முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
G.U.போப் (1820-1908)
=======================
G.U.போப் (George Uglow Pope) அவர்கள் இங்கிலாந்து தேசத்திலே மெல்போர்ன் என்ற இடத்தில் ஜாண் போப் மற்றும் காத்ரீனா தம்பதியினருக்கு மகனாக 1820 ல் பிறந்தார்.
இளமையிலே பக்தி நெறியில் வளர்க்கப்பட்ட போப் சிறுவயது முதற்கொண்டே அநேக மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்.
இவருடைய தாயார் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திதான் மக்களின் அவலநிலையை மாற்றும் என்ற கருத்தை சிறுவயதிலேயே இவர் மனதில் ஆழமாக பதியவைத்தார்.
G.U.போப், தமது 13 ம் வயதிலே ஊழியம் செய்ய கடவுள் தன்னை அழைப்பதை உணர்ந்தார். வேத வாசிப்பில் அதிக ஊக்கம் கான்பித்தார். அதை செம்மையாக கற்பதற்கு எபிரேயம், கிரேக்கு மற்றும் இலத்தீன் மொழியையும் நன்கு கற்றுகொண்டார்.
இந்நிலையில் இங்கிலாந்து தேசத்தில் G.U.போப் திருச்சபையில் (Wesleyan) வெஸ்லியன் மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலம் இந்தியாவில் மிஷனெரிபணி செய்ய அறைகூவல் விடுத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு தன்னை இந்தியாவிற்கு மிஷனேரியாய் செல்ல அற்பணித்தார். பின்னர் கப்பலில் பயணம் செய்த எட்டு மாதத்திலேயே தமிழ்மொழியை நன்கு கற்றுகொண்டு 1839 ம் ஆண்டு சென்னையில் சாந்தோம் பகுதிக்கு வந்தடைந்தார்.
ஒரு நாட்டின் மொழியை அறியாமல் அந்தநாட்டில் கிறிஸ்துவின் பணியை செய்ய இயலாது என்பதை உணர்ந்த G.U.போப் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை நன்கு கற்று தேர்ச்சியடைந்தார்.
G.U.போப் அவர்கள் சென்னையில் இருந்த காலத்தில் இங்கிலாந்து திருச்சபையை (Anglican church) சேர்ந்து ஊழியம் செய்வதென்று முடிவு செய்தார்.
ஆகவே சென்னையில் மிஷனெரியாக பணி செய்துகொண்டிருந்இராபட் கார்லரின் மகளான மேரி கார்லர் என்பவரை 1841ல் திருமணம் செய்து பின்னர் 1842 ம் ஆண்டு சென்னை பேராயர் மூலம் உதவி குருவானவராக அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்டு SPG மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலம் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள சாயர்புரம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சாயர்புரம் வந்த G.U.போப் அங்குள்ள மக்களின் அவலநியையும் கல்வி அறிவின்மையையும் கண்டு மிகவும் துடிதுடித்துப்போனார்.
சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெயிலிலும், மழையிலும், புழுதியிலும் மற்றும் கடும் உஷ்ணத்தின் மத்தியிலும் பல கிராமங்களுக்கு நடந்து சென்றும் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்தும் சுவிஷேசபணியை செய்தார்கள்.
இப்படி சாயர்புரத்திலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் நற்செய்திபணி செய்துகொண்டிருந்த காலத்தில் கடும் உஷ்ணத்தில் அவருடைய மனைவி மேரி கார்வர் நோய்வாய்பட்டு 1845 ம் ஆண்டு மரணமடைந்தார்.
தன்னுடைய மனைவியின் மரணம் G.U.போப் அவர்களை வெகுவாக பாதித்தாலும் கர்த்தர் கொடுத்த சமாதானத்தினால், சோர்ந்துபோகாமல் இன்னும் முழுபலத்தோடு சுவிஷேச பணியை தொடர்ந்து செய்ததினால், அநேக மக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.
