ஆசீர்வாத செய்தி
தலைப்பு:
யாருக்கு வானம் திறக்கும்?
வேத வசனம்:
மத்தேயு 3: 16
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
* * * * *
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக.
👉 நாம் அனுபவிக்கிறதற்கு சகலவித நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும், அள்ளித் தருகிற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கும் அவருடைய சமுகத்திலிருந்து நமக்கு ஆசீர்வாதங்களை வானம் என்கிற கதவுகளையும், மேகங்கள் என்கிற கதவுகளையும் திறந்து தந்துக் கொண்டிருக்கிறார் .
(சங்கீதம் 78: 23)
👉👉 அவர் கதவுகளை திறந்து நமக்கு கொடுக்காமல் எந்த ஒரு சிறிய ஆசீர்வாதத்தையும் அல்லது பெரிய ஆசீர்வாதத்தையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது.
-- எந்த மனிதர்களிடத்திலும் அனுக்கிரகம் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் ஆண்டவர் நமக்கு திறக்கும் வாசலை பொறுத்ததே என்பதை மறந்து விடக்கூடாது.
👉👉 வானத்தின் ஆசீர்வாதங்கள்:
1) வானம் திறப்பார்
(மத்தேயு 3: 16,17)
-- இயேசுகிறிஸ்து பாவம் செய்யாத பரிசுத்தராக இந்த பூமியில் வந்தார் வாழ்ந்தார்.
-- பாவத்தை விட்டு மனந்திரும்பியதற்கு அடையாளமாக முழுகி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்படியாக , ஒரு பாவமும் செய்யாதவராக இருக்கும் போதே நமக்கு முன்மாதிரியாக ஞானஸ்நானம் எடுத்தார். ஞானஸ்நானம் எடுத்து கரையேறின போது வானம் திறக்கப்பட்டது.
-- பாவத்தை விட்டு மனந்திரும்பிய வாழ்க்கையில், முழுகி ஞானஸ்நானம் எடுத்த வாழ்க்கையில் நிலைத்து இருப்பீர்களானால் உங்களுக்கு *வானம் எப்போதும் திறந்திருக்கும்*. மேன்மையான ஆசீர்வாதம் உங்கள் சிரசில் வந்து தங்கும்.
2) வானத்தின் பொக்கிஷ சாலையை திறப்பார்:
உங்கள் இருதயம் ஆண்டவருடைய வார்த்தைகளால், சத்தியத்தால் நிரம்பிய நல்ல பொக்கிஷ சாலையாக இருந்தால்! வானத்தின் பொக்கிஷ சாலையை கர்த்தர் உங்களுக்கு திறப்பார். எல்லா ஐஸ்வர்யங்களையும் உங்களுக்கு கொடுப்பார். உங்கள் தரித்திரம் மாறும்; கடன் பிரச்சனை மாறும்; உங்களை செழிக்க பண்ணுவார். உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார்.
(லூக்கா 6: 45; லூக்கா 8: 15)
3) வானத்தின் மதகுகளை திறப்பார்:
-- உங்களைச் சுற்றிலும் பஞ்சமான சூழ்நிலையாக இருந்தாலும், உலகமே பஞ்சத்தில் மூழ்கிப் போனாலும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக, அவருடைய வார்த்தையின்படி நடப்பவர்களுக்காக வற்றிப் போகாத, குறையாத வானத்தின் மதகுகளை திறந்து ஆசீர்வாதமான மழையை உங்கள் வாழ்க்கையில் அவர் பெய்யப்பண்ணுவார். சாதகம் இல்லாத சூழ்நிலையை உங்களுக்காக சாதகமாக மாற்றுவார். நிறைவான ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொடுப்பார்.
4) கனம்பண்ண வானம் திறக்கப்படும்:
-- அன்புள்ள தெய்வத்துக்கு நீங்கள் அன்பின் நிமித்தமாக ஊழியம் செய்து ஆத்துமாக்கள் மனம் திரும்புவதற்கு முயற்சி செய்து கொண்டே இருந்தால், உங்களை மேன்மைப்படுத்தவும், உயர்த்தவும் வானம் திறக்கப்படும்.
(யோவான் 13: 26)
👉👉 ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
-- மேலே சொன்னவைகளின்படியாக வாழவேண்டும். மேலும்,
-- நாம் மாத்திரம் அவரிடத்திலே பேசுவிட்டு ஓடுகிற ஜெப வாழ்க்கையை அழித்துவிட்டு, அவர் பேசுகிற சத்தத்தை கேட்டு ஜெப நேரத்தை முடிக்கும் அனுபவம் உள்ளவர்களாக மாற வேண்டும்.
-- நம்மை நாமே பிரியப்படுத்திக் கொள்ளும் படியான விசுவாச வாழ்க்கை வாழாமல் ஆண்டவரை பிரியப்படுத்தபடியாக விசுவாசிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
-- இந்த உலக வாழ்க்கைக்காக அவரை தேடுவதை விட்டுவிட்டு, அவரோடு வாழும் வாழ்க்கையை விரும்பி அவரைத் தேட வேண்டும்.
(1 கொரிந்தியர் 15: 19)
-- ஆண்டவர் கொடுக்கிற எந்த ஆசீர்வாதமாக இருந்தாலும் அவைகளை பயன்படுத்தி நம்மை வெளிப்படுத்துகிற வாழ்க்கை வாழாத படிக்கு, எப்போதும் எல்லா இடங்களிலும் ஆண்டவரை வெளிப்படுத்தி அவரை மகிமைப்படுத்தும் படியான வாழ்க்கை வாழ வேண்டும்.
👉👉 அன்பானவர்களே மேலே சொல்லியபடியாக நாம் வாழும் பொழுது வானம் திறந்து ஆண்டவர் கொடுக்கிற எல்லா சம்பூரண நன்மையும், ஆசீர்வாதங்களும் நிச்சயம் நமக்கு வரும். நம் குடும்பத்திற்கும் வரும். ஆண்டவர் நாமத்தின் மகிமைக்காக நம்மை ஆசீர்வாதமாக வைப்பார் நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள். ஆமென்.
ஜெபம்:
பரலோக பிதாவே! இந்த நாளிலும், நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று எங்களுக்கு கற்று கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நாங்களும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களாக வாழ உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே ஆமென்.
** ** ** **
+91 84899 74307