அந்திரேயா | செலோத்தே எனப்பட்ட சீமோன் | யூதா ததேயு | மத்தேயு | மாற்கு
===================
ஆரம்ப கால இரத்த சாட்சிகள்
Chapter 6
அந்திரேயா
======================
மேசியாவைக் கண்டோம்
(யோவான் 1:41)
இரட்சகர் இயேசுவை தன் சகோதரன் பேதுருவுக்கு இப்படித்தான் அறிமுகம் செய்தான் அந்திரேயா..
அந்த ஒரு பேதுரு மூலம் அநேக தலைமுறைகளுக்கு இயேசுவை அறிமுகம் செய்ய கருவியாய் நின்ற அந்திரேயா..
பாரம்பரியம் சொல்கிறது..
எத்தியோப்பியாவிலுள்ள சித்தியர்கள் மத்தியில் மிக வல்லமையாக ஊழியம் செய்த அந்திரேயா..கடைசியாகச் சென்றது மேற்கு கிரீஸில் உள்ள பத்ரோயா..
நவம்பர் 30 கிபி 70..
(சிலர் 60 என்பர்)
நீரோ மன்னன் காலம்..
ரோம தெய்வங்களையும் விக்கிரகங்களையும் வணங்க மறுத்த அந்திரேயா..அந்த ஜனங்களின் விசுவாசத்தை இயேசுவிடம் திருப்பிய போது..
அகேயாஸ் என்ற ரோம கவர்னரால் பிடிபட்டு சிலுவை மரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட போது சொன்ன கடைசி வார்த்தைகள்..
"ஓ! நான் ஏங்கிக் காத்திருந்த சிலுவையே..வாஞ்சையும் விருப்பமும் மகிழ்ச்சியுமாய் உன்னிடம் வருகிறேன்..நீ என் நேசமல்லவா ?உன்னை அணைத்துக்கொள்ள ஏங்குகிறேன்.."
மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி..
" T " வடிவ சிலுவையின் மரணமே கொடுமையிலும் கொடுமை என்றால்..
அந்திரேயாவை அடித்துக் கட்டியது "X" வடிவ சிலுவையில்..
சிலுவையின் shape க்கு ஏற்றபடி கால்கள் வலுக்கட்டாயமாய் விரிக்கப்பட்டு..முதுகெலும்பு முறிந்து..
கைகள் இரண்டும் தோள் பட்டையிலிருந்து கழன்று..
ஆணியடித்தால் உடனடி மரணம் என்று சிலுவையில் கட்டப்பட்ட நிலையில்..
கதறக்கதற நீண்ட நேர வேதனை அனுபவிக்க விட்டு விடப்பட்டு அகோர மரணம் அடைந்த அந்திரேயா..
இன்றைய சபை இப்படிப்பட்ட புகழ்பெறாத புனிதர்களை மறந்து போனதோ?
"கட்டப்பட்டவர்களையும் தீங்கு அனுபவிக்கிறவர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள்" (எபிரெயர் 13:3) என்று எபிரேய நிருப ஆக்கியோன் சொன்னது இவனைப் போன்றவர்களைத் தானோ?
-------------------------------
பரிசுத்த தகப்பனே..
வரலாறு திரும்பும் இந்தக் கடைசி நாட்களில்..
சபை தன்னைப் பெற்றெடுத்த முற்பிதாக்களின் கர்ப்ப வேதனையையும் தன்னை வளர்த்து உருவாக்க அவர்கள் செலுத்தித் தீர்த்த தாங்க முடியாத விலைக்கிரயத்தையும் கண்ணீரோடு நினைவுகூர எங்கள் கண்களைத் திறக்க மாட்டீரோ ?
தயவு செய்யுமே! ஆமென்.