இதற்கு இடையே 1849 ம் ஆண்டு ஹென்ரிட்டா என்ற பெண்மணியை திருமணம் செய்து தொடர்ந்து ஆன்மீக பணியிலும் சமுதாய பணியிலும் ஈடுபட்டார்கள்.
G.U.போப் அவர்கள் சாயர்புரம் பகுதியில் சிறுபிள்ளைகள் கல்வி கற்கும்படி ஒரு கல்விகூடத்தை நிறுவினார். அது இன்று புனித மார்டின் பள்ளியாக உள்ளது.
ஹென்ரிட்டா அம்மையாரும் பெண்களின் பொருளாதாரம் உயர, சுயதொழில் மையத்தை நிறுவி அவர்களுக்கு தொழிற்பயிற்ச்சி அளித்து அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார்கள்.
19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவியவர்களுக்கு பல துன்பங்கள் உண்டாயின. ஆகவே கிறிஸ்தவ மக்கள் குடியேறுவதற்கு என்று சாயர்புரம் என்ற கிராமத்தை விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவ மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள்.
G.U.போப் அவர்களுக்கு ஊழியத்தில் பல கிராமங்களில் இந்துமத பூசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சில கிராமங்களில் உள்ளே செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டது. ஒருமுறை சாயர்புரத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பிரசங்கம் செய்துகொண்டு இருக்கும்போது ஒரு பூசாரியின் மனைவி மாட்டு சாணத்தை கரைத்து அவர்மீது ஊற்றினார். அதனை பொருட்படுத்தாமல் அவர் பிரசங்கத்தை தொடர்ந்து முடித்தார். அத்தனை பாடுகளையும் கனிவாய் ஏற்றுக்கொண்டார். மறுபடியும் அந்த ஊருக்கு பலமுறை சென்று நற்செய்திபணி செய்ததினால் கடவுளின் இரட்சிப்பினால் அவ்வூரில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அங்கு ஒரு ஆலயமும் கட்டப்பட்டது. பின் நாட்களில் அந்த பூசாரி குடும்பத்தினரும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
G.U.போப் அவர்களின் கனிவான பேச்சு, அதிக அன்பு, மிக கடினமான உழைப்பு, நல்லொழுக்க நடத்தை மூலம் சுவிஷேசத்தை அறிவித்ததினால் அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் அநேக கிராமங்களில் ஆலயங்கள் கட்டப்பட்டது.
G.U.போப் மூலம் ஏற்படுத்தப்பட்ட திருச்சபைகளை கிறிஸ்து இயேசுவுக்குள் வழிநடத்துவதற்கு சபை ஊழியர்களை நியமித்து அவர்கள் வேதாகமத்தை கற்றுக்கொள்ளும்படி வேதாகம கல்லூரியையும் 1844 ல் ஏற்படுத்தி இருந்தார். இதன்மூலம் ஏராளமானகுருவானவர்களும் சபை உபதேசியார்களும் உருவாக்கப்பட்டார்கள்.
G.U.போப் அவர்கள் சாயர்புரத்தில் முதல் கட்டிய கட்டிடமே தேவாலயம் தான். இவருடைய இடைவிடாத உழைப்பினால் 96 ஊர்களில் திருச்சபைகள் கட்டப்பட்டன. அப்படியே பல பாடசாலைகள் நிறுவப்பட்டன.
முதலில் சாயர்புரம், நற்செய்தி பணியை பரப்பும் நாசரேத் பகுதிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் G.U.போப் மூலம் அது தாமிரபரணி ஆற்றின் வடக்கேயுள்ள பகுதிக்கு தலைமை இடமாயிற்று.
பின்னர் G.U.போப் அவர்கள் தஞ்சாவூர், ஊட்டி, பெங்களூர் போன்ற பகுதிகளிலும் மிஷனெரி பணி செய்ய அனுப்பப்பட்டார்.
