இந்த உலகில் தேவனுடைய பிள்ளைகள் போதும் என்று சொல்ல வேண்டிய காரியங்கள் | நாம் செய்யும்படி இயேசு நமக்கு காண்பித்த மாதிரிகள் | இயேசு கிறிஸ்துவோடு ஒப்பிடப்படும் பறவைகள் விலங்குகள் | யோவான் ஸ்தானகன் - இயேசு சாட்சி | வேதத்தில் தவறாக யூகித்து நஷ்டம் அடைந்தவர்கள் | கர்த்தர் நோக்கி பார்ப்பார் - யாரை? | ஐசுவரியவான்கள் இடம் இருக்க கூடாதது | பாட வேண்டும் - எப்போது
========================
இந்த உலகில் தேவனுடைய பிள்ளைகள் போதும் என்று சொல்ல வேண்டிய காரியங்கள்
=====================
1) இயேசு போதும் என்று சொல்ல வேண்டும் யோவான் 14:8
2) கிருபை போதும் என்று சொல்ல வேண்டும்
2) கிருபை போதும் என்று சொல்ல வேண்டும்
2 கொரிந்தியர் 12:9
3) நமது சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும்
3) நமது சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும்
லூக்கா 3:14
4) நமக்கு இருக்கிற உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.) போதும் என்று எண்ண வேண்டும்
4) நமக்கு இருக்கிற உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.) போதும் என்று எண்ண வேண்டும்
எபிரெயர் 13:5
ஆதியாகமம் 33:9
5) கர்த்தர் நமக்கு உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும்
5) கர்த்தர் நமக்கு உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும்
1 தீமோத்தேயு 6:8
6) கர்த்தர் நமக்கு உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும்
6) கர்த்தர் நமக்கு உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும்
1 தீமோத்தேயு 6:8
7) அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்று சொல்ல வேண்டும்
7) அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்று சொல்ல வேண்டும்
மத்தேயு 6:34
==========================
நாம் செய்யும்படி இயேசு நமக்கு காண்பித்த மாதிரிகள்
===========================
1) ஸ்தோத்தரிக்க (துதிக்க) வேண்டும்
யோவான் 11:41
2) ஜெபிக்க வேண்டும்
லூக்கா 22:41,42
3) கீழ்படிய வேண்டும்
பிலிப்பியர் 2:8
எபிரெயர் 5:8
4) ஒருவரிலொருவர் அன்பாய் இருங்கள்
யோவான் 13:1,34
5) நமக்கு தீமை செய்தவர்களை மன்னிக்க வேண்டும்
லூக்கா 23:34
6) ஆத்தும தாகம் வேண்டும்
(அழிந்து போகும் ஆத்துமாக்களை காணும் போது)
மத்தேயு 9:36,37
7) எல்லா காரியங்களையும் தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 26:39
8) ஞானஸ்நானம் (மூழ்கி) பெற வேண்டும்
லூக்கா 3:21
9) பரிசுத்த ஆவியை பெற வேண்டும்
லூக்கா 3:21
10) திருவிருந்தில் பங்கு பெற வேண்டும்
மாற்கு 14:22,23
11) ஒரு காரியத்தை செய்யும் முன்னால் ஜெபிக்க வேண்டும்
லூக்கா 6:12,13
12) பலத்த சத்தத்தோடும் கண்ணிரோடும் ஜெபிக்க வேண்டும்
எபிரெயர் 5:7
13) ஞானமாய் பேச வேண்டும்
லூக்கா 20:22-25
14) பிதாவின் சித்தம் செய்ய வேண்டும்
யோவான் 4:34
15) வியாதியஸ்தர்களை பார்க்கும் போது மனதுருக வேண்டும்
மத்தேயு 9:36
