நமது ஜீவியத்தில் "பிரகாசம்" எவைகள் மூலம் | தேவபக்தி இருந்தால் கீழ்கண்ட காரியங்கள் நம்மிடம் காணப்படும் | ஜீவனை பெற | துதிக்க வேண்டும் எப்படி | சிலுவை மூலம் நாம் கற்று கொள்ள வேண்டிய காரியங்கள் | சிலுவையில் அறையப்பட வேண்டியவைகள் | சிலுவை தரிசனத்தை கண்ட சிலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் | இயேசுவின் பாடுகளில் | இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள் | சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்
======================
தலைப்பு: நமது ஜீவியத்தில் "பிரகாசம்" எவைகள் மூலம்
======================
1) கர்த்தரை நோக்கி பார்ப்பதன் மூலம்
சங்கீதம் 34:5
2) ஜெப ஜிவியத்தின் மூலம்
யாத்திராகமம் 34:28-30
3) வசனத்தை கைக் கொண்டு ஜிவிப்பதன் மூலம்
பிலிப்பியர் 2:14
4) நற்கிரியைகள் செய்வதன் மூலம்
மத்தேயு 5:16
5) வேறுபாட்டின் ஜிவியத்தின் மூலம்
எபேசியர் 5:14
6) சுத்திகரிப்பின் மூலம்
யோபு 11:14-17
7) உபவாசம் எடுப்பதால்
ஏசாயா 58:4-10
8) நன்மை செய்வதால்
ஏசாயா 58:4-10
9) ஆத்தும ஆதாயம் செய்வதின் மூலம்
தானியேல் 12:3
==================
தலைப்பு: தேவபக்தி இருந்தால் கீழ்கண்ட காரியங்கள் நம்மிடம் காணப்படும்
==================
1) தேவபயம் காணப்படும்
அப்போஸ்தலர் 10:2
2) தருமம் செய்வோம்
அப்போஸ்தலர் 10:2
3) எப்பொழுதும் ஜெபம் காணப்படும்
அப்போஸ்தலர் 10:2
4) போதும் என்கிற மனது (உலக ஆசிர்வாதங்கள்) இருக்கும்
1 தீமோத்தேயு 6:6
5) நாவடக்கம் காணப்படும்
யாக்கோபு 1:26
6) கர்த்தரை தொழுது கொள்வோம் (ஆராதனை காணப்படும்)
சங்கீதம் 5:7
7) எருசலேமில் (தேவாலயத்தில்) காணப்படுவார்கள்
அப்போஸ்தலர் 2:5
8) நமது தோற்றம் (உடை, அலங்காரம்) தேவபக்தியை வெளிப்படுத்தும்
1 கொரிந்தியர் 10:23
9) நற்கிரியைகள் காணப்படும்
1 தீமோத்தேயு 2:10
=============
தலைப்பு: ஜீவனை பெற
===============
1. நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்.
மத்தேயு 19:16
2. சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்
மத்தேயு 18:8
3. என் நாமத்தினிமித்தம் அனைத்தையும் விட்டவன் எவனோ நித்திய ஜீவனையும் அடைவான்.
மத்தேயு 19:29
4. நீதிமான்களோ நித்திய ஜீவனை அடைவார்கள்
மத்தேயு 25:46
5. தன்னை விசுவாசிக்கிறவன் நித்தியஜீவனை அடைவான்
யோவான் 3:15
6. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ நித்திய ஜீவன் அடைவான்
யோவான் 4:14
7. வேதவாக்கியங்களினால் நித்தியஜீவன்
யோவான் 5:39
10) உலகத்தால் கறைபடாதபடி தன்னை காத்து கொள்வான்
யாக்கோபு 1:27
11) பிறருக்கு உதவி செய்வான்
அப்போஸ்தலர் 8:2
12) மற்றவர்களுக்கு இடறல் அற்றவர்களாக இருப்பார்கள்
1 தீமோத்தேயு 2:10
13) தீக்கற்ற பிள்ளைகள், விதவைகளுக்கு உதவி செய்பவர்களாக காணப்படுவார்கள்
யாக்கோபு 1:27
14) துன்பபடுவார்கள்
2 தீமோத்தேயு 3:12
=============
தலைப்பு: துதிக்க வேண்டும் எப்படி
============
1) மனமகிழ்ச்சியோடு துதிக்க வேண்டும்
உபாகமம் 28:47
2) களிப்போடு துதிக்க வேண்டும்
உபாகமம் 28:47
3) உற்சாகமாய் துதிக்க வேண்டும்
சங்கீதம் 54:6
4) ஆனந்த சத்தத்தோடு துதிக்க வேண்டும்
சங்கீதம் 107:22
5) செம்மையாய் (பரிசுத்தமாய்) துதிக்க வேண்டும்
சங்கீதம் 33:1
6) ஆவியோடு துதிக்க வேண்டும்
யோவான் 4:24
7) உண்மையோடு துதிக்க வேண்டும்
யோவான் 4:24
8) மனப்பூர்வமாய் துதிக்க வேண்டும்
லேவியராகமம் 22:29
====================
தலைப்பு: சிலுவை மூலம் நாம் கற்று கொள்ள வேண்டிய காரியங்கள்
=====================
1) தேவசித்தம்
மத்தேயு 26:39
2) கீழ்படிதல்
பிலிப்பியர் 2:8
3) தாழ்மை
பிலிப்பியர் 2:8
4) அன்பு
எபேசியர் 5:2
5) பரிசுத்தம்
எபிரெயர் 13:12
6) பாடுபடுதல்
எபிரெயர் 12:2,3
7) பொறுமை
2 தெசலோனிக்கேயர் 3:5
=================
தலைப்பு: சிலுவையில் அறையப்பட வேண்டியவைகள்
==================
1) மாம்சம் சிலுவையில் அறையப்பட வேண்டும்
கலாத்தியர் 5:24
2) ஆசை இச்சைகள் சிலுவையில் அறையப்பட வேண்டும்
கலாத்தியர் 5:24
3) பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட வேண்டும்
ரோமர் 6:6
4) உலகம் சிலுவையில் அறையப்பட வேண்டும்
கலாத்தியர் 6:14
5) நான் சிலுவையில் அறையப்பட வேண்டும்
கலாத்தியர் 2:20
========================
தலைப்பு: சிலுவை தரிசனத்தை கண்ட சிலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள்
========================
1) கள்ளன்
லூக்கா 23:41,43
தனது தவறுகளை கண்டு பிடித்தான், அறிக்கையிட்டான். பரதிசுக்கு போனான் (இயேசு அவனை பார்த்து இன்றைக்கு நீ என்னோடு பரதிசியில் இருப்பாய் என்றார்). லூக்கா 18:14 ல் ஜெபம் பண்ண ஆலயம் சென்ற பரிசேயன் கண்களில் மற்றவர்கள் குறை தெரிந்தது, தன் குறை தெரியவில்லை. தன்னை நீதிமானாக நினைத்தான், மற்றவர்களை அற்பமாக எண்ணினான். தன் பிழைகளை உணருகிறவன் யார்.
