சாரா டக்கர்
=============
சாரா சக்கர் அவர்கள் இங்கிலாந்து நாட்டை சார்ந்தவரகள். இவர்கள் தகப்பன் பெயர் டக்கர். சாரா டக்கர் அவர்கள் நல்ல வசதியான குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்களுக்கு இரண்டு சகோதரிகளும், ஜாண் டக்கர் என்ற ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். சாரா டக்கர் அவர்கள் இரண்டு கால்களும் முடமானவர்கள். எங்கு சென்றாலும் மற்றவர் உதவியுடனே செல்வார்கள். சாரா டக்கர் அவர்கள் தையல் வேலை செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்
அதிக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அதற்கு காரணம் மேலைநாட்டு மிஷனெரிகளாகும்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருள்திரு. சார்லஸ் தியோபிலஸ் இவான்ரேனியஸ் ஆகும். அவரது கல்லறை இன்றும் பாளை ரேனியஸ் தெருவில் உள்ளது. அவரோடு உழைத்த சி.எம்.எஸ் மிஷனெரிகள் பலர் அவர்களுள்
விசுவாசிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் அருள்திரு. ஜாண் தாமஸ் டக்கர் ஆகும். ஆனாலும் இந்தியா வராமலே தேவன் தனக்குக் கொடுத்தப்
பணியை நிறைவேற்றிய ஒரு உடல் ஊனமுற்ற ஒரு வாலிப சகோதரி இருந்தாள். அவள் பெயர் சாரா டக்கர். டக்கர் குடும்பத்தைச் சார்ந்த தன் சகோதரர் ஜாண் தாமஸ்
டக்கர் இந்தியா வந்து ஊழியம் செய்தவர்.
தமிழ்நாட்டில் சாரா டக்கர்
கல்லூரி மற்றும் பள்ளிகளைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. ஆயிரமாயிரம் பெண்கள் நெல்லை மாவட்டத்தில் கல்லூரி
வரை படித்தமைக்கு காரணம் கல்லூரியே. இது எப்படி
நிறுவப்பட்டது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.
இங்கிலாந்து தேசத்தில் டக்கர் குடும்பத்தில் பிறந்த சாரா டக்கர் இந்தியாவைப்
பார்த்ததில்லை. ஆனால் தன் முழங்கால் ஜெபத்தினால்
இந்தியா வந்தவர்கள். தன்னுடைய மிஷனெரி சகோதரர்
ஜாண் தாமஸ் டக்கர் நெல்லை பகுதியில் சி.எம்.எஸ் வழியாக செய்யப்பட்ட ஊழியங்களையும்,
மக்களின் தேவைகளையும் பகிரக் கேட்டு மனதில் பெரும் பாரம் கொண்டு ஜெபித்துவந்தார்.