டேவிட் லிவிங்ஸ்டன்
=====================
தோற்றம்: 1813
மறைவு: 1873
டேவிட் லிவிங்ஸ்டன் பெயரைக்
கேட்டாலே ஆப்பிரிக்காதான் ஞாபகத்தில் வரும்.
இவரை அறியாத கிறிஸ்தவர்களே இருக்க முடியாது. 1813-ம் ஆண்டு, மார்ச் மாதம் 19-ஆம் தேதி ஸ்காட்லாந்து தேசத்தில் உள்ள
நூற்பாலை நிறைந்த ஊரான் பிளான்டையர் என்ற இடத்தில் நீல் லிவிங்ஸ்டன், ஆக்னஸ் அவர்களுக்கு இரண்டாவது மனகாக பிறந்தார். டேவிட்டுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். குடும்ப சூழ்நிலையின் காரணமாக டேவிட் தனது 10-வது வயதிலிருந்து நூற்பாலையில் தனது அண்ணன் ஜானுடன் சேர்ந்து பருத்தியிலிருந்து
பஞ்சு எடுக்கும் வேலை செய்து வந்தார்.
டேவிட் சிறுவயதிலிருந்தே
ஆலயத்திற்கு சென்று கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்து வந்தார். சிறுவயதிலிருந்தே அதிகமான புத்தகங்களை வாசித்து
வந்த இவர் டிக் என்பவர் எழுதிய எதிர்கால வாழ்வின் கோட்பாடு என்ற புத்தகத்தை வாசிக்கும்
போது கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்பு அநேக மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாற்றை படிக்கலானார். குறிப்பாக ஹென்றி மாட்டீன், சீனா சென்ற மிஷனெரி சார்லஸ் மற்றும் பலரின் வாழ்க்கை வரலாறுகள் இவருக்கு சவாலாக
அமைந்தன.
வேலைப்பார்த்து சேர்த்த
பணத்தைக் கொண்டு கிளாஸ்கோவிலுள்ள அண்டர்சன் கல்லூரியில் இணைந்து பயின்றார். அவருக்கு பிடித்தமான பாடங்கள் மருத்துவம் அடுத்தது
இறையியலாகும். அதிக பிரயாசப்பட்டு கிரேக்க
மொழியைக் கற்றார். 1838-ஆம் ஆண்டு சேரிங்கிராஸ் மருத்துவனையுடன் உள்ள மருத்துவக் கல்லூரியில் இணைந்து
மருத்துவம் பயின்றார். 1840-ல் தன்னுடைய படிப்பை முடித்து பின், மருத்துவப் பயிற்சிக்காக
கிளாஸ்கோவில் உள்ள இராயல் கல்லூரியில் பயின்று மருத்துவ பட்டத்தை நவம்பர் 16-ஆம் தேதி பெற்றார். அதே வேலையில் இறையியல்
ஆசிரியர் ரிச்சார்டு சிசில் அவர்களிடம் கிரேக்க மொழி, இலத்தீன்
மொழி, எபிரேய மொழிகளையும் இறையியலையும் சேர்த்து கற்றார். படிப்பதில் மிகவும் புத்திசாலி என்று எல்லாராலும்
புகழப்பட்டார்.
இராபர்ட் மொபர் என்ற புகழ்
பெற்ற மிஷனெரி தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஓய்வுக்காக பிரிட்டன் வந்திருந்தார். டேவிட் லிவிஸ்ஸ்டன் ஒரு நாள், இராபர்ட் மொபட்டிடம் நான் ஆப்பிரிக்கா செல்ல வாய்ப்புள்ளதா? ஏன கேட்டார். அதற்கு அவர் நிச்சயம்
வாய்ப்புள்ளது. வட ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள
உயரமானப் பகுதியில் இருந்து பார்க்கும் போது சூரிய ஒளியில் ஆயிரக்கணக்கான குடிசைகளின்
அணி வகுப்பை பார்க்கிறேன். இப்பகுதிகளுக்கு
இன்னமும் மிஷனரிகள் யாரும் செல்லவில்லை. அங்கு
வாய்ப்பு மிகுதி என்று பதில் கொடுத்தார். இறுதியில்
டேவிட் லிவிங்ஸ்டன், இத்தனை தேவை இருக்கும் போது, சீனாவின் ஓபியம் போர் ஓயக் காத்திருப்பது அவசியமில்லை, நான் வட ஆப்பிரிக்கா செல்லத் தயார் என அறிவித்தார்.
