ஸ்தேவான் | யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபு | THY MARTYR STEPHEN | JAMES-The Brother of John | பர்த்தலோமேயு என்ற நத்தானியேல் | நீதிமான் யாக்கோபு | பிலிப்பு அப்போஸ்தலன்
=====================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 1
உம்முடைய (இரத்த) சாட்சியாகிய ஸ்தேவான்
(அப்போஸ்தலர் 22:20)
=====================
ஸ்தேவான் நின்றான்..
ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக..
லீபர்த்தீனர்,சிரேனே,
அலெக்ஸாண்ட்ரியா,
சிலிசியா,ஆசியா நாடுகளின் ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக..
விசுவாசத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிறைந்து அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்கும் தைரியம் அங்கு யாருக்கும் இல்லை..
வானம் திறக்க..
தேவ மகிமையால் முகம் பிரகாசிக்க..
நின்றிருந்த அவனை
நகரத்துக்கு வெளியே இழுத்து கல்லெறிந்து கொல்ல..
அவனோ அவர்களுக்காக மன்றாடி தன் ஆவியை அர்ப்பணிக்க..
கர்த்தராகிய இயேசு தாமே முன் செல்ல..
பரலோகமே எழுந்து நின்றது..
அவனை வரவேற்க..
ஆதி சபையின் முதல் கோதுமை மணி..
நிலத்தில் விழுந்து..
உலகத்தைக் கலக்கும் பல பவுல்களை பலனாய்க் கொடுத்தது..
தேசம் தேவனிடம் திரும்பும் நாள் வெகு தூரமில்லை..
அதற்கு முன்..
---------------------
தேவனே,
பல ஸ்தேவான்கள் இந்தியாவின் Dharam Sansadh என்ற ஆலோசனை சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் காவல் நிலையங்களுக்கும் முன்பாக இழுத்துச் செல்ல நேரிடும் போது..
ஒருவரும் எதிர் பேசவும் எதிர் நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் கொடுப்பீராக !
சாதுக்களும் ஷாக்காவின் மதத்தலைவர்களும் உமது மகிமையைக் காண்பார்களாக !
எங்களில் அநேகர் ஸ்தேவான்களாக மண்ணில் விழுந்து மடிய நேரிட்டாலும், அந்த விதைகளிலிருந்து தேசத்தைக் கலக்கி தேவனிடம் திருப்பும்
பவுல்களை எழுப்புவீராக !
ஆமென்.
(இரத்த சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின்
வித்து - C.T.STUDD )
=====================
ஆரம்ப கால இரத்த சாட்சிகள்
Chapter 2
"யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபு"
=======================
"அக்காலத்திலே ஏரோது ராஜா..யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபை பட்டயத்தினாலே கொலை செய்தான்.." (அப்போஸ்தலர் 12:1,2)
யாக்கோபு..
கலிலேயா கடற்கரையிலே..
தன் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது..
நாசரேத்தூர் இயேசுவால்
மனுஷரைப் பிடிக்க அழைக்கப்பட்ட போது..
படகுகளையும் வலையையும் தன் தகப்பனோடு விட்டு விட்டு தன் தம்பியாகிய யோவானோடு இயேசுவைப் பின் செல்ல தன்னை ஒப்புக் கொடுத்த அதே யாக்கோபு..
பெந்தேகோஸ்தேக்குப் பின்..சகலமும் தலைகீழாய் மாறியது..
ஆதித்திருச்சபை ரோம ஆட்சியாளர்களால் கடும் நெருக்கத்தை அனுபவித்த காலம்..
சரித்திரம் சொல்கிறது..
யாக்கோபு கொலைக் களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிற போது..
அவரது கொலையாளிகளில் ஒருவன் யாக்கோபின் அசாதாரண தைரியத்தையும் அசைக்க முடியாத விசுவாசத்தையும் கண்டு..
போகும் வழியிலேயே இயேசுவுக்கு தன் மனதைக் கொடுக்க..அன்று ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருவரது தலையும் துண்டிக்கப்பட்டது..
ஓ! இரத்த சாட்சி மரணத்தின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது!!
---------------------
தகப்பனே..
ஒரு நாள் நாங்களும் இந்தப் பாதையில் கடந்து போவது உமது அநாதி தீர்மானமாய் இருக்குமேயானால்..
எங்கள் இருதயத்தை உமக்குத் தந்தபடியே எங்கள் தலையையும் உமக்காகத் தந்துவிடக் கிருபை தாரும்..
ஆமென்.
