அப்போஸ்தலனாகிய தோமா | சீமோன் பேதுரு | லூக்கா | பர்னபா | யோவான்
===================
ஆரம்ப கால இரத்த சாட்சிகள்
Chapter 11
அப்போஸ்தலனாகிய தோமா
=====================
"நம்பிக்கையில்லா தோமா" என்று கிறிஸ்தவர்களின் வழக்கச் சொல்லாய் மாறிப்போனவன் தான்..
ஆனால் "என் ஆண்டவரே என் தேவனே" என்று உயிர்த்தெழுந்த இயேசுவின் கரங்களில் தன்னைப் புதைத்துக் கொண்ட தோமா அல்லவா..
"இந்து தேசம் முதல்" என்ற பெயர் வேதத்தில் பொறிக்கப்பட்ட இந்த தேசம் பெற்ற பெரிய பாக்கியமல்லவா,தோமா இந்த மண்ணுக்கு வந்தது ?
இந்தியக் கிறிஸ்தவன் மறக்க முடியாத தோமா..
முதலில் பார்த்தியர், பெரிசியர் மத்தியில் ஊழியம் செய்த தோமா..பின்பு வந்தது இந்தியாவின் பஞ்சாபுக்கு..
(அதனால் தான் வட இந்திய மாநிலங்களில் அதிக அளவு எழுப்புதல் பஞ்சாபிலோ !)
பிறகு மறுபடியும் பாலஸ்தினா போய் விட்டுத் திரும்பியது..தென் இந்தியாவின் கேரளாவுக்கும் தமிழகத்துக்கும்..
மற்ற வரலாறு தென்னிந்தியக் கிறிஸ்தவர்கள் அறியாதது அல்லவே !
அப்போஸ்தலனின் பாதம் படப் பாக்கியம் பெற்ற என் இந்தியா..
St.Thomas Mount என்ற பரங்கிமலையில் ஈட்டியால் குத்தப்பட்டு..பிறகு
எரியும் சூளையில் தூக்கி எறியப்பட்டு..
இரத்த சாட்சியான தோமா..
"ஆபேலின் இரத்தம் முதல் பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் வரை மட்டுமல்ல.." (லூக்கா 11:50)
யோவான் ஸ்நானகனின் இரத்தம் முதல் அதிக நன்மையானவைகளை நித்திய நித்தியமாய்ப் பேசும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வரை மட்டுமல்ல..(எபிரெயர் 12:24)
பரங்கி மலையின் குகையிலே ஜெப நிலையில் நின்ற தோமா சிந்திய இரத்தம் முதல்..
"உந்தன் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே" என்ற பக்தனின் ஏக்கம் இன்று வரை கூவுகிறதினால் தானோ என்னவோ தென்னிந்தியாவில் இவ்வளவு பெரிய கிறிஸ்தவ சமுதாயம் !!
இன்றைய தலைமுறை சபை.. தான் கடந்து வந்த பூர்வ பாதைகளைத் திரும்பிப் பாராதோ ?
சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் புலம்பல் பாடினானே தாவீது..
"கில்போவா மலைகளே!
உங்கள் மேல் பனியும் மழையும் பெய்யாமல் போவதாக..என்று!!
(2 சாமுவேல் 1:17-27)
ஆனால்..எங்கள் பரங்கிமலையே..
இந்தியாவின் குமாரரும் குமாரத்திகளுமாகிய எங்களுக்கு இரட்சிப்பென்னும் இரத்தாம்பரத்தை சிறப்பாய்
உடுப்பித்து..எங்கள் மேல் பரிசுத்த அலங்கார ஆபரணங்களைத் தரிப்பிக்கத் தன் இரத்தத்தை உன் மேல் ஊற்றிக் கொடுத்த அப்போஸ்தலனை இன்றைய சபை மறக்குமானால் அதின் வலது கை தன் தொழிலை மறப்பதாக ! (சங்கீதம் 137:5,6)
---------------------
தேவனே..