சங்கீதம் 19:12
2) 100 க்கு அதிபதி
லூக்கா 23:47
இயேசுவின் கிரியைகளை (சிலுவையில்) கண்டு 100 க்கு அதிபதி தேவனை மகிமை படுத்தினான். "மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரன்" (லூக்கா 23:47) என்று தேவனை மகிமைபடுத்தினான். நமது நடக்கையை மற்றவர்கள் பார்க்கிறார்கள். நம்மை பார்க்கிற ஜனங்கள் தேவனை மகிமைபடுத்த வேண்டும்.
3) யூதாஸ்
மத்தேயு 27:1-5
நான்று கொண்டு செத்தான் (தூக்கு போட்டு செத்தான்). யூதாஸின் எண்ணமெல்லாம் பணத்தின் மேல் இருந்தது. (உலக காரியத்தின் மேல் இருந்தது)
2 பேதுரு 2:20
4) பேதுரு
மத்தேயு 26:70,71,75
உள்ளான மனந்திரும்புதல் பேதுருவிடம் காணப்பட்டது. இயேசுவை போல சிலுவையில் அறையப்பட நான் தகுதியுடையவன் அல்ல என்று கூறினான். தலைகீழாக சிலுவையில் அடிக்கபட்டான். யூதாஸின் மனமாற்றத்திற்கும் பேதுருவின் மனமாற்றத்திற்கும் வேறுபாடு உண்டு
2 கொரிந்தியர் 7:9,10
5) சீமோன்
லூக்கா 23:26
சீமோன் சிலுவையை சுமந்தான். மத்தேயு 27:32 - பலவந்தமாய் சிலுவையை வைத்தார்கள். உபதேசம் பலவந்தம் பண்ணப்படுகிறது. சிலுவையை அனுதினமும் சுமக்க வேண்டும். நாம் சுமக்க வேண்டிய சில காரியங்களை சுமக்க கர்த்தர் பலவந்தம் பண்ணுகிறார்.
================
தலைப்பு: இயேசுவின் பாடுகளில்
=================
1) இயேசுவின் பாடுகளில் பாவம் இல்லை
லூக்கா 23:4,5
2) இயேசுவின் பாடுகளில் வாய் திறக்கவில்லை
லூக்கா - 23:9
3) இயேசுவின் பாடுகளில் கொடுமை செய்யவில்லை
ஏசாயா 53:9
4) இயேசுவின் பாடுகளில் வஞ்சகம் இல்லை
ஏசாயா 53:9
======================
தலைப்பு: இயேசு சிலுவையில் சகித்த விபரீதங்கள்
======================
எபிரெயர் 12:1-3
1) வியாகுலம் அடைந்தார்
லூக்கா 22:42-44
2) மேலங்கியை கழற்றினார்கள்
மத்தேயு 27:31
3) தூஷித்தார்கள்
மத்தேயு 27:40
4) நிந்தித்தார்கள்
மத்தேயு 27:42,44
5) தலையில் காயம் அடைந்தார்
மத்தேயு 27:29,30
6) வாரினால் அடிக்கபட்டார்
யோவான் 19:1-3
7) கைகள், கால்களில் ஆணி அடிக்கபட்டார்
சங்கீதம் 22:16
8) விலாவில் குத்தினார்கள்
யோவான் 19:34
9) முகத்தில் துப்பினார்கள்
மாற்கு 15:19
10) பரியாசம் பண்ணினார்கள்
மாற்கு 15:20
11) குடிக்க காடியை கொடுத்தார்கள்
யோவான் 19:29,30
12) சிரசில் கோலால் அடித்தார்கள்
மாற்கு 15:19
13) சிலுவையில் அறைந்தார்கள்
மத்தேயு 27:38
====================
தலைப்பு: சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்
=====================
1) முதுகில் சிலுவை (பாடுகள்)
யோவான் 19:17
2) கண்கள் முன்னால் சிலுவை (ஆறுதல்)
கலாத்தியர் 3:1
எபிரெயர் 12:3
3) வாயில் சிலுவை (உலக காரியங்களை மேன்மைபாராட்டாமல் இருக்க)
கலாத்தியர் 6:14
4) சிந்தையில் சிலுவை (தாழ்மையுடன் ஜிவிக்க)
பிலிப்பியர் 2:5-8
எபிரெயர் 12:3