கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் தேவகிருபை கிடைத்துள்ளது | இயேசு கிறிஸ்துவின் ஆளுகையும் அரசாட்சியும் | இயேசு கிறிஸ்து பெரியவர் அவர் உங்களுக்கு பெரிய காரியங்களை செய்வார் | நம்முடைய உயிரைவிட இயேசு கிறிஸ்துவை நாம் நேசிப்போம்
===============================
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் தேவகிருபை கிடைத்துள்ளது
=============================
வசன வாசிப்பு
லூக்கா 1:26,27,28
யூதா 1:15,23,24
யோவான் 1:16
சத்தியம்
கிறிஸ்துமஸ் செய்தி*
அன்பான கர்த்தருடைய மன்னா வாசகர்களுக்கு என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை பரிசுத்தப்படுத்தி;
அவர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
நம்முடைய தியானத்திற்காக லூக்கா 1−வது அதிகாரம், 26,27,28 ஆகிய வசனங்களை நாம் வாசிப்போம்
*26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,*
*27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்*
*28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்*
லூக்கா 1:26,27,28
மேலே உள்ள வசனத்தை கவனியுங்கள்
*1. கிருபை பெற்றவளே*
*2. வாழ்க*
*3. கர்த்தர் உன்னுடனே* *இருக்கிறார்*
*4. ஸ்திரீகளுக்குள்ளே*
*நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்*
இப்படி நான்கு தலைப்புகளில் சத்தியங்களை நாம் அறிந்துக்கொள்ளலாம்
ஆனால்
முதல் தலைப்பை மட்டும் எடுத்து நாம் அனைவரும் தியானிக்கலாம்
*முதல் தலைப்பு*
*1. கிருபை பெற்றவளே*
(லூக்கா 1:28)
பிரியமானவர்களே !
மரியாளை சந்தித்து காபிரியேல் என்னும் தூதன் பேசினான்
அப்பொழுது
மாியாளே ! நீ தேவனிடத்தில் கிருபையை பெற்றுக்கொண்டாய் என்று அவளை பார்த்து சொன்னான்
கிருபை என்கிற வார்த்தையை இரண்டு முறை மரியாளுக்கு காபிரியேல் என்னும் தூதன் அறிவித்தான்
லூக்கா 1:28 மற்றும் லூக்கா1:30 ஆகிய வசனப்பகுதியில் இதை நீங்கள் காணலாம்
*30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்*
லூக்கா 1:30
கவனியுங்கள்
மரியாள் இயேசுவை தன்னுடைய வயிற்றில் சுமந்து ; குழந்தையை பெற்று ; வளர்க்கும் தாயாக வேதத்தில் அறியப்பட்டுள்ளாள்
இந்த ஆசீர்வாதங்கள் மரியாளை தேடி வந்தது
அவள் தேவசித்தத்தை பூரணமாக செய்து ; தன்னுடைய ஜீவியத்தில் அதை அவள் நிறைவேற்றினாள்
அதற்கு பிரதானமாக..
காபிரியேல் என்னும் தூதன் அந்த மாியாளை அவன் வாழ்த்தும்போது....
இரண்டு முறை தேவனுடைய கிருபையை மரியாளே நீ பெற்றுக்கொண்டாய் என்று அவளுக்கு அவன் சொன்னான்
(லூக்கா 1:28,30)
தேவகிருபை மரியாளுக்கு கிடைத்தது அதே தேவகிருபை இன்று நமக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைத்துள்ளது
நாம் கிருபையின்மேல் கிருபையை இயேசு கிறிஸ்து மூலமாக இன்று பெற்றுக்கொண்டுள்ளோம்
கிருபையின்மேல் கிருபையையும் ;
மகிமையின்மேல் மகிமையையும் அடைந்து ; உன்னதம்வரை இயேசு கிறிஸ்து மூலமாக நாம் உயர்த்தப்பட போகிறோம்
அந்நாள் நெருங்கிவிட்டது
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*
யூதா என்கிற பரிசுத்தவான் சொல்லும்போது....
