ஜோஸப் டேனியல் ஜெனிக்கே
(1759-1800)
ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் பிறந்த 20.07.1759 இறையியல் பயிற்சி பெற்று, 1787ஆம் ஆண்டு ஜெர்மனியில் குருவானவராக அபிஷேகம் பண்ணப்பட்டார். இளம் பருவத்திலிருந்தே கிறிஸ்தவச் சமயம் பரவச் செய்யும் திருத்தொண்டராகத் திகழ வேண்டுமென்பது அவருடைய தஞ்சை. எனவே தென்னிந்தியாவில் மிஷனெரிப் பணி செய்ய அழைப்பு வந்தபோது அதை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு 1788 ஆம் ஆண்டு தம் நாட்டைவிட்டுப் புறப்பட்டு, இங்கிலாந்திற்குச் சென்று, கிழக்கித்திய கப்பலொன்றிலேறி சென்னை வழியாக ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தரங்கம்பாடி சேர்ந்தார்.
தரங்கம்பாடி வந்த Rev. ஜெனிக்கே டேனிஷ் மிஷனெரிமார்களுடன் சுமார் ஒரு மாதம் செலவிட்ட பின்னர் தஞ்சாவூருக்குச் சென்றார். அங்கு கனம் சுவார்ட்ஸ் போதகரின் உதவியால் ஆங்கிலத்தையும், தமிழ் மொழியையும் கற்றார். இரண்டு வருடங்களில் அவர் தமிழ் மொழியில் பிரசங்கிக்க அவருக்கு சுவார்ட்சு ஐயர் பயிற்சி கொடுத்தார்.
*திருநெல்வேலி ஊழியம்:* 1789 ஆம் ஆண்டுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ பணியாற்ற மேனாட்டு மிஷனெரி எவரும் அக்காலகட்டத்தில் இல்லை. Rev. சுவாட்ஸ், 1790ஆம் ஆண்டு திருநெல்வேலி பகுதியில் சுவிசேஷ ஊழியத்தைச் செய்வதற்கென சத்தியநாதன் உபதேசியாரை அங்கு அனுப்பினார்.
Rev. J.D. ஜெனிக்கே அவர்களின் ஆர்வம் மற்றும் ஆத்துமதாகம் இவற்றைக் கண்டு திருப்தியடைந்த Rev.சுவார்ட்சு, இவரைத் திருநெல்வேலிக்கு முதல் விசாரணை குருவாக நியமித்தார். திருநெல்வேலிக்கு வந்த சில மாதங்களில், நெல்லையில் இருந்த இரண்டு ஆங்கில அதிகாரிகளோடு சேர்ந்து, களக்காடு வழியாக பாபநாசம் சென்றார். போகிற வழியிலே கூடிவந்த ஜனங்களுக்கெல்லாம் ஆண்டவரைப் பற்றி விவரித்துச் சொல்லிக் கொண்டே சென்றார்.
பாபநாச அருவி, மற்றும் தாமிரபரணி ஆற்றின் அழகு இவற்றையெல்லாம் வர்ணித்து எழுதும் Rev. ஜெனிக்கே, சில வாரங்கள் கழித்து குற்றாலம், தென்காசி பகுதிகளுக்கும் சென்று வந்தார். அங்கேயும் ஆண்டவரைப் பற்றி அறிவித்து வந்த ஜெனிக்கே ஐயர் பாளையங்கோட்டைக்குத் திரும்பிய பொழுது மலைக்காய்ச்சல் என்று சொல்லக்கூடிய ஒருவித காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்தக் காய்ச்சல் நடுவிலும் திருநெல்வேலியிலிருந்த Rev. கற்பகம் சத்யநாதனுடன் சேர்ந்து, பாளையங்கோட்டையைச் சுற்றியிருந்த பல கிராமங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து வந்தார். திருநெல்வேலி மாவட்டத்திலே சுவிசேஷம் தீவிரமாக அறிவிக்கப்படவும், அநேக இந்துக்கள் கிறிஸ்தவ த்தைத் தழுவவும் Rev. ஜெனிக்கே ஒரு காரணமாக இருந்தார்.