(இந்த சரீரத்தின் அங்கங்கள் பரலோக தேவன் தந்தது..ஆகவே அவருக்காகவே அவற்றை மகிழ்ச்சியோடு அர்ப்பணித்து விடுகிறேன் - Lauwrens Van De Walle)
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
===================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 7
செலோத்தே எனப்பட்ட சீமோன்
=======================
Unsung Heroes எனப்படும் பெயர் அறியாதவர்களின் பட்டியலில் அறியப்பட்ட சீமோன்..
"ஒரே ஒரு வாழ்க்கை..அதுவும் சீக்கிரம் கடந்து போகும்..கிறிஸ்துவுக்காக செய்வது மட்டுமே இறுதிவரை நிற்கும் "என்றார் ஆப்பிரிக்காவுக்கு சென்ற ஐரோப்பிய மிஷினரி C.T.Studd..
ஆனால் இவருக்கு முன்னோடியான சீமோன் முதல் நூற்றாண்டில் சென்றது ஆப்பிரிக்காவுக்கு..
பின்னால் மவுரிட்டானியா,
சிரேனே,லிபியா,
பெர்சியாவுக்கும் சுவிசேஷம் சுமந்து சென்றார் என்கிறது வரலாறு..
சீமோனைப் பற்றிய ஒரு துணுக்குச் செய்தி..அந்த நாட்களில் யாராவது சுவிசேஷத்தை விசுவாசிப்பதில் தயக்கம் காட்டினாலோ இரட்சிப்பின் காரியத்தில் முடிவெடுப்பதில் காலம் தாழ்த்தினாலோ..
அப்போஸ்தலர்கள் முதலில் அழைப்பது சீமோனைத்தான்..
15 நிமிடத்துக்குள் அந்த மனிதன் தன்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து விடும் அளவுக்கு வழி நடத்தி விடுவார்..
இன்று ஆப்பிரிக்காவில் காணப்படும் எழுப்புதலுக்கு வித்திட்ட சீமோன் தன் ஆயுள் காலம் முழுவதையும் ஊழியத்தில் ஊற்றிவிட்ட பின் தன் கடைசி காலத்தில் ஆப்பிரிக்கக் காடுகளில் மரம் அறுக்கும் வாளால் இரண்டு துண்டாய் அறுக்கப்பட்டு அந்த மண்ணில் இரத்த சாட்சியானார்..
"சிலர் வாளால் அறுப்புண்டார்கள்" என்று எபிரேய நிருப ஆக்கியோன் சொன்னது இவனைப் போன்றவர்களைத் தானோ? (எபிரெயர் 11:37)
இன்று வீடியோவில் வாளால் ஒரு மனிதன் அறுக்கப்படும் காட்சியை காண்பதே நம்மால் சகிக்க முடியாததாய் இருக்குமானால் (அதுவும் மஷின்)..கையால் அறுக்கும் வாளால் அறுபடும் மனிதனின் கோரத்தை எப்படி சொல்வது?
----------------------------
தேவனே..
எங்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை..
"நீங்கள் பாடும் பாட்டே உங்களுக்கு விரோதமாய் சாட்சி பகரும்" (உபாகமம் 31:21)
என்றானே மோசே..
"இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன் நிச்சயம் நிச்சயமே" என்று எண்ணற்ற முறை பாடியிருப்போமே..அது நிஜமாகும் நாள்
வந்தாலும் அந்த வார்த்தைகளில் நிற்க கிருபை தாருமே! ஆமென்.
===================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 8
யூதா ததேயு
======================
"ஆண்டவரே நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிற காரணம் என்ன? என்ற யூதா ததேயு..(யோவான் 14:22)
கிலெயோப்பா மரியாளுக்கும் அல்பேயுவுக்கும் குமாரனாகிய யூதா..
சீமோன் மற்றும் சின்ன யாக்கோபு என்பவர்களின் சகோதரனாகிய யூதா..
நாட்குறிப்புகள் தெரிவிக்கிறது..
யூதா - அப்போஸ்தலனாக அழைக்கப்படுமுன் ஒரு விவசாயி என்று..