*....ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங் கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்*
யூதா 1:15
அடுத்தப்படியாக
*சுத்திகரிப்பு*
*23 மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்*
என்று யூதா என்கிற பரிசுத்தவான் சொல்லுகிறான்
யூதா 1:23
அதுமாத்திமல்ல..
*24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,* என்று யூதா சொல்லுகிறான்
யூதா 1:24
ஆம் ! பிரியமானவர்களே !
நம்முடைய தேவன் நம்மை அவருடைய கரத்திலிருந்து வழுவாதப்படி காக்கிறவர்
நம்மை மாசற்றவர்களாக மாற்றுகிறவர்
நம்மை பரிசுத்தமுள்ளவர்களாகவும்
அவரே மாற்றுவார்
கடைசியாக
அவருடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே நம்மை அவர் நிறுத்துவார்
இந்த அனைத்து ஆசீர்வாதங்களும்..
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக நாம் அனைவரும் பெற்றுக்கொண்டுள்ளோம்..
*அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்*
யோவான் 1:16
பிரியமானவர்களே !
மரியாளுக்கு மாத்திரமல்ல..
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் தேவகிருபை கிடைத்துள்ளது
கிருபையும் சத்தியமும்
இயேசு கிறிஸ்து மூலமாய் உலகத்தில் உண்டானது
அந்த தேவகிருபையை
நாம் அனைவரும் சீக்கிரத்தில் சுதந்தரிப்போமாக...
அதற்கு...
ஆவியானவர்தாமே !
நம் அனைவருக்கும் அவர் உதவி செய்வாராக..
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*இயேசுவை போல மாற* *வாஞ்சியுங்கள்*
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
prayers 9840593839
pr. Jeevan (chennai)
===================
இயேசு கிறிஸ்துவின் ஆளுகையும் அரசாட்சியும்
====================
வசன வாசிப்பு
லூக்கா 1:33
ரோமர் 14:17
2 தீமோத்தேயு 2 :11
*சத்தியம்*
*கிறிஸ்துமஸ் செய்தி*
*2−ம் பாகம்*
நம்முடைய தியானத்திற்காக
லூக்கா 1−வது அதிகாரம், 33−வது வசனத்தை நாம் வாசிப்போம்
*அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்*
(லூக்கா 1:33)
*இயேசு கிறிஸ்துவின்* *ஆளுகை, அரசாட்சி* ஆகிய இரண்டு தலைப்பில் சத்தியங்களை நாம் அறிந்துக்கொள்ளலாம்
பிரியமானவர்களே !
காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடம் அவன் பேசும்போது...
இயேசு கிறிஸ்து பிறந்து அரசாளுவார் என்றும் அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றும் பேசினான்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பில்... அநேக ஆசீர்வதங்களை இன்று நாம் பார்க்கிறோம்
இயேசு கிறிஸ்துவானவர் மனுகுலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க பிறந்த ராஜாவாக காணப்படுகிறது
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு,
அவருடைய இறப்பு,
அவருடைய உயிர்த்தெழுதல்,
ஆகிய மூன்றுமே அவருடைய ஆளுகையை அது வெளிப்படுத்துகிறது
இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் பரிசுத்தம் வெளிப்படுகிறது,
அவருடைய மரணத்தில் இரட்சிப்பு வெளிப்படுகிறது,
அவருடைய உயிர்த்தெழுதலில் மறுரூபம் வெளிப்படுகிறது,
இவைகள் மூன்றுமே அவருடைய ஆளுகையும், அவருடைய அரசாட்சியும், இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது
ஆனப்படியினால்
காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடம் பேசும்போது....
இவ்வாறாக அவன் மரியாளுக்கு சுவிசேஷம் அறிவிக்கிறான்
(இயேசு பெத்லகேமில் பிறப்பார்)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்று காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடம் அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான்
அந்த தேவதூதன் உரைத்த தீர்க்கதரிசனம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெத்லேகம் என்னும் ஊரில் இருக்கும் மாட்டுத்தொழுவத்தில் அன்று நிறைவேறியது....