இவர் மிஷனெரியாக வந்த நாள் முதல் இந்திய மக்களின் பேரில் நல்லெண்ணமும், அன்பும் கொண்டவராக விளங்கினார் என்று அவர் எழுதி வந்த தினசரி குறிப்புகள் மூலம் அறியமுடிந்தது. தம் உடன் ஊழியர்களிடமும், தம் முயற்சியால் கிறிஸ்தவர்களாக ஆனவர் யாவர்பாலும் அவர் காட்டிய அன்பு அவைகளின் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
*ஆத்தும அறுவடை:* பாளையங்கோட்டையில் உள்ள கிளாரிந்தா ஆலயத்தில் தமிழ் மற்றும் ஆங்கில ஆராதனைகளை Rev. ஜெனிக்கே நடத்தி வந்தார். 1791 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாளையங் கோட்டைக்கு வந்த Rev. ஜெனிக்கே பத்து மாதங்களுக்குள்ளாக பல இடங்களில் ஊழியம் செய்து, மனந்திரும்பிய 60 ஆத்துமாக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். சுவார்ட்சு ஐயரின் பண உதவியோடு செய்துங்க நல்லூர் அருகே பத்மநாபபுரத்திலும், பூவானி என்ற இடத்திலும் இரு சிற்றாலயங்களைக் கட்டினார். அதுவரை ஆராதனைக்காக பாளையங்கோட்டைக்கு சென்று வந்த அந்த கிராமத்து மக்களுக்கு உள்ளூரிலேயே ஆலயம் கட்டப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
*தூத்துக்குடி ஊழியம்:* Rev. ஜெனிக்கே அவர்களின் சரீர பெலவீனம் அதிகமானதினால், ஓய்வு எடுப்பதற்காக தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்த ஒரு டச்சு அதிகாரியின் இல்லத்திற்குச் சென்றார். தூத்துக்குடியில் இருந்த டச்சுக்காரர்களுக்கு ஒரு ஆங்கில ஆலயமும், மணப்பாடு மற்றும் ஆழ்வார்திருநகரியில் இரண்டு தொழிற்சாலைகளும், தூத்துக்குடியில் ஒரு தொழிற்சாலையும் இருந்தன.
ஓய்வு எடுக்கச் சென்ற Rev. ஜெனிக்கே அங்கே ஓய்வு எடுக்காமல் தூத்துக்குடியிலும், மணப்பாட்டிலும், ஆழ்வார் திருநகரியிலும் தொடர்ந்து நற்செய்தி ஊழியங்களைச் செய்தார். சுவிசேஷத்தை கிராமம் கிராமமாக தீவிரமாக அறிவித்து, அநேக இந்துக்களை கிறிஸ்துவின் சீஷர்களா மாற்றினார்.
Rev. ஜெனிக்கே மிஷனெரியாக வந்த நாள் முதல் தமிழ் மக்களின் மீது, மிகுந்த நல்லெண்ணமும், அன்பும் கொண்டவராக விளங்கினார். தம் உடன் ஊழியர்கள் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவருக்கும் அறிவித்து, சிறந்த நற்சாட்சி உள்ளவராக வாழ்ந்து, பிறரையும் கிறிஸ்துவுக்குள் வளரச் செய்தார். இவருடைய ஊழியத்தின் பயனாக மணப்பாட்டில் 200க்கும் அதிகமான தமிழ் மக்கள் ஆராதிக்கக் கூடினதாக அவருடைய நினைவுக்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் பாளையங்கோட்டைக்கு வந்த அவருக்கு சுகவீனம் அதிகமானதினால் தஞ்சாவூர் திரும்பினார்.
*தஞ்சாவூர் ஊழியம்*: Rev. ஜெனிக்கே தஞ்சாவூரில் இரண்டு வருடம் தங்கி ஊழியம் செய்தார். 1794 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் Rev. சுவார்ட்சு வியாதிப்பட்ட பொழுது, ஜெனிக்கே அவர்கள் அங்கு சென்றார். இவருடைய வருகை சுவார்ட்சு ஐயருக்கும், அவரை கவனித்துக் கொண்டிருந்த கோலஃப் ஐயருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இந்நிலையில் 1795 ஆம் ஆண்டில் Rev. ஜெனிக்கே வேதநாயகம் சாஸ்திரியாரின் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெனிக்கேயிடம் Rev. சுவாட்ஸ் தன் மரணத்தைப் பற்றிப் பேசினார். ஜெனிக்கே ஐயரோ நீங்கள் உயிரோடிருந்து எங்களுக்கு ஆலோசனை கொடுத்தாலே எல்லாம் நலமாக இருக்கும் என்றார். ஆனால் சுவார்ட்சு அவர்கள் தன்னுடைய மரண தருவாயை நினைவுகூர்ந்து பாளையங்கோட்டை பகுதி ஊழியத்திற்காக கொஞ்சம் பணத்தையும் அவரிடம் கொடுத்தார்.
