்பு. அப்பொழுது அவர்கள் தண்ணீர் கேட்பது உண்டு.
இயேசு தேவ குமாரனாயிருந்தாலும், மனித வரையறைக்குட்டவராய் சிலுவையில் தொங்கியதால் அவருக்கு இயல்பான சரீரத்தாகம், ஏற்பட்டது. இதனால் மனிதனாகிய கிறிஸ்து அங்குள்ள மனிதர்களிடம் தண்ணீர் கேட்டார். தண்ணீர் வேண்டும் என்று பிதாவை நோக்கிக் கேட்கவில்லை. இந்த வார்த்தையால் மனிதனை நோக்கிக் கேட்க வேண்டியவைகள் உண்டு. அவைகளை மனிதர்களிடம் கேட்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறோம்.
2. சிலுவை மரணம் வீணாகக்கூடாது என்ற தாகம்:
நான் சிலுவையில் மரிப்பதால் மனுக்குலம் மீட்கப்பட வேண்டும். ஒருவரும் கெட்டுப் போகக்கூடாது என்ற ஆத்துமாக்களைக் குறித்த தாகம் இயேசுவுக்கு இருந்தது.
I தீமோத்தேயு 2:4,
II பேதுரு 3:9
எபிரெயர் 2:10
நமக்கும் ஆத்துமதாகம் தேவை.
3. மக்கள் தம்மைப்புரிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம்? சரீர்த்தாகத்திற்கென்று இயேசுவுக்குக்காடி கொடுக்கப்பட்டது. அதை அவர் வாங்கினார். இதை யோ 19:30ல் வாசிக்கிறோம். இச்செயலானது, மக்களின் அனைத்துக் கஷ்டங்கள் துன்பங்கள் உள்ளானதாகங்கள் இவைகளை இயேசுவாகிய நான் புரிந்திருக்கிறேன் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் இயேசுவுக்கு இருந்தது. ஆனால் இன்றும் துன்பப்படும் நம்மில் அநேகர் இயேசுவின் இத்தாகத்தைப் புரியாமல் இருக்கிறோம்.
ஆறாம் வார்த்தை
=========
யோவான் 19:30
முடிந்தது இயேசு சிலுவையில் தொங்கும் போது முடிந்தது என்ற இந்த வார்த்தையைக் கூறினார். இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்ளுவோம்.
1. பழைய ஏற்பாடு முடிந்தது:
புத்தத வரிசையின் அடிப்படையில் பழைய ஏற்பாடு மல்கியா புத்தகத்தோடு முடிவடைகிறது. ஆனால் காலங்களின் அடிப்படையில் இயேசு சிலுவையில் ஜீவன் விடும் போது, தேவாலயத்திரைச்சீலை இரண்டாகக் கிழந்தபோது பழைய ஏற்பாடு முடிந்தது. மத்தேயு 27:50,51 காண்க. இதை அடையாளப்படுத்தவே இயேசு முடிந்தது என்றார். மேலும் இந்த பழையஏற்பாடு வேதவாக்கியங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆக, முதலாவது வேத வாக்கியங்கள் முடிந்தது எனலாம்.
2. இயேசுவுக்கு நியமிக்கப்பட்ட கிரியை முடிந்தது:
இதைக்குறித்து யோவான் 17:4-ல்...... நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன் என்பதாக இயேசு ஜெபித்தார். இது என்ன கிரியை? மீட்பின் கிரியையே ஆகும். இந்த மீட்பின் கிரியையைத் தமது சிலுவை மரணத்தால் செய்து முடித்தார்.
3. நியாயப்பிரமாணம் முடிந்தது:
பரிசுத்த பவுல் இதைக்குறித்துக் கூறும் போது ரோமர் 10:4-ல் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்று கூறுகிறார். ஏன், என்றும் கூறுகிறார். அப்பொழுது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் நீதிமானாகும் படி, நியாயப்பிரமாணத்தை முடித்தார் என்று கூறுகிறார். இந்த நியாயப்பிரமாணத்தில் பலிகள், பண்டிகைகள் போன்ற சடங்காச்சாரப்பிரமாணங்கள் முடிந்தது. இதைக்குறித்து தானியேல் 9:27-ல் வாசிக்கிறோம். இப்படியாக கிறிஸ்து செய்து முடிக்கவேண்டியவைகளைச் செய்து முடித்தார்.

ஏழாம் வார்த்தை
==========
லூக்கா 23:46பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்:
இயேசு சிலுவையில் இறுதி வார்த்தையாக இதைக் கூறினார். இந்த வார்த்தையை ஏன் கூறினார்? இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்ளுவோம்.
இந்த வார்த்தை மூன்று காரியங்களை அடையாளப்படுத்த சொல்லப்பட்டது.
1. பூலோக வாழ்வின் முடிவின் அடையாளம்:
இயேசு தமது பூமிக்குரிய வாழ்வை முடித்துவிட்டார் என்பதை அடையாளப்படுத்த இந்த வார்த்தை சொல்லப்பட்டது. இதை தமது ஊழியத்தின் நாட்களில் நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன் என்ற வார்த்தையால் உறுதி செய்தார். மத்தேயு 26:11, மாற்கு 14:7, யோவான்
12:8 காண்க. இதை உறுதி செய்ய யோவான் 16:5-ல் இப்பொழுது நான் என்னை
அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன் என்று கூறினார்.
2. பரலோக வாழ்வின் துவக்கத்தின் அடையாளம்:
இயேசு தமது ஆவியைப் பிதாவிடம் ஒப்புவித்த இச்செயலானது அவரது பரலோக வாழ்வு துவங்கிவிட்டது என்பதின் அடையாளமாகச் சொல்லப்பட்டது. இதை மாற்கு 16:19, எபிரெயர் 1:3 போன்ற வசனங்கள் உறுதி செய்கிறது. எபிரெயர் 1:3 - அவரது சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
3. பரலோகத்தில் நிரந்தரமாக இருக்கப்போவதின் அடையாளம்:
ஆவியை ஒப்புவித்த கிறிஸ்து, உயிர்த்தெழுந்த போதும் மீண்டும் பரலோகம் சென்று நிரந்தரமாக அங்கு இருக்கப்போகிறார் என்பதின் அடையாளமாக இந்த வார்த்தை சொல்லப்பட்டது. சங்கீதம் 115:3 இதை உறுதி செய்கிறது. இயேசுவின் பரலோக குடியிருப்பு நீண்டகாலம் என்பதை அப்போஸ்தலர் 3:21ம் உறதி செய்கிறது. இப்படியாக இயேசு ஆவியை ஒப்புவித்த செயலானது சில அடையாளங்களை வெளிப்படுத்தும் செயல் என்று அறிந்து கொள்கிறோம்.