ஆம் ! பிரியமானவர்களே !
இயேசு கிறிஸ்து அரசாளும்படி பெத்லேகேமில் என்னும் ஊரில் அவர் பிறந்தார்
அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது.. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் ; அவர் வானத்தின் பேரிலும் ; பூமியில் பேரிலும் ;
சர்வ அதிகாரம் படைத்த ராஜாதி ராஜாவாக பெத்லகேமில் அவர் பிறந்தார்
பரலோகத்தையும், பூமியனைத்தையும்,
ஆளுகை செய்யும் அரசனாக இயேசு கிறிஸ்து பெத்லகேமில் அவர் பிறந்தார்
இது மனிதனுடைய இருதயத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அது அளிக்கிறது
கிறிஸ்துமஸ் என்னும் சிறப்பு : கிறிஸ்துவின் ஆளுகை அரசாட்சியாமம்...
ஸ்தோத்திரத்திடனே பெத்லேகேமில் பிறந்த பாலகனை நாம் தொழுதுக்கொள்வோம்
அதுமாத்திரமல்ல
இயேசு கிறிஸ்து
சபையை ஆளும் ராஜாவாக பிறந்தார்
ஊழியக்காரனை
ஆளும் ராஜாவாக பிறந்தார்
தேவஜனங்களை ஆளும் ராஜாவாக பிறந்தார்
அவருடைய ஆளுகைக்கும்
ராஜ்யத்திற்கும் முடிவு கிடையாது
தேவ ராஜ்யத்தைக்குறித்து :
இயேசு கிறிஸ்துவானவர் உவமைகளாக ஜனங்களிடம் அவர் பேசினார்
அநேக உவமைகளை அவர் பேசினார் அவர் பேசிய அனைத்து உவமைகளும் தேவராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் என்றே வலியுறுத்துகிறது
அவருடைய சீஷர்களும் தேவராஜ்யத்தைப்பற்றி எழுதியிருக்கிறார்கள்
பவுல் என்கிற பரிசுத்தவான்
தேவராஜ்யத்தைப்பற்றி அவர் சொல்வதை பாருங்கள்
*தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது*
ரோமர் 14:17
ஆம் ! பிரியமானவர்களே !
இயேசு கிறிஸ்துவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேவராஜ்யம் என்பது
புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது
ஆனப்படியினால்
தேவராஜ்யத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால்..
நமக்குள் தேவநீதி காணப்பட வேண்டும்
நமக்குள் தேவனுடைய பரிசுத்தம் காணப்பட வேண்டும்
நமக்குள் பரிசுத்த ஆவியினால் உண்டான சந்தோஷம் எப்பொழுதும் நிரம்பி காணப்பட வேண்டும்
*அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்*
2 தீமோத்தேயு 2 :11
பிரியமானவர்களே !
உலக கவலைகள்
உலகத்திற்குரிய துக்கங்கள் நமக்குள் இருக்கவே கூடாது
அப்படி எதாவது
உலக கவலைகள், துக்கங்கள், நமக்குள் இருக்குமானால்..