எங்கள் ஜீவனோடு எங்கள் இரத்தமும் உம்மை நோக்கிக் கூப்பிடுவதாக..
ஆமென்.
(கிறிஸ்துவின் சிலுவையை நான் தள்ளி வைப்பதில்லை -Conrad Koch)
===================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 12
சீமோன் பேதுரு
================
"சீமோனே நீ பாக்கியவான்.
நீ பேதுருவாய் இருக்கிறாய்
இந்தக் கல்லின் மேல்
என் சபையைக் கட்டுவேன்
பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.. (மத்தேயு 16:17,18) என்று இயேசுவின் வாயாலேயே வாக்குத்தத்தம் பெற்ற பேதுரு..
எதிலும் வித்தியாசமானவன்..
தண்ணீரைத் தரையைப் போல மிதித்து நடப்பான்.
ஆடையின்றி இருந்தால் கடலிலும் குதித்து விடுவான்..
"நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று இயேசுவைச் சொல்லி..
"சீமோனே நீ பாக்கியவான்"
என்று பாராட்டு பெறுவான்..
"நீர் பாடுபடக்கூடாதே"
என்று இயேசுவைக் கடிந்து கொண்டு அவரிடம் "எனக்குப் பின்னாகப் போ சாத்தானே"என்று அவரால் குட்டப்படவும் செய்வான்..
"காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றுவேன்" என்பான்..
ஒரே இரவில் ஒரு வேலைக்காரிக்குப் பயந்து அவரை அறியேன் என்று சபிக்கவும் சத்தியம் செய்யவும் தயங்க மாட்டான்.
ஆனால் எல்லாம் பெந்தேகோஸ்தே வரையில் தான்..
பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் பெற்ற பேதுரு பிரசிங்கிக்க நின்றபோது ஒரு
Mass Revival
Mass Conversion &
Mass Baptism..
ஆயிரங்களில்..
அது அழகு வாசல் சப்பாணியாகட்டும்..
அல்லது பக்கவாத ஐநேயாவாகட்டும்..
அல்லது செத்துப் போன
தபீத்தாவாகவே இருக்கட்டும்..
ஒரே ஒரு வார்த்தை தான்.."எழுந்திரு"என்றால் அவர்கள் எழுந்தே ஆக வேண்டும்..
அவன் மேலிருந்த அக்கினியின் அனல் அப்படி..
அவன் நிழல் பட்டு சுகம் பெற நோயாளிகள் தவமிருந்தார்கள்..
தொட்டவருக்கும் பட்டவருக்கும் சுகம் நிச்சயம் !
சபையின் தூணாய் நின்ற பேதுரு..
யூதருக்கும்
புற ஜாதிகளுக்கும் அப்போஸ்தலன்..
உயிர்த்தெழுந்த இயேசு கேட்டாரே..
"சீமோனே இவர்களிலும் அதிகமாய் நீ என்னை நேசிக்கிறாயா"என்று..
சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள்..
திரும்பி நோக்கிய இயேசுவின் ஊடுருவிய கண்களும் கேட்ட கேள்வியும் அவன் இருதயத்தை உடைக்க..தன் கடைசிக்காலம் வரை அவரை மறுதலித்ததை நினைத்து அழுது அழுது அவன் முகத்தில் கண்ணீர் வழிந்த இடம் பள்ளம் விழுந்து காணப்பட்டதாம்..
காலங்கள் கடந்தது..
"சீமோனே..சுளகினால் புடைக்கிறது போல சாத்தான் உங்களைப் புடைக்க உத்தரவு கேட்டுக்கொண்டான்"என்ற இயேசுவின் வார்த்தை நிஜமானது..
சீடர்கள் பட்ட பாடுகளுக்கு அளவே இல்லை..
கடைசியாக வந்தது பேதுருவின் முறை..
நீரோ மன்னனின் காலம்..ரோம் நகரம் பற்றி எரிகிறது
சீஷர்கள் வயதான பேதுருவை தப்புவிக்க நகருக்கு வெளியே பத்திரமாய் அனுப்பி வைக்க..