(என் உயிரைத் தவிர வேறு எதையும் நீ என்னிடத்திலிருந்து பறிக்க முடியாது - OFFRESS GREIZINGER)
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
==============
Early Church Martyrs
Chapter 1
THY MARTYR STEPHEN
Acts 22:20
==============
Stephen stood steadfast..
Before the synagogue of scholars and scribes-Cyrenians..Alexandrians..Cicilians and Asians..
No one had the courage to stand against Stephen's wisdom and Spirit who was full of faith and Holy Spirit..
So, heaven being opened..His face glowing with the glory of God..
Stephen was dragged out the city while being stoned..
Prayed for his persecutors..thus surrendering his spirit.
Lord Jesus Christ Himself being standing on the gates..The whole host of heaven stood up to welcome Stephen..
The first grain of wheat of the Early Church fell on the ground to bring forth numerous Pauls..
The day is not too far that our Land going to turn to the Lord.
Before that..
---------------------
Loving Lord,
When the day comes when many of our Stephens stand before the DHARAM SANSAD or religious councils and before the RULERS and POLICE CUSTODIES..grant us the wisdom and a mouth that no one can contradict or resist that would make them spell-bound..
Let every SADHU & SHAKHAA see the Glory of God..
Even if it would be Thy will and purpose that many Stephens be fall to the ground as grains..
Lord,raise up Pauls who will turn this nation to You upside down..
Amen.
(Blood of martyrs is the seed of the church-C.T.STUDD)
==============
Early Church Martyrs
Chapter 2
JAMES-The Brother of John
==============
"Now Herod the king.. killed JAMES..the brother of John"
(Acts 12:1,2)
The same JAMES..
On the shores of Galilee..
While mending his nets..
Called by JESUS of Nazareth..to be fisher of men..
The same JAMES..who
left his boats,nets,and his father Zebdee to follow the Saviour for a life time..
After Pentecost..When everything changed..The time when the Roman rulers began trying to crush the early infant church..
Herod caught James..
History records..
On the way James was taken to be sentenced..
The extraordinary courage and testimony he showed..
Made one of his captors tremble..and he gave his life to the Lord right there and both were beheaded at the same time for their faith..
Oh! What a privilege of martyrdom!
--------------------
Lord if it's Your will..that one day if we too should go through this path..
Grant us grace to give our heads as we gave our hearts to you.. Amen.
("YOU CAN TAKE FROM ME NO MORE THAN MY LIFE"- Offrus Greizinger)
Hidden Fire
Pr. S. Romilton
9810646981
===================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 3
பர்த்தலோமேயு என்ற நத்தானியேல்
================
"இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்று இயேசுவின் வாயாலேயே சாட்சி பெற்ற நத்தானியேல் என்ற பர்த்தலோமேயு..
மனிதன் ஆட்டுக்கும் மாட்டுக்கும் மானுக்கும் பாம்புக்கும் புலிக்கும் தோலுரிக்கிறான் - தன் சுய இலாபத்துக்காக..
ஆனால் மனிதனை மனிதன் தோலுரிப்பானோ ?
இயேசுவுக்காக உயிரோடு தோல் உரிக்கப்படத் தன்னை ஒப்புக்கொடுத்த ஒரு மனிதன் உண்டு..
வேதத்தில் இவரைப்பற்றி அதிக விபரங்கள் காணப்படாவிட்டாலும் சரித்திரம் சொல்கிறது..
எப்போதும் கோடு போட்ட வெண் அங்கி அணிந்து தேவ மகிமையால் நிறைந்திருந்த பர்த்தலோமேயு..
அவர் அணியும் அங்கியும் காலணிகளும் 26 வருடங்களாய் பழமையாய் போகவே இல்லையாம்..தினமும் பகலில் 100 முறையும் இரவில் 100 முறையும் ஜெபம் பண்ணும் பழக்கம் கொண்டிருந்த பர்த்தலோமேயுவின் ஜெபத்தைக் கேட்க தேவ தூதர்கள் காத்திருப்பார்களாம்..
இன்றைய நவீன கால துருக்கியிலும் பின்னர் சிறிது காலம் இந்தியாவிலும் ஊழியம் செய்த பர்த்தலோமேயு..
கடைசியாகச் சென்றது அர்மீனியா..(கிபி 60)
கிறிஸ்துவின் தேவத்துவத்தையும் உயிர்த்தெழுதலையும் மறுதலிக்க மறுத்த பர்த்தலோமேயுவை உயிரோடு தோலுரித்து சிலுவையில் அறைந்தனர் அன்றைய ஆட்சியாளர்கள்..(கிபி 68)
"நீர் தேவனுடைய குமாரன்;
நீர் இஸ்ரவேலின் ராஜா(யோவான் 1:49)"
என்று இயேசுவை சந்தித்த முதல் சந்திப்பிலேயே அவரைச் சொன்னாரே..