நாம் ஜெபம் பண்ண வேண்டும் அப்பொழுது கர்த்தர் நமக்காக அவர் யுத்தம்பண்ணுவார்
நம்முடைய அனைத்தும் காரியங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் அப்பொழுது ஜெயம் பெறும்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தை அவர் ஆளுகை செய்ய வேண்டும்
பாவம் நம்மை ஆண்டுக்கொள்ளக்கூடாது
நாம் பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும்
நமக்குள் இருக்கும் பரிசுத்தமே நம்மை தேவராஜ்யத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்
இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாக இருக்கிறது
அவருடைய ரகசிய வருகையில் நாம் காணப்பட
ஆயத்தத்தோடு நாம் ஜீவிப்போமாக
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*இயேசுவை போல மாற* *வாஞ்சியுங்கள்*
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
prayers 9840593839
pastor. Jeevan (chennai)
=========================
இயேசு கிறிஸ்து பெரியவர் அவர் உங்களுக்கு பெரிய காரியங்களை செய்வார்
==========================
வசன வாசிப்பு
லூக்கா 1:31,32,33,34,35,
சங்கீதம் 48:1
யோவேல் 2:21
யோவான் 1:50
*சத்தியம்*
*கிறிஸ்துமஸ் செய்தி*
*3−ம் பாகம்*
*இயேசு கிறிஸ்து* *பெரியவர்* என்கிற தலைப்பில் சத்தியங்களை நாம் அறிந்துக்கொள்ளலாம்
நம்முடைய தியானத்திற்காக லூக்கா 1−வது அதிகாரம், 31,32,33,34,35 ஆகிய வசனங்களை நாம் வாசிப்போம்
*31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக*
*32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்*
*33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்*
*34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்*
*35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்*
(லூக்கா 1:31,32,33,34,35 )
மேலே உள்ள வசனத்தை கவனியுங்கள்
அதில் காபிரியேல் என்னும்
தேவதூதன் மரியாளிடம் அவன் பேசும்போது...
அவர் (இயேசு) பெரியவராக இருப்பார் என்று சொல்லுகிறான்
பிரியமானவர்களே !
கர்த்தர் பெரியவர்
இயேசு கிறிஸ்து பெரியவர் என்கிற தலைப்பில் சத்தியங்களை நாம் அறிந்துக்கொள்ளலாம்
இயேசு கிறிஸ்துவை வயிற்றில் சுமந்து, வளர்க்கும் தேவதயவு மரியாளுக்கும் யோசேப்புக்கும் கிடைத்தது
அவர்கள் நீதியோடும் உத்தமத்தோடும் பரிசுத்தத்தோடும்; அன்று அவர்கள் தேவனுக்கு முன்பாக காணப்பட்டார்கள்
மரியாளும், யோசேப்பும் பரிசுத்தமான சுபாவங்களோடும்
அன்று அவர்கள் தேவனுக்கு முன்பாக காணப்பட்டார்கள்
ஆவி ஆத்துமா சரீரம் ஆகிய மூன்றிலும் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளாதவர்களை ; தேவன் ஒருகாலும் அவர் அங்கீகரிக்கவே மாட்டார்
மரியாளும், யோசேப்பும்
ஜீவியத்திலும் சுபாவத்திலும் பரிசுத்தமாக அன்று ஜீவித்தார்கள்
பிரியமானவர்களே !
மரியாளும், யோசேப்பும்,
ஆகிய இருவரும் இயேசுவை வளர்க்கலாம் ஆனால் பிள்ளைக்கு பெயர் வைக்கும் அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை
காரணம்
குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தால் ; இயேசுவின் பெயரைக்குறித்து தீர்க்கதரிசிகள் எழுதின தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறாமல் போயிருக்கும்
காபிரியேல் மரியாளுக்கு கட்டளையிடும் வார்த்தைகளை கவனியுங்கள்...
லூக்கா 1: 31−வது வசனத்தை நாம் வாசிக்கலாம்
*இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக*
கவனியுங்கள்..
இயேவுக்கு பெயர் வைக்கும் பொறுப்பு மரியாளுக்கோ அல்லது யோசேப்புக்கோ கொடுக்கப்பட வில்லை என்பது உறுதியாக வசனத்தின் மூலமாக இப்பொழுது அது நிரூபணமாகிறது
அடுத்தப்படியாக
கிறிஸ்துமஸ் நற்செய்தியில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய அடுத்த சத்தியம்
இயேசுவை பற்றி காபிரியேல் தன்னுடைய வார்த்தையில் குறிப்பிட்டுள்ள இன்னொரு வசனப்பகுதியை நாம் வாசிக்கலாம்
லூக்கா 1: 32−வது வசனத்தை மறுபடியும் நாம் வாசிக்கலாம்
*அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்*
பிரியமானவர்களே !