16) சாந்தமாக இருக்க வேண்டும்
மத்தேயு 11:29
17) பொறுமையாக இருக்க வேண்டும்
2 தெசலோனிக்கேயர் 3:5
ஏசாயா 50:6
18) பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டும்
1 பேதுரு 1:16
19) வீண் வார்த்தை பேச கூடாது
லூக்கா 20:26
20) தாயை கனம் பண்ண வேண்டும்
யோவான் 19:26
21) உலகத்தாராய் (உலகத்தாரை போல உடுத்துதல், முடி வெட்டுதல், தாடி வைப்பது) இருக்க கூடாது
யோவான் 17:16
22) தாழ்த்த வேண்டும்
யோவான் 13:5
23) பாடுகளை சகிக்க வேண்டும்
எபிரெயர் 12:3
==============================
இயேசு கிறிஸ்துவோடு ஒப்பிடப்படும் பறவைகள் விலங்குகள்
===============================
1) சர்ப்பம்
யோவான் 3:14,15
2) கரடி
ஓசியா 13:8
3) சிவிங்கி
ஓசியா 13:7
4) ஆடு
அப்போஸ்தலர் 8:32
5) ஆட்டுக்குட்டி
யோவான் 1:29
1 பேதுரு 1:19
6) கோழி
மத்தேயு 23:37
7) புறா
மத்தேயு 3:16
8) கழுகு
உபாகமம் 23:11,12
9) சிங்கம்
வெளிப்படுத்தல் 5:5
10) பால சிங்கம்
ஓசியா 5:14
=========================
யோவான் ஸ்தானகன் - இயேசு சாட்சி
==========================
1) காற்றிலே அசையும் நாணல் அல்ல (பாடுகளுக்கு அஞ்சாதவன்)
மத்தேயு 11:7
2) எரிந்து பிரகாசிக்கிற விளக்கு (சாட்சி)
யோவான் 5:35
3) தீர்க்கதரிசியில் மேன்மை உள்ளவன்
லூக்கா 7:26
4) அலங்கார வஸ்திரம் தரியாதவன் (வேறுபாட்டின் ஜீவியம்)
லூக்கா 7:25
============================
வேதத்தில் தவறாக யூகித்து நஷ்டம் அடைந்தவர்கள்
==========================
1) சிறைசாலைக்காரன்:
அப்போஸ்தலர் 16:27,28 ல் பவுலும், சிலாவும் ஒடிப் போனார்கள் என்று எண்ணி ( யூகித்து) பட்டயத்தை உருவி தன்னை கொலை செய்து கொள்ள போனான். பவுலும் சிலாவும் சிறையில்தான் இருந்தார்கள். பாருங்கள் தவறுதலாக யூகித்தல் சிறைசாலைக்காரனை தற்கொலைக்கு நேராக வழி நடத்துகிறது.
2) மரியாள்:
மரியாள் இயேசுவை தோட்டக்கார்ர் என்று எண்ணினாள் ( யூகித்தாள்) (யோவான் 20:15). அதன் விளைவு கண்ணிர்.
3) ஏலி:
1 சாமுவேல் 1:13 ல் அன்னாள் குடித்து வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்தான் (யூகித்தான்). அதன் விளைவு ஏலி அறியாமைக்குள் நடத்தப்பட்டான்.
4) சிஷர்கள்:
சிஷர்கள் கடலில் நடக்கிற இயேசுவை ஆவேசம் ( பேய்) என்று எண்ணினார்கள் ( யூகித்தார்கள்). (மாற்கு 6:49). அதன் விளைவு கலக்கமடைந்தார்கள் அலறினார்கள்.
5) இயேசுவின் தாயும், தகப்பன் யோசேப்பு:
லூக்கா 2:44 ல் இயேசு பிரயாணக்கார்ரின் கூட்டத்தில் இருப்பார்கள் என்று நினைத்தார்கள் (யூகித்தார்கள்). இதனால் துன்பம் அடைந்தார்கள்.
6) சிம்சோன்
மாமனார் சிம்சோன் இடம் "நீ அவளை பகைத்து விட்டாய் என்று எண்ணி,(யூகித்து) அவளை உன் சிநேகிதனுக்கு கொடுத்து விட்டேன்" (நியாயாதிபதிகள் 15:2) என்கிறார். இதன் விளைவு கோபம் அடைந்த சிம்சோன் 300 நரிகளை பிடித்து அதன் வாலில் தீ பந்தங்களை கட்டி பெலிஸ்தர் வெள்ளாண்மையில் ஒட விட்டு நஷ்டத்தை ஏற்படுத்தினான். சிம்சோன் மாமனார் தவறாக எண்ணியதன் விளைவை பார்த்திர்களா.