1856 ம் ஆண்டு தஞ்சாவூரில் சுவார்ஸ்(C.F.Schwartz) பாதிரியார் பணியாற்றிய இடத்திற்கு அனுப்பப்பட்டார். தஞ்சாவூரில் இருந்த சுவிசேஷ கவிராயர் வேதநாயகம் சாஸ்திரியாரின் மூலம் G.U.போப் அவர்கள் தமிழ் மொழியில் புலமை பெற்றார். இவருடைய வேதஞானத்தை கண்ட சென்னை அத்தியட்சர் G.U.போப் அவர்களுக்கு Doctor of Divinity என்ற பட்டத்தை வழங்கினார்.
1859 ம் ஆண்டு G.U.போப் அவர்கள் ஊட்டி பகுதியில் ஐரோப்பிய மாணவர்கள் தமிழ் இலக்கணங்களை கற்றுக்கொள்ள கல்விகூடம் நிறுவினார். இதன்மூலம் தமிழ்மொழியின் அரும் பெருமைகளை மேல்நாட்டு மாணவர்களும் புரிந்து கொண்டார்கள்.
பின்னர் 1870 ம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பயின்ற பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். அங்குள்ள மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் ஆராதனை நடத்தி அவர்களை கல்வியிலும் ஒழுக்கத்தில் சிறந்துவிளங்க செய்து அவர்கள் மூலம் கிறிஸ்தவ நற்செய்தியை பல இடங்களில் பரவசெய்தார்.
G.U.போப் அவர்கள் தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், நன்நூல், புறநானுறு, திருவருட்பயன், புறம்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை, திருக்குரள், நாலடியார், திருவாசகம் போன்ற தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை உலகறிய செய்தார். பல தமிழ் ஏட்டு சுவடிகளை தேடி சேகரித்ததை அவருடைய தமிழ்பற்று வெளிப்படுத்தியது.
G.U.போப் அவர்கள் ஐரோப்பிய அறிஞர்கள் மாக்ஸ்முல்லர், கவிஞர் பிரௌனிங் ஆகிய பலருக்கு சிறந்த முன்மாதிரியாய் விளங்கினார்.
இவ்வாறுG.U.போப் அவர்கள் தன்னுடைய 42 வருட மிஷனெரி பணியையும், கல்வி பணியையும் தமிழ்மொழிக்கும் சேவைசெய்து தன்னுடை 62 ம் வயதில் 1881 ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கு உலகின் தலைசிறந்த ஆக்ஸ்போடு(Oxford) பல்கலைகழகத்தில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து அங்கு தமிழ், தெலுங்கு மொழிகளை கற்று கொடுத்தார். மற்றெல்லா மொழிகளை காட்டிலும்(தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம்) தமிழ்மொழியில் அவருக்கு பற்று அதிகம்.
G.U.போப் அவர்களின் சாதனைகளை கவுரவபடுத்துவதற்காக இங்கிலாந்து தேசத்தின் Royal Asiatic Society தங்கபதக்கம் 1906 ம் ஆண்டு வழங்கி கௌரவப்படுத்தியது.
இந்நிலையில் G.U. போப் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் மிஷனெரியாக/ஆசிரியராக/தமிழ்மொழிக்கு சேவை செய்தவராக விளங்கி, தன்னுடைய 88 ம் வயதில் 1908 ம் ஆண்டு பிப்ரவரி 11 ல் நித்திய இழைப்பாறுதலுக்கு கடந்து சென்றார்.
இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சமயபணி, கல்விபணி மற்றும் தமிழ் பணியை செய்து செந்தமிழ் புலவராக விளங்கிய G.U.போப் அவர்களின் மூன்று இறுதி விருப்பங்கள். 1). இறப்பிற்கு பின் தன்னுடைய கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான் என்ற வாசகம் தமிழ்மொழியில் இடம்பெற வேண்டும் என்று தன் நண்பர்களிடம் கேட்டதினால் அந்த வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. 2). கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குரள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.3). தமது கல்லறைக்கு செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்கள் நண்கொடையால் அமைய வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் அவையெல்லாம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைக்கு சாயர்புரம் பபகுதியில் G.U.போப் நினைவாக பல கல்விகூடங்கள், கல்லூரிகள், விடுதிகள், மற்றும் பொறியியல் கல்லூரியும் செயல்பட்டுக்கொண்டு G.U.போப் அவர்களுக்கு நன்றி செலுத்திக்கொண்டு இருக்கின்றது.