இந்த கிறிஸ்துமஸ் நாளில் உங்களுடைய ஜெபங்கள் விண்ணப்பங்கள் வேண்டுதல்கள் கேட்கப்பட வேண்டுமானால் கர்த்தர் பெரியவர் என்றும் இயேசு கிறிஸ்து பெரியவர் என்றும் உங்களுடைய வாயை திறந்து சத்தமாக சொல்லி ; நீங்கள் ஜெபம்பண்ணுங்கள்
நிச்சயமாக கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக்கேட்டு உங்களுக்கு அவர் மறுமொழி சொல்லுவார்
உங்களை தேவன் ஆசீர்வதிப்பார் உங்களுடைய குடும்பத்தை தேவன் ஆசீர்வதிப்பார் உங்களுடைய தேவைகள் நிச்சயமாக சந்திக்கப்படும்
தாவீது சொல்லுகிறான்
*கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்*
(சங்கீதம் 48:1)
ஆம் ! பிரியமானவர்களே !
காபிரியேல் தூதன் மற்றும் தாவீது மட்டுமல்ல நாமும் சொல்லுவோம் கர்த்தர் பெரியவர் இயேசு கிறிஸ்து பெரியவர் என்று சொல்வோம்
யோவேல் என்னும் தீர்க்கதரிசி சொல்வதை பாருங்கள்
*தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்*
(யோவேல் 2)
அடுத்து
தாவீது சொல்லுகிறான்
*தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?*
(சங்கீதம் 71 : 19)
கடைசியாக..
இயேசு கிறிஸ்து சொல்வதை பாருங்கள்
*இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்*
யோவான் 1:50
பிரியமானவர்களே !
நம்முடைய தேவன் பெரியவர் ; அவர் பெரிய காரியங்களை நமக்கு செய்வாராக
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*இயேசுவை போல மாற* *வாஞ்சியுங்கள்*
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
prayers 9840593839
pastor. Jeevan (chennai)
===========================
நம்முடைய உயிரைவிட இயேசு கிறிஸ்துவை நாம் நேசிப்போம்
============================
வசன வாசிப்பு
மத்தேயு 2:11
லூக்கா 2:5
யூதா 1:24,25
*சத்தியம்*
*கிறிஸ்துமஸ் செய்தி*
*4−ம் பாகம்*
நம்முடைய தியானத்திற்காக
மத்தேயு 2−வது அதிகாரம், 11−வது வசனத்தை நாம் வாசிப்போம்
*அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்*
மத்தேயு 2:11
அருமையானவர்களே !
*இயேசு கிறிஸ்துவை* *நம்முடைய உயிரைவிட* *அதிகமாக அவரை நாம்* *நேசிக்க வேண்டும்* என்கிற தலைப்பில் சத்தியங்களை நாம் அறிந்துக்கொள்ளலாம்
பிரியமானவர்களே !
மேலே உள்ள வசனத்தை பாருங்கள் அதில் சாஸ்திரிகள் தங்களுடைய பொக்கிஷங்களை திறந்து, இயேசுவுக்கு அவர்கள் காணிக்கை கொடுத்தார்கள் என்பதை கவனியுங்கள்
தங்கம், தூபவர்க்கம், வெள்ளைபோளம், ஆகியவற்றை
இயேசுவுக்கு அவர்கள் காணிக்கையாக கொடுத்தார்கள் என்று வேதத்தில் நாம் பார்க்கிறோம்
அருமையானவர்களே !
அந்த சாஸ்திரிகள் தங்களுடைய பொக்கிஷத்தை திறந்து, அதை கர்த்தருக்கு காணிகையாக கொடுத்தார்கள் என்றால் ? இது எதை காண்பிக்கிறது..