7) உயிர்த்தெழுந்த இயேசு சிஷர்கள் நடுவே நின்ற போது ஒரு ஆவியை (பிசாசை) காண்பதாக நினைத்தார்கள (லூக்கா 24:37). அதன் விளைவு சிஷர்கள் கலங்கினார்கள, பயந்தார்கள்.
8) ஆதியாகமம் 26:7 ஆபிரகாம் தன் மனைவியின் நிமித்தம் தன்னை கொலை செய்வார்கள் என்று எண்ணினான். அதனால் பயம் உண்டானது.
நியாயாதிபதிகள் 16:20 சிம்சோன் கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்று எண்ணினான். ஆனால் அவன் பாவம் செய்த போது கர்த்தர் அவனை விட்டு விலகினார். தேவ ஐனமே நீயும் பாவத்தில் வாழ்ந்து கொண்டு கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று எண்ணாதே.
பெல்ஷாத்சார் நினைவுகள் அவனை கலங்க பண்ணியது (தானியேல் 5:6)
யூகித்து நாம் பல துன்பங்களுக்கு உள்ளாகிறோம். உங்கள் யூகித்து கொள்ளுதலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். யூகித்து கொள்ளும் கெட்ட பழக்கத்தை என்னை விட்டு அகற்றும் என்று ஜெபி. கற்பனை செய்து உனது வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதே, குழப்பம் அடையாதே.
இப்படிபட்ட நினைவுகள் இரட்சிக்கபட்ட தேவ பிள்ளைகளை கூட தாக்குகிறது. இவைகளில் இருந்து ஜெயம் பெற ஒரே வழி ஸ்தோத்திரம், ஜெபம்தான். இவை இரண்டும் தேவ பிள்ளைகள் வாழ்க்கையில் காணப்பட்டால் அவர்களது சிந்தனைகள் கிறிஸ்துக்குள்ளாக காத்து கொள்ளப்படும்
பிலிப்பியர் 4:6,7
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்
ரோமர் 1:21
===================
கர்த்தர் நோக்கி பார்ப்பார் - யாரை?
===================
1) தாழ்மையுள்ளவர்களை நோக்கிப் பார்ப்பார்
சங்கீதம் 138:6
2) சிறுமைபட்டவர்களை நோக்கிப் பார்ப்பார்
ஏசாயா 66:2
3) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களை நோக்கிப் பார்ப்பார்
ஏசாயா 66:2
4) வசனத்துக்கு நடுங்குகிறவனை நோக்கிப் பார்ப்பார்
ஏசாயா 66:2
5) செம்மையானவனை நோக்கிப் பார்ப்பார்
சங்கீதம் 11:7
====================
ஐசுவரியவான்கள் இடம் இருக்க கூடாதது
======================
1) இறுமாப்பான சிந்தனை
1 தீமோத்தேயு 6:17
2) ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்க கூடாது
1 தீமோத்தேயு 6:17
3) இருதயத்தை ஐசுவரியத்தின் மேல் வைக்க கூடாது
சங்கீதம் 62:10
4) ஐசுவரியத்தை நம்ப கூடாது
1 தீமோத்தேயு 6:7
5) என் பெலனும், என் சாமார்த்தியமும் இந்த ஐசுவரியத்தை சம்பாதித்தது என்று சொல்ல கூடாது
உபாகமம் 8:17
====================
பாட வேண்டும் - எப்போது
==================
1) மகிழ்ச்சியாக இருக்கும் போது பாட வேண்டும்
யாக்கோபு 5:13
2) பாடுகளில், உபத்திரவங்களில் பாட வேண்டும்
அப்போஸ்தலர் 16:25
3) மற்றவர்கள் நமக்கு விரோதமாக எழும்பும் போது பாட வேண்டும்
2 நாளாகமம் 20:1-21
4) உயிரோடு இருக்கும் வரை பாட வேண்டும்
சங்கீதம் 104:33
5) இரவில் பாட வேண்டும்
யோபு 35:11