அருட்பொழிவு திருப்பணி:
கிறிஸ்துவின் நறுமணம்.
யாத்திராகமம். 29:1-9.
அழைப்பை ஏற்ற திருப்பணி.
நமக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு கிறிஸ்துவின் நறுமணம்.அதாவது, கிறிஸ்துவின் சுவிசேஷம். இதன் அடிப்படையில் தியானிப்போம்.
வசனம். 1:-
1. அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களை பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, ....
1) யாரை?
ஆரோனையும் அவன் குமாரர்களை யும்.
யாத்திராகமம்.28:1.
2) ஆசாரியன் செய்ய வேண்டிய ஊழியம் என்ன?.
1நாளாகமம். 6:49.
3) ஆசாரியனின் மிக முக்கியமான பணி ?
(ஜனங்கள் எவ்விதமான அடிமைத்தனங்களில் இருந்து விடுதலைப்பெற்று தேவனோடு ஐக்கியமாகி நிலைத்திருக்கச் செய்யவேண்டும்.)
எண்ணாகமம். 15:24-28.
4) இதில் உள்ள விதிமுறை என்ன?
¡) அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்கு பாவநிவிர்த்தி உண்டு.
எண்ணாகமம். 15:27,28.
¡¡) துணிகரமாய் யாதொன்றை செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான். அவனுக்கு பாவநிவிர்த்தி இல்லை.
எண்ணாகமம். 15:30, 31.
பழைய ஏற்பாடு காலத்தில் தேவன் இவ்விதமாக நியமித்திருந்தார்.
2. புதிய ஏற்பாடு காலத்தில் தேவன் எவ்விதமாக நியமித்திருக்கிறார்?
1) இயேசு பிரதான ஆசாரியர்.
எபிரெயர். 4:14,15; 5:5; 6:20.
2) இயேசுவின் பிள்ளைகள் ஆசாரியர்கள்.
வெளி. 1:6; 1 பேதுரு. 2:5.
3) நாம் செய்ய வேண்டிய ஆசாரிய ஊழியம் என்ன?
மூன்று காரியங்களைச் செய்யும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார்: சீஷராக்குங்கள், ஞானஸ்நானம் கொடுங்கள், சீஷராகிற அவர்களும் அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளபடியே செய்யும்படி போதியுங்கள்.
மத்தேயு. 28:19; மாற்கு 16:15; லூக்கா 24:47-49; யோவான் 20:21; அப் 1:8. .
பழைய ஏற்பாடு காலத்தில் மட்டும் அல்ல, எந்த காலத்திலும்
ஜனங்கள் எல்லாவிதமான அடிமைத்தனங்களில் இருந்து விடுதலைப்பெற்று தேவனோடு ஐக்கியமாகி நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம்.
மத்தேயு. 18:14.
4) இந்த ஊழியம் யார் செய்ய வேண்டும்?
ஊழியர்களா? விசிவாசிகளா?
ஊழியத்தில் இரண்டு வகை உண்டு.
¡) ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டு செய்யும் ஊழியம்.
(முழு நேர சபை ஊழியர்கள். )
எபேசியர். 4:12, 13.
¡¡) பொதுவான ஊழியம். (சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியம்.)
இது சபையில் உள்ள அனைவருக்குரிய ஊழியம்.
5) சபையினர் ஊழியம் செய்தே ஆகவேண்டுமா?
யோவான். 12:26- ல், இயேசு சொல்வதை கவனியுங்கள்!
¡) ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்.
யோவான். 12:26a.
¡¡) ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால்...
நான் எங்கே இருக்கிறேனோ (பரலோகத்தில்) அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.
யோவான். 12:26.
ஆம், நமக்கு முன்னே வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அனைவருமே இதை கடைபிடித்தே வாழ்ந்தனர்.
அப்போஸ்தலர். 8:4.
6) சுவிசேஷ ஊழியஞ்செய்யாத சபையினர் தேவனிடமோ பரலோகத்திலோ இடம்பெற முடியாதா?
முடியாது என்றே வேதவசனம் கூறுகிறது.
¡) சுவிசேஷம் அறிவிக்காதவர்களின் ஜீவன் நஷ்டமாகப் போகும்.
மாற்கு. 8:35-38.
¡¡) சுவிசேஷம் அறிவிக்காதவர்களின் பெயரை, இயேசு பரலோகத்தில் அறிக்கைப் பண்ணுவதில்லை.
மத்தேயு. 10:32, 33.
¡¡¡) பரலோகத்தில் இயேசு அறிக்கையிடாதப் பெயருள்ளவர்கள் நரகத்தில் தள்ளப்படுவர்.
வெளி. 20:12, 15.
3. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?
1) ஆரோனையும் அவன் குமாரர்களையும் பரிசுத்தப்படுத்த அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாக வந்து சேரவேண்டும் என்றார்.
யாத்திராகமம். 29:4a.
நமக்கு வாசல் இயேசுவே. அவரே நம்மை சேர்த்துக்கொண்டார்.
யோவான். 10:9, 7.
2) அவர்களைத் தண்ணீரினால் கழுவ வேண்டும் என்றார்.
யாத்திராகமம். 29:4b.
இயேசு தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மை கழுவி நம்மை ஆசாரியர்களாக ஏற்படுத்தியுள்ளார்.
வெளி. 1:6.
3) வஸ்திரங்களை அவர்கள் தரித்துக்கொள்ள வேண்டும் என்றார்.
யாத்திராகமம். 29:5a.
வஸ்திரம் என்றால் இரட்சிப்பு ஆகும். ஏசாயா. 61:10b.
இயேசு நமக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்திக்கொள்ள கொடுத்திருக்கிறார். வெளி. 16:15.
4) அவர்கள் இடைக்கச்சைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றார்.
யாத்திராகமம். 29:9a.
இடைக்கச்சை என்பது சத்தியம் ஆகும்.
அதாவது வேதவாக்கியங்கள் ஆகும்.
நாம் அதை இடைக்கச்சையாக கட்டிக்கொள்ள இயேசு கொடுத்திருக்கிறார்.
எபேசியர். 6:14; ஏசாயா. 11:5.
5) அபிஷேகத் தைலத்தால் அவர்களை அபிஷேகஞ் செய்ய வேண்டும் என்றார்.
யாத்திராகமம். 29:7.
நாம் பரிசுத்தராலே (பரிசுத்த ஆவியானவராலே) அபிஷேகம் செய்யப்பட்டு இருக்கிறோம்.
எபேசியர். 1:13; 4:30;
2கொரிந்தியர். 1:21;
யோவான். 20:21,22;
1யோவான். 2:20, 27.
ஜனங்கள் எல்லாவிதமான அடிமைத்தனங்களில் இருந்து விடுதலைப்பெற்று தேவனோடு ஐக்கியமாகி நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பதற்காக,
கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக தேவன் நம்மை இவ்விதமாக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார்.
நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்?