பொதுவாக....
ஒரு மனுஷன் :
தன்னுடைய உயிருக்காக....
பூமிக்குரிய தங்கம், பணம், சொத்து, ஆகியவைகள் அவன் ஒளித்து வைக்கிறான்
ஆனால்
பெத்லேகேமில் பிறந்த இயேசுவை தொழுதுக்கொள்ள வந்த சாஸ்திரிகள் தங்களுடைய
பொக்கிஷங்களை திறந்து, இயேசுவுக்கு அவர்கள் காணிக்கை கொடுத்தார்கள் என்று நாம் பார்க்கிறோம்
இதனுடைய ஆவிக்குரிய பொருள் என்ன ?
சொல்லுகிறேன்
அந்த சாஸ்திரிகள்
தங்களுடைய பொக்கிஷம் என்று சொல்லப்படும், பூமிக்குரிய ஆஸ்தியை அவர்கள் நேசிக்கவில்லை
அந்த சாஸ்திரிகள் இயேசு கிறிஸ்துவை அவர்கள் அதிகமாக நேசித்தார்கள்
அந்த சாஸ்திரிகள்
தங்களுடைய உயிரைவிட
இயேசுவை அவர்கள் அதிகமாக நேசித்தார்கள்
நாமும் நம்முடைய உயிரைவிட ; நம்முடைய சொத்துக்களைவிட அதிகமாக இயேசுவை நாம் நேசிக்க வேண்டும் அது தான் உண்மையான கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது
அடுத்தப்படியாக
பெத்லகேமை பற்றி சில காரியங்களை நாம் பார்க்கலாம்
அருமையானவர்களே !
லூக்கா 2:5 நாம் வாசிப்போம்
*கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்*
லூக்கா 2:5
பிரியமானவர்களே !
பெத்லகேம் என்னும் ஊரை தாவீதின் நகரம் என்றும் அழைக்கலாம்
மேலே உள்ள வசனத்தை கவனியுங்கள்
யோசேப்பும் மரியாளும் குடிமதிப்பு எழுத யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனார்கள் என்று வேதத்தில் நாம் பார்க்கிறோம்
இன்னும் சில வார்த்தைகளை நாம் கவனிக்கலாம்
*இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்*
லூக்கா 2:11
தேவதூதன் மேய்ப்பர்களுக்கு அவன் நற்செய்தியை அளிக்கும்போது...
தாவீதின் ஊரிலே இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்று அந்த தேவதூதன் அறிவிக்கிறான்
ஆகவே
யூதேயா நாட்டில் இருக்கும் பெத்லகேம், தாவீதின் நகரம் என்று அது அழைக்கப்படுகிறது
தாவீதின் வம்சத்திலும்,
தாவீதின் நகரத்திலும்,
பெத்லகேமிலும் பிறந்த, இயேசு கிறிஸ்துவை நம்முடைய உயிரைவிட அதிகமாக நாம் நேசிப்போமாக
பிரியமானவர்களே
சாஸ்திரிகளைப்போல
நாமும் இயேசு கிறிஸ்து தொழுதுக்கொள்வோம்
தங்களுடைய பொக்கிஷத்தை
இயேசுவுக்கு அவர்கள் கொடுத்தார்கள்
அவர்களுடைய பிரயாணம், ஊழியம், வாஞ்சைகள், எல்லாம் அற்புதமாக இருக்கிறது
அவர்களுடைய உள்ளத்தின் தாகம் மிகவும் பாராட்டக்கூடியது
அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்கு பயந்து ஜீவித்தார்கள்; ஏரோதின் கட்டளைகளுக்கு விலகி ஜீவித்தார்கள்
தேவன் அவர்களுக்கு கொடுத்த பணியை மிகவும் சிறப்பாக அவர்கள் செய்து முடித்தார்கள்
தாவீதின் நகரத்தில் பிள்ளையை தொழுதுக்கொள்ள போனார்கள்