நகர வாசலை நெருங்கிய பேதுருவை எதிர் கொண்டுவருகிறார்..இயேசு..
முன்னொரு காலத்தில் "ஆண்டவரே நீரேயானால்.."
என்று சொன்னானே..
அதே வார்த்தை..
"ஆண்டவரே நீரேயானால் இப்போது எங்கே போகிறீர்?
"மறுபடியும் சிலுவையில் அறையப்படப் போகிறேன்"
என்று பதில் வர..
தன் இடத்தில் இயேசு அறையப்படப் போகிறார் எனப் புரிந்து கொண்ட பேதுரு..நகரத்துக்குத் திரும்ப..பிடிபட்டான்..
எதிலும் வித்தியாசமானவன் அல்லவா?
மரணத்திலும் வித்தியாசமாய் மரிக்க விரும்பினான்..
"நான் என் இரட்சகரைப் போல அறையப்படத் தகுதியற்றவன்..என்னைத் தலைகீழாய் அறையுங்கள்"என்றான்.
"சீமோனே நீ முதிர் வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய்..வேறொருவன் உன் அரையைக் கட்டி உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டு போவான்" என்ற இயேசுவின் தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறியது..
-------------------------------------
பரிசுத்த தகப்பனே..
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளின் அஸ்திபாரத்தில் கட்டப்பட்ட சபை அல்லவா?
ஆதிநிலை ஏகிடுவோமே என்று பாடுகிறோமே..
ஆதிநிலை ஆசீர்வாதத்திலும் அபிஷேகத்திலும் மட்டுமல்ல..
அவசியப்பட்டால் மரணத்திலும் அமையட்டுமே..
"எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயா?"
(யோ 13:38) என்று நீர் பேதுருவிடம் கேட்ட உம்முடைய அதே குரல் இறுதி வரை எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக..!
ஆமென்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 13
லூக்கா
=======================
"பிரியமான வைத்தியனாகிய லூக்கா" (கொலோசெயர் 4:14)
லூக்கா சுவிசேஷத்தையும் அப்போஸ்தல நடபடிகளையும் எழுதிய வேதத்திலுள்ள ஒரே புறஜாதி எழுத்தாளர்..
பிறப்பிடம்:
சிரியாவிலுள்ள அந்தியோக்கியா
இனம்:
கிரேக்கன்
படிப்பு:
மருத்துவம்
பொழுதுபோக்கு:
ஓவியம் வரைதல்
குடும்பம்:
மணமாகாதவர்
இரட்சிப்பு:
அப்.பவுல் மூலம் மனம் மாறியவர் என்று கருத்து
ஆரம்ப ஊழியம்:
மக்கெதோனியாவில் 7ஆண்டுகள்
மிஷினரி ஊழியம்:
பவுலின் மிஷினரி பயணங்களில் உடன் சென்றது
இறுதி வருடங்கள்:
பவுல் கைது செய்யப்பட்டு ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது பவுலின் மரணம் வரை உடனிருந்து பராமரித்தவர்
பவுலின் வழிநடத்துதலின் பேரில் அவருடன் இருந்த நாட்களில் லூக்கா சுவிசேஷமும் அப்போஸ்தல நடபடிகளும் எழுதியதாக வரலாறு..
பிறகு இத்தாலி,தல்மாத்தியா, மற்றும் அகாயாவில் ஊழியம்
மரணம்:
கடைசியாக கிரீஸூக்குத் திரும்பியவர் அகாயாவில் விக்கிரக ஆராதனை பூசாரிகளால் 84 வயதில் ஒரு ஒலிவ மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்
------------------------------
நேச தகப்பனே..
வேதத்திலே பிரியமானவன் என்றும் மிகவும் பிரியமானவன் என்றும் அழைக்கப்பட்ட சிலர் உண்டே..
"இவர் என் நேச குமாரன்..
இவரில் நான் மிகவும் பிரியமாயிருக்கிறேன்" என்று நீர் உம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுத்தீரே..