G.U.போப் நிறுவிய கல்விக்கூடங்களில் பயின்ற இலட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைக்கு சமுதாயத்தின் உயர்ந்த பலபொறுப்புகளில் இருந்து ஆண்டவரிடம் சாயர்புரம் பகுதிக்கு G.U.போப் அவர்களை அனுப்பியதற்காக நன்றி செலுத்துகின்றார்கள்.
G.U.போப் அவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டினை கௌரவப்படுத்தும்படியாய் தமிழ்நாடு அரசாங்கம் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் பெரிய சிலையை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செய்து கொண்டு இருக்கின்றது.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
The Gospel Pioneers
G.U.Pope(1820-1908)
===============================
George Uglow Pope was born on 24 April 1820 in Canada to a Cornish couple, John Pope and Catherine Uglow. Even as a child he cultivated many a language. He left for South India in 1839 and arrived at Sawyerpuram near Tittucurin to preach and propagate the ideals of Christianity.
On 1st January 1842, George. U. Pope married Mary Carver, daughter of an Anglican priest. He joined the Society for the Propagation of the Gospel (SPG), which sent him to Tirunelveli in Tamil Nadu, south India but his wife Mary died at Tittucurin in 1845, the year he was ordained.
In 1849, Pope married Henrietta and started their mission work among the downtrodden people by empowering them in education, health and welfare of the society. G.U. Pope was a Christian missionary who spent many years in Tamil Nadu and translated many Tamil texts into English. He lived in the service of Tamil and very early, he was highly influenced by the excellence of the Tamil language.
Dr. G U Pope’s efforts were equally directed to the extension of the Church. He carried the light of the Gospel into every neighboring village, and stationed catechists trained by him in Christian doctrine to minister to the needs of the congregations.
G. U. Pope established “Sawyerpuram Seminary” in 1844 which trained Indian clergymen, teachers and catechists. The seminary grew to a college, and was affiliated with the University of Madras in 1880. Pope turned into a scholar of Tamil, Sanskrit and Telugu. He set up several schools and taught Latin, English, Hebrew, Mathematics and Philosophy.
In 1859 Pope found a grammar school for European children at Ooty in Tamil Nadu, and served as its headmaster. In 1870 he moved on to become Principal of Bishop Cotton’s School (and college) in Bangalore.
He worked with the motto: "Conscience within and God above". He was one of the greatest European scholars on Tamil. He has given special attention taken to improve Tamil grammar. He published such great works as THOLKAPPIYAM, NANNOOL, and made classical Tamil easier to English students, while Tamil students could afford means for a more comprehensive and fruitful study of the classics.
He translated into English, THIRUKKURAL, NALADIYAR, THIRUVASAGAM, etc. After 42 years of missionary and educational labour in different parts of Southern India, he returned to England in 1881. He accepted a Professorship at Oxford University, to teach Tamil and Telugu.
Due to his reputation as an eminent scholar, G. U. Pope was awarded a gold medal by the Royal Asiatic Society in 1906 and died on 12 February 1908. He delivered his last sermon on May 26, 1907. Rev. Pope was buried at central Oxford in England. He established himself as a student of Tamil, in his coffin. He was also amongst the eminent pioneers who evolved and developed Tamil Christian Literatures.
Today, Sawyerpuram, a town panchayat, has several educational institutions remembering G. U. Pope. They are: Pope Memorial Higher Secondary School for Boys; Pope's College, a postgraduate, co-ed institution with hostel facilities; Pope's College of Engineering; and Pope's College of Education (graduate teacher training). Sawyerpuram one day will host a Pope University in future.
G. U. Pope is still popular in the Tamil country even now due to his contributions to Tamil literature and Tamil language. Pope's contribution to Tamil is well-remembered, even with a statue on the Marina beach in Chennai.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.
Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India.