நட்சத்திரம் அவர்களுக்கு வழி காட்டியது
பிள்ளையை கண்டுபிடித்து; பிள்ளைக்கு முன்பாக அவர்கள் சாஸ்டாங்கமாய் விழுந்து அதை பணிந்துக்கொண்டார்கள்
பின்பு
தேவ எச்சரிப்பை அவர்கள் கண்டு ; ஏரோது ராஜாவை சந்திக்காமல், வேறு வழியாய் தங்களுடைய தேசத்திற்கு அவர்கள் திரும்பி போனார்கள்
ஆனப்படியினால்
சாஸ்திரிகள்
தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியத்தை அவர்கள் உத்தமத்தோடு செய்து முடித்தார்கள்
யூதேயா தேசத்திற்கு அவர்கள் போனார்கள்
சாஷ்டாங்கமாய் விழுந்து இயேசு பணிந்துக் கொண்டார்கள்
தங்களுடைய பொக்கிஷத்தை திறந்து காணிக்கை கொடுத்தார்கள்
ஏரோது கட்டளைகளை அவர்கள் தள்ளிப்போட்டார்கள்
தேவ கட்டளைகளுக்கு
அவர்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தார்கள்
அவர்களோடு நம்மை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
கர்த்தருக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கர்த்தரை நாம் தொழுதுக்கொள்ள வேண்டும்
பூலோக ஆஸ்தியைவிட இயேசு கிறிஸ்துவை அதிகமாக நாம் நேசிக்க வேண்டும்
தேவனுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ள வேண்டும்
இவைகளை நாம் செய்யும்போது
சாஸ்திரிகளைபோல கர்த்தர் நம்மையும் அவர் சாட்சியாக நிறுத்தி; அவருடைய மகிமையான பரலோக ராஜ்யத்தில் நம்மையும் மாசற்றவர்களாக கொண்டுபோய் ஆவியானவர் நிறுத்துவார்
யூதா நிருபம் 1−வது அதிகாரம், 25−வது வசனத்தின்படி...
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*இயேசுவை போல மாற* *வாஞ்சியுங்கள்*
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
prayers 9840593839
pastor. Jeevan (chennai)
================================
பெத்லகேமில் பிறந்த இயேசு கிறிஸ்து உங்களுடைய பயத்தை மாற்றுவார்
=================================
வசன வாசிப்பு
லூக்கா 2:8,9,10
எபிரேயர் 2:14,15
லூக்கா 2:16,17
*சத்தியம்*
*கிறிஸ்துமஸ் செய்தி*
*5−ம் பாகம்*
பிரியமானவர்களே !
லூக்கா 2:8,9,10 ஆகிய வசனங்களை நாம் வாசிக்கலாம்
*அப்பொழுது அந்த* *நாட்டிலே மேய்ப்பர்கள்* *வயல்வெளியில் தங்கி,* *இராத்திரியிலே தங்கள்* *மந்தையைக் காத்துக்* *கொண்டிருந்தார்கள்*
*அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்*
*தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்*
லூக்கா 2:8,9,10
மேலே உள்ள வசனத்தை பாருங்கள்
அதில்
தேவமகிமையை மேய்ப்பர்கள் கண்டு பயப்படுகிறார்கள்
பயத்தோடு இருந்த ;
அந்த மேய்ப்பர்களை பார்த்து, பயப்படாதிருங்கள் என்று, தேவதூதன் சொன்ன வார்த்தையும் மேலே எழுதப்பட்டு இருக்கிறது
அருமையானவர்களே !