சுவார்ட்சு ஐயரின் சுகவீனமும், மரணத்தைப் பற்றிய வார்த்தைகளும் ஜெனிக்கே ஐயரை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்திவிட்டன. இதனால் பல இரவுகள் தான் தூங்காமல் தவித்ததாக ஜெனிக்கே குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் அதிகாலை கோலஃப் ஐயருடன் சேர்ந்து சுவார்ட்சு ஐயருக்கு திருவிருந்து கொடுக்கும் சிலாக்கியத்தைப் பெற்றதாக Rev. ஜெனிக்கே குறிப்பிட்டுள்ளார்.
*இராமநாதபுரம் ஊழியம்:* 1798 ஆம் ஆண்டு சுவார்ட்சு ஐயர் மரணமடைந்த பின்பு Rev. ஜெனிக்கே தஞ்சாவூரில் இருந்து Rev. Gericke ஐயருடன் சேர்ந்து இராமநாதபுரம் வந்து சில வாரங்கள் தங்கி ஊழியம் செய்தார். அங்கே பழைய ஆலயம் இடிந்து விழுந்து விட்டதால், ஜெனிக்கே ஐயரின் முயற்சியினால் புதிய ஆலயம் கட்டப்பட்டது. 1800 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 16 ஆம் தேதி அந்த ஆலயம் Rev. கேரிக் ஐயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட இராமனாதபுரம் ஆலயத்தில், முதல் ஆராதனையை நடத்திக்கொண்டு இருந்த போது ஜெனிக்கே ஐயரின் கால்களும், கைகளும் சுகவீனத்தினால் நடுங்க ஆரம்பித்தன. ஆராதனையின் நடுவிலேயே அவர் ஆலயத்தை விட்டு வெளியேறினார்.
*திருநெல்வேலி ஊழியம்:* இராமனாதபுரத்தில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்த Rev. ஜெனிக்கே தஞ்சாவூரில் சுவார்ட்சு ஐயர் செய்தது போலவே தமிழ் உபதேசிமாரை தினமும் காலையிலே ஊழியம் செய்ய அனுப்புவதும், மாலையில் அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுப்பதுமாக, ஊழிய வாஞ்சையுடன் செயல்பட்டார். சரீர பெலவீனத்தின் நடுவிலும் அடிக்கடி காய்ச்சலிலும், கால் வீக்கத்திலும் அவதிப்பட்டார்.
பாளையங்கோட்டையில் ஜெனிக்கே ஐயரின் ஊழியத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட சுவார்ட்சு ஐயர் திருநெல்வேலி ஊழியத்தைப் பற்றிய என் நம்பிக்கை நிறைவேறத் தொடங்கி விட்டது." என குறிப்பிட்டுள்ளார்.
*கோதுமை மணியானார்*: 1800 ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த Rev. ஜெனிக்கே மே மாதம் 10 ஆம் தேதி கோலஃப் ஐயரிடம் தான் மரிக்கப் போவதாக மகிழ்ச்சியோடு கூறினார். அன்று மாலை 7 மணியளவில் அவர் மகிழ்ச்சியோடு மரணத்தை சந்தித்து கர்த்தரின் பாதம் சென்றடைந்தார்.
இவருடைய 10 ஆண்டு கால ஊழியம் திருநெல்வேலியிலும், இராமநாதபுரத்திலும், தூத்துக்குடியிலும் மிகவும் மகிமையான எழுப்புதலைத் தந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவச் திருச்சபைகளானது கனம் Rev. சுவார்ட்ஸ் அவர்களால் நடப்பட்டது என்றால் Rev. ஜெனிக்கே அவர்கள் அதற்கு நீர் பாய்ச்சினார் திருநெல்வேலி திருச்சபை வரலாறு கூறுகின்றது. இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் தமிழ்நாட்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையிலும் நற்செய்தி பணிக்கு கொடுக்கும் பங்களிப்பிலும் மிஷனெரிகளாக இந்தியா முழுவதும் செல்வதற்கும் Rev. ஜெனிக்கே ஒரு கோதுமை மணியாக விதைக்கப்பட்டதால் இன்று அதிக ஆத்தும அறுவடை செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
துணைநின்ற நூல்: C.F. சுவாட்சு ஐயர் உருவாக்கிய நன்முத்துக்கள் by Evt. J.J. Gurusingh
✝. இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
The Gospel Pioneers:
Joseph Daniel Jaenicke (1759-1800)
=========================
Joseph Daniel Jaenicke, born in Berlin, Germany on 20.07.1759, received his theological training and was ordained as a priest in Germany Lutheran Church in 1787. His motto was to be a reformer who spread Christianity from a young age. So he gladly accepted the invitation to serve as a missionary in South India, and in 1788, he left his country England, boarding an Eastern Indian ship via Chennai and landed at Tharangambadi on 27 August. After spending about a month there with Danish missionaries he moved to Thanjavur where he learned English and Tamil with the help of Rev. Schwartz. In two years he was trained by Rev. Schwartz to preach in Tamil. Until 1789 there was no more European missionary to serve as a Christian in the Tirunelveli district at that time.