ஏனோக்கு தான் எடுத்துக் கொள்ளப்படுமுன்னே தேவனுக்குப் பிரியமானவன் என்று சாட்சி பெற்றானே!
இவ்வுலக ஓட்டத்தை முடித்து நாங்கள் எடுத்துக் கொள்ளப்படும் வரையிலும் "நீ எனக்கு மிகவும் பிரியமானவன்" என்ற சாட்சியோடு வாழ்ந்து முடிக்க கிருபை தாரும்..
ஆமென்.
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 14
பர்னபா
===========================
இவரது இயற்பெயர் "யோசே"எனப்பட்டாலும்..
அப்போஸ்தலரால்
"ஆறுதலின் மகன்" என்று அர்த்தம் கொள்ளும் பர்னபா என்று மறுபேரிடப்பட்டவர்..
இது நமக்கு வேறொரு காரியத்தை நினைவூட்டுகிறதோ ?
பழைய ஏற்பாட்டில் நோவா பிறந்த போது..
அவன் தகப்பனாகிய லாமேக்கு அவனுக்கு..
"கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும் நம்முடைய கைகளின் பிரயாசத்திலும்
'இவன் நம்மைத் தேற்றுவான்' என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பேரிட்டான்"
(ஆதியாகமம் 2:28,29)
இருக்கிறவன் எவனும் முன்னமே பேரிடப்பட்டிருக்கிறான் என்று சொன்னபடி..
அது தேவனாகிய கர்த்தராலேயே பேரிடப்பட்ட ஈசாக்காகட்டும்..
சிம்சோனாகட்டும் அல்லது
யோவானாய் இருக்கட்டும்..
அல்லது இயேசு கிறிஸ்துவாலேயே பெயர் மாற்றப்பட்ட பேதுருவும்
இடிமுழக்கத்தின் பிள்ளைகள் என்று சொல்லப்படும் பொவனர்கேஸாகவே இருக்கட்டும்..
ஒரு மனிதனே தன் பிள்ளைக்கு பெரிய எதிர்பார்ப்போடு கூடிய அர்த்தத்தோடு பெயர் வைப்பான் என்றால்..
கர்த்தர் ஒரு மனிதனுக்குப் பேரிடும் போது எவ்வளவு எதிர்பார்ப்போடு வைக்கிறார்!
கர்த்தருக்குள் உன் நம்பிக்கை வீண்போகாது என்பது எவ்வளவு உண்மையோ..அவ்வளவு
அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அல்லவா!
ஆறுதலின் மகனாகிய பர்னபாவின் மேல் அப்போஸ்தலர்கள் வைத்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை..
தன் நிலபுல உடைமைகள் எல்லாவற்றையும் விற்று அவர்கள் பாதத்தில் கொண்டு வைத்தான் அந்த சீப்புருவாசியாகிய லேவியனான பர்னபா..
ஈஸ்டன் என்பவர் தன் வேதாகமக அகராதியில் சொல்கிறார்..
பர்னபாவும் பவுலும் கமாலியேலின் கலாசாலையிலே ஒன்றாகப் படித்தார்கள் என்று..
பவுலின் மனம் திரும்புதலுக்குப்பின் பயந்திருந்த சீஷர்களுக்கு தைரியமாய் பவுலை அறிமுகப்படுத்திய பர்னபா..பின்னர்
அப்போஸ்தலரால் அந்தியோக்கியாவுக்கு அனுப்பப்படுகிறார்..
அதன் பின் அவரது ஊழியம் அப்போஸ்தல நடபடிகளிலிருந்து நாம் அறிந்ததே..
அது தன் மைத்துனர் யோவான் மாற்குவோடு அந்தியோக்கியாவில் செய்த ஊழியமாகட்டும்..
அல்லது தர்சுவுக்குத் திரும்பிவிட்ட பவுலைக் கவனமாய்த் தேடி அந்தியோக்கியாவுக்கு
கொண்டு வந்த காரியமாகட்டும்..