*பெத்லகேமில் பிறந்த*
*இயேசு கிறிஸ்து*
*உங்களுடைய பயத்தை* *மாற்றுவார்*
என்கிற தலைப்பில் சத்தியங்களை நாம் அறிந்துக்கொள்ளலாம்
*ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,*
*ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்*
எபிரேயர் 2:14,15
கவனியுங்கள்
நம்முடைய மரணபயத்தை மாற்றவே, இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்தார் என்று மேலே உள்ள வசனங்களை நாம் வாசிக்கும்போது விளங்கிக்கொள்கிறோம்
மனிதனுடைய இருதயத்தில் பயம், திகில், சோர்வு, ஏமாற்றம், நிந்தை, அவமானம், பாவம், இச்சை, இப்படி எத்தனையோ விதமான அடிமைத்தனங்கள் காணப்படுகிறது
பெத்லகேமில் பாலகனாக பிறந்த இயேசுவை தொழுந்துக்கொள்ள வந்த மேய்ப்பர்கள் ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது
அதுமாத்திரமல்ல
தாவீதின் நகரத்தில் அந்த மேய்ப்பர்கள் இயேசுவை பற்றி சுவிசேஷம் அறித்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது
லூக்கா 2:16,17
ஆகிய வசனங்களை நாம் வாசிக்கலாம்
*தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்*
*கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்*
லூக்கா 2:16,17
பிரியமானவர்களே!
தாவீதின் நகரமாகிய பெத்லகேமில் மேய்ப்பர்கள் இயேசுவை புகழ்ந்து பேசினார்கள்
அவர்களுடைய வார்த்தைகளே கேட்ட தாவீதின் நகரத்தார்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது
பிரியமானவர்களே !
மேலே அடியேன் குறிப்பிட்டு வசனப்பகுதியை நீங்கள் வாசித்தீர்கள்
நம்முடைய மரணபயத்தை மாற்றவே இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என்று சொன்னேன்
நம்முடைய பயத்தை மட்டுமல்ல நம்முடைய பாவங்களை மன்னிக்கவும்,
நம்மை பரிசுத்தப்படுத்தவும்,
இயேசு கிறிஸ்து பெத்லகேமில் அவர் பிறந்திருக்கிறார்கள்
தேவமகிமையை கண்டு மேய்ப்பர்கள் ஆரம்பத்தில் பயந்தார்கள் ஆனால் தேவதூதன் அவர்களை பார்த்து நீங்கள் பயப்படாதிருங்கள்
இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று தேவ தூதன் மேய்ப்பர்களிடம் அவன் சொன்னான்
அவர்கள் தீவிரமாக தாவீதின் நகரமாகிய பெத்லகேமுக்கு அவர்கள் போய் இயேசுவை பற்றி அவர் பிரசித்தம் பண்ணினார்கள்
பிரியமானவர்களே !
இந்த வருஷம் இன்னும் சிலநாட்களில் அது முடியப்போகிறது
நாம் எத்தனை பேருக்கு சுவிசேஷம் சொல்லி இரட்சிப்புக்குள் வழிநடத்தினோம்
மேய்ப்பர்கள் நாடு விட்டு நாடு போய் பெத்லகேமில் அவர்கள் பிரசங்கம் பேசினார்கள்
அந்த பெத்லகேமுக்கே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அவர்கள் உண்டாக்கினார்கள்
நம்முடைய பயத்தை மாற்றி,
நம்முடைய பாவங்களை மன்னித்து, நமக்காக இரத்தத்தை சிந்திய, அன்புள்ள தெய்வமாகிய இயேசுவைப்பற்றி இன்னும் நாம் சரியாக சுவிசேஷம் அறிவிக்கவில்லை
மேய்ப்பர்கள்போல
நாமும் சுவிசேஷம் அறிவிக்கவும்..
பெத்லகேமில் பிறந்த பரிசுத்தரைப்பற்றி, உலக முழுவதும் சுவிசேஷம் பேசவும் ஆவியானவருடைய தயவினால் நாம் புறப்படுவோம்
அது நம்முடைய உண்மையான கிறிஸ்துமஸ் பண்டிகையாக மாறட்டும்
கர்த்தர்தாமே நம்மை அவர் ஆசீர்வதிப்பாராக
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*இயேசுவை போல மாற* *வாஞ்சியுங்கள்*
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
prayers 9840593839
pr. Jeevan (chennai)