*தலைப்பு:
*முத்திரையின் மேன்மை*
வேதவசனம்:
வெளிப்படுத்தின விசேஷம் 9: 4
பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது*.
* * * *
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
கர்த்தாவே உமக்கு ஒப்பானவர் யார்? என்கிற வார்த்தையின் படியாக நம்முடைய ஆண்டவர் தனித்துவம் நிறைந்தவராக மகத்துவம் நிறைந்தவராக எப்படி இருக்கிறாரோ! அதைப் போலவே அவர் தெரிந்து கொண்ட அவருடைய பிள்ளைகளையும் அவர் பிரித்தெடுத்து *தனித்துவம் வாய்ந்தவர்களாக வாழ செய்வது* அவருடைய மகத்துவமாக இருக்கிறது.
அப்படி தனித்துவமுடையவர்களாக ஆண்டவர் நம்மை நிறுத்தும்போது அவருக்குப் பிரியமான காரியங்களை செய்கிறவர்களாக ஆண்டவர் நம்மை மாற்றுகிறார். அப்படி அவர் நம்மை மாற்றும் போதும், நிலை நிறுத்தும் போதும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், ஆண்டவர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் போது அந்த தண்டனையிலிருந்து விலக்கிக் காக்கப்பட்டவர்கள் என்பதை வலியுறுத்தும் படியாக ஆண்டவர் நம்மேல் *அவருடைய அடையாளங்களை முத்திரையாக போடுகிறார்*.
அப்படி அடையாளங்களாக ஆண்டவர் போடுகிற முத்திரையை பற்றியும், அந்த முத்திரையின் மேன்மைப்பற்றியும், இந்த நாட்களில் அந்த முத்திரை யார்? என்பதை பற்றியும் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
👉 *முத்திரை பயன்படுத்தும் முறைகள்?*
1) *இராஜ்யபாரம் பண்ணுகிற இராஜாக்களுடைய கை விரலில் போடப்பட்டிருக்கும்*. (எஸ்தர் 3:10)
ராஜாவின் கையில் போடப்பட்டிருக்கும் இந்த மோதிரம் ராஜாவின் ஆளுமையையும், அதிகாரத்தையும் குறிக்கிறது*.
ராஜாவால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எழுதப்பட்ட நிருபத்தில் *இந்த முத்திரை பதிக்கப்பட்டபின்* அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும். வேறு யாருக்கும் மாற்றும் அதிகாரம் கிடையாது.
இந்த முத்திரை மோதிரத்தின் மூலமாக ஜனங்களை அழிக்கவோ அல்லது காக்கவோ உத்தரவு பிறப்பித்தால் அது அப்படியே நடக்கும்.
2) *தேவன் தெரிந்து கொண்ட மனிதர்களுடைய நெற்றி பகுதியில் போடப்படும்*.
தங்களைச் சுற்றிலும் நடக்கிற அறுவருப்புகளை குறித்து, பாவங்களைக் குறித்து எந்த ஒரு மனிதன் அல்லது மனுஷி *இருதயத்தில் வேதனைப்பட்டு தான் மனம் திரும்பியதுபோல, அவர்களும் மனம் திரும்பும்படியாக அவர்களுக்காக தேவ சமூகத்தில் திறப்பிலே நின்று , பெருமூச்சு விட்டு அழுது ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்காக ஜெபிக்கிறார்களோ! *அவர்கள் நெற்றியில் மட்டுமே அடையாளம் போடப்படும்*.
உபத்திரவத்தின் வழியாக தேவனை மகிமைப்படுத்தவும், பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி தினந்தோறும் இயேசுவின் ரத்தத்தினால் கழுவப்பட்ட நிச்சயத்தோடு யார் வாழ்கிறார்களோ! அவர்களுக்கே அடையாளமாக முத்திரை நெற்றியில் போடப்படும்.
உலகத்தில் உள்ள ராஜாவின் கையினால் போடப்பட்ட உத்தரவை மாற்றும் சர்வ வல்லமை படைத்த நம்முடைய இராஜாதி இராஜாவினுடைய இரக்கத்தை பெற்று காக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் நெற்றியில் அடையாளமாக முத்திரை போடப்பட்டவர்களே.
(எஸ்தர் 3:12, 4:16, 8:8)
யார் போடுவார்கள்?* -- பரலோகத்தின் தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் மூலமாக நம்முடைய நெற்றியில் அடையாளமாக முத்திரை போடப்பட்டிருக்க வேண்டும். போடப்படவேண்டும்.
(எசேக்கியேல் 9: 3, 4 )
(வெளிப்படுத்தல் 9: 3, 4)
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஒரு பகுதியாகிய இரகசிய வருகைக்கு முன்பாக ஆண்டவரால் அனுப்பப்பட்ட தூதர்களால் நம்முடைய நெற்றியில் முத்திரை போடப்பட்டவர்களாகவும், இராஜாதி இராஜாவாகிய சர்வ வல்லமை படைத்த நம்முடைய ஆண்டவருடைய கரத்தில் முத்திரை மோதிரமாகவும் இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு தேவ சித்தத்தை நிறைவேற்றி முடிப்போமானால், இரகசிய வருகையில் கைவிடப்படாமல் நாம் நித்திய வாழ்வுக்குள் எடுத்துக் கொள்ளப்படுவோம்.
நம் மூலம் நடத்தப்பட்டவர்களும் ராஜாவின் கரத்தில் முத்திரை மோதிரமாகவும், நெற்றியில் அவரால் அடையாளம் போடப்பட்ட வர்களாகவும் வாழ்வார்களானால் அவர்களும் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள்.
இரகசிய வருகையில் கைவிடப்பட்டவர்கள் அனைவரும் அந்திக்கிறிஸ்துவின் முத்திரையை நெற்றியிலாவது, வலதுகையிலாவது தரித்து இந்த உலகத்தில் வாழ்ந்து வேதனையை அனுபவித்து அந்த வேதனையின் மத்தியில் சாவை விரும்பினாலும் சாவு அவர்களுக்குவராதபடிக்கு, மிகுந்த உபத்திரவத்தை அனுபவித்து மரித்து நரகத்திலும் பின்னர் நித்திய அக்கினி கடலிலும் நரகத்திலும் . தள்ளப்படுவார்கள்.
அன்பானவர்களே, பரலோகத்தின் தேவனால் முத்திரை போடப்பட்டவர்களாகவும், பரலோகத்தின் தேவனுடைய கரத்தில் முத்திரை மோதிரமாகவும் வாழ அர்ப்பணிப்போம் நிச்சயம் நம்மையும் நம் குடும்பத்தையும் ஆண்டவர் பாதுகாப்பார். நம் மூலம் அநேக ஜனங்களும் காக்கப்படுவார்கள். ஆமென்.
*ஜெபம்*:
பரலோக பிதாவே, இந்த நாளிலும் நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நாங்களும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களாக வாழ உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே ஆமென்.
Bro. Sam Raj
+91 84899 74307