பின்னர் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலின்படி பவுலோடு சேர்ந்து அனுப்பப்பட்ட முதல் மிஷினரி பயணத்தில் சீப்புரு தீவில் ஆரம்பித்து..லீஸ்திரா லிக்கவோனியா சென்று மீண்டும் எருசலேம் திரும்பியதாகட்டும்..
அல்லது
இரண்டாம் மிஷினரி பயணத்தில் மாற்கு காரணமாக பவலுடன் ஏற்பட்ட பிரிவாகட்டும்..
எல்லாம் நாம் அறிந்ததே..
மாற்குவை அழைத்துக் கொண்டு சீப்புரு தீவு வந்த பர்னபா தன் பின்னாள் ஊழியங்களை சீப்புரு தீவு மற்றும் சீரியா பகுதிகளில்
தொடர்ந்ததாக வரலாறு..
கடைசியாக..
சிரியா மற்றும் சாலமியில் அவருடைய ஊழியம் ஏற்படுத்திய வளர்ச்சி மற்றும் தாக்கத்தால் பொறாமை கொண்ட யூதர்களுடன் ஏற்பட்ட தர்க்கம் கைகலப்பாய் மாற..
யூதர்கள் பர்னபாவை ஜெப ஆலயத்துக்கு வெளியில் இழுத்துச் சென்று கடும் சித்ரவதைப்படுத்தி கல்லெறிந்து கொல்கின்றனர்..
இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த மாற்கு அவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தார் என்கிறது சரித்திரம்..
--------------------------------
பரலோகத் தகப்பனே..
"நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேன்..
நீ என்னுடையவன்"
என்றீரே!
எங்கள் மேல் எவ்வளவு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்து எங்களைப் பெயரிட்டு அழைத்தீர்!
உமது எதிர்பார்ப்பின் எல்லைக் கோட்டுக்கு
எப்படியாவது வந்து சேர்ந்து விட கிருபை தாரும்..
ஆறுதலின் மகனாகிய பர்னபா அப்போஸ்தலருக்கு மட்டுமல்ல..உம்முடைய உள்ளத்துக்கும் ஆறுதல் செய்தாரே..
எங்கள் முகத்தை நீர் பார்க்கும் போதெல்லாம் உம் இருதயம் மகிழ
கிருபை தாரும்..ஆமென்.
(நான் கிறிஸ்துவின் கோதுமை மணி..இன்று வனவிலங்குகளுக்கு இரையாகப் போகும் நான் பரிசுத்த அப்பமாய்க் காணப்படுவேனாக..-IGNATIUS OF ANTIOCH)
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
=======================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 15
யோவான்
===================
இயேசுவுக்கு அன்பான சீஷன்..
இராப்போஜனத்தில்
அவர் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த யோவான்..
ஆதிமுதல் இருந்ததும்..
அவன் கேட்டதும்..
அவன் கண்களினால் நோக்கிப் பார்த்ததும்..
தன் கைகளால் தொட்டுப் பார்த்ததுமான ஜீவ வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை வித்தியாசமாய் எழுதிய யோவான்..
பத்மு தீவிலே நாடு கடத்தப்பட்டு..இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்துக்கும் பொறுமைக்கும் உடன் பங்காளனாகி..
ஒரு கர்த்தருடைய நாளிலே ஆவிக்குள்ளாகி..
பரலோகத்துக்குள் எடுக்கப்பட்டு மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கு எட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டும் கண்டும்..
சீக்கிரத்தில் சம்பவிக்கப் போகிறவைகளைத் தம் ஊழியக்காரருக்கு வெளிப்படுத்தும் பொருட்டு..தேவன் இயேசுவுக்கு ஒப்புவித்ததை
தூதன் மூலம் பெற்று..நமக்கு வெளிப்படுத்தின சுவிசேஷத்தைத் தந்த திவ்ய வாசகனாகிய யோவான்..
வெளிப்படுத்தின விசேஷத்தில் காணப்படும் ஏழு சபைகளாகிய சிமிர்னா..