14ம் நூற்றாண்டு எழுத்தாளர் நிக்கபோரஸ் சொல்கிறார்..
கானாவூர் கல்யாணத்தின் மாப்பிள்ளை இவர் தான் என்று..
யூதேயா,சமாரியா,
இதுமேயா,சிரியா,
மெசப்பொத்தோமியா,
லிபியா மற்றும் இறுதியாக எடிஸ்ஸாவிலும் பெய்ரூட்டிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பலமாய் சாட்சி கொடுத்து அவரே ஆண்டவர் என்று நிரூபித்த போது..
இயேசுவிடம் அவர் கேட்ட கேள்விக்கு பல வருடங்கள் சென்று யூதாவுக்கு பதில் கிடைத்தது..
கிபி 65ல் பெய்ரூட்டில்..
(எடிஸ்ஸா என்றும் சொல்லப்படுகிறது)
தடியால் அடிக்கப்பட்டு கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்ட ததேயு..
இவர் மரிக்குமுன்னே இவரது தகப்பனாரும் இரத்தசாட்சியானார் என்கிறது வரலாறு..
----------------------
எங்கள் பாவங்களையும் சாபங்களையும் நோய்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்த இரட்சகரே..
நீர் எங்களுக்காக ஜீவனைக் கொடுத்தினாலே..
நாங்களும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாய்
இ்ருக்கிறோமே! (1 யோவான் 3:16)
கிருபை தாருமே !
ஆமென்.
(இவ்வுலகத்தின் அதிபதிகளின் புத்திக்கும் அதிகாரிகளின் அறிவுக்கும் எட்டாத விசுவாசத்தை அவர்கள் உடையர்களானபடியால் இவ்விதமான பாடுகளுக்குள்ளாவார்கள். - Gotthard of Nonenberg)
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981
===================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 9
மத்தேயு
===================
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியை..
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான
இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாறு.. என்று ஆரம்பித்து Great Commission வரையிலான சுவிசேஷம் எழுதிய அல்பேயுவின் குமாரனாகிய லேவி என்ற மத்தேயு..
ஆரம்பத்தில் தன் சொந்த யூத ஜனங்களின் பட்சமாய் இல்லாமல் ரோம அரசாங்கத்தின் அங்கமாய் சுங்கத்துறை அதிகாரியாய் இருந்தபோது..
தன் பின்னே வரும்படி இயேசுவால் அழைக்கப்பட்ட மத்தேயு..
அவன் ஒரு சாதாரண படிப்பறியாத மீன்பிடி தொழிலாளி அல்ல..
அவன் ஒரு படித்த professional..
ஜாதி மத பேதம் பார்த்து இந்தியா நினைப்பது போல் கிறிஸ்தவம் ஒரு தாழ்ந்த ஜாதியினரின் மதமல்ல..பிரித்துப் பார்த்தாலும் கீழ்த்தட்டு முதல் மேல் தட்டு வரை சமுதாயத்தின் சகல தளங்களிலும் விசுவாசிகள் நிறைந்த ஜெய வீரர்களின் சேனை அல்லவா !!
நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்ற இரட்சகரின் வார்த்தைகளைத் தன் செவிகளால் கேட்ட மத்தேயு..
முதலில் யூதேயாவில் 15 வருடங்களும்..பின்பு புறஜாதி தேசங்களான மெசப்போத்தோமியா,
பெர்சியாவிலும் ஊழியம் செய்த மத்தேயு இறுதியாக சென்றது..எத்தியோப்பியா
ஆரம்பத்தில் பிலிப்பு மூலம் சுவிசேஷமும் ஞானஸ்நானமும் பெற்ற எத்தியோப்பிய மந்திரி தன் தேசத்து ராஜஸ்திரீ கந்தாகேவுக்கு இயேசுவை அறிமுகப்படுத்த..சில ஆண்டுகளுக்குப்பின் மத்தேயுவும் எத்தியோப்பியாவில் அவர்களோடு அந்த ஊழியத்தில் இணைந்தார் என்கிறது வரலாறு..
