பாடல் பிறந்த கதை
பாடல்:
It is no secret, What God can do
ஆசிரியர்:
ஸ்டூவர்ட் ஹம்லின் (Stuart Hamblen)
பாடல்
வரிகள்:
The chime of time ring out the news, another day is through
Someone slipped and feel, was that someone you?
You may have longed for added strength your courage to renew
Do not be disheartened, I have news for you
It is no secret, what God can to
What He’s done for others, He’ll do for you
With arms wide open, He’ll pardon you
It is no secret, what God can do
There is no night for in His light, you’ll never walk alone
You’ll always feel at home, wherever you many roam
There is not power can conquer you while God is on your side
Take him his promise, don’t run away and hide
பாடல் பிறந்த கதை:
ஹோலிவுட்டில் 1950 ஆண்டில் வானொலி தொகுப்பாளர், நகைச்சுவை
நடிகர், பாடல் ஆசிரியர் என பல்வேறு தோற்றம் கொண்ட பகழ் பெற்ற
ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஸ்டுவர்ட் ஹம்லின். இவர் மது, மாது மற்றும் பார்ட்டிகளுக்கு
பெயர் போனவராவார். அந்த நாட்களில் மிகப்பெரிய
வெற்றி பெற்ற அவரது பாடல்களில் ஒன்றுதான் "நான் உன்னுடன் வேட்டையாடப் போவதில்லை
ஜேக் ஆனால் பெண்களை துரத்துவேன்" (Was “I won’t go hunting with you jake,
but I’II go chasing women) என்ற பாடல்.
ஒரு நாள் ஹம்லின் அவர்கள்,
கூடாத்தில் எழுப்புதல் கூட்டங்களை நடத்தும் ஒரு இளம் போதகரை சந்தித்தார். ஹம்லின் அவர்கள் இந்த போதகரை எப்படியாவது கேலி கிண்டல்
செய்து அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணி தனது வானொலி நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தன் நிகழச்சியை இன்னும்
இனிமையாக்க வேண்டும் என்று எண்ணி, அந்த போதகரைப் பற்றி தகவல்
சேர்க்க அவரது எழுப்புதல் கூட்டம் ஒன்றிற்கு சென்றார். கூட்டம் ஆரம்பிக்க தொடங்கியது. அப்போது போதகர் எழுந்து, இங்குள்ள
பார்வையாளர்களில் ஒரு பெரிய போலியான ஒருவர் இருக்கிறார் என்று அறிவித்தார். இந்த வார்த்தையை கேட்ட மற்றவர்களும் தாம் தான் அது
என நினைத்திருக்கலாம். ஆனால் ஹம்லின் அவர்களோ
தன்னைத்தான் போதகர் சொல்லுகிறார் என்று உறுதியாக நம்பினார். கூட்டமும் நிறைவு பெற்றது. அவர் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவர் கேட்ட போதகரின் வார்த்தைகளோ,
இரவு பகலாக சில நாட்கள் அவரை வாட்டியது. முனம் நொந்த அவர் நன்றாக மது அருந்திவிட்டு,
போதகர் தங்கியிருந்த அறையின் கதவை நள்ளிரவு இரண்டு மணிக்கு தட்டி எனக்காக
நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று சொன்னார்.
போதகரோ, என்னால் உங்களுக்காக ஜெபிக்க முடியாது. இது உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் உள்ள ஒரு
நிகழ்வு. ஆதலால் நான் உங்கள் இருவர் நடுவே
வரவிரும்பவில்லை என்று கூறினார்.
ஆனால் அவர் ஸ்டுவர்ட்டை
உள்ளே அழைத்து விடியற்காலை ஐந்து மணியளவும் தேவனைப் பற்றியும், அவரது அளவில்லாத அன்பு, நம்முடைய பாவங்களுக்காக தன்னுடைய
ஒரே குமாரன் இயேசுவையே சிலுவையில் ஒப்புக்கொடுத்தார் என் கூறினார். அப்பொழுது ஸ்டுவர்ட் முழங்கால்படியிட்டு கண்ணீர்மல்க
தேவனை நோக்கி கதறினார். இது கதையின் முடிவல்ல,
மேலும் ஸ்டுவர்ட் அவர்கள் குடிப்பதை, பெண்களை துரத்துவதை,
தான் வேடிக்கையாக கருதிய அனைத்தையும் விட்டுவிட்டார். இதனால் ஹலிவுட் கூட்டத்தினரின் ஆதரவை இழந்தார்.
இதற்கும் மேலாக,
ஒரு பீர் நிறுவனத்தை ஸ்பான்சராக ஏற்க மறுத்தார். வானொலி நிலையத்திலிருந்து பணி நீக்கப்பட்டார். அவருக்கு கடினமான காலங்கள் வந்தன. ஓரிரு கிறிஸ்தவ பாடல்கள் எழுத முயற்சித்தார். ஆனால் அவரது நண்பர் ரோஸ்மேரி குளுனிக்காக எழதப்பட்ட,
"This Old House" என்ற ஒரே பாடல் மட்டும் பிரபலமானது.
அவர் தொடர்ந்து போராடிய போது, ஒரு நீண்ட
கால நண்பர் ஜான் என்பவர் ஸ்டுவர்ட்டை அழைத்து உங்களுக்கு எல்லா கஷ்டங்களுக்கும் இந்த
மதம் தான் காரணம். இந்த மதம் எல்லாவற்றையும்
விட மதிப்புள்ளதா? என்று வினவினார். ஆம் என்று ஸ்டுவர்ட் பதிலளித்தார்.
பின்னர் அவரது நண்பர் கேட்டார். உனக்கு மது மிகவும் பிடிக்கும் அல்லவா, அதை விட்டதை
நினைத்து நீ வருந்தவில்லையா? இல்லை என்று ஸ்டுவர்ட் கூறினார். எப்படித்தான் இவ்வளவு எளிதாக அதை விட்டாயோ,
எனக்கு புரியவில்லை என்று ஜான் சொன்னார். அதற்கு ஸ்டுவர்ட் இது பெரிய இரகசியமல்ல,
தேவனால் எல்லாம் கூடும். இதனை
கேட்ட ஜான், இது ஒரு கவர்ச்சியான சொற்தொடர், நீங்கள் அதைப்பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று கூறினார். மேலும் அனைவரும் சொல்வது போல், மீதமுள்ளது வரலாறு, ஸ்டுவர்ட் அவர்கள் ஒரு பாடல் எழுதினார். இது தான் "It Is No Secret" என்ற பாடல். இந்த பாடல் மிகவும் பிரபலமானது. தேவனால் என்ன செய்ய முடியும் என்பது பெரிய இரகசியமல்ல.