அப்படியே சொல்லி ஜீவனை விட்டிருப்பாரோ ?
"கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது (2 கொரிந்தியர் 5:14)"
என்று பவுல் இதைத் தான் சொன்னாரோ ?
----------------------
தகப்பனே..
கிறிஸ்துவின் அன்பு மாத்திரமல்ல..
தங்களைத் தோலுரிக்கப்பட ஒப்புக்கொடுத்த அப்போஸ்தலரின் இரத்தம் எங்கள் இரத்த நாளங்களைக் கொதிக்கச் செய்யாதோ ? இரங்குமே!
ஆமென்.
(கிறிஸ்து சென்ற வழி இதுவே..அவரது அப்போஸ்தலர் சென்ற வழியும் இதுவே..நம் இரட்சகரின் ஊழியர்களாகிய நாம் அவருக்கு மேலானவர்கள் அல்லவே !! - Adrian Corneliss)
===================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 4
நீதிமான் யாக்கோபு
=======================
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சகோதரனும்
புதிய ஏற்பாட்டு நிருபத்தை எழுதியவனுமான யாக்கோபு..
சவுல் பவுலாய் மாறி விட்ட அந்தக் காலகட்டம்..
கூடையில் வைத்து மதிலிலிருந்து இறக்கி விடப்பட்டு யூதர்கள் கையிலிருந்து தப்பி விட்டான் பவுல்..
அவனது எஸ்கேப் அவன் எதிரிகளைக் கொந்தளிக்கச் செய்தது..
சதுசேயனான பிரதான ஆசாரியன் அன்னா அன்றைய சபைக்கு விரோதமாய் விஷத்தைக் கொப்பளித்துக் கொண்டிருந்தான்..
யாக்கோபு அன்றைய எருசலேம் சபையில் தன் பரிசுத்த வாழ்க்கையாலும் சாட்சியாலும்
"நீதிமான் யாக்கோபு" என்று பெயர் பெற்றிருந்தார்..அவரது முகத்துக்காகவே அநேக யூதர்கள் சபையில் சேர்ந்தனர்..
ஒருநாளில் பலமுறை இந்த நீதிமான் தேவாலயத்துக்குள் தனிமனிதனாய்ப் பிரவேசித்துத் தனது ஜனங்களின் பாவ மன்னிப்புக்காக முழங்காலில் விழுந்து கிடப்பார்..
முழங்காலில் ஜெபித்து ஜெபித்து அவரது முழங்கால்கள் ஒட்டகத்தின் முழங்கால்கள் போல் ஆகிப்போனதாக சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள்..
"பிடியுங்கள் அவனை"என்றான் அன்னா..
ஆயிரக்கணக்கான ஜனங்கள் எருசலேம் தேவாலய மதிலுக்குக் கீழே நிற்க.. யாக்கோபை தேவாலய மதிலின் உச்சிக்கு இழுத்துச் சென்றனர் அன்னாவின் ஆதரவாளர்கள்..
ஜனங்களுக்கு முன்பாக இயேசுவையும் அவரது சகோதரன் யாக்கோபையும் இழிவுபடுத்துவதே அன்னாவின் யோசனை..
"இயசுவையும் உபதேசத்தையும் மறுதலி" என்று கூச்சலிட்ட கூட்டத்தைக் கையசைத்து நிறுத்திய யாக்கோபு சொன்னார்..
"என்னைக் கேட்கிறீர்களோ?
இதோ இயேசு கிறிஸ்து பிதாவின் வலது பக்கம் நிற்கக் காண்கிறேன்..
மேகங்களோடே அவர் மீண்டும் வருவார்.."
யாக்கோபின் துணிச்சலான சாட்சியைக் கேட்ட கூட்டத்தில் அநேகர் ஆவியால் தொடப்பட..
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று ஆர்ப்பரித்தனர்..
ஆனால் சதுசேயரின் குரல் ஓங்கி ஒலித்தது..
"அவனைக் கீழே தள்ளுங்கள்.."
அடித்து மிதித்து கோபுரத்திலிருந்து தள்ளி விடப்பட்டார் யாக்கோபு..
கீழே விழுந்த அவர், விழுந்த நிலையிலேயே ஜெபித்தார்.."பிதாவே இவர்களை மன்னியும்..தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்"
இன்னும் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த யாக்கோபை கல்லால் அடித்துக் கொல்ல நினைத்த போது..ஒரு ஆசாரியன் சொன்னான்..
"நிறுத்துங்கள்! இவன் உங்களுக்காக ஜெபிக்கிறான்.."