தன் கடைசி காலத்தில் எத்தியோப்பியாவில் உள்ள நாதயார் என்ற இடத்தில் ஹரிட்டிகஸ் என்ற ஆட்சியாளனால் கோவில் கோபுரத்திலிருந்து தள்ளி விடப்பட்டு தலை வெட்டப்பட்டு இரத்த சாட்சியான மத்தேயு..
-----------------------
தகப்பனே..
இயேசுவால் அழைக்கப்பட்ட உடனே தன் பதவியையும் அந்தஸ்தையும் உதறித் தள்ளிவிட்டு உடனே அவருக்குப் பின் சென்ற மத்தேயுவின் அழைப்பும் எழுத்தும் ஊழியமும் மரணமும் எங்கள் இன்றைய இளைய தலைமுறைக்கும் professionals க்கும் சவாலாய் அமைவதாக!
இயேசுகிறிஸ்துவுக்காக எவ்வித தியாகத்தையும் செய்ய இந்தத் தலைமுறையைத் தட்டி எழுப்புவீராக !
அப்படியே ஆவதாக!
ஆமென்.
(இங்கே நான் என் மனைவி பிள்ளைகளையும்..வீட்டையும் ஊரையும்..உடலையும் உயிரையும்..விசுவாசத்துக்காகவும், சத்தியத்துக்காகவும் விட்டுவிடுகிறேன்..- George Raeck)
===================
ஆரம்ப கால இரத்தசாட்சிகள்
Chapter 10
மாற்கு
=====================
புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறபடியே..
மாற்கு சுவிசேஷம் எழுதிய மாற்கு..
மாற்கு என்ற யோவான்..பர்னபாவுக்கு இனத்தானான மாற்கு..ஊழியத்தில் பவுலுக்கு மிகவும் பிரயோஜனமுள்ள மாற்கு..
பிறந்த இடம்:
மேற்கு எகிப்திலுள்ள லிபியாவின் பென்ட்டோபோலிஸில் உள்ள சீரேனே..
பெற்றோர்:
தகப்பன்-அரிஸ்டோபுலஸ்
தாய்-பர்னபாவின் சகோதரி மரியாள் (பேதுருவின் மனைவிக்கு ஒன்று விட்ட சகோதரி)
படிப்பு:
தகப்பனின் மரணத்துக்குப்பின் பேதுரு தன் பராமரிப்பில் நல்ல கல்வி(சட்டம்) கொடுத்ததாக வரலாறு.
மனமாற்ற அனுபவம்:
தாய் மரியாள், இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக மாற..
தாயின் சாட்சியால் தொடப்பட்டு..பின்னாட்களில் பேதுருவோடு மொழிபெயர்ப்பு ஊழியத்தில் வசனம் கற்று மனம் திரும்பியவன்..
வரலாற்றுத் துணுக்குகள்:
பிறந்த இடத்திலிருந்து பெரிய கலவரம் காரணமாக யூதேயாவுக்கு இடம் பெயர்ந்த மாற்குவின் யூத குடும்பம் settle ஆனது..கலிலேயாவிலுள்ள கானாவூரில்..
தகப்பன் அரிஸ்டோபுலாஸும் மாற்குவும் ஒரு நாள் யோர்தான் நதிக்கரையில் நின்று கொண்டிருந்த போது..2 சிங்கங்கள் கர்ஜித்து ஓடிவர..மாற்கு சிங்கங்களை இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்ள..இரண்டும் அதே இடத்தில் செத்து விழ..மகன் மாற்கு மூலம் மனம் திரும்பினார் தகப்பனார்..
காலங்கள் கடந்தது..