டேவிட் லிவிங்ஸ்டன்,
1844-ஆம் ஆண்டு திரு. இராபர்ட் மொபட் அவர்களின் மூத்தமகள் மேரியை திருமணம்
செய்தார். தேவன் இவர்களது திருமண வாழ்வை ஆசீர்வதித்து
பிள்ளைகளைக் கொடுத்தார். ஒரு குழந்தை சிறுவயதிலேயே
மரித்து விட்டது. ஊழியத்தின் தேவை,
பயணம் இவைகள் மத்தியில் அவர்கள் குடும்ப வாழ்வில் மற்றவர்களைப் போல கவனம்
செலுத்த முடியவில்லை. கடினமான பிரதேசம்,
கடின உழைப்பு அடிப்படை தேவைகள் சந்திக்கப்படாத நிலமை இவர்கள் திருமண
வாழ்வை அதிகம் பாதித்தது.
1845-ஆம் ஆண்டு டேவிட் லிவிங்ஸ்டன்
சௌவானே என்ற இடத்திற்கு சென்று தன் பணியை தொடர்ந்தார். அங்கிருந்த ஒரு பழங்குடி இனத்தலைவன் சீசெலே முதல்
கிறிஸ்தவனாக மாறினான். இறுதியில் நாகாமி என்ற
ஏரியையும், அதில் உள்ள தண்ணீரையும் கண்டு மகிழ்ந்தார். இந்த பகுதியில் வாழ்ந்த பழங்குடி இனதலைவன் செவிட்யு+யான்
என்பவன் டேவிட் லிவிங்ஸ்டனை வரவேற்றான். ஆனால்
சுகாதார மற்ற இடமாக இருந்தபடியால் மிஷனரி பணித்தளம் அமைக்க சரியான இடமாக அவருக்கு தெரியவில்லை.
1853-ஆம் ஆண்டு டேவிட் லிவிங்ஸ்டன்
சாம்பொலி ஆற்றின் அருகேயிருந்த லிண்யாண்டி என்ற இடத்திற்கு சென்று தன் பணியை தொடங்கினார். இங்கு வாழ்ந்த பழங்குடி இன தலைவன் சிகிலேட்டு தேவையான
அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தான். 1856-ஆம் ஆண்டு மனைவி பிள்ளைகளை காண இங்கிலாந்து சென்றார். தான் கண்டு பிடித்த பகுதிகளின் விபரங்களையும் தன்னுடன்
கொண்டு சென்றார். எப்படியாவது அடிமை வியாபாரத்தை
ஒழித்து, சுவிசேத்தின் வழியாக மாற்றத்தை உண்டு பண்ண அவர் விரும்பினார். அவரை தாங்கி வந்த மிஷனெரி இயக்கம் அதற்கு இசையவில்லை. எனவே இலண்டன் மிஷனரி சொசைட்டியிலிருந்து விலகினார்.
1862-ஆம் ஆண்டு அவருடைய
மனைவி மேரி கர்த்தருக்குள் நிதிரையடந்தார்கள்.
டேவிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளையும் அவரையும் கண்டுபிடிக்க ஹென்றி
என்பவரை ஆப்பிரிக்க கண்டத்திற்கு அனுப்பினர்.
ஹென்றியும் சாம்பஸி ஆற்றின் வழியாக ஆப்பிரிக்காவின் உத்திரப்பிரதேசத்திற்கு
தைரியமாக பயணித்தார். பல கடின முயற்ச்சிகளுக்கு
மத்தியில் யுஜிஜி என்ற இடத்தில் டேவிட்-ஐ கண்டுபிடித்தார். டேவிட் பழங்குடி இனமக்கள் மத்தியில் சென்று வரும்
பணிகள் அவர் எடுத்த முயற்சிகள், சுவிசேஷத்தினால் வந்த மாற்றம்
அனைத்தையும் கண்டு வியந்து போனார். கிறிஸ்துவின்
மீது டேவிட்க்கு இருந்த விசுவாசம் ஹென்றியை உலுக்கிட்டது. இங்கு உயிருக்கு ஆபத்து உதவிகள் இல்லாத நிலைமைகளை
அறிந்த ஹென்றி டேவிட்-ஐ மறுமடியும் இங்கிலாந்திற்கு அழைத்தார். ஹென்றியிடம் டேவிட், என் வாழ்க்கையை
இந்த பழங்குடி மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்.
ஆகையால் வர இயலாது என கூறிவிட்டார்.
ஹென்றியை தொட்ட இன்னொரு காரியம் பழங்குடி மக்கள் டேவிட் மீது கொண்டிருந்த பாசமாகும்,
அவர் தங்களுக்காகவே வாழ்பவர் என்பதை அனைவருமே அறிந்தபடியால் அவர்மீது
தங்கள் முழு நம்பிக்கையையும் பாசத்தையும் வைத்திருந்தார்கள். 1873-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய குடிசையில் கர்த்தருக்குள்
நித்திரையடைந்தார்.