ஆனால் கூட்டத்திலிருந்து முன்னால் ஓடி வந்த ஒருவன் துணி துவைக்கும் கட்டையால் யாக்கோபைத் தலையில் அடிக்க..
ஆதிசபையின் அணையாவிளக்கு ஒன்று அணைந்தது..
ஆனால் அவர் தைரியமாய் கொடுத்த அன்றைய கடைசி சாட்சி எழுப்புதல் தீயை எருசலேமில் கொளுத்தி விட்டது..
------------------------
கர்த்தராகிய இயேசுவே,
"நீங்கள் எனக்காக அழாமல் (இரத்த சாட்சிகளுக்காகவும அழாமல்)
உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (உங்கள் சபைக்காகவும்??)
அழுங்கள்" என்று சொன்னீரே..
பச்சை மரமாகிய(உமக்கும் உம் சாட்சிகளுக்கும்) இவைகளைச் செய்தால் பட்ட மரமாகிய (எங்களுக்கு) என்ன செய்ய மாட்டார்கள்?(லூக்22:28-31)
நீர் எங்களுக்குத் தந்த கிருபை விருதாவாய்ப் போகாதிருப்பதாக!
பொய்யான மாயையைப் பற்றிக் கொண்டு எங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்காதபடி எங்களைப் பாதுகாப்பீராக! ஆமென்.
*("ஸ்க்கட்..எங்களுக்கு ஒரு பாட்டு பாடேன்..! - அடித்துக் கொல்லப்பட்ட ஜாண் ஸ்க்கட்டின் மரித்துக்கிடந்த உடலைப் பார்த்து, "இப்போது ஒரு பாட்டுப்பாடு !" என்று நையாண்டி செய்தது அவரைக் கொலை செய்த கூட்டம்..)*
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=====================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 5
பிலிப்பு அப்போஸ்தலன்
===================
நீ எனக்குப் பின் சென்று வா" என்ற இயேசு கிறிஸ்துவின் அழைப்பைக் கேட்ட பிலிப்பு..
நாத்தான்வேலிடம் "இயேசுவைக் கண்டோம்"என்று சொன்னது மட்டுமல்ல.."வந்து பார்" என்று அவனையும் அழைத்து வந்த பிலிப்பு..
பின்னர் சில கிரேக்கர்கள்
"ஐயா இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று அவனிடம் வந்த போது அவர்களை அவரிடம் நடத்திய பிலிப்பு..
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப்பின் மிஷினரியாக அனுப்பப்பட்டது..
கிரீஸ்,பிரிகியா மற்றும் சிரியா நாடுகளுக்கு..தன் சகோதரி மரியம் மற்றும் பர்த்தலோமேயுவுடன்..
அங்குள்ள ஹிரோப்போலிஸ் நகரத்தின் கவர்னரின் மனைவி பிலிப்புவின் ஊழியத்தின் மூலம் சுகம் பெற்று இரட்சிக்கப்பட..
அந்த ஊரே கலவரமானது..
மிஷினரிகள் மூவரும் கடும் சித்திரவதைக்கு
உள்ளானாலும்..பிலிப்பு அறையப்பட்டது சிலுவையில் தலைகீழாக..
அந்தரங்கத்தில் தொங்கினாலும் அதிலிருந்தும் பிரசங்கம் பண்ணிய பிலிப்பு..சிலுவையில் தன் ஆவியை ஒப்புக் கொடுத்தார்..
------------------------
தகப்பனே..
இயேசுவைக் கண்ட பிலிப்பு
மற்றவர்கள் இயேசுவைக் காணச் செய்த பிலிப்பு..தன்
கண்களை அவர் மேலேயே பதித்து வைத்த பிலிப்பு..
தலை கீழாய் அறையப்பட்ட நிலையிலும் இறுதி வரை நின்று தன் ஓட்டத்தை வெற்றியுடன் முடித்த பிலிப்பு..எங்களுக்கு உதாரணமாகவும் சவாலாகவும் நிற்க கிருபை தாரும்..
இரத்த சாட்சிகளின் வாழ்க்கையைப் படிக்கும் போதே உம்முடைய பாரம் எங்களைப் பற்றிப் பிடிப்பதாக!! ஆமென்.
(அப்போஸ்தலனாகிய இந்த பிலிப்பு பந்தி விசாரிப்புக்கு நியமிக்கப்பட்டு பின் சமாரியாவின் எழுப்புதலுக்கு காரணமான பிலிப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது)
[அது தீயானாலும் தண்ணீரானாலும் இந்த சரீரத்தை ஒப்புக் கொடுப்பது எனக்குப் பெரிய காரியம் அல்ல..- JOOS KINDT]