*Mission at Tirunelveli:* Rev. In 1790, Schwartz sent Satyanathan to preach in Tirunelveli area. Rev. Schwartz satisfied with his interest and enthusiasm, appointed Rev. Jaenicke as the first European In the Tirunelveli district, Rev. Jaenicke became known as a man of goodwill and love for the people of Tirunelvleil. The love he showed to his co-workers and to everyone who became a Christian through his efforts is expressed through them. Within a few months of coming to Papanasam, Tirunelveli, Rev. Jaenicke went through the forest, accompanied by two English officers from Tirunelveli. On the way he went on to tell the people about the Savior Jesus Christ. Rev. Jaenicke, who wrote about the beauty of the Papanasam Falls and the Tamiraparani River, visited Cuttalam and Tenkasi a few weeks later.
On his return to Palayamkottai, Rev. Jaenicke, who had been proclaiming about the Lord there, contracted a fever known as mountain fever. In the midst of this fever, he accompanied Rev. Satyanathan from Tirunelveli to many villages around Palayamkottai and preached the gospel. In October 1791, Rev. Jaenicke arrived at Palayamkottai Fort and served in various places for less than ten months, baptizing 60 repentant souls. With the financial help of Rev. Schwartz, he built two small Churches at Padmanabhapuram and Poovani near Seithunga Nallur. Until then, the Church was built locally for the villagers who had gone to Palayamkottai for worship.
*Mission at Tittucurin:* Rev. Jaenicke went to the house of a Dutch officer on the beach in Thoothukudi to rest as his physical weakness increased. The Dutch officer in Thoothukudi had an English Church, two factories at Manappadu and Alwarkurichi, and one factory at Thoothukudi. Rev. Jaenicke served in Thoothukudi, Manappadu and Alwar Thirunagari. He converted many Hindus to become the Disciples of Christ. Through his fellow servants, proclaiming the gospel of Christ to all in the Tirunelveli district. He lived as an excellent witness and made others grow in Christ. Rev. Jaenicke baptized more than 200 Tamilians as a result of his ministry. He returned to Palayamkottai and then went to Thanjavur due to ill health.
*Mission at Thanjavoor:* Rev. Jaenicke served in Thanjavur for two years. When Rev. Schwartz fell ill in Thanjavur in 1794, Rev. Jaenicke went there. His visit was a source of great joy to Rev. Schwartz and Rev. Golf, who were caring for him. In this situation, in 1795, Rev. Jaenicke conducted the marriage of Vedanayagam Shastri. In Thanjavoor Rev. Schwartz spoke to Rev. Jaenicke about his death. But Rev. Jaenicke said everything would be fine if you would advise us as long as you are alive. But Rev. Schwartz was talking about his decision and gave some money for Palayamkottai ministry. One morning Rev. Jaenicke received the privilege of hosting a Holy Communion for Rev. Schwartz along with Rev. Golf. Rev. Schwartz’s words about his illness and death left Rev. Jaenicke in deep mourning. As a result, he could not sleep for many nights.
*Mission at Ramanathapuram:* After the death of Rev. Schwartz in 1798, Rev. Jaenicke went from Thanjavur to Ramanathapuram and served for a few days. Since the old Church had fallen, he built a new Church at Ramanathapuram. The Church was consecrated by Rev. Carrick on Monday 16th February 1800. Rev. Jaenicke's legs and arms began to tremble with illness as he offered his first prayer at the Ramanathapuram Church, so he left the church in the middle of worship.
*Mission at Tirunelveli:* Rev. Jaenicke came to Palayankottai again and ministered with zeal, sending Tamil preachers to work daily in the morning and teaching them more about the Bible in the evening, as Rev. Schwartz did in Thanjavur. In the midst of physical weakness he often suffered from fever and his legs were swollen. After hearing about Rev. Jaenicke’s ministry in Palayamkottai, Rev. Schwartz’s faith in the Tirunelveli ministry grew. "
*Legacy*: Rev. Jaenicke came to Thanjavur from Palayamkottai in 1800. On May 10, Rev. Jaenicke told Rev.Golf that he was glad he was going to die. The same evening, at 7 o'clock he happily met death. His 10 years of service brought about the most glorious awakening in Tirunelveli, Ramanathapuram and Thoothukudi Districts. Christian Churches in Tirunelveli District were planted by Rev. Schwartz but Rev. Jaenicke watered it down. Today these areas are flourishing in Christ and have become the center of Christianity in Tamil Nadu.
🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
☸. My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?