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்
அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் படி..அவரவர் மிஷினரியாய் அனுப்பப்பட வேண்டிய இடங்களுக்கு சீட்டுப் போட்ட போது..
மாற்கு பேரில் விழுந்தது சீட்டு..ஆப்பிரிக்கா மற்றும் எகிப்துக்குச் செல்ல..
தன் முதல் மிஷினரி பயணமாக ஆப்பிரிக்கா மற்றும் எகிப்துக்கு சென்ற மாற்குவின் கைகளால் நடந்தன பலத்த அற்புதங்கள்..
வியாதியஸ்தர் குணமாக..குஷ்டரேகிகள் சுத்தமாக..அசுத்த ஆவிகள் விலகிஓட புறஜாதிகள் தங்கள் விக்கிரகங்களை உடைத்தெறிந்து இயேசுவை ஏற்றுக் கொண்டனர்..
அங்கிருந்து அலெக்ஸாண்ட்ரியாவுக்கு வந்தார் மாற்கு..
நகர வாசலில் காலணிகள் அறுந்து போக..அதைத் தைக்க அங்கிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செல்ல..காலணி தைக்கும் போது அது அவன் கையைக் குத்தி இரணமாக்கி விட்டது..கீழே கிடந்த களிமண்ணால்
காயத்தைக் குணமாக்கினார் மாற்கு..
அலெக்ஸாண்ட்ரியாவின் முதல் கனி அந்த cobbler..
இரண்டு வருஷத்துக்குள் பட்டணத்தில் அநேகர் மனம் திரும்ப..அங்குள்ள பெரிய அத்திமரத்தின் கீழே சந்திரனை வணங்கிக் கொண்டிருந்த ஜனங்கள் பிடித்தார்கள் மாற்குவை..
நிரூபி உன் இயேசுவை..
சரித்திரம் சொல்கிறது..
மாற்கு ஜெபித்தார்..
பகல் இரவானது..நிலவு நடுவானில் நின்று ஜனங்களிடம் பேசியது..நான் ஒரு சிருஷ்டி..தேவனல்ல..
இந்த மாற்குவின் இயேசுவே சிருஷ்டிகர்..
அவரையே தொழுது கொள்ளுங்கள்..
மிகப் புகழ்பெற்ற அந்த அத்திமரம் வேரோடு சாய்ந்தது..
ஆனால் தேவனிடம் திரும்ப வேண்டிய கூட்டம்.. மாற்குவைப் பிடித்து குதிரை வாலோடு இறுகக் கட்டி குதிரையை அடித்து ஓட விட்டது..நாள்முழுவதும் அலெக்ஸாண்ட்ரியா பட்டணத்தில்..
இரவானது..
சிறையில் அடைபட்ட மாற்குவை சந்திக்க இயேசு வந்தார்..திடப்படுத்தினார்..
அடுத்த நாள் அதே போல குதிரை வாலில் கட்டப்பட்ட மாற்கு தெருத்தெருவாய் உடல் கந்தல் கந்தலாய்ப் போகுமட்டும் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்..
எஞ்சியிருந்த சரீரத்தின் பகுதிகளை எடுத்துப் புதைத்தனர் அங்குள்ள சீஷர்கள்..
------------------------
தகப்பனே..
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்ற வாக்குத்தத்தம்..
எங்களுக்கு அற்புதங்களைச் செய்து..எங்கள் காரியங்களை வாய்க்கப்பண்ணி..
விருப்பங்களை நிறைவேற்ற அல்ல..
"உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் இப்படியே துன்பப்படுத்தினார்களே"என்பது போல..
அன்று நடந்தது இன்றும் நடக்கும் என்ற உண்மையை நம்ப..
கிரகிக்க..உள்வாங்கிக் கொள்ள..
ஆயத்தமாகிக்கொள்ள எங்களுக்கு உதவி செய்யும், பெலப்படுத்தும்..ஆமென்.
அடைபட்ட அக்கினி
Pr. S. Romilton
9810646981