========================
வேத தியான கேள்விகள் (ஏசாயா 6 - 10 அதிகாரங்கள்)
========================
1. பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற யாருடைய சத்தத்தைக் கேட்டேன்?
2. சீரியாவின் தலை எது? தமஸ்குவின் தலை எது? இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோகும்?
3. அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் எப்படி அழைப்பார்?
4. எதை செய்யுங்கள், அது அபத்தமாகும்? எதை வசனியுங்கள், அது நிற்காது? தேவன் எங்களோடே இருக்கிறார்.
5. எவைகளை கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை?
6. ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார்; அது யார் மேல் இறங்கிற்று?
7. யாருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்?
8. என் கோபத்தின் கோலாகிய யாருக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்?
9. மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, யாரிடத்தில் திரும்புவார்கள்?
10. அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; யாராலே லீபனோன் விழும்?
======================
வேத தியான கேள்விகள் (ஏசாயா 43 - 45)
=======================
1. நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; எது உன்பேரில் பற்றாது?
2. எவைகளை நினைக்கவேண்டாம்? எவைகளைச் சிந்திக்கவேண்டாம்?
3. ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாரைச் சாபத்துக்கும்? யாரை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்?
4. அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள எவைகளைப்போல வளருவார்கள்?
5. ஏசாயா 44 ஆம் அதிகாரத்தில் என்னென்ன மரங்கள் உள்ளன?
6. நான் யாருடைய குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப்பண்ணுகிறவர்?
7. நான் உனக்கு முன்னே போய், எவைகளைச் செவ்வையாக்குவேன்?
8. நான் எதை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்?
9. இஸ்ரவேலோ, கர்த்தராலே எதினால் இரட்சிக்கப்படுவான்? நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
10. இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் யாருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்?