பிலதெல்பியா..
லவோதேக்கியா, தியத்தீரா, பெர்கமு, சர்தை மற்றும் எபேசு சபைகளை நிறுவி..கண்காணித்து வந்த யோவான்..
குறிப்புகள் சொல்கிறது..அவன் எபேசு சபையில் இருந்த காலத்தில் ரோம ஆட்சியாளர்களால் பிடிக்கப்பட்டு..ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே சித்திரவதையாக ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட போடப்பட்டான்..
ஆனால் அவனைக் கொண்டு செய்து முடிக்கப்பட வேண்டிய ஒரு பெரிய காரியம் தேவனுக்கு மீதியிருந்தது..
தண்ணீரில் முழுகி எழுந்தவனைப் போல..
கொதிக்கும் எண்ணெயிலிருந்து கருகின வாடை எதுவுமின்றி எழுந்து வந்தான் யோவான்..
சரித்திரம் சொல்கிறது..
டொமிஷியன் என்ற ராயனால் பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டான் யோவான் என்று..
ஜாண் பன்னியன் பெட்போர்டு சிறையில் அடைக்கப்படாதிருந்தால் அவரது நிகரில்லா
" மோட்சப்பிரயாணம் "
நமக்கு கிடைத்திருக்குமோ?
தேவன் யோவானை பத்மு தீவுக்கு கொண்டு சென்ற நோக்கத்தை வெளிப்படுத்தின விசேஷமாக நமக்கு வெளிப்படுத்தினார்..
நெர்வா ராயன் காலத்தில்
( கிபி 96-98 ) விடுதலை செய்யப்பட்டு சின்ன ஆசியா எனப்படும் ஏஷியா மைனரில் அங்குள்ள சபைகளை உற்சாகப்படுத்தி.. உறுதிப்படுத்தி.. பயிற்றுவித்து..
தன் அந்திம காலத்திலும் ஊழியம் செய்த யோவான்..
மிக நம்பகமான ஒரு செய்திக் குறிப்பு மிக அழகான ஒரு சம்பவத்தை வர்ணிக்கிறது..
ஏறக்குறைய நூறு வயதான யோவான்..
ஒரு நாள்..ஏஷியா மைனரின் சபை ஆராதனையில் ஒன்றில் தேவ வார்த்தை அக்கினியாய் அவரிடமிருந்து வெளிப்படுகிறது..
சபையின் பெரிய கூட்டத்தில் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபன் மேல் வயதான யோவானின் கண்கள் பதிகிறது..
பிரசங்க முடிவில் அந்த வாலிபனை முழு சபை முன்னிலையில் முன்பாக அழைத்து..அந்த சபையின் மூப்பரைப் பார்த்து யோவான் சொன்னார்..
"இன்று தேவனுக்கு முன்பாகவும் சபையார் சாட்சியாகவும் இந்த வாலிபனை உம் கண்காணிப்புக்கு ஒப்புவிக்கிறேன்..
அவனைக் கர்த்தருக்குள் வளர்ப்பது உமது உத்திரவாதம்.."
"உம் வார்த்தையை ஏற்கிறேன் " என்றார் மூப்பர்.
தேவ சித்தமானால் என்றாவது ஒரு நாள் திரும்பி வருவேன் என்று அங்கிருந்து கடந்து சென்றார் யோவான்..
அந்த மூப்பர் அந்த வாலிபனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னோடு வைத்துப் பராமரிக்க..அவனும் கர்த்தருக்குள் வளர்ந்து ஞானஸ்நானம் பெற்று சபையில் அங்கமானான்..
நாட்கள் கடந்தது..
விசுவாசத்தில் தானே இருக்கிறான் என்று அந்த மூப்பரின் கண்காணிப்பு சற்று விலக..அந்த வாலிபன் வழிவிலக ஆரம்பித்தான்..
வேண்டாத நண்பர்கள்..
தவறான வாழ்க்கை..
கடைசியில் ஒரு நாள் ஊரறிந்த கொள்ளைக்கூட்டத்துக்குத் தலைவனானான்..
சில காலம் சென்று..
யோவான் அந்த சபையை சந்திக்க வந்தார்..
பல காரியங்களை அந்த மூப்பரோடு பகிர்ந்து கொண்டவர்..திடீரென ஞாபகம் வர ..கேட்டார்..
"நான் உம்மிடம் கொடுத்து வைத்துப் போன அந்த விலையேறப் பெற்ற பொருள் எங்கே..?
விபரம் புரியாமல் அந்த மூப்பர் யோவானைப் பார்க்க..யோவான் நேரடியாகவே கேட்டார்..
"நான் உம் பொறுப்பில் விட்டுச் சென்ற அந்த வாலிபன் எங்கே?"
"அவன் இறந்து விட்டான்" என்று அழ ஆரம்பித்த மூப்பர் எல்லாவற்றையும் விபரமாய்ச் சொல்ல..
கோபம் வந்து விட்டது யோவானுக்கு..
"நீர் எவ்வளவு பொறுப்பானவர் என்று நிரூபித்துவிட்டீர்" என்று
கடிந்து கொண்டு குதிரை மேல் சேணம் வைத்து
தனிமனிதனாக அந்தக் கொள்ளைக்கூட்ட தலைவன் இருந்த மலை நோக்கிச் சென்றார் யோவான்...
மலையடிவாரத்தில் அவனது காவலர்கள் தடுத்து நிறுத்த..
"என்னை உங்கள் தலைவனிடம் கொண்டு செல்லுங்கள்"என்று உறுதியான குரலில் சொன்ன யோவானை..
தலைவன் முன் கொண்டு நிறுத்தினர்..
யோவானை அடையாளம் கண்டு கொண்ட தலைவன் ஓட ஆரம்பித்தான்..
யோவான் அவன் பின்னே கைகளை விரித்தவராய்..
"மகனே ஓடாதே..
இப்போதும் நம்பிக்கை உண்டு..இயேசு இன்னும் உன்னை நேசிக்கிறார்..
திரும்பி வா.. பயப்படாதே
கிறிஸ்து நமக்காக மரித்தது போல நான் உனக்காக மரிக்கவும் தயாராக இருக்கிறேன்..
மகனே திரும்பி வா..
என்று கதற..
ஓடியவன் திரும்பி வந்து தகப்பனைப் போன்ற யோவானின் கால்களைக் கட்டிக் கொண்டான்..
கையிலிருந்த குறுவாள் கீழே விழுந்தது..
கண்ணீரோடு சொன்னான்..
மன்னியும் தகப்பனே!
சபைக்குத் திரும்பிய வாலிபன் சபையார் முன்பாக அழ..ஒரு கெட்ட குமாரனின் கதை நிஜமானது..
மரித்தவன் உயிர்த்தான்..
காணமல் போனவன் திரும்பவும் காணப்பட்டான்..
சபை மகிழ்ந்து களிகூர்ந்தது..
------------------------
தகப்பனே..
இது போன்ற உம்முடைய சாட்சிகள் எங்கள் இருதயத்தை அசைக்காதோ?
"வாலிபரே! நீங்கள் உலகத்தை ஜெயித்ததினால் எழுதுகிறேன்" என்றாரே..வாலிபரின் கும்மாளக் கூடமாய் போய்விட்ட இன்றைய சபை, நூறு வயதான யோவானைப் போன்றவரின் சாட்சியால் உயிர் பெறாதோ?
"யூதா பால சிங்கம் அல்லவா?
சிங்கம் போலவும் கிழச்சிங்கம் போலவும் மடங்கிப்படுத்துக் கொண்டிருக்கிற எங்கள் வாலிபரையும் சபையையும் எழுப்பி விடமாட்டீரோ ?
(ஆதியாகமம் 49:9 / எண்ணாகமம் 24:9)
கதறுகிறோம்..
செய்வீராக! ஆமென்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981